ஈசன் தந்த வரம்
“ நான் என்னோட 20 வயசுல ஜென் துறவியாக ஆனேன். 40 வருஷத்துல நான் ஜென் பற்றி தெரிஞ்சுகிட்டேன். என்னோட 60 வயசுல நான் ஜென் குருவாக மாறி உபதேசம் பண்ண ஆரம்பிச்சேன்” அப்படி ன்னு அடிக்கடி சொல்லுவார் அவரோட வயசு நூத்தி இருபது. அவர் பேரு ஜோஷூயா .
ஒரு நாள் ஒரு இளம் துறவி இவரைப் பார்க்க வந்தார். இவ “உங்களுக்கு என்ன வேணும் “ அப்டின்னு கேட்டார்.
“ஏனக்கு ஒண்ணும் வேணாம்” என்று தயங்கி தயங்கி சொன்னார்.
“ஓண்ணும் வேணாம்னா எதுக்கு வந்திங்க ? கிளம்புங்க” என்றார் குரு.
மீண்டும் தயங்கியபடி” நான் துறவியா ஆயிட்டேன், ஆனா என்ன செய்யறதுன்னு
தெரியல.. அதான் உங்கள பாத்துட்டு போகலாமுன்னு வந்தேன் ..”
“எதாச்சும் செய்யணும்னு உங்க மனசுல எதாச்சும் இருக்குமே .. அதச்
சொல்லுங்க.
“ என்னோட மனசுல எதுவும் இல்ல. நான் என்ன செய்யறதுன்னும் தெரியல. இதுக்கு நீங்க தான் எனக்கு வழி காட்டணும் “ அப்படின்னு சொன்னார்.
“மனசுல எதுவுமே இல்லையா?” கேட்டாரு ஜென்குரு.
“எதுவும் இல்லை குருவே “ அப்படிண்னார்” மறுபடியும் அந்த இளம் துறவி.
.”அப்படின்னா மனசுல எதுவும் இல்லங்கறதை தூக்கி வெளியில போட்டுட்டு திரும்பவும் வா” அப்படின்னு சொன்னார் அந்த ஜென் துறவி.
அப்ப அந்த இளம் துறவி சொன்னார் “ ஒண்ணுமே இல்லாததை எப்படி தூக்கி எறியறதுன்னு எனக்கு தெரியல சுவாமி” அப்படின்னு சொன்னார் அவர்.
“ஒண்ணுமே இல்லாததை தூக்கி எறியறதுன்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கு பிறகு இங்க வா “அப்படின்னு சொல்லி அந்த இளம் துறவியை அந்த குருசாமி வலுக்கட்டாயமா அனுப்பி வச்சிட்டார்.
வேற என்ன செய்யறதுன்னு தெரியாம அந்த இளம் துறவி திரும்பப் போயிட்டார்.
ஓருத்தர் பஸ்சுல ஏறி உக்காந்துட்டார். கண்டக்டர் வந்து எங்க
போறிங்கன்னு கேட்டா ? எனக்கு அதப்பத்தி ஒண்ணும் ஐடியா இல்ல. நீங்களே ஒரு நல்ல ஊரா சொல்லுங்க”
அப்படின்னார். ஒடனே கண்டக்டர் விசில் அடிச்சி பஸ்ஸை நிறுத்தினார். பஸ் நிண்ணதும் இங்க
இறங்கிக்கங்க இது நல்ல ஊருதான் சார் அப்படின்னாராம்.
இப்பொ அந்த கண்டக்டர் என்ன செஞ்சாரோ அதே வேலையத்தான் அந்த ஜென்துறவியும்
பண்ணார்.
நாம் பேசும்போது எப்பவும் தெளிவாப் பேசணும். நாம் என்ன பேசறோம்
அப்படிங்கறது அடுத்தவங்களுக்கு புரியணும். சில பேர் பேசறது அவுங்களுக்கே புரியாது.
பேசிட்டு, நம்மகிட்டயே கேப்பாங்க நான் என்ன சொன்னேன் “அப்படின்னு.
“ நாங்க சிறுசா இருக்கறதால யாரும் எங்கள மதிக்க மாட்றாங்க..
அதனால நாம் கடிச்ச உடனே யாரா இருந்தாலும் செத்துப் போகணும், அப்பிடி ஒரு வரத்தை சிவபெருமான்
கிட்டெ வாங்கணும் அப்படீன்னு ஒரு எறும்பு ஆசைப்பட்டது.
அந்த எறும்பு சிவ பெருமானை
நோக்கி தவம் செய்ய, உடனே சிவபெருமான் காட்சி தந்தார். “என்ன வரம் வேண்டும் கேளுங்கள்
அப்படின்னாரு. உடனே அந்த எறும்புக்கு ஒரே சந்தோஷம். சிவபெருமான் காட்சி குடுத்தா போதும்.
அப்புறம் என்ன வரம் கேட்டாலும் குடுத்துடுவார். அது அந்த எறும்புக்கு தெரியும். வரம்
குடுத்த சிவபெருமான் தலையில கை வைக்கப் போன சூரபத்மன் கதை கூட அந்த எறும்புக்கு தெரியும்.
அதனால அது கேட்டது, “ நான் கடிச்ச உடனெ செத்துப்போகணும் அதுக்கு
நீங்க அருள்பாலிக்கணும் “ அப்படின்னு கேட்டது. சிவபெருமான் “அப்படியே தந்தேன்” அப்படின்னு
சொல்லிட்டார். எங்க எறும்பு இனத்துக்காக குடுத்த வரத்துக்கு நன்றின்னு சொல்லிட்டு வந்தது.
ஊருக்கு வந்ததும் எறும்புகள் மகசபையை கூட்டிச்சு. அதுல அது செய்த
தவத்தப்பற்றி சொன்னது. சிவபெருமான் எப்பிடி காட்சி குடுத்தார் ? எப்பிடி இது வரம் கேட்டது
? எப்பிடி அவர் உடனே கொடுத்தார் அப்படின்னு விலாவாரியா சொன்னது.
அந்த எறும்பு தலைவனை எல்லாரும் பாராட்டினாங்க. இப்பொ அந்த வரம்
பலிக்குதா அப்படின்னு பாக்கணும். அதுக்கு ஒரு மனிதனை கடிச்சி சோதனை செய்து பாக்கணும்.
உடனே ஒரு எறும்பு போயி ஒரு மனிதனை கடிச்சது. அவன் கையினால ஒரு
தட்டு தட்டினான். உடனே அந்த எறும்பு செத்துப் போச்சி. அப்புறம் இதே மாதிரி இரண்டு மூணு
எறும்புங்க இரண்டு மூணு மனுஷங்களை கடிச்ச்ச எறும்புகள் அத்தனையும் தொப்தொப்புன்னு விழுந்து செத்துப் போச்சிங்க.
உடனே வரம் வாங்கின எறும்பு கடவுள்கிட்ட போய் கேட்டிச்சு, அப்பொ
அவர் சொன்னார், கடிச்ச உடனே செத்துப் போகணும்னுதானே கேட்டிங்க. நான் அதத்தானே குடுத்தேன்
அப்படின்னார். “நாங்க கடிச்சா கடிபட்டவன் சாகணும்னு கேட்டியா ?”
அந்த எறும்பு தன் தவற்றை உணர்ந்தது, அதனை மாற்றித் தரும்படி கேட்டது, சிவபெருமான் உடனடியாக மாற்றமுடியாது என்று சொல்லிவிட்டார். அதனால் இப்போதும் கூட அது கடித்தால் நாம் ஒரு தட்டு தட்டினால் அது இறந்து போகிறது. கடவுள் குடுத்த வரம்தான் அதுக்குக் காரணம்.
அதனால் நாம் பேசும்போது தெளிவாக பேசணும்னு பாத்தோம். அடுத்து
அந்த இளம் துறவி என் மனசுல எதுவுமில்லன்னு சொன்னார்.
அந்த மனித மனத்தை நிபுணர்கள் எத்தனை பிரிவா பிரிக்கிறாங்கன்னு பாக்கலாம். மனித மனகளை மூணா பிரிக்கிறாங்க.
முதல் வகை மனத்தின் பெயர் உணர்வு மனம் அல்லது புறமனம், ஆங்கிலத்துல அதை “கான்சியஸ்
மைண்ட் “ அப்படின்னு சொல்றாங்க. அதுல, நிகழ்கால எண்ணங்கள், தீர்மானங்கள், ஐம்புலன்
தகவல்கள் எல்லாம் இருக்கும்.
இரண்டாவது வகைக்கு நனவுமனம் அல்லது ஆழ்மனம். ஆங்கிலத்தில் இதோட பெயர் சப்கான்சியஸ் மைண்ட். இதில் சேமிக்கப்பட்ட தகவல்கள்,
தன்னிச்சையாக நடப்பவை (தட்டச்சு, கார் அல்லது இதர வாகனங்கள் ஓட்டுவது), நம்பிக்கைகள்,
பழக்க வழக்கங்கள், எல்லாம் இதில் நிரம்பி வழியும்.
மூன்றாவது வகை மனத்தை உணர்வற்ற மனம்னு சொல்றாங்க, இதை ஆங்கிலத்தில்
அன்கான்சியஸ் மைண்ட், ன்னு சொல்றாங்க. இதப்பற்றி முதன் முதலாக சொன்னவர் சிக்மண்ட் ஃபிராய்ட்.
இந்த உணர்வற்ற மனத்துல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியாது. இதில் ஆழ்ந்திரும்
பயம், ஆசைகள், மன வேட்கைகள், முன்னோர்களிடமிருந்து பெறப்படுபவை எல்லாம் இதில் அடக்கம்.
இவற்றில் எதுவும் இல்லை என்கிறார், அந்த இளம் துறவி, அவர் ஏன்
அப்படி சொன்னார், என்று உங்களால் சொல்ல முடியுமா ?
கமெண்ட் பகுதியில் எழுதுங்கள், அன்புகூர்ந்து.
பூமி ஞானசூரியன்.
No comments:
Post a Comment