அடுத்த பிறவி
எச்சில்
கையால் காக்காய் கூட ஓட்ட விரும்பாத
ஒரு கடைக்காரர் இருந்தார் அவர் எப்போதும் எதையாவது
சொல்லி புலம்பிக்கொண்டே இருப்பார்.
ஒரு
மகான் அடிக்கடி அவருடைய கடைக்கு வருவார். அவர் வந்து இவரை
சந்திக்கும் போதெல்லாம் “இந்த நாடு கெட்டுப்
போய்விட்டது. இது உருப்படாது. நல்லவர்களுக்கு
இது காலமில்லை..” என்பார்… இந்த சம்சார வாழ்க்கையில் இருந்து விடுபடணும்.. அப்பொதான் நம்ம வாழ்க்கை முழுமை
ஆகும்.. அந்த நாளுக்காகத்தான் சாமி
நான் காத்திருக்கிறேன்”
என்பார்.
அப்போது அந்த மகான் அவரிடம் சொல்லுவார் “இப்போது கூட சரி என்று சொல்லுங்கள் நான் தீட்சை தருகிறேன் என்னுடனே இன்று புறப்பட்டு வாருங்கள் இப்போதே வாருங்கள்..” என்று சொல்லுவார்
அதற்கு
அவர் “சாமி மன்னிச்சுக்குங்க.. என்னுடைய பையன்
இருக்கானே ..அவன் இந்த கடையை பாத்துக்குறதுக்கு இப்பதான் கத்துகிறான்.. என் மனைவி வீட்டு
வரவு செலவு கணக்கு பார்க்க இப்பதான் ஆரம்பிச்சி இருக்கா …நீங்க போயிட்டு அடுத்த தடவை வரும்போது நான்
உங்களோட வந்துடுறேன் ..” அப்படின்னு சொல்லுவார்
இந்த
மாதிரி நிறைய தடவை நடந்துச்சு. இடையில
ரொம்ப நாள் அந்த மகான்
வரல. ரொம்ப நாள் கழிச்சு அந்த
மகான் கடைக்கு வந்தார். அப்போது அவருடைய மகன் கடையில் இருந்தார்.
மகானைப்
பார்த்ததும் அந்த அவருடைய மகன்
வணக்கம் சொன்னான். “அடிக்கடி அப்பா உங்களை பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவர் இந்த உலகத்தை
விட்டு போய்விட்டார்” என்று சொன்னான்.
உடனே
அந்த மகான் கடை வாசலில் வாலை
ஆட்டியபடி நின்று கொண்டிருந்த நாயை பார்த்தபடி சொன்னார்..அவன் எப்படி உங்களை
விட்டுட்டு போவான் ?” என்று கேட்டதும் நாயாக இருந்த அவன் அப்பா மகானின்
அருகில் வந்து சொன்னான்
“நான் எனது கடைசி காலத்தில்
உங்களோடு வர தயாராகத்தான் இருந்தேன்.
அப்போது நீங்கள் தான் வரவில்லை..” என்றான்.
உடனே
அந்த மகான் சொன்னார் “இப்போது கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை..
இன்றே என்னுடன் புறப்பட்டு வா.. நீ நாயாக
இருந்தால் கூட பரவாயில்லை ..”என்று
சொன்னார்.
நாய்
உருவில் இருந்த கடைக்காரர் வாலைக் குழைத்தபடி சொன்னார் “சாமி இன்னும் கூட
என் மகனுக்கும் என் மனைவிக்கும் புத்திசாலித்தனம்
இல்லை.. நான் சம்பாதித்து வைத்ததை
பார்த்துக் கொள்ளக்கூட துப்பு இல்லை அவர்களுக்கு.. நாயாக பிறந்தும் கூட நான் தான்
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு மகானை நிமிர்ந்து பார்த்தது அந்த நாய்.
ஆனால்
அந்த மகான் ரொம்ப தூரம் நடந்து போய்க் கொண்டிருந்தார்.
அடுத்த
பிறவி பற்றிய நம்பிக்கை உங்களுக்கு உண்டா ? நிறைய பேர் இதை நம்புறாங்க.
சில பேர் நம்ப மாட்டாங்க.
இந்திய
புராணங்களில் ஒன்று கருட புராணம்.அதுல
அடுத்த
பிறவியை பற்றி நிறைய சொல்லி இருக்கு.
மனித
பிறவின்னா, அது
84001 வது பிறவி அப்படின்னு சொல்லுது கருட புராணம்.
ஒருத்தர்
மனித பிறவி எடுக்கனும்னா 84,000 பிறவிகள் எடுக்கணும். அப்படி எடுத்தால் தான் மனிதனா பிறக்க
முடியும். செடி கொடியா, பூச்சி
புழுவா, பறவையா மானா மீனா 84,000 பிறவிகள்
எடுத்தால்தான் மனிதப் பிறவி எடுக்க முடியும்.
மனித
பிறவி எடுத்த பிறகு மறுபடியும் விலங்குகளாக பிறக்க முடியுமா ? முடியும் அப்படின்னு சொல்லுது கருட புராணம்.
இப்ப
யார் என்ன செஞ்சா அடுத்த
பிறவியில விலங்குகளாக பிறப்பாங்க அப்படின்னு பார்க்கலாம். கொஞ்சம் நல்லா கவனிங்க.
ஒண்ணு
பெண்களை துன்பப்படுத்தறவங்க, ஓநாய் குள்ளநரி கழுகு பாம்பு, இப்படி மறுபிறவி எடுப்பாங்க.
இரண்டு,
பெரியவர்களை நல்லவர்களை கஷ்டப்படுத்துவது நஷ்டப்படுத்துவது, இந்த மாதிரி பாவங்களை
செய்பவர்கள் காகமா பிறந்து குறைந்தது 10 வருஷம் “கா கா கா’ன்னு” கத்திகிட்டே இருப்பாங்க.
சில
திருடர்கள் திருடும்போது குறிப்பா ஏதாச்சும் ஒரு பொருளை குறி
வைத்து திருடுவாங்க.
சிலர்
தங்கத்தை மட்டும் திருடுவாங்க அந்த மாதிரி தங்கத்தை
திருடுறவங்க பூச்சிகளா பிறப்பாங்க.
அதிலேயே
வெள்ளியால் செய்த பொருட்களை மட்டும் திருடினா அவங்க புறா’வா பிறப்பாங்களாம்.
நாலாவது
சிலபேர் அடுத்தவங்க சொத்துன்னா அதையும் தன்னுடைய சொத்தா நினைச்சி ஆட்டையப் போடுவாங்க..
இவுங்கல்லாம் அடுத்த பிறவியில கிளி’யா பிறப்பாங்களாம். அவங்க வாழ்நாள் முழுவதும் கூண்டுக்குள்ள அடைபட்டு “கிகி
கிகி கிகி”ன்னு கத்திகிட்டே
இருக்க வேண்டியதுதான்.
சிலபேர்
கொலையும் செய்ய தயங்க மாட்டாங்க அந்த மாதிரி கொலைகாரங்க,
அடுத்த பிறவியில கழுதையா பிறப்பாங்க. அதனால அது தன் வாழ்க்கை
முழுக்க பொதி சுமக்குது. அடுத்தவர்களோட பாரத்த
சுமக்கிறதே தொழிலா போச்சு.
நான்
சொன்ன இந்த செய்திகள் எல்லாம்
நீங்க கருட புராணத்தில் படிக்கலாம்
இந்து சமயத்துல மொத்தம் 18 புராணங்கள் இருக்கு. இது 17 ஆவது புராணம். இதை
எழுதியவர் வேத வியாசர்.
நீங்க
அடுத்த பிறவியிலயும் மனிதர்களா பிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் !
பூமி
ஞானசூரியன்
1 comment:
எப்பிறவி எடுத்தாலும் தமிழ் இனத்தில் வாழனும்...நன்றிங்க
Post a Comment