Tuesday, April 29, 2025

தங்க அரளி என்ன நோய்களை குணப்படுத்தும் ? MEDICINAL PROPERTIES OF YELLOW BELLS

 

தங்க அரளி 

என்ன நோய்களை 

குணப்படுத்தும் ?


தென் அமெரிக்க மரமாக இருந்தாலும் இந்தியா முழுக்க உள்ளூர் மரம் போல வீட்டுக்கு வீடு காணப்படுவது, சீக்கிரமாய் வளர்வது. ஆண்டு முழுவதும் பூப்பது, அரைத்த மஞ்சள் நிறத்தில் கவர்ச்சி காட்டுவது, கொளுத்தும் வெப்பத்தையும் தாங்குவது, தாக்கும் பூச்சி நோய்களை தாக்குப்பிடிப்பது, குறைவான நிலப்பரப்பில் தன்னை வளர்த்துக் கொள்வது, வானத்தை தொட்டுவிட துடிக்காமல் 15 - 20 அடி உயரத்திற்கு வளர்ந்து அடக்கி வாசிப்பது, சிம்புகளை கிளைகளை எவ்வளவு கழித்தாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வளர்வது, இதெல்லாம் தான் தங்க அரளி மரத்தின் குணங்கள்.

அத்தோடு இந்த மரத்தின் மருத்துவ குணங்களையும், என்னென்ன நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி இந்த மரங்களில் உள்ளன, என்பதையும் இங்கு  தந்துள்ளேன்.

பல மொழிப் பெயர்கள்:

தமிழ் : தங்க அரளி – THANGA ARALI

கன்னடம் : கோரநேக்லார் – KORANACHELLAR

தெலுங்கு : பச்சகோட்லா – PACHAKOTLA

இந்தி : பிலியா – PILIA

தாவரவியல் பெயர் : டெக்கோமா ஸ்டேன்ஸ் – TECOMA STANS

பொதுப் பெயர் : எல்லோ பெல்ஸ் – YELLOW BELLA

தாவரவியல் குடும்பம் : பிங்னோனியேசி – BIGNONIACEAE

சொந்த ஊர் : விர்ஜீன் தீவு அமெரிக்கா – VIRGIN ISLAND AMERICA

கீழ்கண்ட நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி இந்த மரங்களில் உள்ளது.

1.     1. உடல் உரமூட்டி (Tonic)

2.     2. சிறுநீர் பெருக்கி (Diuretic)

3.     3. மேகப்புண் (Syphilis)

4.     4. சக்கரை நோய் (Diabetes)

5.     5. குடற் புழு கொல்லி (Anti helminthic)

6.     6. வயிற்றுவலி (Stomach ache)

இப்பொக்கூட உலகம் பூரா 80 சதவிகிதம் இயற்கையான மருந்துகளைத்தான் பயன்படுத்தறாங்க. 

ஆயுர்வேதம், சித்தவைத்தியம், யுனானி, ஹோமியோபதி எல்லாமே இயற்கை வைத்திய முறைகள்தான்.

ஏற்கனவே  நான் செய்த ஆய்வுகள்படி மருத்துவ குணங்கள் இல்லாத மரங்கள் என்று எதையும் ஒதுக்க முடியாது, ஆனால் நாம்  இன்னும் இவற்றை  சரியாகப் பயன்படுத்த வில்லை என்றுதான் இந்தத் துறையின் வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்.

இன்று ஒரு சேதியில் இதுபற்றிய செய்திகள் நிறைய வரும் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

பூமி ஞானசூரியன்

 

 

 

 

 

 


No comments:

தங்க அரளி என்ன நோய்களை குணப்படுத்தும் ? MEDICINAL PROPERTIES OF YELLOW BELLS

  தங்க அரளி  என்ன நோய்களை  குணப்படுத்தும் ? தென் அமெரிக்க மரமாக இருந்தாலும் இந்தியா முழுக்க உள்ளூர் மரம் போல வீட்டுக்கு வீடு காணப்படுவது...