Monday, April 14, 2025

DONALD TRUMP VS SIVAVAKKIYAR டொனால்டு டிரம்ப் மற்றும் சிவவாக்கியர்

 

டொனால்டு டிரம்ப் மற்றும் சிவவாக்கியர் 

GOLD CARD OF DONALD TRUMP

ஒரு குழந்தை பிறக்குதுன்னு வைங்க.அது பிறந்த உடனே என்ன பேசும் ?அம்மான்னுதான் பேசும் ! அதுதான் அது பேசக்கூடிய முதல் வாக்கியம் !

ஆனா ஒரே ஒரு குழந்தை மட்டும் பிறந்த உடனே சிவா என்று சொன்னதாம்.அதுதான் அது பேசின முதல் வாக்கியம்.

அதனால அவங்க அப்பா அம்மா அந்த குழந்தைக்கு சிவ வாக்கியர் அப்படின்னு பேர் வச்சாங்க.

சிவவாக்கியர் அப்படின்னு சொன்னவுடனே நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும் சில பேருக்கு தெரியாமலும் இருக்கலாம்.

சிவவாக்கியர் சாதாரண சாமியார் அல்ல ரொம்பவும் புரட்சிகரமான ஒரு சாமியார்.

அவர் புரட்சிகரமாக பாடின ஒரு பாட்டை இங்க தரேன்.படிச்சு பாருங்க.

“நட்ட கல்லை தெய்வம் என்று

SIVAVAKKIYAR TAMIL SAINT

நாலு புட்பம் சாத்தியே !

 சுற்றி வந்து மொணமொணன்னு

சொல்லும் மந்திரம் ஏதடா ?

நட்ட கல்லும் பேசுமோ

நாதன் உள்ளிருக்கையில் ?”

இந்த மாதிரி புரட்சிகரமாக நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை சிவவாக்கியர் எழுதியிருக்கார்.ஆனாலும் இந்த பாட்டு ரொம்ப பிரபலமானது.

அந்த காலத்துல கூட நிறைய யாரு தங்கம் வச்சிருக்காங்களோ அவங்க தான் பணக்காரங்க!

 ஏழைங்க கிட்ட கொஞ்சமா தங்கம் அப்படி இல்லன்னா சுத்தமா இருக்காது !

இப்பதான் ட்ரம்ப் அவர்கள் வந்து தங்கத்தை பற்றி அதிகம் பேசுறார்.

 ஆனா அந்த காலத்திலேயே தென்னிந்தியாவில் தங்கத்தை செல்வந்தர்களோட அடையாளமா பாத்தாங்க!

ஒரு நாள் சிவவாக்கியர் ஊரார் மூங்கில் மரத்தை வெட்டிக்கிட்டு இருந்தார்.அப்ப பார்த்தீங்கன்னா அந்த மூங்கில் மரத்துக்கு உள்ள இருந்து நிறைய தங்க காசுகளை கொட்டினது.

அந்த தங்க காசுகளை பார்த்த உடனே சிவவாக்கியர் "எமன் வரான் ..சாவு வருது எமன் வரான்.. சாவு வருது.. எமன் வரான்.. சாவு வருது.."அப்படின்னு சொல்லிக்கிட்டே அந்த இடத்தை விட்டு ஓடினார்.

அதுக்கு பிறகு ஒரு நாள் கொங்கணவர் என்ற பெயருடைய ஒரு முனிவர் அவர் வீட்டுக்கு வந்தார்.

KONGANAVAR TAMIL SAINT

அவங்க ரெண்டு பேரும் நிறைய தெய்வம், பக்தி, வழிபாடு, வேண்டுதல், வேண்டுகோள் இதப்பத்தி எல்லாம் பற்றி பேசிட்டு இருந்தாங்க.

அப்போ கொங்கணவர் சிவவாக்கியரோட மனைவி கிட்டகொஞ்சம் இரும்பு துண்டுகளை கொண்டு வாங்க” அப்படின்னு  சொன்னார்.

உடனே அவங்க வீட்டுக்குள்ள போயி கொஞ்சம் இரும்பு துண்டுகளை கொண்டு வந்து கொங்கணர் கிட்ட கொடுத்தாங்க.

அப்போ கொங்கணவர் தன் கையில இருந்த ஒரு பாத்திரத்தில் ஒரு மூலிகை தண்ணீர் வைத்திருந்தார். அந்த தண்ணீரை எடுத்து அந்த இரும்பு துண்டுகள் மேல் தெளிக்கிறார். தெளித்த உடனே அந்த இரும்பு துண்டுகள்  தங்கமா மின்னுது.

அதை எடுத்து அந்த அம்மா கிட்ட கொடுத்துட்டு கொங்கணவர் அங்கிருந்து புறப்பட்டு போயிட்டார்.

கொங்கணவர் வெளியே போன பிற்பாடு தன்னுடைய மனைவியை கூப்பிட்டார்.

"எங்க அந்த தங்கத்துண்டுகள் ?அதை எல்லாத்தையும் கொண்டு போய் வீட்டுக்கு வெளியில் தூக்கி வீசிட்டு வா" அப்படின்னு சிரிச்சுக்கிட்டே சொன்னார் சிவவாக்கியர்.

உடனே அந்த அம்மாவும்  மறு வார்த்தை பேசல. தங்கமா மாறிய அந்த இரும்பு துண்டுகளை வீட்டுக்கு வெளியே கொண்டு போனாங்க. வீசி எறிஞ்சாங்க. திரும்பி  வந்தாங்க !

ரொம்ப மகிழ்ச்சி ! இப்ப நம்ம வீட்டுக்கு வெளியே போகலாம் வா ! அப்படின்னு சொல்லிட்டு மறுபடியும் அந்த அம்மாவை வீட்டுக்கு வெளியே கூட்டிட்டு போனார், சிவவாக்கியர்.

ரெண்டு பேரும் அந்த வீட்டுக்கு பின்னாடி இருந்த அவங்க தோட்டத்துக்கு உள்ள போனாங்க. அங்க பெரிய ஒரு கல்பாறை  இருந்தது.

சிவவாக்கியர் அந்த கல் பாறைக்கு முன்னாடி போய் நின்னாரு ! அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல. எதுக்கு அங்க போய் நிக்கிறாரு அப்படின்னு பார்த்தாங்க !

அவர் என்ன பண்ணார் தெரியுமா ?

 அவங்களுக்கு ஒரு மாதிரியா இருந்தது. ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. ஒண்ணும் புரியல.

அந்தப் பாறைக்கு மேல சிவவாக்கியர்ஒன் பாத்ரூம்” போனார். புரியல சிறுநீர் கழிச்சார்.

அதுல அந்த பாறை முழுசா நனைஞ்சது ! ஆச்சரியம் ! அந்த பெரிய பாறையே தங்கமா மாறிடுச்சு ! முழுசா தங்கமா மாறிடுச்சி ! சூரிய வெளிச்சம் பட்டு பளிச்சிடுது. கண்கள் கூசுது ! நேரடியா பாக்க முடியல.

“இப்போ உனக்கு இந்த தங்கம் வேணும்னா அந்த பாறையை வீட்டுக்குள்ள எடுத்துட்டு போ”  அப்படின்னு சொன்னார் சிவவாக்கியர்.

உடனே அந்த அம்மா அவரை, ஒரு மாதிரியா பார்த்தாங்க ! அதுக்குப் பிறகு தெளிவா சொன்னாங்க. "உங்களுக்குப் பிடிச்சிருந்தா எனக்கும் பிடிக்கும்.. உங்களுக்கு பிடிக்கலன்னா எதுவும் எனக்கும் பிடிக்காது.." அப்படின்னு உறுதியா சொல்லிட்டு மளமளன்னு வீட்டுக்குள்ள போனாங்க,  அந்த அம்மா.

இப்ப தங்கத்தை பற்றி ஒரு பத்து முக்கியமான செய்திகளை பார்க்கலாம்.

1.தங்கம் அதிகமான அளவு வளைந்து கொடுக்கக்கூடியது. ஒரு அவுன்ஸ் எடை தங்கத்தை கம்பியா செஞ்சா 50 மைல் நீளத்துக்கு அதை இழுக்கலாமுன்னு சொல்றாங்க. ஒரு அவுன்ஸுன்னா தோராயமாக 28.3 கிராம் தங்கம்.

2.தங்கத்தோட இயற்கையான நிறம் மஞ்சள். தங்கத்தை கடினமா மாத்த மற்ற உலோகங்களை அதோட சேர்ப்பாங்க.

3.வெள்ளை தங்கம் இருக்கு தெரியுங்களா ? அதோட நிக்கல் மற்றும் பல்லாடியம் அப்படின்ற உலோகங்களை சேர்த்தா வெள்ளைத் தங்கமா மாறிடும். 

4.அதே மாதிரி ரோஸ் கோல்ட் இருக்கு. தங்கத்தோட காப்பர் சேத்தா அது ரோஜா நிற தங்கமா மாறிடும்.ரோஸ் கோல்ட்.

5.சொக்கத்தங்கம்னு சொல்லுவாங்க. ஆனா பச்சைத்தங்கம்  தெரியுமா ? தங்கத்தோட வெள்ளி, துத்தநாகம் அல்லது கேட்மியம் அப்படின்ற உலோகங்களை சேர்த்தால் பச்சைத் தங்கம் கிடைக்கும்.

 6.இது எல்லாத்தையும் விட அதிசயமான ஒரு செய்தி சொல்றேன் கேளுங்க. முட்டாள் தங்கம் அப்படின்னு ஒரு உலகம் இருக்கு அதன் பெயர் பைரைட். அது பார்க்க தங்க மாதிரியே இருக்கும். கடந்த காலங்களில் இந்த பைரைட்டை உலகத்தை தங்கம்னு கொடுத்து நிறைய பேர் ஏமாத்தி இருக்காங்களாம்.

7.இதுவரைக்கும் உலகம் முழுவதுமா ரெண்டு லட்சத்து 44 ஆயிரம் மெட்ரிக் டன் தங்கத்தை நாம பூமியிலிருந்து எடுத்து இருக்கோம். இது 80 சதவீதம். இன்னும் 20% தங்கம்தான் பூமிக்கு அடியில இருக்கு.

8.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலகம் பூரா வரியை அதிகப்படுத்தி இருக்கார். அது உலகம் பூரா பெரிய பிரச்சினையா இருக்கு. அதனால தங்கத்தோட விலை சரித்திர பூர்வமா எப்பவும் இல்லாத அளவுக்கு அதிகரிச்சி இருக்கு.

தங்கத்தை பற்றி நம்ம பெரியவங்க அனுபவசாலிகள் என்ன சொல்றாங்க தெரியுமா?  

தங்கத்தைத் தேடி போகவேணாம், தங்கமா மாறிடுங்க, கடவுள் உங்களுக்குள்ள இருக்காரு வெளிய போயி தேடாதிங்க ! 

பூமி ஞானசூரியன்


No comments:

A THREE MINUTE GEN SAINT STORY மூணு நிமிஷ சாமியார்

  மூணு நிமிஷ  சாமியார் ஒரு ஊர்ல. ஒரு புத்தமத சாமியார் இருந்தார்.  அவரு பேரு மூணு நிமிஷ சாமியார். சுத்துவட்டாரத்துல எல்லாம் அவர் ரொம்ப பிரப...