பூ நாரைத் திருவிழா
SRI CITY FLAMINGO FESTIVAL
அனைவருக்கும் வணக்கம்!
எப்படி இருக்கிறீர்கள் ?
இன்று முதல் இந்த ஆண்டின் கடிதத்தொடரைத் தொடங்குகிறேன்.
சமீபத்தில் ஆந்திராவில் சிறீசிட்டி (SRI CITY)என்ற இடத்தில் நடந்த பிளமிங்கோ பறவைத் திருவிழா (FLEMINGO FESTIVAL) (18.01.25 - 20.01.25) ம் நடந்தது. அந்தத் திருவிழாவின் தொடர்பாக "பழவேற்காடு ஏரியின் (PULICAT LAKE)பல்லுயிர் வளத்தினை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்" என்பது பற்றிய இருநாள் ஆராய்ச்சியாளர்கள் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள எனது
பெயரை சிபாரிசு செய்துள்ளார். அது எனக்கு உபயோகமாக இருக்கும் என்றார். அவர் கேட்டதும்
நான் சரி என்று சொன்னேன்.
அந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்த
அதிகாரிகளில் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார், நானும் கலந்துகொள்ளுகிறேன் என்று சொன்னேன்.
பழவேற்காடு ஏரி பற்றிய கருத்தரங்கு என்பதனால்
எனக்கு அதில் கலந்து கொள்ள உற்சாகமாக இருந்தது. காரணம் நாங்கள் பழவேற்காடு பகுதியில்
10 ஆண்டுகள் பணி செய்து இருக்கிறோம்.
பழவேற்காடு ஏரிக்கும் பக்கிங்காம் கால்வாய்க்கும்
வங்க கடலுக்கும் இடையே இருந்த 13 தீவு கிராமங்களில் நாங்கள் ஏறத்தாழ 10 ஆண்டுகள் வேலை
பார்த்திருக்கிறோம். அதனால் நானும் சரி என்று சொன்னேன்.
நீங்கள் சரி என்று சொன்னால் நீங்கள் விமானத்தின்
மூலம் கூட வரலாம் அதற்கான தொகையை படித்தொகையை நாங்கள் தந்து விடுகிறோம் என்று சொன்னார்
அந்த அலுவலர்.
நாங்கள் இருக்கும் தெக்குப்பட்டு கிராமத்திலிருந்து
அந்த கருத்தரங்கு நடக்கும் சுமார் 260 கி.மீ. அது ஆந்திரா மாநிலத்தில் நடக்கிறது, சென்னை
சென்று அங்கிருந்து போகலாம் என்று முடிவு செய்து, முதல் நாளே புறப்பட்டோம்.
நான் என் மனைவி, சகோதரர் வெங்கடேசன் மூவரும்
புறப்பட்டோம், எனது இன்னொரு சகோதரர் விஜயகுமார் எங்கள் மஹேந்திரா
ஜீப்பில் ஓட்ட தெக்குபட்டிலிருந்து புறப்பட்டோம், அன்றிரவு என் மகள் வீட்டில் தங்கியிருந்து
அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு சிறீசிட்டி நகரத்தைச் சென்றடைந்தோம்.
சிறீசிட்டி நகரம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட
ஒரு வணிக நகரம்(), இது பெரும் பரப்பு சித்தூர் மாவட்டத்திலும் ஒரு சிறிய பரப்பு நெல்லூர்
மாவட்டத்திலும் பரவியுள்ளது, சென்னையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்தியாவின் ராக்கெட் ஏவுதளம் சத்தீஷ்தாவன் விண்வெளி மையம் சிறீஹரிகோட்டாவில் பழவேற்காடு ஏரிக்கு கிழக்கு பக்கம் அமைந்துள்ளது. இந்த ராக்கெட் ஏவு தளத்திற்கும் சிறீசிட்டிக்கும் ஊடாக அமைந்துள்ளது இந்த பழவேற்காடு ஏரி. இந்த பழவேற்காடு ஏரியுடன் தொடர்புடையதுதான் இந்த பிளமிங்கோ ஃபெஸ்டிவல் என்னும் பூநாரைத் திருவிழா. ஃபிளமிங்கோவின் தமிழ்ப் பெயர்தான் பூ நாரை என்பது.
ஆண்டுதோறும் ஆந்திர மாநிலத்தில் பழவேற்காடு ஏரிப்பகுதியில் பிளமிங்கோ ஃபெஸ்டிவல் கொண்டாடுகிறார்கள்.
தென்அமெரிக்கா, வட அமெரிக்கா, மிடில்
ஈஸ்ட் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இந்த பிளமிங்கோ பறவைகளின்
தாய் வீடு அல்லது தாய்
நாடு, அல்லது தாய் மண் என்று
சொல்லலாம்.
ஃபிளமிங்கோ பறவை வகைகளில் ஐந்து
வகைகள் உண்டு. அவை கிரேட்டர் பிளமிங்கோ,
லெஸ்சர் ஃபிளமிங்கோ, ஆண்டியன் ஃபிளமிங்கோ, கரிபியன் ஃபிளமிங்கோ மற்றும் ஜேம்ஸ் ஃபிளமிங்கோ.
பிளமிங்கோ பறவைகள் ஒரு வித்தியாசமான ஊதா
நிறத்தில் இருக்கும். சிவப்பு நிறம் மட்டும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஆனால் இதனை பின்க் என்றுதான்
சொல்லுகிறார்கள் ஆங்கிலத்தில்.அதன் சிறகுகளுக்கு எப்படி
வண்ணம் கிடைக்கிறது என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
அது சாப்பிடும் உணவுப்
பொருட்களில் இருந்து அதற்கு அந்த
சிறப்பு நிறம் கிடைக்கிறது. அப்படி என்னதான் அவை சாப்பிடுகின்றன.முக்கியமாக
அவை சாப்பிடுவது பாசி இனங்கள், இறால்
வகைகள்,மற்றும் சிவப்பு நிறத்தில் உடல் நிறம் கொண்ட உயிரினங்கள்.இவற்றில் இருந்து தான் இந்த வித்தியாசமான
ஊதா நிறம் அதற்கு நிறம் கிடைக்கிறது என்கிறார்கள்.
இந்தப் பறவைகள் முட்டையிலிருந்து வெளியேறும் போது சாம்பல் வண்ணமாக
தான் இருக்கும். அவை இப்படி சிவப்பு
வண்ணம் உடைய இறைகளைத் தொடர்ந்து
இரண்டு ஆண்டுகள் உண்பதால் தான் அதற்கு இந்த
நிறம் படிப்படியாக
கிடைக்கிறது. அதற்குப் பின்னர் தான் இந்த அழகிய
கவர்ச்சிகரமான ஊதா நிறம்
அந்த பறவைகளுக்கு கிடைக்கிறது.
இதன் அறிவியல் பெயர் போயெனிகோப்டெரஸ் ரோசியஸ் (Phoyenikopterous roseus), தனியாக வசிக்காமல் எப்போதும் ஆயிரக்கணக்கான பறவைகளுடன் வசிக்கும் ஒரு சமூகப்பறவை. இப்போது இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்தரங்கு பற்றி பார்க்கலாம்.
இந்த பிளமிங்கோ ஃபெஸ்டிவல்
அதாவது "பூ நாரை திருவிழாவை
ஒட்டி ஏற்பாடு செய்த இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்தரங்கை ஏற்பாடு
செய்தது பி என் ஹெச்
எஸ் (BNHS – BOMBAY NATURAL
HISTORY SOCIETY) என்ற நிறுவனம்.
இதனைத் தமிழில் பம்பாய் இயற்கை சரித்திர கழகம் என்று சொல்லலாம். இதற்கு மிகப்பெரிய சரித்திரப் பின்புலம் உண்டு. இதனைத் தொடங்கி 143 ஆண்டுகள் ஆகின்றன, இதனைத் தொடங்கியவர் ஒரு பிரிட்டிஷ்காரர். இயற்கை
வளங்களை பாதுகாத்தல் பராமரித்தல் மேம்படுத்துதல் ஆகிய பணிகளில் யுஎன்டிபி(UNITED
NATIONS DEVELOPMENT PROGRAMME), யுஎன்இபி(UNITED NATIONS ENVIRONMENT PROGRAMME),
என்பிபி (NATIONAL BIO DIVERSITY BOARD) மற்றும்
ராம்சார் ஆகிய சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புடையது இந்த பிஎன்எச்எஸ் நிறுவனம்.
2025 ஆம் ஆண்டின் பிளமிங்கோ
திருவிழாவினை ஒட்டி ஏற்பாடு செய்துள்ள இந்த ஆராய்ச்சியாளர்கள் கருத்தரங்கை டி
என் ஹெச் எஸ் மூலமாக
ஆந்திர அரசு ஏற்பாடு செய்திருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திருவிழாவை ஆந்திர பிரதேசத்தில் நெல்லூர் மாவட்டத்தில் குறிப்பாக நிலா பட்டு, சூலூர்பேட்டை,
அத்திகாணிதிப்பா, பிவி பாலம், ஆகிய
இடங்களில் விசேஷமாக விமரிசையாக
சிறப்பாக சீராகக்
கொண்டாடுகிறார்கள்.
குறிப்பாக பழவேற்காடு ஏரியை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த திருவிழா,
காரணம் இந்த ஏரியை தேடித்தான்
பல ஆயிரக்கணக்கான பறவைகள் சில
ஆயிரக்கணக்கான மைல்கள் தனியாகப் பறந்து வந்து இந்த ஏரியில் சில மாதங்கள் மட்டும் தங்கி,
இணைசேர்ந்து முட்டையிட்டு குஞ்சுபொரித்து குடும்பத்தோடு
பறந்து போகின்றன.
இந்த பழவேற்காடு ஏரியின்
கரையில் சுமார் 52 கிராமங்கள் இருக்கின்றன, இவற்றில் பெரும்பாலானவை மீனவ கிராமங்கள், இந்த
கிராமங்கள் அனைத்திற்கும் இந்த பழவேற்காடு ஏரி
தான் வாழ்வாதாரமாக அமைந்துள்ளது, இந்த கிராமங்களில் வசிப்பவர்கள்
மீனவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை,
இங்கு வசிக்கும் எல்லா சமூகத்தினரும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவில் இருக்கும் உப்பு நீர் ஏரிகளில் ஒரிசாவில்
உள்ள, சில்கா ஏரிக்கு அடுத்தபடியாக பெரிய உப்பு நீர் ஏரி என்பது
பழவேற்காடு ஏரி தான்.
இந்த ஏரியில் இருக்கும்
தண்ணீரில் மொத்த கரையும் உப்புகள் என்று பார்த்தால் மழைக்காலத்தில் பூஜ்ஜியமாக இருக்கும்.மழைக்காலத்திற்கு முன்னதாக அல்லது கோடை காலத்தில் இதனுடைய
மொத்த உப்பு கரைந்திருக்கும் அளவு 52 பிபிஎம், ஆக இருக்கும் என்று
கூறுகிறார்கள்.
இந்தப் பழவேற்காடு ஏரி 759 சதுர கிலோமீட்டர் அல்லது 75900 எக்டர் பரப்பளவு கொண்டது,கிழக்கு கரையோரம் கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் நீளத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது, இந்த ஏரியின் அதிகபட்சமான குறுக்களவு 1 முதல் 17 கிலோமீட்டர், இந்த ஏரி தோராயமாக 86சதவீதம் ஆந்திர பிரதேசத்திலும் மீதமுள்ள 16% தமிழ்நாட்டிலும் அமைந்துள்ளது.
இந்த ஃபிளமிங்கோ திருவிழா பற்றி, ஃபிளமிங்கோபற்றி,
எங்கு நடைபெறுகிறது ? அதற்கும் பழவேற்காடு ஏரிக்கும் இதற்கும் என்ன தொடர்பு
? சிறீசிட்டி வியாபார நகரம் எங்கு உள்ளது ? கிரியா பல்கலைக்கழகம், பம்பாய் இயற்கை சரித்திர
கழகம் எனும் டி என் எச் எஸ் பற்றியும் பார்த்தோம்.
எனது அடுத்த கடிதத்தில் ஆராய்ச்சியாளர்களின்
கருத்தரங்கு மற்றும், பழவேற்காடு ஏரியில் நிலவும் சூழல் பிரச்சினைகள் பற்றியும் அதில்
நான் பேசியது பற்றியும் அடுத்த கடிதத்தில் பார்க்கலாம்.
1 comment:
Sri City femmingo திருவிழாவை பற்றிய செய்திகள் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் பட்டாசு வெடிப்பது இல்லை என்று கேள்வி பட்டேன். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். வெறி interesting article. Waiting for next Letter.
Post a Comment