Tuesday, February 4, 2025

ARTIFICIAL INTELLIGENCE GATEWAY TO GOLDMINE - மனம் நிறைய மத்தாப்பு கொளுத்தும் செயற்கை நுண்ணறிவு


மனம் நிறைய 

மத்தாப்பு கொளுத்தும்

செயற்கை நுண்ணறிவு

ARTIFICIAL INTELLIGENCE 

GATEWAY TO GOLDMINE

செயற்கை நுண்ணறிவு இளைஞர்களுக்கு

நல்ல எதிர்கால சுய முன்னேற்றத்திற்கு உதவுமா என்று சிலர் கேட்கிறார்கள், இப்படி ஒரு சந்தேகமான கேள்வியே வேண்டாம்.

செவ்வாய் கிரகத்தில் வேலை

செயற்கை நுண்ணறிவு பற்றி தெரியவில்லை என்றால் நம்மை செயற்கை நுண்ணறிவு கைநாட்டு என்று சொல்லிவிடுவார்கள்.

செயற்கை நுண்ணறிவு கையில் இருந்தால் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் எலான் மஸ்கால் நிறுவப்படும் புதிய கிரகத்தில் கூட உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு

ராக்கெட்டில் சீசன் டிக்கெட்

காலையில் 8:00 மணிக்கு பூமியில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கு போய் வேலை பார்த்துவிட்டு சாயங்காலம் மீண்டும் பூமிக்கு திரும்பி விடலாம். அதற்குள் ராக்கெட்டில் சீசன் டிக்கெட் ஏற்பாடு செய்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.


அதிர்ஷ்ட தேவதை

கண்டிப்பாக நுண்ணறிவு பயிற்சி பெற்றால் அதிர்ஷ்ட தேவதை எப்போதும் உங்கள் அருகிலேயே இருப்பாள். உங்களை விட்டு அகலாமல் இருப்பாள்

அனுதினமும் உங்களுக்கு அரிதான வேலை வாய்ப்புகளை அள்ளி அள்ளி தந்து கொண்டே இருப்பாள்.

கனவிலும் காண முடியாத சம்பளம்

செயற்கை நுண்ணறிவு உதவியாளராக போகலாம். மெஷின் லேர்னிங் பொறியாளராக போகலாம். ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானியாக போகலாம்.  

அது மட்டுமல்ல இந்த பதவிகளுக்கான சம்பளம் என்பது நீங்கள் கனவிலும் பார்க்க முடியாததாக இருக்கும் என்கிறார்கள். போகிற போக்கை பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.

கூகிள் நிறுவனம் 

வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் இந்த செயற்கை நுண்ணறிவு பயிற்சியைப் பெற முடியுமா என்று கேட்கிறார்கள் சிலர். இதற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பை கூகிள் நிறுவனம்  நடத்துகிறது

டி எக்ஸ் என்னும் ஆன்லைன் தளத்தின் மூலம் இதனை சொல்லித் தருகிறது. இதற்காக அதிகப்படியாக நீங்கள் ஒதுக்க வேண்டிய நேரம் ஒரு வாரத்தில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் மட்டுமே.

கணினியிடம் பேசும் மொழி

புரக்ராமிங் லாங்குவேஜ் என்று அடிக்கடி சொல்லுவார்கள். அப்படி என்றால் செயல்மொழி என்று அர்த்தம். இதைச் செய், அதை செய், என்று சொல்லுகின்ற மொழியை செயல் மொழி என்று சொல்லலாம். அதாவது நாம் கணினியிடம் பேசும் மொழி. 

கணினிக்கு இடும் கட்டளை

அதாவது கணினியிடம் வேலை வாங்க அதனிடம் பேசுவதற்கு ஒரு மொழி வேண்டும். அதுதான் செயல் மொழி என்று சொல்லுகிறார்கள். 

அதாவது மனிதர்கள் கணினிக்கு சொல்லும் கட்டளை தான் ப்ரோக்ராமிங் லாங்குவேஜ்.

பைத்தன் ஜாவா சி பிளஸ் பிளஸ்

அந்த செயல் மொழிக்கும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று சொல்வது மாதிரி தனித்தனி பெயர்கள் உண்டு. 

அவை தான் இந்த பைத்தன் என்பதும் ஜாவா என்பதும் சி பிளஸ் பிளஸ் என்பவை எல்லாம்.

கணினி புரியும் மொழி

பைத்தன் என்பது கணினிக்கும் நமக்கும் புரியும்படியான ஒரு செயல்மொழி. இதனை சுலபமாக கற்றுக் கொள்ளலாம். சுலபமாக பயன்படுத்தலாம்.உபயோகப்படுத்தலாம்

அதில் எவ்விதமான சிரமமும் இல்லை. செயற்கை நுண்ணறிவு மிகவும் அதிகமாக பயன்படுத்தும் செயல்மொழி என்பது இந்த பைத்தன் தான். இதில் ஏகப்பட்ட கருவிகள் (Tools)உள்ளன.

புத்திசாலித்தனம்

ஏகப்பட்ட தகவல்களை சுமந்தபடி இருக்கும் நூலகங்கள்(Libraries) இருக்கின்றன. இந்த இரண்டையும் பயன்படுத்தி சுலபமாக புத்திசாலித்தனமான செயல்பாடுகளை இதன் மூலம் செய்ய முடியும். இதைத் தான் நாம் பைத்தன் என்கிறோம்.

இதுதான் அல்கோரிதம்

அல்கோரிதம் என்பது ஏற்கனவே தயாராக ஏற்பாடு செய்து வைத்திருக்கும் ஒரு வழிகாட்டி. ஒரு திசை காட்டி, அல்லது ஒரு கருவி, அல்லது ஒரு ஆசிரியர், என்று சொல்லலாம்.

திருப்பத்தூரில் இருந்து சென்னை போக வேண்டும் என்றால் திருப்பத்தூரில் பஸ் ஏறினால் அது வாணியம்பாடி ஆம்பூர் வேலூர் ராணிப்பேட்டை வாலாஜா ஸ்ரீபெரும்புதூர் தாண்டி சென்னை போகலாம், என்று சொல்வது போல ஒரு வழிகாட்டும் மொழி இது.

முதலில் இதைச் செய்ய வேண்டும்

படிப்படியாக ஒரு பிரச்சனையை தீர்க்க உரிய சரியான முறையான வழியை சொல்லும்

அது மட்டுமல்ல ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்றால் முதலில் எதை செய்ய வேண்டும், இரண்டாவது எதனை செய்ய வேண்டும், என்று அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும், என்பதை சரியாக சிறப்பாக செய்து முடிக்க உதவுவது இந்த அல்கோரிதம்கள்

நாம் செய்ய வேண்டியது 

எந்திரங்கள் கற்றல் அல்லது மிஷின் லேர்னிங் என்பது  எந்திரங்களின் கற்றல் என்பது செயற்கை நுண்ணறிவின் ஒரு பகுதி. சிலவற்றை கணினிகள் கற்றுக் கொள்கின்றன. வகுத்தல் என்றால் என்ன பெருக்கல் என்றால் என்ன என்ற சிறிய அடிப்படையை சொல்லிக் கொடுத்தால் போதும்

அதனை அடிப்படையாகக் கொண்டு பெரிய பெரிய கணக்குகளை எல்லாம் போடுகிறது மனித மூளை. அதுபோலத்தான் கணினியிடம் நீங்கள் ஒரு கோடு போட்டால் போதும் அது உங்களுக்கு ரோடு போட்டு காட்டி விடும்.

இதை மட்டும் தந்தால் போதும்

அதற்கு தேவையான அடிப்படை தகவல்களை அதற்கு தந்து விட்டால் போதும். அதனை வைத்து அது ஆயிரம் வகையான வேலைகளை பார்த்து நம்மை அசத்தி விடும். அதுதான் மெஷின் லேர்னிங் என்பது.

புள்ளிவிவர அறிவியல்

டேட்டா சயின்ஸ் என்பது புள்ளிவிவர அறிவியல். புள்ளிவிவர அறிவியல் என்பது அது பற்றிய ஆய்வு என்பது ஒரு சுலபமான எளிமையான விளக்கம். புள்ளிவிவரம் என்றால் உங்களுக்கு தெரியும்

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் இருக்கின்றன என்றால் அது ஒரு புள்ளி விவரம். தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை 978 மில்லி மீட்டர் என்றால் அது ஒரு புள்ளி விவரம்.

புள்ளி விவரங்கள் ஆய்வு

புள்ளி விவரங்களை சேகரித்தல் என்பது ஒரு வகையான வேலை. அதனை ஆய்வு செய்வது, இது சரியா தவறா என்று மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இது அதிகமா குறைவா என்று பார்ப்பது இதெல்லாம்தான் அதனை ஆய்வு செய்வது என்பது, இதனைச் செய்வதும் செயற்கை நுண்ணறிவுதான். 

செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின்  வேலையைப் பறித்துவிடும் என்று பயப்பட வேண்டாம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது எல்லாம் இப்படிபட்ட வதந்திகள் பரவுவது வழக்கம்தான். இயந்திரங்கள் புதிதாக வந்தபோதும் இப்படிபட்ட பலர் பேசத்தான் செய்தார்கள். இதனை நம்பி நாம் தேங்கிவிட வேண்டாம் என்பது எனது கருத்து.

செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கடிதங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுங்கள்.

வேறு தலைப்புகளில் நான் எழுத வேண்டும்  என்று நினைத்தால் எனக்கு சொல்லுங்கள். 

இயற்கை வளங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற காரியங்களைச் செய்யுங்கள். 

எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள், உங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவியாக இருங்கள். 

உங்கள் பெற்றோர்களை உங்களோடு உங்கள் இல்லத்தில் வைத்துப் பராமரியுங்கள். 

 பூமி ஞானசூரியன்


 


No comments:

செயற்கை நுண்ணறிவு பிதாமகன் கதை - THE FATHER OF ARTIFICIAL INTELLIGENCE

  கடிதம் 5 செயற்கை நுண்ணறிவு பிதாமகன் கதை THE FATHER OF ARTIFICIAL INTELLIGENCE CAN ROBOTS PERFORM TASKS LIKE HUMANS ? செயற்கை நுண்ணற...