Thursday, April 24, 2025

பஞ்சும் நெருப்பும் கதை THE FIRE AND COTTON LINT

பஞ்சும் நெருப்பும் கதை 


தான்சான் என்ற ஒரு புத்தமதகுரு இருந்தார். அந்த குருவிடம் எக்கிடோ என்ற மாணவத் துறவி இருந்தான்.

தான்சான் வயதான துறவி. ஆனால் எக்கிடோ மாணவத்துறவி, வயசுபையன்.

ஒரு நாள் தான்சான் தன்னுடைய மாணவர்களுக்கு புத்தமத தத்துவங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது பொதுவாக துறவிகள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? எப்படி பேசவேண்டும் ? பஞ்சு நெருப்பிடமிருந்து  விலகி இருக்க வேண்டும் ?  பையன்கள் பஞ்சுமாதிரி. சுலபமாய்ப் பற்றிக் கொள்ளுவார்கள்.  இது பற்றி மிகவும் விளக்கமாகச் சொன்னார்.

அடுத்த நாள் அந்தத் தலைமைக்குருவும் எக்கிடோவும் ஒரு கிராமத்திற்கு போய்க் கொண்டிருந்தார்கள்.

 அப்போது அவர்கள் ஒர் ஆற்றினை கடந்து செல்ல வேண்டி இருந்தது.

 அவர்கள் இருவரும் ஆற்றங்கரையை அடைந்தார்கள்.

ஆற்றின் இருகரையும் தொட்ட மாதிரி தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

 தண்ணீரில் மரத்தின் உடைந்த கிளைகள் செடிகள் அவற்றின் இலைகள் பூக்கள் எல்லாம் அடித்துக் கொண்டு வந்தன.

 சிவப்பு நிறத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. புதுவெள்ளம் எனபது தெரிந்தது.

 ஆற்றங்கரையில் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தாள்.

அந்தப் பெண் கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தாள்.

 பார்க்க அம்மன் சிலைபோல இருந்தாள். சிவப்பு பச்சை என அமுத்தமான நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள்.

அவள் ஆற்றில் ஒடும் தண்ணீரைப் பார்த்தபடி தரையில் நின்று கொண்டிருந்தாள்.

இவர்களும் அவள் அருகில் போனார்கள்.

அங்கு சென்றதும் அந்த வயதான துறவி அவளை விசாரித்தார்.

ஏன் கரையிலேயே நிற்கிராய் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டுமா என்று கேட்டார்.

"ஆமாம் ஐயா,  அக்கரையில் இருக்கும் கிராமத்துக்கு நான் செல்ல வேண்டும். இப்படி வெள்ளம் வரும் என நான் நினைக்க வில்லை. யாரும் உதவி இல்லாமல் பாதுகாப்பாக இந்த ஆற்றை என்னால் கடக்க முடியாது என்று சொன்னார்.

உனக்கு ஆட்சேயான இல்லை என்றால் "நான் உனக்கு உதவிகிறேன்" என்று சொல்லி கீழே உட்கார்ந்து என் தோளில் ஏறிக்கொள்" என்றார்.

அவளும் வசதியாக ஏறி உட்கார்ந்தாள். வயதான துறவி அவளைத் தூக்கிக் கொண்டு எழுந்தார்.  வசதியாக இறங்கி தண்ணீரில் நடந்தார்.

அந்தப் பெண் அவர் தோள்களின் இருபக்கமும் கால்களைப் போட்ட படி துறவியின் தலையை கைகளால் பிடித்துக் கொண்டிருந்தாள்.

இப்போது அந்த இனைய துறவிக்கு கோபம் கோபமாக வந்தது. இந்த வயசான காலத்தில் இப்படி ஏன் செய்ய வேண்டும் ? அவருடைய ஆரோக்கியத்திற்கு இது  நல்லதல்ல.

இவர் ஏன் தூக்கி சிரமப் பட வேண்டும் ? என்னிடம் சொன்னால் நான் தூக்கிக் கொண்டுவர மாட்டேன் என்று சொல்வேனா ? "

இப்படி யோசித்தபடி அவன் கரையிலேயே நின்று விட்டான்.

திரும்பிப் பார்த்து குரு குரல் கொடுத்தார். உடனே பின்னால் சென்றான் சீடன்.

நேற்று எப்படி சொன்னார் பெண்கனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆண்கள் பஞ்சிமாதிரி பெண்கள் நெருப்பு மாதிரி.. பக்கத்தில் போனால் பற்றிக் கொள்ளூவீர்கள் " என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

குருவுக்கு ஒரு சட்டம் மாணவனுக்கு ஒரு சட்டமா ? இப்படி ஒரு புயல் மாணவன் மனதில் அடித்துக் கொண்டிருந்தது. 

குரு அந்த அழகான இளம் பெண்ணை தோளில் சுமந்தபடி எதைப்பற்றியும் கவலைப்படாமல் அக்கரையை போய்ச் சேர்ந்தார்.

 அந்தப் பெண்ணை தோளில் இருந்து இறக்கி விட்டார் குரு.

" மிக்க நன்றி" என்று சொல்லிவிட்டுச் சென்றாள் அந்தப்பெண்.

 அன்று மாலை வரை அந்த சீடன் குருவிடம் எதுவும் பேசவில்லை. அன்று இரவும் எதுவும் பேசவில்லை. அது வரை குரு எப்படி அந்தப் பெண்ணை தோளில் துக்கி வரலாம் என்றே யோசித்து கொண்டிருந்தான்.

அடுத்தநாள் காலை அவன் எழுந்தவுடன் உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும்.

"ஏன் இவ்வளவு தாமதம் ? நேற்றே கேட்க வேண்டும் என்று நினைத்தாய் அல்லவா கேள் " என்றார் சிரித்துக்கொண்டே தலைமைக் குரு.

"நீங்கள் எப்படி அந்தப் பெண்ணை தோளில் சுமந்து கொண்டு வந்தீங்கள்" என்று கேட்டான் சீடன்.

தலைமைக்குரு சிரித்துக்கொண்டே சொன்னார் "நேற்று மாலையே அந்தப் பெண்ணைத் தோளிலிருந்து இறக்கி விட்டுவிட்டேன்..  நீ அவளை இன்னும் கூட மனசில் சுமந்து கொண்டிருக்கிறாய் என்று நினைக்கிறேன் என்றார். 

அந்த சீடன் "என் மனதில் "சுருக்" கென்று  தைத்தது ஞானமுள்" என்று நிறையநாள் வரை சொல்லிக் கொண்டிருந்தான், இப்படித்தான் அந்த ஜென் கதை நிறைவடைகிறது.

ஆனாலும் பஞ்சும் நெருப்பும் கதை சொன்ன தான்சான் செய்தது சரியா ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

பூமி ஞானசூரியன்





No comments:

பஞ்சும் நெருப்பும் கதை THE FIRE AND COTTON LINT

பஞ்சும் நெருப்பும் கதை   தான்சான் என்ற ஒரு புத்தமதகுரு இருந்தார். அந்த குருவிடம் எக்கிடோ என்ற மாணவத் துறவி இருந்தான். தான்சான் வயதான துறவி. ...