Wednesday, April 23, 2025

சண்டை போடுவது எப்படி ? IS FIGHTING IS AN ART ? HOW TO DO IT ?

 

சண்டை போடுவது எப்படி ?



“அடைந்தால் மஹாதேவி இல்லை என்றால் மரணதேவி” இந்த வசனத்தை சொன்ன உடனே பி.எஸ் வீரப்பாவின் முகம் ஞாபத்துக்கு வரும். இது உண்டு இல்லன்னு பாக்கறது.

“முடிஞ்சா அடக்கறேன் இல்லன்னா அடங்கிபோறேன்” இந்த வசனத்தை சொன்ன உடனே நகைச்சுவை நடிகர்  நாகேஷ் நமக்கு ஞாபகத்துக்கு வரும். எப்படியோ பிரச்சினை வரக்கூடாது.

டூபீ ஆர் நாட்டு டூபி அப்படின்னா ஷேக்ஸ்பியரின் “ஹேம்லட்” நாடகம் ஞாபகத்துக்கு வரும். இது உண்டு இல்லன்னு பாக்கறதுதான். அதனாலதான் அது துன்பியல் நாடகமா முடிஞ்சது.

“வரும் ஆனா வராது” அப்படிச் சொன்னா நகைச்சுவை வடிவேல் ஞாபகத்துக்கு வரும். இதுல  பிரச்சினை வரும் ஆனா வராது.

அதே மாதிரியான ஜெர்மனி நாட்டு ஆட்டுக்கிடா சண்டைக்கதை.

ஜெர்மனி நாட்டுல ஒரு அழகான ஊர். அந்த ஊர்ல ஒரு அழகான ஓடை. அதுல எப்பவும் சிலுசிலுன்னு தண்ணி ஓடிகிட்டே இருக்கும். அந்த ஒடைக்கு மேல ஒரு சின்ன பாலம். அகலம் ரொம்ப கம்மி. அதுல ஒருத்தர் பின்னாடிதான் ஒருத்தர் போக முடியும். ஒருத்தர் வராங்கன்னா அடுத்த முனையில் இருக்கறவங்க அவங்க வர்ற வரைக்கும் காத்துட்டு இருக்கணும்.

இந்த மாதிரியான அந்தப் பாலத்துல இரண்டு முரட்டு ஆடுகள், இந்த  முனையில் ஓன்று, நடக்க ஆரம்பிச்சது. அந்த சமயம் அதே அளவு சமமான முரட்டு ஆடு பாலத்துக்குள்ள நுழைஞ்சது. ரெண்டு ஆடுகளும் நடந்து வந்து பாலத்தின் இப்பகுதியில் வந்து எதிர் எதிரா நிண்ணதுங்க.

ஒண்ணோட ஒண்ணு முறைச்சிப் பாத்ததுங்க. ரெண்டு ஆடுங்களோட கண்ணும் சிவப்பா மாறிடுச்சி. கோபம் ரெண்டு ஆடுகளோட கண்ணுலயும் கொப்பளிச்சிகிட்டு இருந்தது

அடுத்த நிமிவும் மடார் மடார்ன்னு முட்டிக்க ஆரம்பிச்சது. இந்த ரெண்டு ஆடுங்க முட்டிகிற சத்தம் ஊரு முழுக்க கேட்டிச்சி. பின்னாடி போகுதுங்க அப்புறம் வேகமா முன்னாடி ஒடி வந்து முட்டுக்கிதுங்க

ஒடைக்கு அந்தபக்கமும் இந்தப் பக்கமும் எகப்பட்ட ஜனங்கள். எப்படி அந்த ரெண்டு ஆடுகளையும் சமாதானப் படுத்தறது அப்படின்னு ஜனங்க பேசிகிட்டாங்க.

ரெண்டு ஆடுகளும் பின்னாடி நடந்து வந்து பிறகு வேகமா முன்னாடி ஓடி தலையால முட்டிகிட்டதுங்க. எந்த நேரத்திலயும் எதாவது ஒரு ஆட்டோட மண்டை உடையலாம். இல்லன்னா இந்த ரெண்டு ஆட்டோட மண்டையும் உடையலாம் என்று பேசிக் கொண்டார்கள்.

முட்டிக் கொண்டிருக்கும் இரண்டு ஆடுகளில்  “டேய் நான் சொல்றேன் இடது பக்க ஆடுதான் ஜெயிக்கும்” என்றான் ஒரு இளைஞன்

“நீ வேணுன்னா பாரு வலதுபக்க ஆடுதான் தான் ஜெயிக்கும்” என்றான் இரண்டாவது இளைஞன்.

இரண்டு பேரும் 100 கெர்மனி ரூபாய் பந்தயம் கட்டி விட்டு ஜெயிக்கும் ஆடு எது என்று கண்ணில் விளக்கெண்ணை போட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். காரணம் இரண்டும் ஒரே நிறம்.

அந்த சமயம் யாரும் எதிர்பாரத விதமாக இரண்டு ஆடுகளும் பாலத்திருந்து தவறி ஒடைக்குள் விழுந்தன. இரண்டும் அந்த ஓடைக் கரையில் மூச்சிபேச்சி இல்லாமல் கிடந்தன

இப்போது அந்த ஒடையில் இரு கரைகளிலும் நின்றிருந்த ஆடுகள் பாலத்தில் ஏறி நடந்தன. அது மிகவும் சிறிய பாலமாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று இடம் தந்து ஒதுங்கி பிரச்சனை இல்லாமல் நடந்து சென்றன. அதன் ஊடாக சில மனிதர்களும் அந்தப் பாலத்தில் எறி நடந்து சென்றார்கள்.

“விட்டுக் குடுத்துப் போனா நாம ஒருத்தருக் கொருத்தர் முட்டிக்க வேணாம். நம்ம தலைக்கும் சேதாரம் இல்லை “ என்று ஒரு ஆடு சொல்ல மற்ற ஆடுகளும் “ஆமாம் ஆமாம்” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பாலத்தைக் கடந்து போயின.

ஆடுகள் சண்டை போடும்போது முதலில் பின்னால் சென்று பின்னர் வேகமாக ஒடி எதிராக நிற்கும் ஆட்டைத் தாக்கும். பின்வாங்குவது என்பது கோழைத்தளமானது அல்ல. அது தனது தாக்குதலை வேகப்படுத்த விரைவு படுத்த உதவும். போராளிகள் இதனை கடைபிடிக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர் அதில் ஆட்டு சண்டையைத்தான் சிறந்த போர்வீரமாகக் காட்டுகிறார்

ஊக்கம் உடையான் ஒழுக்கம் பொருந்தர்

தாக்கற்குப் பேருந் தகைத்து

அதற்கு சொல்லும் பொருள் இது தான், “ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சணடையிடும் ஆட்டுக்கிடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.”

பின்னாடி போங்க ஆனா அது முன்னாடி

போகறதுகக்கான உபாயமா இருக்கணும்.

சண்டை போடுவதற்கு இந்த முறை சரியா தப்பா என்று உங்கள் கருத்தை அன்பு கூர்ந்து பதிவிடுங்கள்.

பூமி ஞானசூரியன்.

 


No comments:

சண்டை போடுவது எப்படி ? IS FIGHTING IS AN ART ? HOW TO DO IT ?

  சண்டை போடுவது எப்படி ? “அடைந்தால் மஹாதேவி இல்லை என்றால் மரணதேவி” இந்த வசனத்தை சொன்ன உடனே பி.எஸ் வீரப்பாவின் முகம் ஞாபத்துக்கு வரும். இது...