புத்தகங்கள் படியுங்கள்
ஜனாதிபதி ஆகலாம்
உலகத்திலேயே புத்தகம் படிப்பினால் மட்டுமே தன்னை உயர்த்திக் கொண்டவர்களின் பெயரை சொல்லச் சொன்னால் கண்ணைமூடிக்கொண்டு சொல்லலாம். ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின், பதினாறாவது ஜனாதிபதியாக 1860 ம் ஆண்டு, குடியரசு கட்சியின், முதல் உறுப்பினராக, ஜனாதிபதி, தேர்தலில் ஜெயித்து ஜனாதிபதி ஆனார்.
பல மைல் நடந்து கடன் வாங்குவார்
உலகிலேயே புத்தகம் வாங்குவதற்குக் கூட வசதி இல்லாமல் கடன் வாங்கி புத்தகம் படித்தார் என்றால் அது ஆபிரகாம்லிங்கம் மட்டும்தான், புத்தகத்தை கடன் பெறுவதற்காக பல மைல் தூரம் நடந்து சென்று, அதனை வாங்கி படித்துவிட்டு மீண்டும் அந்த புத்தகத்தை திருப்பித் தருவதற்காக பல மைல் நடந்து சென்ற நபர் ஒருவரை சொல்லுங்கள் என்றால், மீண்டும் நாம் லிங்கன் பெயரைத்தான் சொல்ல முடியும், புத்தகங்களை படித்ததனால் மட்டுமே. தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் மாற்றிக் கொண்ட ஒருவரை சொல்லுங்கள் என்றால். உடனடியாக நமக்கு ஞாபகத்துக்கு வரும் பெயர் லிங்கன் தான்.
அவர் அதிகம் படித்த இரு நூல்கள்
"புத்தகங்களைப் படித்தார். புத்தகங்களைப் படித்தார்" என்று சொன்னால். என்ன மாதிரியான புத்தகங்களை அதிகம் படித்தார் ? என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர் அதிகமாக படித்தது என்று சொன்னால், இரண்டுவகைப் புத்தகங்களைத்தான் அதிகம் படித்ததாகச் சொல்லுகிறார்கள். ஒன்று பைபிள். இன்னொன்று ஷேக்ஸ்பியர் எழுதிய புத்தகங்கள். இந்த இரண்டைத் தான் அவர் அதிகமாக வாசித்தார், ஆனால் அவர் அதோடு நின்றுவிடவில்லை, அவர் தத்துவப் புத்தகங்களை அதிகம் படித்தார், உலக வரலாறு பற்றிய புத்தகங்களை அதிகம் படித்தார், சட்டம் சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்தார், இலக்கியங்களை அதிகமாகப் படித்தார்.
எப்படி உதவியது ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ?
உலகத்துலேயே, தலை சிறந்த மேடைப் பேச்சு எது என்றால், அது ஆபிரகாம் லிங்கனின் மேடைப் பேச்சு என்றுதான் சொல்லுவார்கள். அதுதான். கெட்டிஸ்பர்க் என்ன இடத்தில் அவர் ஆற்றிய உரை. அது மூன்று நிமிடத்திற்கும் மிகக் குறைவான ஒரு பேச்சுதான். அதுதான், இன்றளவில். மிகவும் சிறப்பான மேடைப்பேச்சு, என்று சொல்லுகிறார்கள். அவர் தனது மேடை பேச்சில், அதிக அளவில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இருக்கும் சுவைமிக்க வசனங்களை எல்லாம் மேற்கோளாக அவர் அதிகமாக எடுத்து பேசுவார். அது கேட்போரை. எல்லாம் மிகவும் கவரும்.
படிக்க சொல்லித் தந்தவர் யார் ?
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்று சொல்லுவார்கள். அது போல, லிங்கன் அவர்களுக்கு, புத்தகங்கள் படிப்பதில் ஒரு விருப்பத்தை ஏற்படுத்தியவர் அவருடைய தாயார், நான்சி அம்மையார். அவர் தினம் தினம் படிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தார். இப்படி தினந்தினம் படிக்க ஆரம்பித்தவர்தான், பின்னர் தொடர்ந்து பலவிதமான புத்தகங்களை தேடித்தேடி படிக்க ஆரம்பித்தார்.
சத்தம் போட்டு படிப்பார்
அபிரகாம்லிங்கன் அவர்களுக்கு, சத்தம் போட்டு படிக்கத்தான் பிடிக்கும். எப்போது புத்தகங்களை படித்தாலும். சப்தமாகத்தான் படிப்பார். அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியான பின்னால் கூட, புத்தகங்களைப் படிக்கும்போது, சப்தமாகப் படிப்பதுதான் அவர் வழக்கம். சில சமயங்களில் நண்பர்கள் வந்து இருக்கும்போது கூட, அவர் படித்த நல்ல செய்திகளைப் புத்தகங்களிலிருந்து அவர் சப்தமாக படித்துக் காட்டுவார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இருக்கும், நகைச்சுவை வசனங்களை. அடிக்கடி நண்பர்களிடையே அவர் படித்துக் காட்டுவார். சோகம் ததும்பும் வசனங்களும் அவருக்குப் பிடிக்கும். அதையும் படித்துக் காட்டுவார். ஆனால் அவருக்கு நகைச்சுவைதான் அதிகம் பிடிக்கும்.
இந்த 4 புத்தகங்கள் பிடிக்கும்
அவருக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்கள் என்பது, ஒன்று ஷேக்ஸ்பியர் (SHAKEPEARE)எழுதிய நாடகங்கள், இரண்டாவது ராபர்ட் பர்ன்ஸ் (ROBBERT BURNS) என்ற கவிஞர் எழுதிய. கவிதைகள், மூன்றாவது. ஜார்ஜ் பேன்கிராப்ட் (GEORGE BANCROFT) அவர்கள் எழுதிய, அமெரிக்காவின் சரித்திரம், நான்காவது எட்கர் ஆலன் போ (EDGAR ALAN POE) என்ற எழுத்தாளர் எழுதிய, கதைகள் மற்றும் கவிதைகள். இவற்றைத்தான் அவர் அதிகமாகப் படித்தார். ஐந்தாவதாதாகவும் ஒன்றினை அவர் அடிக்கடி வாசிப்பார், அதுதான் ஈசாப்பு கதைகள், (AESOP’S STORIES)அவர் பேசும் போது அடிக்கடி மேற்கோளாகக் காட்டுவதும், இந்த கதைகளைத்தான்.
உண்மை பேசிய மனிதர்
“ஹானெஸ்ட் ஆப்” (HONEST AB) என்பதுதான் இவருடைய சுட்டும் பெயராக இருந்தது. "நிக் நேம்" என்று சொல்கிறார்களே அப்படி. அரசியலிலேயே பெரும் பொறுப்பில் இருந்த ஒருவர், இப்படி பெயர் எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. அரசியலுக்கு வரக்கூடியவர்களில் அல்லது அரசியலில் இருப்பவர்கள், இதனையெல்லாம், தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியலிலேயே பெரும் பொறுப்பில் இருந்தால் கூட, தன்னுடைய பெயருக்கு பக்கத்தில் “ஹானெஸ்ஸ்ட்” என்ற பெயரை சம்பாதிப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. அதற்கும் காரணம், அவர் படித்த புத்தகங்கள் என்கிறார்கள்.
திரும்பத் திரும்ப படித்தது "மேக்பெத்"
எப்போதும் கைவசம் வைத்திருந்த புத்தகம், “மேக்பெத்” என்னும் ஷேக்ஸ்பியரின் நாடகம். நேரம் கிடைக்கும்போதெல்லாம். இந்த புத்தகத்தை எடுத்துப் படிப்பார். அதில் உள்ள வசனங்களை மனப்பாடம் செய்வார். பேசும் போது அவற்றை எடுத்துக் காட்டாக சொல்லுவார். புதிய புத்தகங்கள் படிக்க கிடைக்காதபோது, இது போன்ற புத்தகங்களைத் தான் அவர் திரும்பத் திரும்ப வாசிப்பார். அதில் உள்ள வசனங்களை மனப்பாடம் செய்வார்.
புத்தகம் கொடுப்பவர் நண்பர்
எனக்கு தேவையானதை எல்லாம், புத்தகங்களில் இருக்கின்றன. அதனால் தான் நான் புத்தகங்களை அதிகம் நேசிக்கிறேன், வாசிக்கிறேன், எனக்கு யார் புத்தகங்களை வாசிக்கத் தருகிறார்களோ அவர்களை எனது சிறந்த நண்பர்களாக நான் கருதுகிறேன். இதுதான் ஆபிரகாம்லிங்கன், தனக்கும் புத்தகங்களுக்கும் இருந்தத் தொடர்பு பற்றி அவர் அடிக்கடி சொல்லும் கருத்து இது.
பூமி ஞானசூரியன்
1 comment:
ஐயா, புத்தகங்கள் படியுங்கள் என்ற கட்டுரையை முழுமையாகப் படித்தேன். வரிகள் நம் வாழ்வை வடிவமைக்கும் என்பதற்கு உதாரணமாக ஆபிரகாம் லிங்கனின் வாசிப்புப் பழக்கத்தை அருமையாக விவரித்துள்ளீர்கள். எங்கள் வீட்டு நூலகத்தில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது எனது மகள் கைபேசியில் கட்டுண்டு இருப்பாள். இதனால் நான் சத்தம்போட்டுப் படிக்கும் பழக்கத்தை எங்கள் வீட்டில் கடைபிடித்தேன். அதன் விளைவு, என் கைரேகை பதிந்த அனைத்துப் புத்தகத்திலும் என் மகளின் கைரேகையும் மனைவியின் கைரேகையும் பதிய ஆரம்பித்தன. இளைய தலைமுறையை வாசிப்பில் ஈர்க்க வாய்விட்டுப் படித்தால் இயலும் என்பதை இந்நிகழ்வின் மூலம் அறிந்துகொண்டேன். வாசிப்பின் வாசல்கள் திறக்க வாய்விட்டுப் படிப்போம் என்பதை ஆபிரகாம் மூலம் மூத்த மொழியின் நாகரீகத்தை முதுகெலும்பில் தாங்கி நிற்கும் தமிழ் உறவுகளுக்கு மிக அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். தங்கள் எழுத்துப் பணி சிறக்கட்டும்.
=============
பா.பாரதி
கோ குடில்.
மதுரை-07
Post a Comment