கடிதம்
7
ரோபோக்களை
நாமே தயார்
எத்தனை நாட்கள் ஆகும் ?
சிலர் கேட்கிறார்கள், ரோபாட்டிசம் அல்லது இந்த ரோபோக்களை. உருவாக்கும்
தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள. எவ்வளவு நாட்கள் ஆகும்? என்கிறார்கள். என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்கு என்ன பதில் சொல்வது ?
நீங்கள் எவ்வளவு வேகமாக கற்றுக் கொள்வீர்கள் ? அவ்வளவு வேகமாக. அதனை கற்றுக்கொள்ளலாம். எவ்வளவு அதிகமாக அதனைக் கற்றுக்கொள்ள முடியுமோ? அந்த அளவில் அதிகமான அளவு கற்றுக்கொள்ள முடியும். தினம் தினம் நீங்கள் எவ்வளவு நேரம் அதற்காக ஒதுக்குவீர்கள். இதையெல்லாம் பொறுத்து இந்த கால அளவு அதிகமாகும் அல்லது குறைவாகும்.
பிள்ளையார் சுழி
ரோபோக்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களை புரிந்து கொள்ள நீங்கள்
குறைந்தபட்சம் 3 - 6 மாதங்கள் ஆவது ஆகும், அதற்குள் அதனை படித்து முடிக்கலாம், அதனை
தெரிந்து கொள்ளலாம், அதனைப் புரிந்து கொள்ளலாம்.
ஆச்சர்யமான இன்னொரு செய்தியும் உங்களுக்கு சொல்லுகிறேன். நீங்களே
ஒரு குட்டி ரோபோ ஒன்றினைத் தயாரிக்கவும் முடியும்.
நம்மால் முடியும்
கொஞ்சம் வளர்ந்த நிலையில், இன்னும் கொஞ்சம் படித்து, இன்னும்
கொஞ்சம் தெரிந்து கொண்டு, சில திட்டங்களின் சேர்ந்து வேலை பார்க்கலாம். சில திட்டங்களை
நாமாகவும் செய்ய முயற்சிக்கலாம்.
இதற்கு 6 முதல் 12 மாதங்கள்
மட்டுமே ஆகும். ஆனால் இதனை நீங்கள் முனைப்பாக, முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். அப்படி
செய்தால் கண்டிப்பாக இது சாத்தியம்தான்.
இது ஒன்றும் அவ்வளவு பெரிய கம்ப சூத்திரம் இல்லை, நாமே செய்யலாம்,
இப்படி நினைத்தவர்கள்தான் சாதித்திருக்கிறார்கள், நம்மால் முடியும்.
விவசாயம்
செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோக்கள் உருவாக்குவதில் நிபுணத்துவம்
பெற வேண்டும். ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகள் பிடிக்கும். அந்த சமயம் ஒரு விவசாய நிலத்தில்
வேலை பார்க்க ரோபோக்களை உருவாக்க வேண்டும்.
விவசாய வேலைகளை செய்ய கிராமத்தில் ஆட்கள் இல்லை, இனி நாம் மனித
இயந்திரங்களைத்தான் நம்ப வேண்டும், ஆட்கள் அதிகம் பிடிக்கும் வேலைகளைச் செய்ய மனித
ரோபோக்கள் வேண்டும், விதைக்க, நாற்றுக்கள் நட, களை எடுக்க, மருந்து தெளிக்க, உரமிட,
அறுவடை செய்ய, சிறியதாக விலை குறைவாக இருக்க வேண்டும்.
ஒரு தனிப்பட்ட விவசாயி வாங்கி பயன்படுத்தக் கூடியதாக இருக்க
வேண்டும், காரணம் இந்தியாவில் 86 சதவிகித விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள்.
சுதந்திரத்திற்குப் பிறகு நமது மக்கள் தொகை மூன்று மடங்கு பெருகி
உள்ளது, ஆனால் நமது விவசாய உற்பத்தி நான்கு
மடங்கு அதிகரித்துள்ளது, அதற்குக் காரணம் இந்த 86 சதவிகித விவசாயிகள்தான். அதனால் நாம்
திட்டமிடும் மனிதரோபோக்கள் அவர்கள் பயன்படுத்தும்படியாக இருக்க வேண்டும்.
தொழில் மற்றும் சேவைத் துறை
தொழிற்சாலையில் வேலைகளைச் செய்யும் ரோபோக்களை, தொழில்களின் தன்மை,
அதில் செய்யும் வேலைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்க முடியும். தொழிற்சாலை ரோபோக்கள்,
அதுபோல சேவைத் துறைக்கு தேவைப்படும் ரோபோக்களையும் உருவாக்கும் தேவைகள் அபரிதமாக உள்ளது.
மூவகைக் கற்றல்
ரோபோக்குள் உருவாக்குவதற்கான அடிப்படை கல்வியை பெறுவது எப்படி
என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை சுலபமாக கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக இதற்கு
தேவைப்படுவது மூன்று.
ஒன்று ஆன்லைன் டூடோரியல் வகுப்பு, இரண்டாவது குறைவான கட்டணத்தில்
பெறும் பயிற்சி வகுப்புகள், மூன்றாவது அதற்கான புத்தகங்கள், இவை மூன்றும் இருந்தால்,
நிச்சயம் ரோபோக்குள் உருவாக்கும் தொழில்நுட்பத்தை நாம் கற்றுக்கொண்டு கலக்கலாம்.
கட்டணமில்லா கல்வி
யூடியூப்’பில் மற்றும் சில வலைத்தளங்களில் கட்டணமில்லாமல் ரோபோட்டிக்ஸ்,
என்னும் மனித எந்திரங்களை உருவாக்கும் தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுக்கிறார்கள்,
பயிற்சி தருகிறார்கள், தொடர் பயிற்சி தருகிறார்கள். அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புத்தகங்கள்
ரோபோ அறிவியல் பற்றி புத்தகங்களில் மூலகங்களிலிருந்து எடுத்து
படிக்கலாம். அமேசான். அமேசான் இல் இருந்து குறைந்த விலையில் மின் புத்தகங்கள் வாங்கி
படிக்கலாம். உதாரணமாக. ரோபோட்டிக்ஸ். ஃபார் டம்மீஸ். ல் அண்ட் ரோபோட்டிக்ஸ் வித் ரஷ்
பெரி. பி.
வழிமுறை இரண்டு.
செயல்முறையாக. ரோபோடிஸ்ம் கற்றுக் கொள்ள கீழ்க்கண்ட கருவிகளை
வாங்கிக் கொள்ள வேண்டும்.
நீங்களே செய்து பாருங்கள், முறையில் தேவைப்படும் சில சிறிய பொருட்கள், மோட்டார்கள், சக்கரங்கள், உணரிகள்
மற்றும் பேட்டரிகள் உள்ளூர் கடைகளிலேயே கிடைக்கும்.
அர்டுய்னோ கிட்ஸ் (ARDUINO KITS)
இதனை அடுத்து இன்னும் ஸ்டார்ட்டர் கிட் என்று சொல்லுவார்கள்.
இது ஒரு சிறு. ரோபோ செய்வதற்கான. தட்டுமுட்டு சாமான்கள் அத்தனையும் இந்த பெட்டிக்குள்
அடக்கம். இந்த பெட்டியின் பெயர் அர்டடுயினோகிட்ஸ் இதில் அத்தனையும் இருக்கும். இதற்கு
அதிகபட்சமாக ரூ.3000 வரை செலவாகும். மூவாயிரம் ரூபாயில் ஒரு ரோபோவா ?
ரேஷ்ப் பெர்ரி (RASP BERRY)
ரேஷ்ப்பெர்ரி தொடக்க பயிற்சி செய்பவர்களுக்கு இது தேவையில்லை.
இது ஒரு சிறிய மினி கம்ப்யூட்டர். மிகவும் மேம்பட்ட திட்டங்களுக்கான ரோபோக்களை உருவாக்குபவர்களுக்கு
மட்டும் இது தேவைப்படும். இதற்கு 4000 - 6000 ரூபாய் வரை செலவாகும். அவ்வளவுதான்.
உள்ளூர் கடைகளில் கிடைக்கும்
நீங்களே செய்யும் போது பயன்படுத்தக் கூடிய அடிப்படையான பொருட்கள்.
சிறு சிறு மோட்டார்கள், சக்கரங்கள், உணரிகள் மற்றும் பேட்டரிகள்
ஆகிய சில்லரைப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உள்ளூர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும்
ஆன்லைன் கடைகளில் இவை கிடைக்கும் அல்லது அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட் இல் வாங்கிக்கொள்ளலாம்.
மூன்று வழிமுறைகள்
மூன்று முதல் ஆறுமாத அவகாசத்தில் சிறியதான ஒரு ரோபோவினை செய்து முடிக்க, எப்படி திட்டமிட வேண்டும் என்று பார்க்கலாம்.
லைட் சென்சார் ரோபோ (LIGHT CENSOR ROBO)
வெளிச்சம் பார்த்தால் அதனை நோக்கி ஓடும் ரோபோ என்றால் உங்கள் ரோபோவில் வெளிச்சத்தை நோக்கி ஓடும்படியாக அமைக்க லைட் சென்சார்களை பயன்படுத்த வேண்டி இருக்கும்.
அல்ட்ராசோனிக் சென்சார் ரோபோ (ULTRASONIC CENSORS ROBO)
தடைகள் வந்தால் தவிர்க்கும் ரோபோக்கள். எந்த ஒரு பொருளையும்
நோக்கி ஓடும். இந்த ரோபோ தடை ஏதும் வந்தால் அதன் மீது சென்று முழுவதற்கு முன்னதாகவே
திரும்பி வந்துவிடும். அதுதான் அப்ஸ்டக்கிள் அவாய்டிங்க் ரோபோ என்று சொல்லுவார்கள். அதில் அல்ட்ராசோனிக் சென்சார்களைப்
பொருத்த்வேண்டும்.
அய் ஆர் சென்சார் ரோபோ (I R CENSOR ROBO)
வெண்மையான பின்புறத்தில் இருக்கும் கருப்பு நிற கோடுகளில் ஓடும்
ரோபொ இது. இதில் பயன்படுத்தும் சென்சார்களை அய் ஆர் சென்சார்கள் என்று சொல்லுவார்கள்.
ஆன்லைன் சமூகங்களின் பயிற்சிகளில் சேர்ந்து தேவையான பயிற்சிகளை,
பெற்றுக் கொள்ளலாம், தகவல்களை செய்திகளையும் தெரிந்தும் கொள்ளலாம், பகிர்ந்தும் கொள்ளலாம்.
கேகிள் வலைத்தளம் (KAGGLE WEBSITE)
கேகிள் வலைத்தளம், கூகிள் அல்ல, இந்த வலைத்தளத்திற்குள் சென்றால்.
கோடிங் (CODING) எனும் குறியீட்டு மொழியை கற்றுக்கொள்ளலாம். அதுபோல எந்திரங்களின் கற்றல்
எனும் மெஷின் லேர்னிங் (MACHINE LEARNING) என்பதையும் கற்றுக்கொள்ளலாம்.
கீத் ஹப் வலை தளம்(GIT HUB WEBSITE)
இந்த வலைத்தளத்திற்குள் நுழைந்தால் கோடிங் எனும் குறியீட்டு
மொழியை கற்றுக்கொள்ளலாம், அல்லது டவுன்லோடு செய்து கொள்ளலாம். சில ரோபா சம்பந்தமான
திட்டங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேண்டுகோள்
செயற்கை
நுண்ணறிவு, மனிதர்களின் வேலையைப் பறித்துவிடும் என்று பயப்பட வேண்டாம், புதிய
அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது எல்லாம் இப்படிபட்ட வதந்திகள் பரவுவது வழக்கம்தான்.
இயந்திரங்கள் புதிதாக வந்தபோதும் இப்படிபட்ட பலர் பேசத்தான் செய்தார்கள்.
செயற்கை
நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கடிதங்கள் உண்மையிலேயே உங்களுக்கு
பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு
செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுங்கள்.
இந்த
கடிதங்கள் செயற்கை நுண்ணறிவுபற்றிய விழிப்புணர்வு
அளிக்கத்தான் இதனை சொல்லித்தர அல்ல.
வேறு
தலைப்புகளில் நான் எழுத வேண்டும் என்று நினைத்தால் எனக்கு சொல்லுங்கள்.
இயற்கை
வளங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற காரியங்களைச் செய்யுங்கள். பிறருக்கு உங்களால்
இயன்ற உதவியைச் செய்யுங்கள். எதுவும் நம்மால் முடியும் என்று நம்புங்கள்.
உங்கள்
பெற்றோர்களை உங்கள் இல்லத்தில் வைத்து
நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள், பராமரியுங்கள், அவர்களின் தேவைகளை நிறைவு செய்யுங்கள்,
அனாதை இல்லத்தில் அட்மிஷன் போட்டு விட்டு அலைய விடாதீர்கள்.
பூமி
ஞானசூரியன்
No comments:
Post a Comment