நான் கண்ட
கவ்பாய் தேசம்
அமெரிக்கா
![]() |
2025 ன் 2 ம் நூல் |
இந்த
ஆண்டில் நான் எழுதி வெளிவரும்
இரண்டாவது நூல் இது.
இப்போது
அகில உலகையும் பொம்மலாட்டம் மாதிரி ஆட வைத்துக் கொண்டிருக்கிறது
அமெரிக்கா. உலக நாடுகளுக்கிடையே விஸ்தாரமான ஒரு வியாபாரப்போர்
தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.
அதன்
சூத்திரதாரியாக இருக்கிறது அமெரிக்கா. எந்த நாட்டின் வியாபாரமாக இருந்தாலும் அதற்கான,
பெரிய விற்பனைச் சந்தையை வைத்திருப்பவை ஒன்று இந்தியா இன்னொன்று சீனா.
இந்த
இரு நாடுகளை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு எந்த நாடும் பெரும் சாதனைகளை செய்துவிட முடியாது.
![]() |
preface By Sri.Pazhamalai IAS (rtd) |
உலக
நாடுகளின் கனவு பூமியாக இன்னும் கூட இருந்து கொண்டிருப்பது அமெரிக்கா.
எனது புதிய நூல்
கவ்பாய் தேசம்
இந்த
சமயத்தில் அதன் தொடக்க கால
சரித்திரம், கலாச்சாரம், ஆதிகுடிகள், சினிமா மூலம் உலகிற்கு அறிமுகமான கவ்பாய் கலாச்சாரம், அதன் அடி நாதமாக
விளங்கும் வாழ்வியல் அத்தனையும் ஆய்வு
செய்து, இந்த நூலை, எளிமையான
தமிழில், எனது வயதோத்த இளைஞர்களுக்கும்
படிக்கும் வகையில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை புத்தகம் மாதிரி
தயாரித்து தந்துள்ளேன்.
"நான் கண்ட
கவ்பாய் கலாச்சாரம் அமெரிக்கா" இப்போது வந்துள்ளது.
அடுத்த நூல் அழகான மழைக்காடுகளும்
எரிமலைகளும்
இதன்
தொடர்ச்சியாக அமெரிக்காவின் ஏரிகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், எரிமலைகள்,
மற்றும் மழைக்காடுகள்
பற்றிய அரிய தகவல்களை எல்லாம்
தொகுத்து இரண்டாம் நூலாக வெளியிட உள்ளது எவர்கிரீன் பப்ளிகேஷன்.
இந்த நூல்களை எழுதி முடித்த கையோடு தமிழகத்தில் இரு மாவட்டங்களில் இரண்டு கிராமங்களில் நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தினை தயாரிக்கும் பணியில் நான் ஈடுபட்டு வந்தேன்.
நபார்டு வங்கியின் நிலத்தடி
நீர்வள மேம்பாட்டுத் திட்டம்
அதற்காக கிராமங்களில் அப்பகுதி மக்களை சந்தித்து பி ஆர் ஏ (Participatory Rural Appraisal)முறையில் தகவல் திரட்டி அதோடு தொடர்புடைய அறிவியல் செய்திகளையும் சேகரிக்க நிறைய நேரம், நிறைய நாட்கள் உழைக்க வேண்டி இருந்தது, ஆனால் அது மகிழ்ச்சியாக இருந்தது.
அது
நபார்டு வங்கியின் திட்டம். நான் நிறைய அனுபவ பூர்வமாக கற்றுக்கொள்ள வாய்ப்பு தந்தது
நபார்டு நிறுவனம். என்னை உருவாக்கியது, என்னை நிலை நிறுத்திக்கொள்ள எனக்கு பாடங்களை
சொல்லித் தந்தவை மூன்று நிறுவனங்கள், அவை தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அகில
இந்திய வானொலி, மற்றும் நபார்டு வங்கி. இவை மூன்றும் நான் படித்த பள்ளிக்கூடங்கள்.
எனது
பூமி நிறுவனத்தின் அதிகபட்சமான அனுபவம் என்பது நீர்வடிப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் தொடர்பான
வேலைகள், மரங்கள் பற்றிய ஆய்வு
என்று
உங்களுக்கு தெரியும்.
அதில்
எனக்கு கிடைத்த அனுபவங்களை எல்லாம் நான் அவ்வப்போது உங்களோடு
பகிர்ந்து கொண்டுள்ளேன்.
சமூக ஊடகங்களும் சேட்ஜிபிட்டி'யும்
அதற்கு
எனக்கு உதவியாக இருந்தது வாட்ஸ்அப், யூடியூப்
ஆகிய சமூக ஊடகங்கள் மற்றும்
கூகுள் தேடுபொறி.
இவற்றை
வெறும் சமூக ஊடகங்கள் என்று
இரு வார்த்தைகளில் அடக்கி விட முடியாது. நான்
பலமுறை எழுதி உள்ளேன், மாதா பிதா குரு
தெய்வம் அல்ல, அது கூகுள் தெய்வம்
என்று மாறிவிட்டது என்று.
அதுமட்டுமல்ல
இந்த சமூக ஊடகங்கள் உதவியாக
நான் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆனாஆவன்னா பாடங்களை கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இயன்றவரை படித்தும் வருகிறேன்.
தொலைவிலிருந்து
ரகசியமாக யாருக்கும் தெரியாமல் போர்க்கலையை கற்றுக்கொள்ள உதவிய துரோணர் போல எனக்கு உதவியாக
உள்ளது “சேட்ஜீபீட்டி”
இந்த
புத்தகத் திருவிழாவில் எனக்கு ஒரு புத்தகக் கடை
போட "பணம் வேண்டாம்" என
மாவட்ட ஆட்சித் தலைவர் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்கள் பற்றி எழுதும் இந்த மாவட்ட எழுத்தாளன்
என்ற முறையில் எனக்கு இலவசமாக ஆனுமதி தந்தார்கள்.
திருப்பத்தூர்
புத்தகத் திருவிழா
திருப்பத்தூர்
மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடைபெறப் போகிறது என்ற செய்தி எனக்கு
கடைசி கட்டத்தில் தான் தெரியும்.
ஆனாலும்
இதில் பங்குபெற உதவியாக இருந்த நண்பர்கள் இருவர், ஒருத்தர் "பாலாறு சமூக ஆர்வலர்" அம்பலூர்
அசோகன் அவர்கள். இன்னொருவர் புத்தகப் பிரியர் கவிஞர் மற்றும் பதிப்பாசிரியர் இளம்பரிதி அவர்கள்.
Smt.ka.Siva Soundaravalli I A S, Dist. Collector. |
புத்தகம் வாங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்
கன்னி முயற்சியாக நான் அமைத்த எனது புத்தக கடையில், முதன்முதலாக புத்தகம் வாங்கி எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்தவர் திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் திருமதி.கா. சிவ சவுந்தரவல்லி அவர்களுக்கு எனது நன்றிகள்,முன்பே கூட நான் இதனை "வாட்ஸ் அப்"பில் எழுதி இருந்தேன்.
பூமி நர்சரியில்சந்தன மரக்கன்றுகள்
அதன்
பிறகு தெக்குப்பட்டில் எனது இல்லமும் அலுவலகமும்
பயிற்சி மையமும் ஆக அமைந்துள்ள "பூமி
நர்சரி" யில் தற்போது சுமார்
5000 சந்தன மரக்கன்றுகள் உள்ளன. அதில் ஈஷா நர்சரியில் குறைவான
விலைக்கு வாங்கிய 1000 மரக்கன்றுகளும் சேரும்.
நான்
தற்போது வசித்து வரும் தெக்குப்பட்டு கிராமத்தில் தான் தமிழ்நாட்டின் சந்தன
மர எண்ணெய் ஆலை அமைந்திருந்தது.
ஆனால்
தற்போது வனத்துறை அலுவலர்கள் மீண்டும் இப்பகுதியில் சந்தன மரங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காரணம்
உலகில் சந்தன மரங்களின் சொந்த ஊர் என்பது திருப்பத்தூர்
மாவட்டம்தான்.
சந்தன மர கருத்துப் பூங்காவும்
வனத்துறை அலுவலர்களும்
இந்த
காரணத்தால் எங்கள் பூமி நிறுவனத்தின் மூலமாக
இங்கு, திருப்பத்தூர் மாவட்டத்தில் "சந்தன மரங்களுக்கான கருத்துப் பூங்கா" ஒன்றினை அமைக்கும் பணியை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
அதன்
முனைப்பாகத்தான் 5000 சந்தன மரக்கன்றுகள் வளர்ப்பைத் தொடங்கியுள்ளோம். எங்கள் பகுதி வனத்துறை அலுவலர்கள் எங்களுக்கு
உதவியாக இருக்கிறார்கள்.
![]() |
Sri.SAMBASIVAM IFS(rtd.) Sri.VELAYUTHAM (Rtd.Forest Range Officer) |
கடை வைக்கப் போகிறேன்
புதிய மடை திறக்கப் போகிறேன்.
மரம் வளர்ப்பு இயற்கை விவசாயம் சொட்டுநீர் பாசனம் நீர் மேலாண்மை ஆகியவற்றில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பூமி நிறுவனம் தற்போது பூமி அலுவலகத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புத்துக் கோவிலுக்கு எதிரில் மூலிகைச் செடிகள், இயற்கை உரங்கள், சொட்டு நீர் பாசன உதிரி பாகங்கள், இயற்கை வேளாண்மை முறையில் உற்பத்தி செய்யப்படும் மா, ஜம்புநாவல், சப்போட்டா, ஆரஞ்சு, மற்றும் தாஹித்தி எலுமிச்சை ஆகிய பழங்களையும் விற்பனை செய்வதற்கான ஒரு சிறு கடையையும் தொடங்க உள்ளோம்.
முன் பென்ச்சுக்குப்
போகிறேன்
“இதையெல்லாம்
நீங்கள் எப்படி செய்யப் போகிறீர்கள் ” என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. எனது வேலைகளை எல்லாம்
எனது பூமியின் நிறுவனப்
பொறுப்புகளை எல்லாம்
எனது மகள் அபிராமியிடம் ஒப்படைத்து
விட்டேன்.
இப்போது எனது மகள் மனைவி வெங்கடேசன் கௌரி என்னும் பலர் பூமியின் பணிகளை கவனித்துகொள்ள உதவியாக இருக்கிறார்கள்.இதுவரை அவர்கள் எனக்கு உதவியாக இருந்தார்கள், இனி நான் அவர்களுக்கு உதவியாக இருப்பேன். இப்போது சுமை குறைந்துவிட்டதால் இப்போது பின் பென்ச்சிலிருந்து முன் பென்ச்சுக்கு போய்விடுவேன்.
படிப்பது எழுதுவது பகிர்வது
இனி
படிப்பது எழுதுவது அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வது ஆகியவை எனது முக்கிய வேலைகளாக
இருக்கும்.
எனது
முதல் நூல் 1981 ஆம் ஆண்டு வந்தது
“இரவு பூக்கள்” கவிதை தொகுப்பு நர்மதா பதிப்பகம் வெளியிட்டது, ராசியான பதிப்பகம் நர்மதா, அருமைப் பெரியவர் அமரர் நர்மதா ராமலிங்கம் எனது ஆசிரியர்களில் ஒருவர்.
எனது புத்தகங்கள் பதிப்பிற்கு பிள்ளையார் சுழி போட்டவர் அவர்தான்.
கதை கவிதை நாடகம்
எழுதப் போகிறேன்
அதன்
பிறகு 1994 இல் வந்த எனது
ஞான சூரியன் கதைகள் சிறுகதை தொகுப்பு அப்புறம் தோப்புக்கரணம், காற்று சிரித்தது, இவை குழந்தைகளுக்கான
நீதிக்கதைகள். இவற்றை எல்லாம் நான் ஏன்
குறிப்பிடுகிறேன் என்றால், மீண்டும் கவிதைகள் கதைகள் என்று நான் எழுத உள்ளேன்.
இரும்பு
பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்று தமிழில் ஒரு பழமொழி
உள்ளது, அதில் பேனா பிடித்தவன் கையும் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நான்
மதுரை வானொலியில் இருந்த போது நான் மேடை
நாடகங்களை அங்கு எழுதவும் நடிக்கவும் செய்தேன்.
மதுரை வானொலி இயக்குனர்
திருவேங்கடம்
அதனை தொடங்கி வைத்தவர் வானொலி நிலையத்தின் அன்றைய இயக்குநர் திருவேங்கடம் அவர்கள்.மேடை நாடகம் எழுத என்னை ஊக்குவித்தவர் அவர்தான். எனது குருநாதர்களில் ஒருவர்.
ஒரு
ஆச்சரியம் என்னவென்றால் மதுரையில் நடந்த
ஒரு நாடக விழாவில் இந்த
எனது நாடகம் முதல் பரிசு பெற்றது. அந்த நாடகத்தின் தலைப்பு “மந்திரி
வீட்டு நாய் கடிக்குமா” என்பது.
எல்லாம் நகைச்சுவை
மேடை நாடகங்கள்
அதைத்
தொடர்ந்து “கௌரவமாக
ஒரு கொள்ளை” மறை கழன்ற மனிதர்கள் என மூன்று நகைச்சுவை
மேடை நாடகங்களை நடத்தினேன், அதே வகையில் சுக்கா
மிளகாய் சுதந்திரம் கிளியே என்ற ஒரு நாடகத்தையும்
வானொலிக்காக எழுதி ஒலிபரப்பினேன்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடத்தில்
சுக்கா மிளகா நாடகம் ஆங்கிலமானது
ஒரு
ஆச்சரியமான செய்தி என்னவென்றால் அந்த “சுக்கா மிளகாய் சுதந்திரம் கிளியே” என்ற நாடகத்தை சென்னை
ஆவடியில் உள்ள ஒரு கேந்திரிய
வித்யாலயா பள்ளியில் எனது பேத்தி, எனது
மகளின் உதவியோடு ஆங்கிலத்தில் அதனை மொழிபெயர்த்து அதே
பள்ளிக்கூடத்தில் அதனை நடத்தவும் செய்தார்கள்.
மீண்டும் நகைச்சுவை நாடகங்கள்
சீக்கிரமாக...
இன்றைய
சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை படம்பிடித்த இந்த நாடகங்களை மீண்டும்
நடத்துவதற்கு உதவியாக அவற்றை புத்தகங்களாக கொண்டு வர திட்டமிட்டு உள்ளேன்.
எல்லாவற்றிற்கும் எங்குடும்பத்தினரின் ஒப்புதலும், உங்களுடைய ஒத்துழைப்பும், சமூக ஊடங்களின் மேலான
ஆதரவும் வேண்டும்.
மீண்டும்
அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.
இப்படிக்கு
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment