அந்தமான் தீவுகளில்
ஆஃப்ரிக்க பழங்குடிகள்
எப்படி ?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்ள, "ஓங்கி ஐலேண்ட்"(ONGI ISLAND) அப்படின்னு ஒரு தீவு. அங்க 1987 வது ஆண்டு. நாட்டுப்புற கலை விழா நடந்தது. அதன் பேரு இந்தியில் " த்வீப் மகோத்சசவ்" (DWEEP MAHOTSAV). இந்திய அரசாங்கம் அதை ஏற்பாடு செய்திருந்தது.
அந்த ஓங்கித் தீவுல நடந்த அந்த நாட்டுப்புற கலைவிழாவுல அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் கலந்து கொள்ள இருந்தார், ஆனால் அன்றைக்கு வரமுடியல.
அந்தமான் நிக்கோபார் தீவுகள்ள ஒரு மாசத்துக்கு நடந்தது. அதுல கலந்துக்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சது. அந்தமான் நிக்கோபார்ல தீவுகள் ஒரு மாதம் கப்பல்ல பயணம் செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைச்சது. அந்த ஒரு மாசமும் தங்கினது, சாப்பிடது எல்லமும் கப்பல்லதான்.
100 பேருக்கு மேல தனியா ஒரு கப்பல்ல போனோம். எல்லாருமே நாட்டுப்புற கலைஞர்கள். கேரளாவின் கதகளி, கர்னாடகாவின் யக்ஷகானம், ஆந்திராவின் சிந்து பாகவதம், மகாராஷ்ட்ராவின் பண்டுவானி, அப்புறம் வடகிழக்கு மாநிலங்கள்ள இருந்தும் நிறையபேர் வந்திருந்தாங்க.
அவுங்க இல்லாம நாங்க ஒரு குழு அதை படம் எடுக்கும் குழு. இந்த கலைவிழா நடத்த ஒரு நாள் இந்த ஓங்கி தீவுக்கு போனோம். ஆப்ரிக்க இனத்தை வேராகக் கொண்ட ஓங்கி இனத்து மக்கள் இங்க வசிக்கிறாங்க. இவுங்களுக்கு ஒடம்புல பொட்டுத் துணியும் அணியும் பழக்கம் இல்ல. நாங்க போன அன்றைக்குமட்டும் ரொம்ப குறைச்சலா ஆடை அணிஞ்சிருந்தாங்க.
குறிப்பாக சில பழங்குடி மக்கள் வசிக்கும் தீவுகளுக்கு சுற்றுலா வரக்கூடியவர்களுக்கு அனுமதி இல்லை. கீழ்கண்ட பழங்குடி மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.
1. கிரேட் அந்தமானீஸ் 2. ஓங்கி 3. ஜரவா 4. சென்டினெலிஸ் 5. நிகோபாரிஸ் 6. ஷாம்பென்
முதல் நான்கு பழங்குடிகள் நீக்ரிடஸ் என்னும் பழங்குடிகள் அந்தமானில் குடியேறி இருப்பது ஆச்சரியம் !
அவுங்க வீடுகள் எல்லாம் மரத்துக்கு மேல கிளைகள் மேல அமைச்சி இருந்தாங்க, கீழேயிருந்து இரு ஏணி இருக்கு. அதுலதான் ஏறிப்போகணும். நாங்க அதுல ஏறிப்பாத்தோம்.
அந்த தீவுல நாங்க ஒரு தென்னைமரக் காட்டை பாத்தோம், ஏகமான தேங்காய் கொட்டிக்கிடந்தது, யாரும் அங்க தேங்காவை சமைக்க பயன்படுத்றதில்ல, மட்டைகளும் கொட்டிகிடக்கு, உள்ள நடக்க முடியாது.
அந்த ஓங்கி இனத்து ஆண்கள், முட்டிக்கால் தண்ணியில நடந்து போயி அம்பினால மீன்களை வேட்டை ஆடுறாங்க, ஒற்றை மரத்துல செய்த கெனொ அப்படிங்கற படகை மீன் பிடிக்கப் பயன்படுத்தறாங்க. நாங்க அந்தத் தீவுக்குப் போனப்ப அந்தத் தீவின் மொத்த மக்கள் தொகை சரியா 100 பேர்.
அவர்களோட முக்கியமான உணவு பன்றி இறச்சியும், மீனும்தான், சைவம்னா கிழங்குகள்தான்.
அந்தத் தீவுக்கு 10 கிலோமீட்டர் முன்னாடியே கப்பலை நிறுத்திட்டாங்க. நாங்க எல்லாரும் இறங்கி அஞ்சாறு படகுகள்ள அந்த ஓங்கி தீவுக்கு போனோம்.
அங்க ஓங்கி தீவு கரையில் படகை நிறுத்தினோம். அந்த கரையில இருந்த மரங்கள்ள கயிறு போட்டு படகுகளை கட்டிட்டு இறங்கி நடந்து தீவுக்கு உள்ள போனோம்.
அந்தத் தீவில பல மாநில நட்டுப்புற கலைகளும் ஒரு 4 மணி நேரம் நடந்தது. அதை 16 எம் எம் ஃபிலிம்ல படம் எடுத்தோம், அந்த குழுவில்தான் நான் இருந்தேன்.
அந்த விழா முடிஞ்சது. நாங்கள் படகுகள் நிறுத்தின இடத்துக்கு போனோம்.அங்க போய் பார்த்தது எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. காரணம், நாங்க வந்த படகுகள் எல்லாம் இருந்தது. ஆனால் அந்த இடத்துல ஒரு பொட்டு தண்ணிகூட இல்லை. படகுகள் எல்லாம் மணல்ல நிண்ணுகிட்டு இருந்ததுங்க.
நாங்க காலையில் வரும்போது தண்ணியில தான் படகுகளை நிறுத்தினோம். அந்த தண்ணி இப்போ ஒரு மூணு கிலோமீட்டர் தொலைவில இருந்தது.
அப்ப அங்க இருந்தவங்க சொன்னாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த தண்ணி இங்க வந்துரும் அப்படின்னு சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரி ஒரு அரைமணி நேரத்துல அந்த தண்ணீர் வந்து நிரம்பினது. நாங்க எல்லாரும் படகுல ஏறி மறுபடியும் கப்பலுக்கு வந்து சேர்ந்தோம். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.
எதனால அப்படி நடந்தது. அன்னைக்கு ராத்திரி மறுபடியும் கப்பல் பயணம் செய்யும்போது. இதப் பத்தி அந்த கப்பலோட கேப்டன் கிட்ட நான் கேட்டேன். அவர்தான் சொன்னாரு. அது பேரு ஹைடைட் மற்றும் லோடைட் (HIGH TIDE & LOW TIDE).
ஒரு நாளில் இந்த மாதிரி ரெண்டு தடவ தண்ணி வந்து ஏறி இறங்குமாம்? அதாவது அது கடல்ல இல்ல அது பேக் வாட்டர் என்று சொல்லக்கூடிய உப்பங்கழி.
அதுக்கு பிறகு பாத்திங்கன்னா பழவேற்காடு பகுதி மீனவர்களிடம் இதைப் பற்றி நான் பேசி இருக்கேன். இத அவங்க ஹை டைம் லோ டைட் அப்படிங்கறத வெள்ளம் வந்தம் அப்டின்னு சொல்றாங்க.
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment