கடிதம் 6
மனித இயந்திரங்கள்
ROBOTISM
A MACHINE FEEDING CHAPLIN IN MODERN TIMES CINEMA |
ஒரு ரோபோ கேட்டது “ மனிதர்கள் ஏன் நமக்கு அவர்களைப்போல சிந்தித்து செயல்படும் திறமையை நமக்குக் கொடுக்க விரும்புகிறார்கள் ?”
இரண்டாவது
ரோபோ சொன்னது “காரணம் அவர்கள் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு நம்மை மாதிரி ஆகிவிட்டார்கள்”
இப்போது
இரண்டு ரோபோக்களும் வாய்விட்டு சிரித்தன.
ரோபோ
தொழில் நுட்பம் (ROBOTISM)
ரோபோடிசம்
என்பது ரோபோ தொழில்நுட்பம் தொடர்பான அறிவியல். ரோபோக்களை வடிவமைத்தல், கட்டுமானம் செய்தல்,
அவற்றை நாம் விரும்பும் வேலைகளைச் செய்ய வைத்தல்
ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் ரோபோ அறிவியல் என்பது. இதில் உள்ள 10 விதமான செயல்பாடுகளைப்
பார்க்கலாம்.
தன்னிச்சையாக
செயல்படுதல் (AUTOMATION)
மனிதர்களின்
குறுக்கீடு இல்லாமல் அதற்கான செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும். மறுபடியும்
மறுபடியும் செய்துகொண்டே இருக்கும். நிறுத்து என்று கட்டளை இடும்வரை அது அதன் வேலைகளைச்
செய்துகொண்டுதான் இருக்கும். அதுதான் மனித இயந்திரம், அதுதான் “ரோபோ மனிதன்.”
1936 FILM BY CHAPLIN |
மனிதன்
இயந்திரமாகவே மாறிவிடுவான் (PROGRAMMABILITY)
நிறையபேர்
அப்படி இருக்கிறார்கள், எதைச் செய்தாலும் இயந்திரம் மாதிரி செய்துகொண்டே இருப்பார்கள்,
சிரிக்கமாட்டார்கள், ஆட மாட்டார்கள் அசைய மாட்டார்கள், பேசமாட்டார்கள், இயந்திரங்களோடு
வேலை செய்து பழகி விட்டால் நாமும் அப்படியே மாறிவிடுவோம். இயந்திரங்களோடு வேலை பார்க்கும்
மனிதன் இயந்திரமாகவே மாறிவிடுவான் என்று சொல்லி ஒரு படம் வந்தது.
சார்லி சாப்ளின் - CHARLIE CHAPLIN
தொழில் புரட்சி என்ற கருத்தை மையமாக வைத்து அற்புதமான ஒரு நகைச்சுவைப்
படத்தை எடுத்தார் சார்லி சாப்ளின், அந்தப்
படத்தின் பெயர் “மாடர்ன் டைம்ஸ்” என்பது, அந்தப்படம்
1936 ம் ஆண்டு பிப்ரவரி 5 ம் தேதி வெளி வந்தது. அந்த காலத்திலேயே அது பல விருதுகளை
வாங்கிக் குவித்தது. சாப்ளின் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்று இது.
அன்று தொழில் யுகப்புரட்சி
தொழில்புரட்சி முதன்முதல் தொடங்கி தோடர்ந்த காலகட்டம் 1760 முதல் 1840 வரை, அது விவசாயம், பொருட்கள் உற்பத்தி, சுரங்கத் தொழில், போக்குவரத்து, பொருளாதாரம் கலாச்சாரம் என அனைத்துத் துறைகளையும் ஆட்டிப்படைத்தது. இன்று செயற்கை நுண்ணறிவும் யுகப் புரட்சிதான்.
மனிதர்களால்
திட்டமிடுதல் (PROGRAMMABILITY)
CHAPLIN BETWEEN MACHINES |
ரோபோக்களை
எப்படி கட்டுப்படுத்த முடியும் ? எப்படி கட்டுப்படுத்த வேண்டும் ? இதையெல்லாம் அதற்கு
முன்னதாகவே சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்தக் கட்டளையை முன்னதாகவே எழுதியிருக்க வேண்டும்.
இதனை நாம் அதன் இயந்திர மூளையில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால்
பதட்டமில்லாமல் அந்த வேலையை பதிவிசாக செய்து முடிக்கும்.
நுட்பமான
வேலை (PRECISION)
ரோபோக்கள்,
துல்லியமான வேலைகளைச் செய்யும், மென்மையான
வேலைகளைச் செய்யும், அந்த வேலைகளை அது விவரமாகச் செய்யும். அதாவது செய்வதை திருத்தமாகச்
செய்யும், அந்த வேலை ஏனோ தானோ என்று இருக்காது, அது அந்த வேலையைத் தனது கடமையாக கருதி
செய்யுமே தவிர கடமைக்கென்று செய்யாது.
சகலகலா ரோபோக்கள் (VERSATILITY)
பல துறைகளில் ரோபோக்கள் வேலை பார்க்கும், அவற்றை இந்த துறையில்
மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்பதில்லை, எதில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்,
பொருட்கள் உற்பத்தி செய்யலாம், சுகாதார பாதுகாப்பு செய்யலாம், விவரமான விண்வெளி ஆராய்ச்சி
செய்யலாம், இப்படி எல்லாவற்றிலும் வேலை பார்க்கும்
சகலகலா ரோபோக்களை சகட்டுமேனிக்கு உருவாக்கலாம்.
மனிதர்களின் ஜெராக்ஸ் காப்பி (COPY OF MEN)
HUMANOID ROBOT |
செயற்கை நுண்ணறிவு மேம்பட்ட, அல்லது மேலான உணர்ச்சிமயமான சிறப்பான,
சீரான ரோபோக்கள், அவை தானாக இயங்கும், தேவைக்கு ஏற்ப இயங்கும், சூழலுக்கு ஏற்ப இயங்கும்,
தானே முடிவு செய்யும், தானே தீர்மானிக்கும், அதிகாரம் பெற்ற அபூர்வமான மனித எந்திரங்கள் மனிதர்களின் ஜெராக்ஸ் காப்பியாக வரப்போகின்றன என்கிறார்கள்.
உணர்ந்து சொல்லுபவை உணரிகள் (SENSORS)
உணரிகள் ரோபோக்களுக்கு அவை எங்கே இருக்கின்றன என்பதை சொல்லும்.
கட்டிடத்தின் உள்ளே இருக்கிறதா? வெளியே இருக்கிறதா? அங்கு வெப்பநிலை எப்படி இருக்கிறது?
அங்கு யார்யார் இருக்கிறார்கள் ? என்னென்ன இருக்கின்றன ? இவை எல்லாவற்றையும் சொல்லும்.
பலவகை உணரிகள்
இவற்றை எல்லாம் ரோபோக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அதன் இடம்
கேமரா இருக்கும், ஒலிவாங்கிகள் இருக்கும், வெப்பமளக்கும் கருவிகள் இருக்கும், இப்படி பலவகை உணரிகள் இருக்கும்.
மணலைக் கயிறாய்த் திரிக்கும் (RISKY JOBS)
ரோபோக்களின் உறுதித்தன்மை என்பது மிகவும் முக்கியமானது. பௌதிக ரீதியாக மனிதர்களால் செய்ய முடியாத இடங்களில் கூட சென்று செய்ய வேண்டிய வேலைகளை, கடமைகளை, கட்டளைகளை சரியானபடி செய்து முடிக்கும் தன்மை உடையவை. சுருக்கமாக சொல்லுவது என்றால் வானத்தை வில்லாக வளைக்கும், மணலைக் கயிறாய்த் திரிக்கும்.
ஏழு நாட்களும் வேலை (7 X 24)
ரோபோக்கள் வேலை என்பது காலை 10:00 மணி க்கு ஆரம்பித்து மாலை
5:00 மணிக்கு முடியாது. ஒரு நாள் என்பது 24 மணி நேரமும் வேலை பார்க்கும். வாரத்தில்
ஏழு நாட்களும் வேலை பார்க்கும்.
போனஸ் ஓவர்டைம்
அதற்கு இரண்டாம் சனிக்கிழமை மூன்றாவது ஞாயிறு, அமாவாசை கிருத்திகை,
பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், தேங்க்ஸ்கிவிங் ஃபெஸ்டிவல் எந்த விடுமுறையும் தேவைப்படாது,
போனஸ் ஓவர் டைம், வேலை நிறுத்தம் எதுவும் கிடையாது.
வேலை வேலை வேலை
FUTURISTIC ROBOTS |
வேலை வேலை வேலை எப்போதும் சொன்ன வேலையை தட்டாமல். செய்யும்.
பார்க்கும்போது வேலை பார்க்காத போது ஒருவேளை இதெல்லாம் எதையும் பார்க்காது அதுதான்
ரொம்ப. அதுதான் மனித எந்திரம். அதுதான் ரோபோ.
செல்போன் பாக்காது
ரோபோக்கள் எப்படிப்பட்ட மோசமான சூழல்களிலும் வேலை பார்க்கும்.
ஃபேன் இல்லை, வேலை பார்க்கும். ஏசி இல்லை, வேலை பார்க்கும். வெளிச்சமில்லை, வேலை பார்க்கும்.
காற்று இல்லை, வேலை பார்க்கும். நடுவுல டீக்குடிக்காது,
காப்பி குடிக்காது, பீடி பிடிக்காது, சிகரட் பிடிக்காது, பாக்கு போடாது, செல்போன் பாக்காது.
ரோபோவுக்கு கவலை இல்லை
வங்க கடலில் மூழ்கி தொலைந்து போன தங்கம் எடுக்க வேண்டுமா? வலம்புரி
சங்கு எடுக்க வேண்டுமா ? நமக்கு தொட்டால் கை சுட்டு விடும் ரசாயனத்தை தொடாமல் எடுத்து
தொலை தூரத்தில் கொட்ட வேண்டுமா ? எதுவாக இருந்தாலும் ரோபோவுக்கு கவலை இல்லை.
போ என்றால் போகும்
இப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம் நாம் செல்ல வேண்டியது இல்லை.
சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ரோபோவிடம் போ என்றால் போகும் ! செய் என்றால் செய்யும்
! வா என்றால் வரும் ! அதுதான் ரோபோ.
பல தொழில் நுட்பங்களின் கலவையாக உருவாக்கலாம். சகலகலா வல்ல ரோபோ.
செயற்கை நுண்ணறிவு, எந்திரத்தின் கற்றல், வலைத்தள உபயோகம், இவற்றின் கலவையாக, மிகவும் சிக்கலான சிலந்தி வலை மாதிரியான வேலைகளையும், எளிமையாக சிக்கல் இல்லாமல் சிறப்பாக சீக்கிரமாக செய்து முடிப்பதுதான் ரோபோ என்னும் மனித எந்திரங்கள்.
ALLOW CHILDREN TO LEARN ROBOTS |
வேண்டுகோள்
ரோபோக்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை, கல்லூரிகளில் சேர்ந்து
படிக்காமல் உரிய புத்தகங்களை படித்து கற்றுக்கொள்ள முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள்.
அது கண்டிப்பாக முடியும், புத்தகங்கள் படித்து கற்றுக்கொள்ளலாம்,
வலைத்தளத்தில் இருக்கும் சில பகுதி நேரப் பயிற்சிகளை எடுத்துக் கொள்ள லாம், செய்துபார்க்கும்
பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டால் சிக்கலில்லாமல், கற்றுக் கொள்ளலாம், கற்றுக் கொள்ள
விரும்புவோருக்கு வாய்ப்புகள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன.
ற நம்பிக்கையோடு செயல்படுங்கள், உங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவியாக இருங்கள்.
உங்கள் பெற்றோர்களை உங்களோசெயற்கை நுண்ணறிவு, மனிதர்களின் வேலையைப் பறித்துவிடும் என்று பயப்பட வேண்டாம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது எல்லாம் இப்படிபட்ட வதந்திகள் பரவுவது வழக்கம்தான். இயந்திரங்கள் புதிதாக வந்தபோதும் இப்படிபட்ட பலர் பேசத்தான் செய்தார்கள். அதன் பிரதிபலிப்புதான் சார்லி சாப்ளின் அவர்களின் மாடர்ன் டைம்ஸ். இதனை நம்பி நாம் தேங்கிவிட வேண்டாம் என்பது எனது கருத்து.
செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கடிதங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுங்கள்.
வேறு தலைப்புகளில் நான் எழுத வேண்டும் என்று நினைத்தால் எனக்கு சொல்லுங்கள்.
இயற்கை வளங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற காரியங்களைச் செய்யுங்கள்.
எதுவும் நம்மால் முடியும் என்டு உங்கள் இல்லத்தில் வைத்து நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள், பராமரியுங்கள், அவர்களின் தேவைகளை நிறைவு செய்யுங்கள், அனாதை இல்லத்தில அட்மிஷன் போட்டு அலைய விடாதீர்கள்.
பூமி ஞானசூரியன்
பேச: +91 8626195370, எழுத: gsbahavan@gmail.com
No comments:
Post a Comment