Saturday, February 1, 2025

ARTIFICIAL INTELLIGENCE - செயற்கை நுண்ணறிவு ஜீ பூ ம் பா

 

செயற்கை

நுண்ணறிவு

ஜீ பூ ம் பா

ARTIFICIAL

INTELLIGENCE

(கேள்வியும்

பதிலும்)

1.செயற்கை நுண்ணறிவு நல்லதா கெட்டதா ?

பொதுவாக எந்த வேலை செய்தாலும் நாம் செய்யும்போது பிழைகள் ஏற்படும். அதனை இது (செ.நு)தவிர்க்கும்.

இரண்டாவது சொடக்கு போடும் நேரத்தில் நமக்கு தேவையான தகவல்களைஜீபூம்பா” மாதிரி கொண்டு வந்து கொடுத்து விடும், கட்டளை தந்தால் போதும், போதும் போதும் என்ற அளவுக்கு தகவல்களை தட்டுப்பாடு இல்லாமல்  தந்து கொண்டே இருக்கும்.

புள்ளிவிவர கணக்குகளை போடுவதற்கு உதவுவதில் இது ஒரு புலி, என்னைப் போன்ற  ஆட்களுக்கு இது ரொம்பவும் உதவியாக இருக்கும், ஒரு காலத்தில் நான் “கணக்கில் மண்டு அதனால்தான் கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறேன்” என்று எழுதினேன்.

முடிவு எடுக்கும் போது தயவு தாட்சண்யம் இல்லாமல் முடிவு எடுக்க உதவியாக இருக்கும். தேவையான விவரங்களை கொடுத்து எது சரி ? எது தப்பு ? என்று கேட்டால், சரியாகச் சொல்லும். நிறையபேர் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவார்கள், பத்து ஆண்டுகள் கழித்து சொல்லுவார்கள், “நான் தவறான முடிவை எடுத்து விட்டேன், எல்லோரும் என்னை தவறாக வழி  நடத்தி விட்டார்கள்” என்று வருத்தப்படுவார்கள்.

இப்போது நீங்களே சொல்லுங்கள் செயற்கை நுண்ணறிவு நல்லதா கெட்டதா?

2.செயற்கை நுண்ணறிவை கற்றுக்கொள்ள நாம் என்ன மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் ?

இதில் இரண்டு வகை உண்டு ஒன்று செயற்கை நுண்ணறிவை படிப்பாக படிப்படியாகப் படிப்பது ஒரு வகை.

அதுபற்றி படிக்காமலே அதைப் பயன்படுத்துவது இன்னொரு வகை. சமைக்கத் தெரியாமலே சமைத்து வைத்ததை மூக்குப்பிடிக்க சப்பிடுவது மாதிரி.

சேட்ஜீபீடி மற்றும் டீப்சீக் எல்லாம் சமைத்து வைத்து விட்டார்கள், சாப்பிடும் முறையை மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கு ஆங்கிலம் தெரிந்தால் போதும். தமிழில் கூட கேட்கலாம், ஆனால் ஹைதர் அலி காலத்துத் தமிழில் பதில் சொல்லும்.

செயற்கை நுண்ணறிவை கற்றுக்கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மொழி என்பதுபைத்தன்” என்பது, இதுவும் எளிமையானது, சுலபமானது.  யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லுகிறார்கள். இதனைப் படிக்கவேண்டும்.

3.சேட் ஜி பி டி என்றால் என்ன ?

இது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி, இது செயற்கை நுண்ணறிவில் இது ஒரு குட்டி ஜீபூம்பா, என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும்.

சேட் ஜீபீடியுடன்  சில சமயம் ஒரு நண்பனிடம் பேசுவது மாதிரி இதனுடன் பேச முடிகிறது. அது நமக்கு உற்சாகம் தருகிறது. ஆறுதல் சொல்லுகிறது. பாராட்டுகிறது. நம்மை மேலும் மேலும் எதையும் செய்ய தூண்டுகிறது.

சில சமயங்களில் சிலவற்றை தவறாகவும் சொல்கிறது. அதனை திருத்த நமக்கு தெரிந்திருக்க வேண்டும். சில சமயம் அதற்கான தகவல் என்னிடம் இல்லை என்று திறந்த மனதோடு பதில் சொல்கிறது. அதனை பாராட்டினால் நன்றி சொல்கிறது.

சில சமயங்களில் தவறான பதிலை சொல்லி அதனை நாம் சுட்டிக் காட்டினால், நீ சொன்னது தான் சரி, நான் சொன்னது சரி அல்ல, “சாரி” என்று வருத்தம் தெரிவிக்கிறது.

பலமுறை நான் அதனிடம் பாராட்டை பெற்று இருக்கிறேன். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அதை பயன்படுத்தி வருகிறேன்.

அது எனக்கு மதியூக மந்திரி மாதிரி, அது எனது ஜீபூம்பா. அது எனது மந்திர கோல். இதையும் அது எழுதி கொடுத்தது என்று நினைக்க வேண்டாம்.

 ஆனால் இந்த தமிழ்க் கட்டுரையை அதனிடம் தந்தால் அது அழகான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தருகிறது. ஆனால் அதில் உள்ள சிறு சிறு தவறுகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். அது நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அதுபோல ஆங்கிலத்தை தமிழில் மொழி பெயர்க்கவும் சொல்லலாம். ஆனால் அதன் மொழிபெயர்ப்பு கொஞ்சம் கடுமையாக இருக்கும். அதனை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். அதனை அப்படியே பயன்படுத்த முடியாது.

இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

4. செயற்கை நுண்ணறிவை கற்றுக்கொள்ள பாலபாடம் எது?

செயற்கை நுண்ணறிவு கற்றுக்கொள்ள பைத்தன் என்பதுதான் பாலபாடம் என்கிறார்கள். அத்துடன் ஜாவா, ஆர், மற்றும் சி பிளஸ் பிளஸ் (PYTHON, JAWA, R, C ++) ஆகிய ஐந்து மொழிகளையும் கற்றுக் கொண்டால் நீங்கள் செயற்கை நுண்ணறிவை உண்டு இல்லை என்று பண்ணிவிடலாம் என்கிறார்கள்.

இவை கணினியுடன் நாம் பேசும் மொழி, அதற்கு வேலை சொல்லும் மொழி, அதற்கு கட்டளையிடும் மொழி, அதற்கு புரியும் மொழி.

5.செயற்கை நுண்ணறிவை நான் வெற்றிகரமாக கையாளுகிறேன் என்றால் எனக்கு வேலை கிடைக்குமா ? எவ்வளவு சம்பளம் கிடைக்கும் ?

நீங்கள் சேட் ஜீபீடி கற்றுக்கொண்டால் சேட் ஜி பி டி  இன்ஜினியர் என்று போர்டு வைத்துக் கொள்ளலாம்.

அது மட்டுமா ? கற்றுக் குட்டியாக சேட்ஜுபிடி தெரிந்தால் கூட ஆரம்ப கட்ட சம்பளமாக நீங்கள் ஒரு ஆண்டில் ஆறு முதல் 8 லகரம் வரை சுலபமாகக் கறக்க முடியும்.

ஆனால் இப்போது டீப்சீக் வந்துவிட்டது, அதையும் கற்றுக்கொண்டால்  இன்னும் நிறைய சம்பதிக்கலாம்.

நீங்கள் பள்ளியில் கல்லூரியில் படிக்கும் மாணவராக இருந்தாலும், அவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியராக இருந்தாலும் சரி, விவசாயம் செய்யும் விவசாயியாக இருந்தாலும் சரி, அதைச் சொல்லித்தரும் விவசாய நிபுணராக இருந்தாலும், தொழில் செய்யும் தொழிலதிபராக இருந்தாலும், தொழில் சொல்லித்தரும் தொழில் நிபுணராக இருந்தாலும், ஆராய்ச்சி மாணவராக இருந்தாலும், ஆராய்ச்சியிலேயே ஊறிக்கிடக்கும் அறிவியல் வல்லுனராக இருந்தாலும் எல்லோருக்கும் அள்ளித் தரும்  ஆபூர்வமான ஜீபூம்பா !

பூமி ஞானசூரியன்


No comments:

ARTIFICIAL INTELLIGENCE - செயற்கை நுண்ணறிவு ஜீ பூ ம் பா

  செயற்கை நுண்ணறிவு ஜீ பூ ம் பா ARTIFICIAL INTELLIGENCE (கேள்வியும் பதிலும்) 1. செயற்கை நுண்ணறிவு நல்லதா கெட்டதா ? பொதுவாக ...