கடிதம்
5
செயற்கை
நுண்ணறிவு
பிதாமகன்
கதை
THE FATHER OF ARTIFICIAL INTELLIGENCE
CAN ROBOTS PERFORM TASKS LIKE HUMANS ? |
செயற்கை நுண்ணறிவு யுகம் என்று சொல்லும் அளவிற்கு உலகில் உள்ள 213 நாடுகளையும் கலக்கி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவின் தந்தை யார் ? அவர் எந்த ஊர்க்காரர்? எந்த நாட்டுக்காரர்? அவர் பெயர் என்ன ? அவர் என்ன படித்தார் ? என்ன வேலை பார்த்தார் ? செயற்கை நுண்ணறிவை எப்படி கண்டுபிடித்தார் ?
எல்லாவற்றையும்
இந்த பதிவில் பார்க்கலாம்.
அயர்லாந்து
நாட்டு ஆசாமிJOHN MCCARTH THE FATHER OF AI
செயற்கை
நுண்ணறிவின் தந்தை ஜான் மெக்கார்த்தி என்பவர்,
அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் என்ற நகரைச் சேர்ந்தவர்,
1927 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4ஆம் தேதி அவர்
பிறந்தார்.
ஆனால்
இவருடைய பெற்றோர்,
ஐரிஷ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அயர்லாந்து நாட்டுக்காரர்ளைத்தான் ஐரிஷ் இன மக்கள் என்று
சொல்லுவார்கள். அவர் தனது இளம்
வயதில் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில்
வசித்து வந்தார்.
கணக்கில்
புலி
பள்ளிப்
படிப்பிலேயே ஜான்
மெக்கார்த்தி சிறந்தவராக விளங்கினார், அதுவும் கணக்கு
பாடத்தில் அவர் புலி, அது அவருக்கு பிடித்தமான
பாடமாக இருந்தது. கணக்குப் போடுவது என்றால் அவருக்கு அல்வா
சாப்பிடுவது மாதிரி. அதுதான் அவருக்கு
பின்னாளில் கணினியில் கவனம் செலுத்தவும், நுண்ணறிவு சம்பந்தமான ஆய்வினை முன்னெடுக்கவும் காரணமாக இருந்தது.
ஜான்
மெக்கார்த்தி
பள்ளியில்
படிக்கும் போதே, கணக்கு பாடத்தில் தனது வகுப்பில் சொல்லிக்
கொடுத்த பாடங்களை தாண்டியும் மேலும் மேலும் படித்து தனது அறிவை வளர்த்துக்
கொண்டார். கணக்கு என்றாலே ஜான் மெக்கார்த்தி என்று
சொல்லும் அளவிற்கு மேலும் மேலும் தனது கணித அறிவை வளர்த்துக் கொண்டார்.
முனைவர்
படிப்பு
ஜான்
மெக்கார்த் தனது 16 வது வயதில் கலிபோர்னியா
இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற
கல்லூரியில் கணக்கு பாடத்தின் பட்ட
படிப்பில் சேர்ந்து, 1948 ஆம் ஆண்டு வெற்றிகரமாகப்
படித்து முடித்தார்.
அதனைத்
தொடர்ந்து இவர் பிரின்சீட்டன் பல்கலைக்
கழகத்தில் கணக்குப் பாடத்தில் முனைவர் படிப்பு படித்தார்.
பிரின்சீட்டின்
பல்கலைக்கழகம்
முனைவர்
படிப்பை முடித்த கையோடு பிரின்சீட்டின் பல்கலைக்கழகத்தில் கணக்கு பாட இளநிலை
ஆசிரியராக பணி செய்யத் தொடங்கினார்
.
மிகவும்
ஒரு குறுகிய காலம் பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இவர் 1955 முதல் அதன் பிறகு ஸ்டான்ஃபோர்ட்
பல்கலைக் கழகத்தில் 2000 ஆண்டு வரை கணினி மற்றும்
செயற்கை நுண்ணறிவு துறையில் வேலை பார்த்தார்.
டார்ட்மவுத்
கல்லூரியில் பிளையார் சுழி
1955 ஆம் ஆண்டு முதல் 58 வரை மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் நியூ ஹேம்ப்ஷயர்’ரின் டார்ட்மவுத் என்னும் கல்லூரியில் வேலை பார்த்தார்,அந்த சமயம் 1956 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவிற்கான ஒரு கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்தார் ஜான் மெக்கார்த்.
1956 - DARTMOUTH CONFERENCE ON AI |
அதனை
“டார்ட்மவுத் கருத்தரங்கு“
என்று சொன்னார்கள், அதுதான் செயற்கை நுண்ணறிவு பற்றி நடந்த அதிகாரப்பூர்வமான உலகின் முதல் கருத்தரங்கு.
செயற்கை நுண்ணறிவுக்கு போட்ட பிள்ளையார்
சுழி.
ஜான்மெக்கார்த்தியுடன்
மூன்றுபேர்
இந்த
கருத்தரங்கு 1956 ம் ஆண்டு ஜூன் 18 முதல் ஆகஸ்டு 17 வரை சுமார் எட்டு வாரங்களுக்கு
நடைபெற்றது. இதில் 47 பேர் கலந்து கொண்டார்கள், இதனை ஏற்பாடு செய்ததில் ஜான் அவர்களுக்கு
உதவியாக இருந்தவர்கள் மூன்றுபேர், அவர்கள், மார்வின் மின்ஸ்கி, நத்தானியேல் ரோச்செஸ்டர்,
மற்றும் கிளாட் ஷேனன்.
மாசாசூசெட்ஸ்
கல்லூரி
1958 முதல் 1962 வரை
நான்கு ஆண்டுகள் மாசாசுசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற
கல்லூரியுடன் இணைந்து
செயற்கை நுண்ணறிவு குறித்த பரிசோதனை மையம் ஒன்றினை நிறுவினார்.
இயந்திரங்கள்
சிந்திக்குமா ?
மனிதர்களைப்
போல இயந்திரங்களையும் சிந்திக்க வைக்க முடியும் என்பது பற்றிய ஆராய்ச்சி அவருக்கு உற்சாகம் அளித்தது. அதில் தன் கவனம் முழுவதையும்
செலுத்த தொடங்கினார்.
லிஸ்ப்
கணினி மொழி
ஜான் மெர்க்காத் அவர்களின் தொடர்ந்து ஆராய்ச்சியின் விளைவாக லிஸ்ப் என்னும் கணினி மொழியை அவர் உருவாக்கினார், அந்த லிஸ்ப் என்னும் கணினி மொழியை இன்று வரை செயற்கை நுண்ணறிவில் பயன்படுத்திய வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கணினியை
பகிர்ந்து கொள்ளல்
ஒரு
கம்ப்யூட்டர் ஒரு கணினியை பல
பேர் பயன்படுத்தும் வகையில் டைம் ஷேரிங் ஆஃப்
கம்ப்யூட்டர் என்ற முறையை முதன்
முதல் அறிமுகம் செய்தவர் இவர்தான்.இதனால் பெருவாரியான நபர்கள் கணினியை
பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
மனித
இயந்திரங்களுக்கு மனித அறிவு
ரோபோக்கள் என்னும் மனித இயந்திரங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பொதுஅறிவுப் பண்புகள்(common sense in AI) மற்றும் சரியான காரணங்களுக்காக செயல்படுதல் (logical reasoning)ஆகிய ஆராய்ச்சிகளில் இவர் முழுமையாக ஈடுபட்டார்.
CAN COMPUTER LEARN COMMON SENSE ? |
கணினியுடன்
தொடர்புள்ள தனது வாழ்நாள் முழுக்க
ஜான் மெக்கார்த் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிகளில் முழுமையாக ஈடுபட்டார்.
2011ம் ஆண்டு
அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி, இந்தப்
பூவுலகில் இருந்து விடைபெறும் வரை அவர் செயற்கை
நுண்ணறிவு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது முக்கியமான செய்தி. அயர்லாந்து நாட்டினரான ஜான்
மேக்கார்த்தி செயற்கை எப்படி நுண்ணறிவின் தந்தை ஆனார், என்று பார்த்தோம்.
செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின் வேலையைப் பறித்துவிடும் என்று பயப்பட வேண்டாம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது எல்லாம் இப்படிபட்ட வதந்திகள் பரவுவது வழக்கம்தான். இயந்திரங்கள் புதிதாக வந்தபோதும் இப்படிபட்ட பலர் பேசத்தான் செய்தார்கள். இதனை நம்பி நாம் தேங்கிவிட வேண்டாம் என்பது எனது கருத்து.
செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கடிதங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுங்கள்.
வேறு தலைப்புகளில் நான் எழுத வேண்டும் என்று நினைத்தால் எனக்கு சொல்லுங்கள்.
இயற்கை வளங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற காரியங்களைச் செய்யுங்கள்.
எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள், உங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவியாக இருங்கள்.
உங்கள் பெற்றோர்களை உங்களோடு உங்கள் இல்லத்தில் வைத்துப் பராமரியுங்கள்.
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment