Tuesday, April 15, 2025

A THREE MINUTE GEN SAINT STORY மூணு நிமிஷ சாமியார்

 

மூணு நிமிஷ சாமியார்

ஒரு ஊர்ல. ஒரு புத்தமத சாமியார் இருந்தார். 

அவரு பேரு மூணு நிமிஷ சாமியார். சுத்துவட்டாரத்துல எல்லாம் அவர் ரொம்ப பிரபலம். யாருக்கும் அவரோட உண்மையான பேரு என்னன்னு தெரியாது. எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரே பேரு. மூணு நிமிஷ சாமியார் தான். அவர் ஒரு ஜென் சாமியார்.

எவ்ளோ பேர் முயற்சி பண்ணி பாத்துட்டாங்க. அவர்கிட்ட மூணு நிமிஷத்துக்கு மேல பேச முடியல.

ஒரு திறமைசாலியான ஒரு இளைஞன். அவனோட நண்பர்களோட வந்தான். நான் அவர்கிட்ட மூணு நிமிஷத்துக்கு மேல பேசி அவரை தோற்கடிச்சுக் காட்டுறேன். அப்படின்னு சவால் விட்டான்.

இப்ப அந்த இளைஞன் ஜென் சாதுகிட்ட போனான். “உங்ககிட்ட சில கேள்விகள் கேக்கணும்” அப்டின்னான்? அவன எதிர்த்தாப்புல உட்கார வச்சாரு. அவன் கூட வந்தவங்க. அவன சுத்தி இருந்தாங்க.

“என்ன சந்தேகம் கேளுப்பா” அப்படின்ணார் அந்த சாமியார். ஆனா அவன பாத்தா. சந்தேகம் கேட்க வந்தவன் மாதிரி தெரியல. அவருக்கு ஏதோ பரீட்சை வைக்கிற மாதிரி நடந்துகிட்டான். அப்படித்தான் அந்த சாமியார் மனசுல பட்டது. அதுக்காக அவர் கவலைப் படல.

அந்த இளைஞன் கேட்டான். ஐயா நீங்க நூறு வருஷம் கழிச்சு நீங்க எப்படி இருப்பீங்க? எங்க இருப்பீங்க? “கொஞ்சம் திமிராவே அவன் அந்த கேள்விய அவர்கிட்ட கேட்டான்.

ஆனா அவரு கொஞ்சமும் யோசனை பண்ணாம. உடனே. அதுக்கு பதில் சொன்னார். “ நூறு வருஷத்துக்கு பின்னாடி நான் ஒரு குதிரையா இருப்பேன். இல்லன்னா கழுதையா இருப்பேன்..” அப்படின்னு சொன்னாரு.

இப்படி சொன்ன உடனே. அடுத்த கேள்வி என்ன கேக்குறதுன்னு அவனுக்கு ஒன்னும் புரியல. காரணம் அவன் இந்த பதில அவர்கிட்ட எதிர்பார்க்கல.

அவன் அவற்கிட்ட கேக்கணும்னு நினைச்சு அந்த கேள்வி எல்லாம் மறந்துட்டான். ஆனாலும் அதையெல்லாம் சமாளிச்சுட்டு அவன் இன்னொரு கேள்வி கேட்டான்.

“குதிரையாய் இருப்பேன் கழுதையாய் இருப்பேன்னு சொன்னீங்க. நீங்க அதுக்கு பின்னாடி என்னவா மாறுவீங்க ? எங்க போவிங்க ?” அப்படின்னு கேட்டான்.

“அடுத்து நான் நரகத்துக்குப் போவேன்” அப்டின்னாரு.

இப்படி சொன்ன உடனே அந்த இளைஞனுக்கு அடுத்து என்ன கேள்வி கேக்குறதுனு ஒன்னும் புரியல. அவன் ஏற்கனவே தயாரிச்சு வச்சிருந்த கேள்விகளை எதையும் கேட்க முடியல.

அதனால மறுபடியும் “ஏன் நீங்க நரகத்துக்குப் போகணும்னு விரும்புறீங்க?” அப்படின்னு கேட்டான்.

உடனே அந்த மூணு நிமிஷ சாமியார் சிரிச்சுட்டார். சிரிச்சுகிட்டே சொன்னார். “அப்பதான் நான் உன்ன அங்க பாக்க முடியும். முக்கியமா உன்ன பாக்கறதுக்காகவே. நான் அங்க வருவேன். என்ன நீ கேக்குற கேள்விக்கெல்லாம். நான் பதில் சொல்லணுமில்ல..” அப்படின்னு சொன்னது தான் பாக்கணும். அதுக்கு மேல அந்த இளைஞருக்கு கேள்வி எதுவும் கேக்கணும்னு தோணல.

அடுத்த வினாடி அந்த இளைஞன். அவருடைய பாதங்களில் விழுந்து. சுவாமி. என்ன மன்னிச்சிருங்க? நான் தெரியாம உங்களை சோதனை செஞ்சிட்டேன். அப்படின்னு சொன்னான்.

“என்ன சபிச்சு நரகத்துக்கு அனுப்பிடாதீங்க”

 “நரியண்ணன் நடக்கும் போதே தெரியும்”னு சொல்ற மாதிரி, அந்த இளைஞனைப் பாத்த உடனே. அந்த சாது கண்டுபிடிச்சிட்டார். அதனால தான்.  நரகத்துல சந்திக்கலாம்னு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

ஒரு சமயம், ஒரு பூனை ஒரு யானையை கேவலமா பாத்தது. யானைக்கு உடம்பு தான் பெருசு அறிவு கம்மி அப்படின்னு நினைச்சது. அதனால அது யானையப் பாத்து கிண்டலும் கேலியுமா கேட்டது.

“எங்களுக்கெல்லாம் ஒரே ஒரு வால் தான் இருக்கு. ஆனா உனக்கு மட்டும் எப்படி. பின்னாடி ஒரு வாலு இருக்கு ? அதே மாதிரி முன்னாடியும் ஒரு வால் இருக்கு."

“எனக்கு பின்னாடி இருக்குற தான் வால். முன்னாடி இருக்கறது தும்பிக்கை” அப்படி யானை சொன்ன உடனே, அந்தப் பூனை மறுபடியும். கிண்டலாக கேட்டுச்சு. “அது என்ன தும்பிக்கை உலக்கை மாதிரி இருக்கு ? அத வச்சு நீ என்ன பண்ணுவ ? அப்படின்னது.

அப்ப அந்த யானை சொன்னது. உனக்கு வாயினால சொன்னா புரியாது. செயல்ல காட்டுனா தான் தெரியும்னு சொல்லிட்டு தும்பிக்கையால். அந்த பூனையை தூக்கி, 100 அடிக்கு முன்னால் தூக்கி எறிஞ்சது. இப்பதான் அந்த பூனைக்கு  தும்பிக்கைன்னா என்னன்னு புரிஞ்சது.

அந்தயானை மாதிரி தான் இந்த இளைஞனை அந்த சாது தூக்கி. நரகத்துக்கு உள்ளே எறிஞ்சார். இப்ப அவனுக்கு  மூணு நிமிஷ சாமியார் யாருன்னு புரிஞ்சுது.

“யாராச்சும் என்னைக் காப்பாத்துங்க. யாராச்சும் என்னக் காப்பாத்துங்க அப்படின்னு ஒரு குரல் தொடர்ச்சியா கேட்டது. இது எங்க கேட்டதுன்னா ஒரு நரகப் படுகுழியிலருந்து கேட்டது.

அப்போ அந்த நரகப்படுகுழிக்கு பக்கத்துல புத்தர் உக்காந்துட்டு தியானம் பண்ணிட்டு இருந்தார். இந்தக் குரல் அவர் காதுல கேட்டுக்கிட்டே இருந்தது.

உடனே புத்தர் குரல் வந்த திசையில  நடந்து போனார். அந்த  நரகப் படுகுழியிலிருந்துதான் ஒருத்தன் கத்தினான். இவர் எட்டிப்பார்த்தப்ப  ஒருத்தன் உயிருக்கு போராடிட்டு இருந்தான். நிறைய பேரு உயிருக்கு போராடிட்டு இருந்தாங்க. ஆனா இவன் ஒருத்தன் மட்டும் தான் சத்தம் போட்டுகிட்டு இருந்தான். உடனே புத்தர் அவனுக்கு உதவி செய்யணும்னு நினைச்சார்?

அவன் ஏதாச்சும் இதுவரைக்கும் நல்லது செஞ்சு இருக்கானா ? அப்படின்னு ஞான திருஷ்டியில பார்த்தார். அப்போ ஒரு நாள் இவன் வயல்ல நடந்து போறான். அப்ப அவன் காலுக்கு அடியில. ஒரு சிலந்தி பூச்சியை மிதிக்கப் பாத்தான்.

அப்பொ அந்த சிலந்தி மேல கால வைக்காம தாண்டிகிட்டு போனான். அதனால அந்த சிலந்தி பூச்சி உயிர் பொழைச்சது. அந்த காட்சி  புத்தருக்கு தெரிஞ்சது. அதப் பாத்த உடனே புத்தர். அவனுக்கு  உதவி செய்ய முடிவு பண்ணார்.

அடுத்த  நொடியிலயே, ஒரு சிலந்தி தன்னோட, எச்சில் மூலமா ஒரு நூலிழையை அந்த கிணத்துக்குள்ள அனுப்பிது. காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்திக்கிட்டு இருந்த அந்த மனுஷன், அந்த நூலைப் புடிச்சிட்டு மேல ஏற ஆரம்பிச்சேன்.

இன்னும் கொஞ்ச நேரத்துல மேல வந்துருவான். அந்த நரகப் படுகுழியில் இருந்து அவன் தப்பிச்சுடுவான். அதுக்கு காரணம் இருந்தது, அவனுக்கும் தெரியாம அவன் ஒரு சிலந்தி பூச்சிக்கு, உதவியா இருந்தான், அப்டின்றது தான்.

இப்ப அவன் நூலை பிடிச்சுட்டு ஏறி வரும் போது, கீழ நெறைய சத்தம் கேட்டது. என்னன்னு திரும்பிப் பார்த்தான். அவனுக்கு பின்னாடி, அதே நூலைபிடிச்சுட்டு அஞ்சாறு பேரு இவன மாதிரியே மேல ஏறிட்டு வந்தாங்க. இத பாத்த உடனே அவனுக்கு கோபம் தாங்கல.

அடுத்த நிமிஷம் தன்னோட இடுப்புல இருந்தது ஒரு சின்னகத்தி. அதை   எடுத்து,  தனக்கு கீழ இருக்குறவங்க அந்த நூலைப் பிடிச்சு ஏறி வராத மாதிரி அதை வெட்டிவிட்டான்.அவ்ளோதான். அவனுக்கு கீழ அந்த நூலையே பிடிச்சு ஏறிட்டு வந்தவங்க அஞ்சி பேரும் மறுபடியும் அந்த நரகப் படுகுழியில் விழுந்துட்டாங்க.

இப்ப இவன் மட்டும் மேல ஏறி வந்தான். அத்தனையும் புத்தர் பாத்துட்டு இருக்காரு. இப்ப புத்தர் எதுவுமே சொல்லல? ஆனா அந்த சிலந்திநூல் பட்டுன்னு அறுந்து போச்சு. இப்ப அவனும் அந்த நரகப் படுகுழியில விழுந்திட்டான்.

அவன் ஏற்கனவே ஒரு சிலந்தி பூச்சியைக் காப்பாத்தினதுக்காக, அவனோட உயிர காப்பாத்தணும் அப்படின்னு புத்தர்  நினைச்சார்.

ஆனா இப்ப இவன் அஞ்சி பேர் உயிரை எடுத்துட்டுதால அவன் மறுபடியும். அந்த நரகப்படுகுழியில விழுந்துட்டான். அது மட்டும் இல்ல.  நம்மாளு  விழும்போது சரியா, திறந்த வாயோடு இருந்த. முதலையோட வாய்க்குள்ள  விழுந்தான்.

அதுக்கு பிறகு என்ன? புத்தர் தியானம் செய்ய போயிட்டாரு.

ஆமா உங்களுக்கு அந்த சொர்க்கம் நரகம் இதுலெல்லாம் நம்பிக்கை இருக்கா? உண்மையிலேயே சொர்க்கம் நரகம்னு எதாவது இருக்குதா?

ஆனா விஷயம் தெரிஞ்ச பெரியவங்க. என்ன சொல்றாங்கன்னா? சொர்க்கம் நரகம் அப்டின்றது தனியா இல்ல. வாழும் போதே அவன் நல்லது செஞ்சா. அந்த நல்லது அவனுக்கு கிடைக்கும். கெட்டது செஞ்சா. கெட்டது தான் அவனுக்கு கிடைக்கும்.

அவன் எதை விதைக்கிறானோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். நல்லதை விதைச்சா நல்லதை அறுவடை செய்யலாம். கெட்டதை விதைச்சா கெட்டதை மட்டுமே அறுவடை செய்ய முடியும், அப்படின்னு பெரியவங்க சொல்றாங்க.

ஆமா, நரகத்துக்கு யாரு கடவுள் அப்படின்னு தெரியுமா உங்களுக்கு? எமன் தான் நரகத்துக்கான கடவுள். அவர் தான் மரணத்துக்கான கடவுளும் கூட.

பூமி ஞானசூரியன்


No comments:

ஓரு ஆறு இரு சாது ஒரு மாது TWO MONKS AND A WOMEN

  ஓரு ஆறு இரு சாது ஒரு மாது   ஒரு ஊர்ல ஒரு ஜென் குருசாமியார் இருந்தார். அவர் பெயர் ஈசான். அவர் ஒரு தண்ணி தொட்டியில ஒரு ...