கத்தி சண்டை
கத்துக்கொள்ள
எத்தனை நாளாகும் ?
{கதை}எதைச் செய்தாலும் அதை செய்றதுக்கு போதுமான நேரம், அவகாசம், இது
எல்லாம் வேணும். அப்ப தான் எதையும் சரியா செய்து முடிக்க முடியும்.
வேகம் தேவை தான். ஆனால் அந்த வேகம் விவேகத்துடன் சேர்ந்தால்தான்
எதுவும் சரியாக வரும். அப்படி இல்லன்னு நாம் நினைக்கிற மாதிரி. எதையும் செய்ய முடியாது.
பிள்ளையார் பிடிக்கத் தொடங்கி அது குரங்கு பிடிச்ச கதையாயிடும்.
அதனால எதையும் சரியா திட்டமிடணும். அதுக்கு போதுமான. காலஅவகாசம் கொடுக்கணும்.
செய்ய வேண்டிய வேலையை முழுசா புரிஞ்சிகிட்டு அதுக்குப் பிறகு திட்டம் போடணும்.
அவசர கோலம் அள்ளி தெளிச்ச மாதிரி. அப்படின்னு சொல்லுவாங்க. அவசர
அவசரமா போட்டா அது அள்ளி தெளிச்ச மாதிரி ஆயிடும். கோலம் கோலமா இருக்காது. அது அலங்கோலமா
ஆயிடும்.
மனிதனுக்கு ஆசை இருக்கலாம். அந்த ஆசை பெரிய ஆசையா இருக்கலாம்.
ஆனா அது பேராசையாக இருக்க கூடாது. பெரிய ஆசைப்படலாம். தப்பு இல்ல. ஆனா பேராசைப் படக்கூடாது.
அது ஒரு பொருளா பணமா இருக்க வேண்டிய அவசியம் இல்ல. அத பற்றிய ஒரு கதை தான் இது.
ஒரு ஊர்ல ஒரு இளைஞர். அவனுக்கு கத்தி சண்டை கத்துக்கணும்னு ஆசை.
ஆனா. அத சொல்லிக் குடுக்க ஒரு சரியான ஆசிரியர் கிடைக்கல.
கொஞ்ச தூரத்துல ஒரு மலைக் கிராமம் இருக்கு. அந்த கிராமத்துல
ஒரு ஆசிரியர் கத்தி சண்டை சொல்லிக் கொடுக்கிறார் அப்படின்னு கேள்விப்பட்டான்.
அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. கேள்விப்பட்ட அடுத்த நாளே அவரப் பாக்க
கிளம்பிட்டான். அந்த மலை கிராமத்துக்கு போனான். சுலபமா அவர் இருப்பிடத்தை கண்டு பிடிச்சுட்டான்.
அவருக்கு வணக்கம் சொன்னான். “ஐயா நான் பக்கத்து ஊர்க்காரன்.
எனக்கு ரொம்ப நாளா ஒரு வாள் வீரனா ஆகணும்னு ஆசை. அதுக்காக ஒரு குருவை தேடிட்டு இருந்தேன்.
இப்ப தான் உங்களை தெரிஞ்சது” என்று பணிவாக சொன்னான்.
வாள்சண்டை சொல்லித்தரும் குருநாதர் ரொம்பவும் வயதானவர். அந்த
இளைஞன் பேசுவதை அவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதுவும் பதிலாக சொல்லுவதற்கு
முன்னால் மீண்டும் அவனே பேசினான்.
“ஐயா நான் இந்த நிமிஷமே உங்க மாணவனான சேர முடிவு பண்ணிட்டேன்.
எவளோ பணம் செலவானாலும் பரவால்ல. எத்தன நாள்ல நான் இந்தப் பயிற்சியை எடுத்துக்கணும்
சொல்லுங்க. சீக்கிரமா நான் ஒரு பெரிய வாள்வீரனா வரணும். அதுதான் என்னோட ஆசை. என்று
அவசர அவசரமாக பேசினான்.
பேசி முடித்துவிட்டு அந்த குரு என்ன சொல்லுகிறார் என்று அவர்
முகத்தைப் பார்த்தான்.
அந்த குரு அமைதியாக இருந்தார். எதுவும் பேசவில்லை. ஆனால் மெதுவாக
சிரிப்பது மாதிரி தெரிஞ்சது இவனுக்கு.
மறுபடியும் அவன் அவரிடம் கேட்டான். “எத்தனை நாளாகும்? எப்ப நான்
பெரிய வாள்வீரனாக ஆக முடியும் ?. மறுபடியும்
அவன் பொறுமையை இழந்து கேட்டான். “எத்தனை நாள் பயிற்சி நான் எடுத்துக் கொள்ள வேண்டும்
?. அப்போது அந்த குரு சிரித்தபடி சொன்னார். தம்பி நீங்கள் முதலில் கத்தி பிடித்து சுமாராக
சண்டை போடும் அளவுக்கு கற்றுக்கொள்ளலாம். அதற்கு மட்டும் 10 வருஷம் ஆகும் என்றார்.
அந்த கத்தி சண்டை குரு.
“என்னது 10 வருஷமா “ என்று ஆச்சரியமாகக் கேட்டான். “நீங்க சொல்லி
தர்ற மாதிரி ரெண்டு மடங்கு கூடுதலான நேரத்தை இதற்காக செலவு பண்ணி. நான் இந்த கத்தி
சண்டையே கத்துக்கிறேன். இப்ப சொல்லுங்க நான் கற்றுக்கொள்ள எத்தனை நாளாகும் ? “என்று
கேட்டான் அந்த இளைஞன்.
வாள் சண்டை என்பது அருங்கலை. அதனை ரொம்பவும் மலிவான ஒன்றாக இந்த
இளைஞர் நினைக்கிறான். என்று அந்த குருவுக்கு மனதில் பட்டது.
இப்போது அவர் சொன்னார். “ நீ கூடுதலாக இரண்டு மடங்கு நேரம்.
செலவு செய்து பயிற்சி எடுத்துக் கொண்டால், நீ முழுசா கத்துக்க 20 வருஷம் ஆகும்” என்று
சொன்னார்.
“சாதாரண பயிற்சி எடுத்தால்
10 வருஷமுன்னு சொன்னீங்க.. ஆனா நான் அது மாதிரி
ரெண்டு மடங்கு நேரத்தை செலவு பண்ணி கத்துகிட்டா. 20 வருஷம் ஆகும்னு சொல்றீங்க... நான்
என் முழு நேரத்தையும் கொடுத்து கத்துக்கிறேன். கடினமா உழைப்பேன். நான் எதையும் வேகமா
கத்துக்குவேன். இப்போ சொல்லுங்க. எவ்ளோ நாள் ஆகும் சொல்லுங்க ?” என்று கேட்டான் அந்த இளைஞன்.
“நான் சொல்லித்தர்றது எல்லாம் ரொம்ப சீக்கிரமா கத்துக்கிறேன்னு
சொல்ற... அப்படின்னா என்னோட நீ 30 வருஷமாவது
தங்கி இருக்கணும்..” அப்படியென்று அந்த குரு
அமைதியாக சொன்னார்.
அதன் பிறகு எந்த கேள்வியும் கேட்காமல் அந்த பயிற்சியில் சேர்ந்தான்
அந்த இளைஞன். அப்போது அவன் வயது 20.
“கற்றுக்கொள்வது என்பது வாழ்நாள் முழுக்க தொடர்வது அது ஒரு குறிப்பிட்ட நாளில் முடிந்து போகாது. அது வாழ்நாள் முழுக்கத் தொடரும். ஒரு குறிப்பிட்ட எல்லையில் முடிந்து போகாது..” என்று இன்று சொல்கிறார் அதே மாணவர். ஆனால் இன்று அந்த மாணவருடைய வயது 60. அதே குருவுடன்தான் அவரும் இருக்கிறார்.
பூமி, ஞானசூரியன்
No comments:
Post a Comment