Thursday, April 17, 2025

எப்படி அலைகள் பேசும் ? - HOW WAVES CAN SPEAK ?

 

எப்படி அலைகள் பேசும் ?

THANKS VICTOR CARVALHO

"கடவுளே உனக்கு நியாயமா? என்னை மட்டும். எதுக்காக இப்படி படைச்ச ? என்ன இவ்ளோ சிறுசா எதுக்காக படைச்ச ?" என்று அழுது புலம்பிய படி சொன்னது. கடலில் இருந்த ஒரு சிறிய கடல் அனலை.

அந்தசமயம் முரட்டுத்தனமான ஒரு பெரிய அலை ஒன்று உருண்டு திரண்டு வந்து இந்த சின்னஞ்சிறிய அலையை மூழ்கடித்தது.

"என்ன யாராச்சும் காப்பாத்துங்க .. என்ன யாராச்சும் காப்பாத்துங்க ..” என்று பெரிதாக குரல் எழுப்பி கத்தியது அந்த சின்னஞ்சிறிய அலை.

உடனே அந்த முரட்டு அலை தனது கைகளால் அந்த சிறு அலையின் கண்ணீரைத் துடைத்து “உனக்கு என்னாச்சு? உன்னோட முகம் ஏன் இப்படி இருக்கு? யாரு என்ன பண்ணாங்க? எதுக்காக காப்பாத்துங்க காப்பாத்துங்க அப்படின்னு. கூக் குரல், எழுப்புற ?” என்று கேட்டது அந்த முரட்டு அலை.

“நீ எவ்வளோ பெருசா இருக்க ? உன்ன பார்த்தா எனக்கு பயமா இருக்கு. என்ன மட்டும் ஏன் இவ்வளவு சிறுசா படைத்தார் கடவுள் ? “அப்படின்னு கேட்டது. அந்த சின்னஞ்சிறிய அலை.

“நீ இந்த கேள்வியே கேக்கறதுக்கு முன்னாடி நீ யாருன்னு தெரிஞ்சுக்க" அப்பதான், நீ இந்த பயத்தில் இருந்து வெளியே வர முடியும்.

"சரி நான் ஒன்னு கேக்குறேன் நீ யார்? நீ யாருன்னு எனக்கு சொல்லு பாப்போம்"

"நான் பரிதாபமான சின்ன அலை. நீ முரட்டுத்தனமான பெரிய அலை  சரியா?"

“நீயும் அலை தான். நானும் அலைதான். அலை என்பது நம்மோட வடிவம். அடிப்படையில நாம தண்ணீர். நீயும் தண்ணீர். நானும் தண்ணீர்தான். பெரிய அலை சின்ன அலை அப்படிங்கிறது தான் நம்முடைய வடிவம்.

அப்படி என்றால் நாம் இரண்டு பேருமே தண்ணீர் தானா ? அலை இல்லையா?

"ஓ முட்டாள் அலையே நாம் எல்லோருமே தண்ணீர் தான். நம்முடைய வடிவம் தான் அலை என்பது.  இதெல்லாம் நாம மொதல்ல தெரிஞ்சிக்கணும்."

"நம்ம யாருன்னு தெரிஞ்சுக்கலைனா இந்த உலகத்துல நாம வாழ முடியாது."

 " உன்னை அறிந்தால் 

நீ உன்னை அறிந்தால் 

இந்த உலகத்தில் போராடலாம். 

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் 

தலை வணங்காமல் நீ வாழலாம் "

இந்த பாட்ட பாடிகிட்டே அந்த பெரிய அலை போயிடுச்சு.

“நீ உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்” அந்த சின்ன அலை இதை பாடிப் பார்த்தது.

 இப்ப அறிவியல் ரீதியா தண்ணீரின்  திடமான வடியும் பனிக்கட்டி. திரவமான வடிவம் தண்ணீர். ஆவியான வடிவம் நீராவி. இந்த மூன்று வடிவங்களும்  நம்ம  எல்லாருக்கும்  தெரியும்.

இது இல்லாம சாம்பல் நிற நீர், பசுமை நிற நீர்,  நீல நிற நீர், வெண்மை நிற நீர், கருப்புநீர்.  இப்படியும்  நீரியல் நிபுணர்கள்  பிரிச்சுருக்காங்க.

மழை பேஞ்ச உடனே அந்த தண்ணி நேரடியா. பயிர்களுக்கு போகுது தாவரங்களுக்கு போகுது. அது உங்களுக்கு உபயோகமா இருக்குது. இதுக்கு பேருதான் பசுமை நிற  நீர் இது கிரீன் வாட்டர்.

இன்னொன்னு பெய்யக்கூடிய மழை தண்ணி ஆறுகள்ள ஓடுது. ஏரிகள் குளங்கள்ள, குட்டைகள்ள,  நிரம்புது.. அப்பறம் நிலத்துக்கு அடியில சேகரம் ஆகுது.  விவசாயத்துக்கு,  வீட்டு உபயோகத்துக்கு, தொழிற்சாலைகளுக்கு எல்லாத்துக்கும்  பயன்படுது. இந்த தண்ணிக்கு பேரு நீல நிற நீர். இது புளூ வாட்டர்.

குளியல் அறையில குளிக்கும்போது வடியக்கூடிய தண்ணீர். சாம்பல்நிறநீர் அப்படின்னு சொல்றோம். அதே மாதிரி கழிவறை இல்ல வழியே கூடிய தண்ணியும் சாம்பல் நீர் தான். துணி துவைக்கிற தண்ணி பாத்திரம் கழுவுற தண்ணி இது எல்லாமே சாம்பல் நிற நீர் தான். இது ஆங்கிலத்துல கிரே வாட்டர் அப்டின்னு சொல்றாங்க.

கழிவுநீர்ல மனித கழிவுகள், சாக்கடை எல்லாம்  கலந்து வந்ததுன்னு வச்சிங்க. அதுக்கு பேருதான். கருப்பு நீ எத்தன பேரு ஆங்கிலத்துல பிளாக் வாட்டர்.

சுத்தமான தண்ணீர். வைரஸ் இல்லாத தண்ணீர், பாக்டீரியா இல்லாத தண்ணீர்,  குடிக்கப் பயன்படுத்தக் கூடிய  தண்ணீர்தான் வெண்மை நீர், வெள்ளை நீர், ஆங்கிலத்தில் ஒயிட் வாட்டர்.

அலைகள் நம்மிடம் பேசினால் என்ன பேசும் ? கமெண்ட்ஸ் பகுதியில் எழுதுங்கள் !

பூமி ஞானசூரியன்.


 

No comments:

அந்தமான் தீவுகளில் ஆஃப்ரிக்க பழங்குடிகள் எப்படி ? - HOW AFRICAN ROOTS REACHED THE ANDAMANS ?

  அந்தமான் தீவுகளில் ஆஃப்ரிக்க பழங்குடிகள் எப்படி ? அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்ள,   " ஓங்கி ஐலேண்ட்"(ONGI ISLAND)    அப்பட...