தசரத் மஞ்சி ஃபல்குனிதேவி
தொடர்ந்து ஒரு காரியத்தில்
கவனம் செலுத்தினால் எவ்வளவு பெரிய சாதனையும் செய்து முடிக்கலாம் இதுக்கு அடையாளமான
பெயர்தான் இந்த தசரத் மஞ்சி சாலை.
இந்த தசரத் மஞ்சி சாலை எங்க
இருக்கு ? இந்த சாலையை யார் போட்டாங்க ? ஏன் போட்டாங்க ? எப்போ போட்டாங்க ? அதன் சிறப்பு
என்ன ? ஆக இந்த தசரத் மஞ்சி சாலை பற்றிய கதைதான் இண்ணக்கி நான் சொல்லப்போற கதை
இந்த தசரத் மஞ்சி சாலைங்கறது
கற்பனைக் கதை இல்லை உண்மையான கதை நிஜமான கதை.
தசரத் மஞ்சி என்ற ஒரு தனி
மனிதனாக அவரோட சொந்த முயற்சியால 30 வருசம் உழைச்சி இரண்டு மலைகளுக்கு நடுவே உருவாக்கின
சாலைதான் இந்த தசரத் மஞ்சி சாலை
இந்த தசரத் மஞ்சி சாலை கெஹலூர்
என்ற ஊரில் இருக்கு. இதுக்கு பக்கத்துல இருக்கும் பெரிய ஊர் கயா. கயா பீஹார் மாநிலத்தில்
இருக்கு
கெஹலூர் மலைகள் உயரமில்லாதவை.
தொடராக இருக்கும். கூர்மையான கடினமான பாறைகள் நிறைந்த மலைத்தொடர் இது. இந்த மலைத் தொடரின்
இரண்டு பக்கங்களிலும் சிறுசிறு கிராமங்கள் இருந்தது.
இப்படிப்பட்ட ஒரு மலைக் கிராமத்தில்தான்
வசித்து வந்தார் நம்மாள் தஷ்ரத் மஞ்சி.
தஷ்ரத் மஞ்சி அவர்கள் தான்
தனிமனிதனாக நின்று இந்த சாலையை போட்டார் என்று பார்த்தோம்
இந்த கிராமத்து மக்கள் வயலுக்கு
போக வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கூடம் போக
வேண்டும். பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமணை
போக வேண்டும். எல்லாத்துக்கும் ஆபத்தான இந்த
மலைகளில் ஏறி குறுக்காக நடந்துதான் அடுத்த நகரத்துக்கு போகணும்.
அப்போ கூர்மையான செங்குத்தான
பாறைகள் ஊடாக நடந்து போகணும். அப்பொ அடிக்கடி அவர்கள் விபத்துக்கு உள்ளாவது வழக்கம்
தஷ்ரத் மஞ்சி இந்த கிராமத்தின்
தினக்கூலி.
ஒரு நாள் தஷ்ரத் மஞ்சியின்
மனைவி இந்த மலைகளின் ஊடாக நடந்து போனார். அந்தமாதிரி ஒரு பெரிய பள்ளத்துல விழுந்து ரொம்ப அடிபட்டது.
எவ்வளவோ சிகிச்சை குடுத்தாங்க.
அப்படியும் அவுங்க ஒரு நாள் அவர் இறந்து போனாங்க. 1960 ம் ஆண்டு அவர் இறந்தாங்க.
அவரது மனைவியின் இழப்பு அவரை
பெகுவாக பாதிச்சது. இனி இந்த கிராமத்தில் இப்படி ஒரு விபத்து நடக்க நான் விடமாட்டேன்,
என்று முடிவு செய்தார்.
தனிமனிதனாக இதைச் செய்துமுடிக்க
முடிவு செய்தார். அதற்குத் தேவையான சுத்தி, சம்மட்டி, கடப்பாரை, மண்வெட்டி மாதிரி சாதாரண
கருவிகளோட களத்தில் இறங்கினார். தனது 3 ஆடுகளை விற்று இவற்றை வாங்கினார்.
செங்குத்தாக உயரமாக விரைப்புடன்
நிற்கும் இரண்டு மலைகளுக்கு நடுவே தனது சாலையை அமைக்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் கிராமத்தினர்
கேலி பேசினர். இதெல்லாம் நடக்கற காரியமா ? அதுவும் ஒத்தை ஆளா இதெல்லாம் செய்ய முடியுமா
? என்று பேசினார்கள்.
இதை எல்லாம் தஷ்ரத் மஞ்சி
காது கொடுத்து கேட்கவில்லை. எறும்புர கல் தேயும் என்பது போல தஷ்ரத் மஞ்சி செய்த வேலை
பல ஆண்டுகள் தொடர்ந்ததால் அது பயன் அளிக்க ஆரம்பித்தது
ஒரு ஆண்டு இரண்டு ஆண்டு அல்ல.
தஷ்ரத் 22 ஆண்டுகள் போராடினார். அவருடைய உழைப்பைப் பாத்த பலரும் பாராட்டத் தொடங்கினார்கள்
இப்போது அவரது மலைமனிதன் என்று
அழைக்க ஆரம்பித்தார்கள். இருபத்தியிரண்டு ஆண்டுகளில் 360 அடி சாலையை போட்டு இருந்தார்.
அதுவும் மலைகளுக்கு ஊடான மலை. 1982 ம் ஆண்டு
தஷ்ரத் மஞ்சி இந்த சாதனையை செய்து முடித்திருந்தார்
இப்போது அந்த சாலை வழியாக
மக்கள் போக ஆரம்பித்தனர் சிறுசிறு வாகனங்கள் கூட போக ஆரம்பித்தது
மலைமனிதன் என்று அழைக்கப்பட்ட
அந்த மணிதன் 2007 ம் ஆண்டு இயற்கை எய்தினார்.
பகலில் பிறருடைய வயலில் உழவு
செய்வார் அதிலிருந்து கிடைக்கும் சொற்பமான வருமானம் அவர் குடும்பத்திற்கு போதுமானதாக
இருக்கும்.
மாலை நேரம் தொடங்கி இரவு நேரம்
வரை மலைப்பாதை அமைப்பதில் ஈடுபடுவார்.
அந்த சாலையின் அகலம் 30 அடி.
உயரம் 25 அடி. நீளம் 360 அடியும் அமைந்தது. இந்த சாலை அமைந்ததனால் 70 கி.மீ என்பது
ஒரு கிலோமீட்டராக சுருங்கியது. நினைத்துப்பாருங்கள்.
இது உண்மையாக நடந்த கதை. ஆச்சரியமாக
இருக்கில்ல. இன்னொரு ஆச்சரியமான செய்தி சொல்றேன்.
1.இப்படி ஒரு சம்பவம் நடந்தா
சினிமாக்காரங்க சும்மா விடுவாங்களா ? ஒரு சினிமா எடுத்து 2015 ம் ஆண்டு வெளியிட்டாங்க.
2.இந்த தசரத் மஞ்சியோட சொந்த
ஊர் பேரு கெஹ்லார் கிராமம், அதுக்கு பக்கத்துல இருக்கற பெரிய ஊர் கயா. அது பீஹார் மானிலத்தில்
இருக்கு.
3. அந்த கெஹலார் கிராமம் இப்போ
பீகார்ல ஒரு பெரிய சுற்றுலாத்தலமா மாறிடுத்து.
4. 2016 ம் ஆண்டு தசரத் மஞ்சி’
க்காக இந்திய அரசாங்கம் ஒரு ஸ்டாம்பு வெளியிட்டிருக்காங்க.
5. தசரத் மஞ்சி அந்த சாலைபோட
அவர் தனி மனிதனா வேலை செஞ்சது 22 வருஷம், 1960 ம் வருஷம் தொடங்கி 1982 ம் வருஷம் முடிஞ்சது.
6. அவர் இறந்தது, 2007 ம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி, பீஹார் அரசு மரியாதையோட அவர் உடலை அடக்கம் செய்தாங்க.
7. சாலை வசதி இல்லாததால தசரத்
மஞ்சியோட ஃபல்குனிதேவி இறந்ததுதான் காரணம் அந்த சாலை அமைச்சதுக்குக் காரணம்.
மனைவி பேர்ல எவ்ளோ அன்பு வச்சிருக்கார்
பாருங்க ! எல்லாருக்கும் ஷாஜகான் மும்தாஜ் தெரியும். அவ்ர்களோட காதல் அடையளம் தாஜ்மகால்.
தசரத் மஞ்சி ஃபல்குனி தேவியோட அடையாளம் தசரத்மஞ்சி சாலை.
உலகத்தின் பிரபலமான காதலர்கள், ஷாஜஹான் மும்தாஜ், அம்பிகாபதி அமரவதி,
சலிம் அனார்கலி, லைலா மஜ்னு, ஆன்ட்டனி கிளியோபாட்ரா, ஒதெல்லொ டெஸ்டிமோனா, ரோமியோ ஜுலியட்,
இந்த வரிசையில தசரத்மஞ்சி ஃபல்குனி தேவியோட பேரை சேர்க்கலாமா ? வேண்டாமா ? உங்க அபிப்ராயம்
என்ன ?
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment