எலான்மஸ்க்
சூப்பர்மேன் ஆக உதவிய
புத்தகங்கள் எவை ?
“இந்த மாதிரி ஒரு ஆளை நான்
பாத்ததே இல்லை” என்று ரஷ்ய அதிபர் புடின் சொல்லுகிறார்.
எலான் மஸ்க்கை தெரிஞ்சவங்க
அத்தனை பேருமே இப்பிடிதான் சொல்லுவாங்க. அந்த மாதிரி ஆளுதான் எலான்.
எலான் பற்றிப் பேசினால், செவ்வாய்
கிரகம் பற்றிப் பேசணும். அதுக்கு முன்னாடி அவர் படிச்ச புஸ்தகங்களப் பற்றிப் பேசணும்.
அவரோட படிக்கும் குணம் பற்றிப் பேசணும். அப்புறம் புத்தகவாசிப்பு மூலமா இன்றைய இளைஞர்கள்
எல்லாரும் எலான்மஸ்க் ஆகணும்.
எலான் மஸ்க் பற்றி ரஷ்ய அதிபர்
புத்தின் அவர்கள் கூட, மாஸ்கோ பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசி இருக்கார்.
“எலான் மாதிரி மனிதர்கள் மனித
குலத்துல தோன்றுவது ரொம்ப அபூர்வம்.. அதுமட்டுமில்ல பிரபலமான சோவியத் விஞ்ஞானி செர்கெய்
கொரோலியோ என்ற சோவியத் விஞ்ஞானி மாதிரி இவர்..
“உலகத்துல முதன்முதலாக வின்வெளிக்கு
போன செயற்கைக் கோள் எதுன்னு ஞாபகம் இருக்கா..? ரஷ்யாவின் செயற்கைக் கோள் தான்.. அதோட
பெயர் தான் ஸ்புட்னிக். இதை ஏவியது ரஷ்யா.. “
“இதை ரஷ்யாவுக்காக தயாரிச்சது
..ஏவியது எல்லாமே கொரோலியோதான்.. அவர் மாதிரிதான்
எலான் மஸ்க். மாணவர்கள் எலான் மஸ்க் மாதிரி
மாறணும்..”
இதுதான் புத்தின் அவர்கள்
பேசியது.
அதுமட்டுமல்ல வோஸ்தாக் என்ற
விண்கலம் தான் முதன் முதலாக ஒரு மனிதனை விண்வெளிக்கு ஏற்றிக் கொண்டு போனது.
ஆக ஸ்புட்னிக் விண்கலத்தை
தயரிச்சதும் கொரலியோதான். வோஸ்தாக் விண்கலத்தையும் தயாரிச்சதும் கொரோலியோதான்
அது போலத்தான் எலான் மஸ்க்கும்,
செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியிருப்புகளை உருவாக்க முயற்சி செய்கிறார்.
ஒரு தகவலை செவ்வாய்க்கு நீங்கள்
அனுப்பினால் அங்க போய்ச்சேர 12.5 நிமிஷம் ஆகுமாம். அதுவே சிக்னல் சரியில்லன்னா
22.4 நிமிஷம் ஆகுமாம்.
செவ்வாய்க் கிரகத்துக்கும்
பூமிக்கும் இடையே இருக்கும் தூரம் எவ்ளோ தெரியுமா ? ஒண்ணு ரெண்டு இல்ல. இரண்டும் கோடி
கிலோமீட்டர்.
மஸ்க் சின்ன வயசிலருந்தே புத்தகங்களை படிக்க ஆரம்பிச்சார். கண்டதைத் தின்றால் குண்டனாவான், இது ஒரு பழமொழி. கண்டதைப் படிச்சா பண்டிதன் ஆவான்..அப்பிடி பழமொழியும் உண்டு. பண்டிதன் அப்படீன்னா நம்பர் ஒன். நிபுணன் அப்படீன்னு அர்த்தம். ஆங்கிலத்தில் மாஸ்டர் அப்படீன்னு சொல்றாங்க.
1.ஐசக் அசிமோவ் எழுதிய நாவல்கள், 2.டவுக்ளஸ் ஆடம்ஸ் எழுதிய
“த ஹிட்ஹைக்கர்ஸ் கைட் டு கேலக்சி”, 3. ராபர்ட் எ ஹெய்ன்லீன் எழுதிய “த மூன் ஈஸ் ஏ ஹார்ஷ் மிஸ்ட்ரஸ்” இதெல்லாம், எலான்
படிச்ச முக்கியமான புத்தகங்கள்.
“முக்கியமான பிரமுகர்களின்
வாழ்க்கைச் சரித்திரம் எனக்குப் பிடிக்கும்.. எனக்கு ரொம்பப் படிச்சது 4. ஆல்பர்ட் ஐண்ஸ்டின்,
அப்புறம் 5. பெஞ்சமின் பிராங்க்ளின் வாழ்க்கைச் சரித்திரம்..”என்பார் மஸ்க்.
6. ஜே.ஆர்.ஆர் டோல்கின் எழுதிய
“த லார்ட் ஆஃப் த ரிங்ஸ், 7. ஃபிராங்க் ஹெர்பெர்ட் எழுதிய “ட்யூன்”. 8. நிக் பாஸ்ட்ராம்
எழுதிய “சூப்பர் இண்டலிஜென்ஸ்” ஆகிய நூல்களும் எலான் மஸ்க் விரும்பிப் படித்த புத்தகங்கள்.
9. பீட்டர் தியெல் என்பவர் எலான்
மஸ்கோடு படித்தவர். அவர் எழுதியது “ஜீரோ டு ஓன்”. இதில் ஒரு வியாபாரத்தை எப்படி தொடங்குவது
? தொடர்ந்து எப்படி வெற்றிகரமாக நடத்துவது ? அது பற்றிய புத்தகம் அது
நிக் பாஸ்ட்ரம் எழுதிய “சூப்பர்
இண்டலிஜென்ஸ்” என்ற புத்தகமும் எலான் மஸ்க் எல்லோருக்கும் பரிந்துரை செய்வது.
“ஜீரோ டு ஒன்” “சூப்பர் இண்டளிஜென்ஸ்” ரெண்டையும் எல்லாருமே படிக்கணும்’னு
நினைக்கறேன் “ அப்படீன்னு அடிக்கடி சொல்லுவார், எலான் மஸ்க்
ஜீரோ டு ஒன் பீட்டர் தீயெல்
எழுதிய நூல்
புதியதாக தொழில் தொடங்குவோருக்கு
ஒரு வழிகாட்டி இது. அது சொல்லும் செய்திகளை சுருக்கமாக சொல்லுகிறேன்.
“நிறையபேர் வெற்றிகரமா செய்யும்
தொழிலை நீங்களும் செய்யாதிங்க.. பத்தோடு ஒண்ணு
பதினொன்னு இல்லாம புதுசா தொடங்குங்க. அப்பொதான் உங்களுக்கு போட்டி இருக்காது”
“உங்க நிறுவனம் மற்ற நிறுவனங்களைவிட 10 மடங்கு சிறப்பா இருக்கணும்.. புதிய
தொழிலை உருவாக்கும்போது விஸ்தாரமா சிந்தியுங்க..இதுல கஞ்சத்தனம் வேண்டாம்.. நீண்ட காலத்
திட்டமாக திட்டம் போடுங்க..அதுல ஒரு சூட்சமத்தை
ரகசியமாக வச்சீக்கங்க.. யார் காதுலயும் போடாதிங்க.
பழைய பஞ்சாங்கமா இருக்காதிங்க..மாற்றம்
வேணும்னா நான் சொல்றதை கேளுங்க” என்கிறார்
பீட்டர் தீயெல் அவர்கள். இதுதான் இந்த நூலோட சாராம்சம்.
அடுத்து “சூப்பர் இண்டலிஜென்ஸ்” நிக் பாஸ்ட்றம் எழுதியது.
செயற்கை நுண்ணறிவு கொடிகட்டி
பறக்கும் வேளை இது ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகள் கூட “சேட் ஜிபிடி” கொண்டு ஹோம்வொர்க்
செய்யும் செயற்கை நுண்ணறிவு யுகம் இது.
செயற்கை நுண்ணறிவு என்னென்ன
செய்யப்போகிறது என்று சொல்லும் நூல். அனேகமாக அந்த வகை நூல்களில் இது முதலாவதாக இருக்கலாம்.
“நல்லது செய்யுமா கெட்டது
செய்யுமா ? மனிதனால் உருவாக்கப் பட்டிருந்தாலும் இது மனிதனை ஒரங்கட்டி விடுமா ?” என்னும்
சந்தேகத்தை பிரதானமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் நூல்.
“மனிதனால் உருவாக்கப்படும்
இந்த இயந்திரங்கள் எல்லாம் வரும் காலத்தில் மனிதனைவிட அதி புத்திசாலி ஆகிவிடுமா ? அது
மனிதனுக்கு அபாயகரமாக மாறிவிடுமா ?” என்றெல்லாம் பேசுகிறது இந்த நூல்.
சூப்பர் இண்டலிஜென்ஸ் என்பது
மூன்று வகை, ஒன்று வேகமானது, இரண்டு கூட்டாக இணந்து செயல்படுவது, மூன்று மனிதனைவிட
மென்மையாக. மேன்மையாக, ஆழமாக செயல்படுவது. இந்த மூன்றைத்தான் சூப்பர் இண்டலிஜென்ஸ்
என்கிறார் ஆசிரியர் நிக் பாஸ்ட்றம்.
இன்னொன்று தன்னைத்தானே மேம்படுத்திக்
கொள்ளும் அறிவு இதனை ஆங்கிலத்தில் “ரிகர்சிவ் செல்ஃப் இம்ம்பூரூவ்மெண்ட் என்கிறார்கள்.
அதனை இயந்திரங்களுக்கு தாரை வார்க்கலாமா?
அப்படி என்றால் வரம் குடுத்தவன்
தலையிலேயே கைவைக்குமா செயற்கை நுண்ணறிவு என்று
கவலை கொள்ளுகிறது இந்த “சூப்பர் இண்டெலிஜென்ஸ்” புத்தகம்.
எது எப்படியோ புத்தகங்கள்
படித்து ஒரு சூப்பர் மேன் ஆனவர், ஒரு ஸ்பைடர்மேன் ஆனவர், ஒரு அயன் மேன் ஆனவர் எலான் மஸ்க், இதனைப் படிக்கும் நீங்கள் ஒருத்தர் கூடவா
முயற்சி செய்ய மாட்டிங்க ?
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment