மூன்றாவது கைதி
Socrates The Father of Western Philosophy |
ஒரு
சிறைச்சாலை.பொழுது விடிந்தது. கைதிகளை அடச்சி வைத்திருந்த கதவுகளை திறந்து விட்டாங்க. கைதிகள் வெளியே போனாங்க. காலையில அவங்க தோட்ட வேலை செய்யணும். அப்பதான்
இந்த கைதிகள் ஒருத்தரோட ஒருத்தன் பேசிக்க முடியும். அந்த சமயம் மூன்று
கைதிகள் ஒண்ணா சேர்ந்து பேசிக்கிட்டாங்க.
அப்போ
ஒரு கைதி சொன்னார் “இந்த
நாட்டு ராஜாவை பற்றி நிறைய கேள்விகள் கேட்டேன் அதனால இந்த ராஜாங்கத்து சிப்பாய்கள், என்ன கைது பண்ணி இங்க ஜெயில்ல போட்டாங்க”ன்னு.
அப்போ
இந்த இரண்டாவது கைதி, "அந்த ராஜாவைப்பத்தி இவந்தான் கேள்வி கேட்டான். அவங்கூட நான் இருந்ததால என்னயும் இங்கக் கொண்டு வந்து போட்டுட்டாங்க”ன்னு
அதைக்
கேட்டுட்டு இருந்த மூன்றாவது கைதி “ உங்க ரெண்டு பேரையும்
ஜெயில்ல போட்டதுக்கும் அந்த ராஜாவுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அது எனக்கு நல்லா
தெரியும். அது எப்படின்னு கேட்டீங்கன்னா
அந்த ராஜாவே நான்தான்”னு சொன்னார்.
அவுங்க ரெண்டுபேரும் ஆச்சரியமா பாத்தாங்க, அவர் ராஜான்றது தெரிஞ்சது. "உங்களை மாதிரி நானும் ஒரு கேள்வி கேட்டென். அதனால என்னொட சேனாபதி என்னை ஜெயில போட்டுட்டான். அவன் ராஜாவாயிட்டான்" என்று சொல்லி வருத்தப்பட்டார் ராஜா.
அப்புறம் அவுங்க மூணுபேரும் ரொம்ப நேரம் பேசினாங்க. கேள்வி கேக்கறதப் பத்திதான் பேசினாங்க. " எப்பவும் கேள்வி கேக்கறதே பிரச்சினைதான் அப்படின்னு பேசி முடிச்சாங்க. அதுக்குள்ள தோட்டவேலை தொடங்கிச்சு. மூணுபேரும் கலஞ்சி போயிட்டாங்க.
அதனால கேள்வி கேட்கிறதே தப்புன்னு சொல்லக்கூடாது. சொல்லமுடியாது. நமக்கு தெரியாத விஷயங்களை கேட்டு தெரிஞ்சுக்கலாம். அதுல தப்பு இல்ல.
சில
பேரு போன் பண்ணுவாங்க. அவங்க
யாருன்னு சொல்ல மாட்டாங்க. உங்க பேரு என்ன, ஊரு என்ன ஏதுன்னு, நம்மள கேட்பாங்க. நம்ம
இதெல்லாம் விளாவாரியா சொல்லுவோம். அப்புறம் அவரு யாருன்னு கேட்டாதான் தெரியும் அது "ராங் கால்"
அப்படின்னு.
அதே
மாதிரி, பள்ளிக்கூடங்கள்ள பையன்கள் தூங்காமல் பாடம் நடத்த சில வாத்தியார்கள் அடிக்கடி
கேள்விகள் கேட்பாங்க. யாராச்சும் தூங்குற மாதிரி இருந்தா அவங்களை எழுப்பி அந்த தூக்கம் கலையும்
வரைக்கும் கேள்விகளை கேட்பாங்க
அதே
மாதிரி வகுப்பில் சில பையன்கள் அடிக்கடி கேள்விகள் கேப்பாங்க.
கேள்விகள் கேட்கிற பையன்களை
புத்திசாலிகள்ன்னு சொல்லுவாங்க. அது உண்மையாவும் இருக்கும். இல்லாமலும்
இருக்கும்.
நான்
பியூசி படிக்கிறப்ப எங்க வகுப்புல ஒரு
பையன் இருந்தான். அவன் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு வாத்தியாருங்கள உண்டு இல்லைன்னு ஆக்கிடுவான் பதில் சொல்வதற்குள் அவர்களுக்கு போதும் போதும்னு ஆயிடும்.
உலகத்துல கேள்வி கேட்க சொல்லித் தந்த அறிஞர் அப்படின்னு அகில உலக அளவில் ஒருத்தர் இருந்தார்.அவருடைய முக்கியமான போதனையை கேள்வி கேளுங்கன்னு சொல்றதுதான். அவர் ஒரு கிரேக்க அறிஞர். அவர்தான் மேற்கத்திய நாட்டு தத்துவங்களுடைய தந்தை.
அவர் வேறு யாரும் இல்லை . அவர் தான் சாக்ரடீஸ். பிளாட்டாவோட குருநாதர், ஆசிரியர். விவாதம் செய்யறதுல அவர அடிச்சுக்க முடியாது. நிறைய இளைஞர்களுக்கு கேள்வி கேக்க சொல்லிக் கொடுத்தார். இளைஞர்கள் நிறைய கேள்வி கேட்டாங்க. இதுக்கு காரணம் யாருன்னு பாத்தது அந்த நாட்டு அரசாங்கம்.
சாக்ரடீசை கூப்பிட்டு விசாரிச்சாங்க. “கேள்வி கேக்க நீங்கதானே சொல்லிக்குடுத்திங்களான்னு கேட்டாங்க, ஆமான்னாரு. அதனால அவரை குற்றவாளின்னு தீர்ப்பு சொன்னாங்க. மரண தணடனை குடுத்தாங்க.
ஒரு
கோப்பை நிறைய ஹேம்லக்
என்ற விஷத்தை குடிக்க சொன்னாங்க. குடிச்சிட்டு அவர் இறந்து போயிட்டார்.
அதுக்கு பிற்பாடு கேள்வி கேக்க
எல்லாரும் பயந்தாங்க.
காரணம் அந்த ஹேம்லக் விஷம். அது ஒரு மரத்துல எடுக்கற விஷம். அந்த விஷமரம் அங்க நிறைய இருந்தது. அந்த ஹேம்லட் மரத்தை பாக்கும்போதெல்லாம் அவுங்களுக்கு சாக்ரடீஸ் ஞாபகம் வந்தது. Socrates was Sentenced to Drink Hamlock Poison
இந்த மாதிரி கேள்வி கேட்கிறதுல பல வகைகள் இருக்காம். அதுல ஒரு அஞ்சு வகையை அறிஞர்கள் பிரித்து வச்சிருக்காங்க.
அது
என்னென்ன இப்ப பார்க்கலாம். ஒண்ணு
உண்மையைக்
கண்டறியும் கேள்வி.
இந்தத் தகவல் உண்மையா பொய்யான்னு
தெரிஞ்சிக்க கேட்கும் கேள்வி, அத வந்து
ஆங்கிலத்துல ஃபேக்சுவல் கொஸ்டின் அப்படின்னு சொல்றாங்க.
இரண்டாவது
கேள்வி. முள்ளின் கூர்முனை
மாதிரி குறிப்பா கேட்கும் கேள்வி. தமிழ் நாட்டின் முதல்வர் யார் ? மு.க. ஸ்டாலின்.
சரியா சொல்லணும். அதுக்கு கன்வர்ஜென்ட் கொஸ்டின் அப்படின்னு சொல்றாங்க.
மூணாவது
கேள்வி பரந்து பட்டதாக
பதில் சொல்லும்படியான கேள்வி.
வாணியம்பாடியப்பற்றி உனக்கு என்ன
தெரியும் ? அது ஒரு நகரம். இங்க ஸ்டார் பிரியாணி ரொம்ப பிரபலம். இங்க பாலாறு ஓடுது.
இதை வந்து ஆங்கிலத்தில் டைவர்ஜன்ட் கொஸ்டின்ஸ் அப்படின்னு சொல்றாங்க.
நாலாவது
வகை கேள்வி, மதிப்பீடு செய்யும் கேள்வி. எது நல்லது, இயற்கை உரம் நல்லதா கெட்டதா
? இதுக்கு
பட்டுன்னு பதில் சொல்லலாம். இதை
ஆங்கிலத்தில எவாலுவேஷன் கொஸ்டின்ஸ் அப்படின்னு சொல்றாங்க.
ஐந்தாவது
வகை கேள்வி. ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு செல்லும்படியான ஒரு கேள்வி. எந்த உரம் நல்லது இயற்கை உரமா செயற்கை உரமா ? இந்த
மாதிரி கேள்வியை ஆங்கிலத்தில் வந்து காம்பினேஷன் கொஸ்டின்.
அப்படி
என்று சொல்கிறார்கள் இப்படி இந்த கேள்வி எல்லாம்
அஞ்சு வகை உண்டு. இதை சரியா புரிஞ்சுக்கணும்.
நாம
நிறைய கேள்விகளை பிரச்சனை இல்லாம கேட்க முடியும். ஏன்னா வாழ்க்கையில கேள்வி கேட்காமலும் இருக்க முடியாது.
அதனால
கேள்வி கேட்கிறதுல தப்பு கிடையாது.
ஒரே ஒரு கேள்வி கேட்டதால ஒருத்தர் முதலமைச்சராக ஆகி இருக்கார். அவர் கேட்ட கேள்வி அந்தமாதிரி கேள்வி. அந்தக் கேள்வியால புதுசா ஒரு கட்சி தொடங்கினார். தேர்தல்ல போட்டியிட்டார். ஜெயிச்சி முதலமைச்சர் ஆனார். அது யாருன்னு நான் சொல்லத் தேவையில்லை. அவர்தான் “ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை” அப்படின்னு சினிமாவுல பாடினார். வேற யாருமில்லை.
எம்ஜிஆர்
அவர்கள் தான்.
பூமி ஞான சூரியன்