கடிதம் 2
பழவேற்காடு ஏரியின்
சூழல் பிரச்சனைகளுக்கான
எனது மூன்று ஆலோசனைகள் !
அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !
பழவேற்காடு ஏரி, பக்கிங்காம் ஆறு, வங்கக்கடலில் ஆரணி ஆற்றின் முகத்துவாரம் ஆகிவற்றுடன் 10 ஆண்டுகள் தொடர்புடையவன், அங்கு உள்ள மீனவ மக்களுடன் வேலை பார்த்தவன், அங்கு உள்ள கிராமங்களிடையே பரிச்சயம் உள்ளவன், அங்கு கிட்டத்தட்ட 70,000 அலையாத்தி மரக்கன்றுகளை நாற்றுக்களை உற்பத்தி செய்தவன் என்ற முறையில் பழவேற்காடு ஏரியின் சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணபதற்கான மூன்று தீர்வுகள் குறித்து அந்த ஆராய்ச்சியாளர்கள் கருத்தரங்கில் நான் தெரிவித்தேன்.
ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ சிட்டி நகரத்தில் (SRI CITY)உள்ள கிரியா பல்கலைக்கழகத்திற்கு (KREA UNIVERSITY)காலை சுமார் 9.30 மணிக்கு நானும் வெங்கடேசனும் போய்ச் சேர்ந்து விட்டோம்.
அங்கு போன பின்னால் தான் தெரியும் கருத்தரங்கு நடக்கும் இடம் ஒரு பல்கலைக்கழகம் என்று, அதுவும் அது ஒரு தனியார் பல்கலைக்கழகம், ஆனால் தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமானதல்ல, உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இதனை உருவாக்கிய பல்கலைக்கழகம்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் இரண்டு பள்ளிகளும், பல ஆராய்ச்சி கூடங்களும்
உள்ளன. கல்லூரி படிப்பு சொல்லித் தரும் கல்லூரிகளை இவர்கள் பள்ளிக்கூடங்கள் என்று தான் சொல்லுகிறார்கள்.
பழவேற்காடு ஏரியின் பல்லுயிர் மேம்பாட்டு வளங்கள் மற்றும் அதன் சூழல் வளங்களை மேம்படுத்துதல் என்பதுதான், நான் கலந்து கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கருத்தரங்கின் நோக்கமாகும்.
ஐ எஃப் எம்
ஆர் என்ற பிசினஸ் படிப்பு (BUSINESS EDUCATION)சொல்லித்தரும் கல்லூரி
வளாகத்தில் தான் இந்த கருத்தரங்கினை
ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இதில் பிளமிங்கோ திருவிழா (FLEMINGO FESTIVAL) தான் முதன்மையானது, அதன் தொடர்பாகத்தான் இந்த ஆராய்ச்சியாளர்கள் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இதனை ஏற்பாடு செய்து
நடத்துவது ஆந்திர அரசு, ஆராய்ச்சியாளர்கள் கருத்தரங்கினை நடத்தும் பொறுப்பை, பி என் ஹெச்
எஸ் (B N H S) நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தார்கள்.
பி என் எச் எஸ் என்பது பூமி நிறுவனம் (BHUMII) மாதிரியான தொண்டு நிறுவனம். ஆனால் பி என் ஹெச் எஸ், யானை என்றால் பூமி, பூனை மாதிரி, அளவை ஒப்பிடுவதற்காக சொன்னேன்.
பி என் ஹச்
எஸ் நிறுவனமும் முழுக்க முழுக்க இயற்கை வளங்களை பாதுகாப்பு தொடர்பான பணிகளை மட்டுமே செய்து வரும் தொண்டு நிறுவனம், அதன் வயது 143 ஆண்டுகள்,
பூமியின் வயது வெறும் 30 ஆண்டுகள்
மட்டுமே.
யூ என் டி
பி (U N D P) யு என் இ
பி (U N E P) ராம்சார் (RAMSAR)ஆகிய சர்வதேச அமைப்புகளுடன்
கைகோர்த்தபடி பல திட்டங்களை செயல்படுத்தி
வரும் தொண்டு நிறுவனம் இந்த பி என்
ஹெச் எஸ் நிறுவனம்.
ஆனால் பூமி நிறுவனம், நபார்டு
வங்கி, இந்திய அரசு, மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றுடன் இணைந்து
செயலாற்றக்கூடிய ஒரு தொண்டு நிறுவனம்,உங்களுக்கு தெரியும் பூமி நிறுவனமும், முழுக்க
முழுக்க இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறது.
பம்பாய் நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி (BOMBAY NATURE
HISTORY SOCIETY)என்பதுதான்
பி என் எச் எஸ்
என்ற பெயரின் விரிவாக்கம். இதனை 143 ஆண்டுகளுக்கு முன்னதாக, 1883 ஆம் ஆண்டு செப்டம்பர்
மாதம் 15 ஆம் தேதி இதனைத்
தொடங்கினார்கள்.
அப்போதே இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றும் பல்லுயிர் வளங்களை பாதுகாப்பது என்ற இரண்டு மிக
முக்கியமான பிரதானமான மிகவும் அரிதான இரு துறைகளில் வேலை
பார்ப்பது என்ற குறிக்கோளை அப்போதே
நிர்ணயித்திருந்தார்கள்.
"ஜர்னல் ஆப் பாம்பே நேச்சுரல்
ஹிஸ்டரி" (JOURNAL
OF BOMBAY NATURAL HISTORY)என்ற
பத்திரிகை ஒன்றையும் இவர்கள் நடத்தி வருகிறார்கள்.
பறவை வல்லுநர்கள் என்று
சொன்னாலே சர்வதேச அளவில் இரண்டு பெயர்களைத் தான் சொல்லுவார்கள், ஒருத்தர்
சலீம் அலி (SALIM ALI) இன்னொருவர் சிட்னி தில்லான் ரிப்ளே (SIDNEY DILLAN RIPLEY)
என்பவர். இந்த இருவருடனும் இணைந்து
செயல்பட்டது என்னும் பெருமைக்குரிய தொண்டு நிறுவனம், இந்த பி என்
எச் எஸ் தொண்டு நிறுவனம்.
பி என் ஹெச்
எஸ் இன் நதிமூலம் பார்த்தால்
அது ஒரு ஆச்சரியமான விஷயமாக
உள்ளது. அதை கொஞ்சம் அலசி
ஆராய்ந்து பார்த்தேன், பம்பாயில் 1811 ஆம் ஆண்டு பொழுது
போக்கிற்காக இந்தியக் காடுகளில் வேட்டையாடும் வெள்ளைக்காரர்கள் ஒரு கூட்டமைப்பை தொடங்கினார்கள்.
இதன் தொடர்ச்சியாக "இயற்கையை நாம்
வேட்டையாடினால் அது நம்மை வேட்டையாடி
விடும்" என்ற நம்பிக்கையுடைய நல்லவர்கள்
சிலரால் 143 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்டதுதான் இந்த பி என்
ஹெச் எஸ் நிறுவனம்.
இன்று இந்த "பி என் ஹெச்
எஸ்" தெற்கு மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது, அதன் தலைமையகம், "ஹார்ன்பில்
ஹவுஸ்" (HORNBILL
HOUSE)என்பது, அதன் தமிழ்ப் பெயர்
"இருவாச்சி பறவை".
இந்தியாவின் பறவை மனிதர் என்று
அழைக்கப்பட்டவர் சலீம் அலி, அவருடைய முழு
பெயர் சலீம் மொய்தீன் அப்துல் அலி என்பது. பறவைகளின்
காதலர் இவர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அவர், பி என் எச்
எஸ் உடன் இணைந்து பல
பணிகளை செய்தார். அதனால் தான் பி என்
எச் எஸ் இன்றும் கூட
பறவைகள் தொடர்பான ஆராய்ச்சிகளில், அவற்றைப் பாதுகாக்கும் பணிகளில் மேம்படுத்தும் பணிகளில், அதிகம் ஈடுபட்டு உள்ளது என தெரிகிறது. சலீம்
அலி 1896 ஆம் ஆண்டு பிறந்தவர்,
1987 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
பரத்பூர் பறவைகள் சரணாலயம் (BHARATPUR BIRD SANCTUARY )
பிஎன்ஹெச்எஸ்
தொடங்க காரணமாக, உதவியாக, வழிகாட்டுபவராக, இருந்தவர், சலீம் அலி அவர்கள் தான்.
இந்தியாவின் தலைசிறந்த ஒரு இயற்கை வள
பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்த ஆராய்ச்சியாளர்களின் கருத்தரங்கில் கலந்து கொள்ள காரணமாக இருந்த டாக்டர் பிரபாகரன் அவர்களுக்கு நான் நன்றி சொல்ல
கடமைப்பட்டவன். அவர் சுற்றுச்சூழல் மற்றும் காலனிலை மாற்றம் அமைச்சகத்தின் விஞ்ஞானி மற்றும் இணை இயக்குனராக தமிழகத்தில் பணிபுரிகிறார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கை வள பாதுகாப்புடன் தொடர்புடைய
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் சுமார் 30 முதல் 40 ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த கருத்தரங்கில் ஆந்திர
அரசின் வனத்துறை மற்றும் கிரியா பல்கலைக்கழகத்தின் உயர் அலுவலர்கள் மற்றும்
விஞ்ஞானிகள் பலரும் கொண்டார்கள். அதில் கலந்து கொண்டவர்களில் இதில் எதிலும் சம்பந்தப்படாத ஒரு சாமானியன் நான்
மட்டும்தான்.
அன்று காலை 10 .20 மணியளவில் அறிவியல் வல்லுநர்கள் தங்கள் ஆராய்ச்சி பற்றிய முடிவுகளை அதன் அனுபவங்களை பகிர்ந்து
கொள்ள தொடங்கினார்கள்.
ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது, அதற்குள் அவர்கள் தங்கள் ஆராய்ச்சி பற்றிய கருத்துக்களை தொகுத்து விளக்கி கூறிய பின், பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லி முடிக்க வேண்டும்.
டாக்டர் பி. சத்திய செல்வம்
தலைமையில், டாக்டர் ஹிமாத்ரி சேகர் மோண்டல், டாக்டர் எஸ் சிவகுமார், திருமதி
குஷ்பூராணி, டாக்டர் ரித்தீஷ் பவார் ஆகிய பி என் எச் எஸ் விஞ்ஞானிகள்
இந்த ஆராய்ச்சிக் கருத்தரங்கை சிறப்பாக சீராக நடத்தினார்கள்.
இவர்களில் டாக்டர். பி. சத்திய செல்வம்
அவர்கள் தான் பி என்ஹெச்எஸ்
இன் தலைமை விஞ்ஞானியாக செயல்படுகிறார், டாக்டர் ஹேமாத்ரி சேகர் மோண்டல் மற்றும் ருத்தீஷ் பவார் ஆகியோரும் எனக்கு தேவையான தகவல் தந்து நான் எனது கருத்துக்களை
கருத்தரங்கில் பதிவு செய்ய உதவியாக இருந்தார்கள்.
எனக்கு அன்று மாலை 5.15 முதல் 5.30 வரை 15 நிமிடம் ஒதுக்கினார்கள். எனக்கு முன்னால் ஒரு பத்து பேருக்கு
குறைவு இல்லாமல் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை பழவேற்காடு ஏரியின் வளங்களை
மற்றும் அதன் சூழல் தன்மையை
மேம்படுத்த என்ன செய்யலாம் என்று
எடுத்துக் கூறினார்கள்.
நான் ஒரு பத்து
நிமிடம் நான் பேசும் கருத்துக்களை
ஆங்கிலத்தில் தயார் செய்தேன். ஆனால் அதனை அப்படியே படிக்காமல்
இயன்ற அளவு சுலபமான எனக்கு
தெரிந்த ஆங்கில மொழியில் அதனை வழங்கினேன்.
1. “பழவேற்காடு ஏரியின் நீர்வளத்தை அதிகரிக்க வேண்டும். அதன் நீர்வடிப்பகுதியில் மழை அறுவடை கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும். ஏரியில் இருக்கும் நீரின் அளவைக் கூட்டுவதனால் மட்டுமே நீரின் உப்புத்தன்மை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும்.
2.
“பழவேற்காடு
என்றால் அலையாத்தி மரக்காடு. ஒரு காலத்தில் பழவாற்காடு
பகுதியில் காடுகளாக இருந்த அலையாத்தி மரங்களை மீண்டும் உருவாக்குவதன் மூலம் அதன் சூழல் வளத்தை
பல்லுயிர் வளத்தை மேம்படுத்த முடியும்.”
3. “பழவேற்காடு ஏரியைச் சுற்றிலும் உள்ள மீனவக்குப்பங்களில் உள்ள மக்களை கலந்தாலோசித்து ஆராய்ச்சி உட்பட அனைத்துத் திட்டங்களையும் வடிவமைக்க வேண்டும், அதுமட்டுமல்லாமல் திட்டமிடுதல், செயலாக்கம், மேற்பார்வை இடுதல், பின்தொடர்தல் இப்படி எல்லாவற்றிலும் மக்கள் பங்கேற்பு முறையை கடை பிடித்தால் ஏரியின் சூழலையும் மேம்படுத்தலாம், மக்களின் வாழ்க்கைச்சூழலையும் மேம்படுத்தலாம்.
- பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment