கடிதம்: 4
மாதா
பிதா கூகிள் தெய்வம்
GOOGLE THE DIGITAL GURU
“தம்பிகளா
இதுவரைக்கும் இயற்கையான அறிவை பயன்படுத்தினீங்க. இனிமே அது இல்லன்னு கவலைப் பட வேணாம்,,
அதுக்காகத்தான் நான் “செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிச்சு
இருக்கேன் “ஆப்படின்னு என்று 70 ஆண்டுகளுக்கு முன்னால் என்று சொன்னார் ஜான் மெக்கார்த்
என்னும் அயர்லாந்து நாட்டுக்காரர்.
அதனால்
செயற்கை நுண்ணறிவு என்பது புதிதல்ல. அதுக்கும் வயசாச்சி.
முதலிடத்தில்
இருக்கும் நாடு
செயற்கை
நுண்ணறிவு பற்றிய செய்தி உங்களை ஆச்சரிப்படுத்தும், அதிசயப்படுத்தும், வியப்படையச்செய்யும்
காரணம் உலகிலேயே மிக அதிகமான அளவில் வியாபாரத்தில் மட்டும் 30 சதம் பயன்படுத்தும் நாடு இந்தியாதான்.
ஆராய்ச்சி
செய்யும் நாடு
செயற்கை
நுண்ணறிவு சார்புடைய தொழில்களில் அதிக பணம் போட்டிருக்கும் நாடு, அமெரிக்கா, செயற்கை
நுண்ணறிவு குறித்து “என்ன ? எங்கு ? எப்படி ?” இப்படியாக அதிகம் ஆராய்ச்சி செய்யும் நாடு ஜப்பான். கூகிளின் ஒரு புள்ளிவிவரம்
சொல்லும் செய்தி இது.
சேட்ஜீபீட்டி
டீப்சீக் பஞசாயத்து
உலக
அளவில் அதிகமான அளவில் சேட்ஜீபீட்டி’ என்னும் செயற்கை நுண்ணறிவு செயலியை பயன்படுத்தும்
நாடு அமெரிக்கா, 14.07 சதம் பயன்படுத்துகிறது, அதற்கு அடுத்தபடியாக 9.5 சதம் இந்தியாவிலும்,
4.73 சதம் பிரேசில் நாட்டிலும் ஐக்கிய நாடுகளில் 3.88 சதமும் பயன்படுத்துகிறார்கள்.
உண்மையாகவே
நாம் சேட்ஜிபீட்டி யும் டீப்சீக்கும் வந்த பின்னால்தான் செயற்கை நுண்ணறிவு வந்ததுபோல
நாம் பேசிகொண்டிருக்கிறோம், உண்மை அப்படியல்ல, என்று சொல்லுவதுதான் இந்த கடிதம்.
ஆனால்
சீனாவின் டீப்சீக் வந்த பின்னால் “சேட்ஜீபீட்டி” யை பின்னுக்கு தள்ளிவிட்டது என்கிறார்கள்,
நாம் அந்த பன்சாயத்துக்குள் போக வேண்டாம்.
செயற்கை நூண்ணறிவு புதுசா ?
உண்மையாக பார்க்கப்போனால் செயற்கை நுண்ணறிவு என்பது நமக்கு புதிதல்ல.
ஏற்கனவே பல வழிகளில் நாம் அவற்றை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நமக்கு
அவை செயற்கை நுண்ணறிவா என்று நமக்கு தெரியாது. அதுதான் உண்மை. உதாரணமாக சிலவற்றை பார்க்கலாம்.
தப்பச்சு செய்யாதிங்க
1.
நாம் ஏதாவது ஒன்றை தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது. அடுத்து
என்ன வார்த்தை வரவேண்டும் என்பது நாம் பார்க்கும் படியாக அது திரையில் தோன்றும். அப்படி
தோன்ற வைப்பது செயற்கை நுண்ணறிவுதான்.
நாம் தட்டச்சு செய்யும் போது. ஒரு வார்த்தையை. தவறாக தட்டச்சு செய்தால். “தம்பி தப்பா அடிக்கிறீங்க ! இது தப்படிப்பு “ என்று அதை திருத்தம் செய்யும், செயற்கை நுண்ணறிவு.
3. இப்போதெல்லாம் தொலைபேசிகள் “ உங்க முகத்தைக் காட்டுங்க இல்லன்னா கட்டைவிரல் ரேகையை வையுங்க.. “சொல்லுகின்றன. இப்படி அந்நியர்களிடமிருந்தும் உங்கள் தொலைபேசியை பாதுகாப்பதும் செயற்கை நுண்ணறிவுதான்.
4. தொலை பேசியில் அல்லது கணினியில் ஆங்கிலத்தை முறையாக இலக்கண சுத்தமாக பயன்படுத்த வில்லையென்றால், அதுவே திருத்தம் செய்கிறது, “இந்த இடத்தில் ஈஸ் போதாட்திங்க தம்பி.. வாஸ் போடுங்க” என்று இலக்கண திருத்தம் செய்வதும் செ.நு.தான்.
மாதா பிதா கூகிள் தெய்வம்
5. கூகிள், பிங், யாஹூ
ஆகிய தேடு பொறிகளில் எப்படி நமக்கு தேடும் செய்திகள், தகவல்கள், புள்ளி விவரங்கள்,
அறிவியல் செய்திகள், அரசியல் செய்திகள், ஆகியவற்றை எப்படி சொடக்குப்போடும் நேரத்தில்
கொண்டுவந்து கொட்டுவது, “எல்லாம் செயற்கை நுண்ணறிவின் மகிமைதான் கண்ணா !”
அதனால்தானே நாம் “மாதா பிதா குரு தெய்வம்” என்பதை “மாதா பிதா கூகிள் தெய்வம்” என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறோம். இனி “சேட்ஜீபீட்டி டீப்சீக் முதற்றே உலகு” என்றும் சொல்லுவோம் என நினைக்கிறேன்.
வேணாம்
ராஜா இந்த கடுதாசி
8. ஜிமெயில் அவுட்லுக் ஆகியவை எப்படி “ஸ்பேம் ஃபில்டர்” ஆக நம்மை “ வேணாம் ராஜா இந்த கடுதாசி உனக்கு வேணாம்“ என்று எச்சரிக்கிறது.
9. ஃபேஸ்புக், யூடியூப்,
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகியவை அனைத்தும் செ.நு. தான். இவை எல்லாமே நமது
செல் பேசியின் மலிவான பதார்த்தங்கள் ஆகிவிட்டன.
ரோட்டுல அதிக டிராஃபிக்
ராமனா லட்சுமணனா?
மனித முகங்களின் அடையாளங்களை
வைத்து “ராமனா லட்சுமணனா “என்று கண்டுபிடிப்பது, முன்பின் பார்க்காத பொருட்களின் புகைப்படத்தை
வைத்து “அது கல்லா மண்ணா
கனத்த உலோகமா” என்று கண்டுபிடிப்பது, இலை,
பூ, காய், கனி, படங்களை வைத்து, அது இன்ன தாவரம்
? இன்ன செடி ? இன்ன பூ? இன்ன
காய் ?இன்ன கனி ? இன்ன
மரம்? என்று கண்டுபிடிப்பது எல்லாமும் செயற்கை நுண்ணறிவுதான்.
"சேட்பாட்"டுகள் என்னும் செயலிகள் வாடிக்கையாளர்களின்
கேள்விகளுக்கு நேரடியான பதில்களைச் சொல்லும். இதுவும் ஒரு செயற்கை
நுண்ணறிவு செயலி தான்.
உப்பு புளி மிளகாய்
நாம் பயன்படுத்தும் உப்பு
புளி மிளகாய், மற்றும்
இதர உற்பத்தி பொருட்களின் விலை “இந்த
ஆண்டு எவ்வளவு ? ஆது அடுத்த
பத்து ஆண்டுகளில் அது எவ்வளவு
இருக்கும் ?” என்று அனுமானிப்பதும், கருத்து சொல்வதும், எச்சரிக்கை செய்வதும், அடுத்த ஆண்டு தங்கம் ஏறி விற்குமா ? இறங்கி விற்குமா ?
என்று அறிவியல் ரீதியாக ஜாதகம் சொல்லுவதும்
செயற்கை நுண்ணறிவு தான்.
அஞ்சரைப்பெட்டி
"கிட் ஹப்"(GITHUB) என்ற வலைத்தளத்தில், நமது கணினி செயல்கள் திட்டங்கள் ஆகியவற்றைப் பகிரலாம், இது ஒரு நூலகம் மாதிரியும் திட்டங்களை அடுக்கி வைத்துக் கொள்ளலாம்.
பலவகையான கணினி செயல்திட்டங்களை அஞ்சரைப் பெட்டியில்
வைப்பதுபோல சேமித்து
வைத்துக் கொள்ளலாம். இந்த வலைத்தளத்தில் உள்ளே
நுழைந்து பார்த்தால் இது பற்றி இன்னும்
கூடுதலாக நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின் வேலையைப் பறித்துவிடும் என்று பயப்பட வேண்டாம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது எல்லாம் இப்படிபட்ட வதந்திகள் பரவுவது வழக்கம்தான். இயந்திரங்கள் புதிதாக வந்தபோதும் இப்படிபட்ட பலர் பேசத்தான் செய்தார்கள். இதனை நம்பி நாம் தேங்கிவிட வேண்டாம் என்பது எனது கருத்து.
செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கடிதங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுங்கள்.
வேறு தலைப்புகளில் நான் எழுத வேண்டும் என்று நினைத்தால் எனக்கு சொல்லுங்கள்.
இயற்கை வளங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற காரியங்களைச் செய்யுங்கள்.
எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள், உங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவியாக இருங்கள்.
உங்கள் பெற்றோர்களை உங்களோடு உங்கள் இல்லத்தில் வைத்துப் பராமரியுங்கள்.
No comments:
Post a Comment