கடிதம்
5
30.01.25
புத்தகங்களை படியுங்கள்
என்ன புத்தகங்களை
படித்து
மாவீரன்ஆனார்
அலெக்ஸாண்டர் ?
WHICH BOOKS MADE ALEXANDER A WARRIER ?
மாவீரன்
அலெக்சாண்டர் உலகில் யாராலும் வெல்ல முடியாத மாவீரன் ஆனது புத்தகங்கள் படித்ததனால்
என்பது நமக்கு தெரியாது, ஆனால் அதுதான் உண்மை.
அலெக்சாண்டர்
தூங்கும்போது கூட தலையணைக்கு அடியில்
ஹோமரின் போர்க் காவியநூல் “இலியட்” இல்லை என்றால் அவனுக்கு தூக்கம் பிடிக்காது. நமக்கெல்லாம் தூக்கம் வந்தால் புத்தகம்
பிடிக்காது. இன்னும் சிலர் தலையணைக்குப் பதிலாக புத்தகத்தைப் பயன்படுத்துவார்கள்.
அலெக்ஸாண்டர்
போருக்கு செல்லும்போது தன்னோடு வைத்திருக்க விரும்பியவை மூன்று, அவற்றில் ஒன்று, அவன் உயிராக போற்றி
பாதுகாத்து வந்த "இலியட்", இரண்டாவது ஒரு சிறு குத்து
வாள் பாதுகாப்புக்கு, மூன்றாவது அவனுடைய குதிரை, பூசி பாலஸ், அது
குதிரை மட்டுமல்ல அவன் நண்பன்.
அலெக்சாண்டர் விரும்பிப்
படித்தவை தத்துவ புத்தகங்கள், இரண்டாவதாக சரித்திர புத்தகங்கள், அவை மட்டுமல்ல, இலக்கிய
புத்தகங்களும் கூட.
மாவீரன் அலெக்சாண்டருக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவனுடைய ஆசிரியர், குருநாதர், அரிஸ்டாட்டில், அவர் பிளாட்டோவின் மாணவர், பிளாட்டோ சாக்ரடீசின் மாணவர்.
ARISTOTLE THE TEACHER OF ALEXANDER |
மேற்கத்திய
நாட்டு தத்துவங்களின் தந்தை என்று கருதப்பட்டவர்களில் ஒருவர் அலெக்சாண்டரின் வாத்தியார் அரிஸ்டாட்டில். உலகத்திலேயே முதன் முலாக ஆசிரியர்
என்று அழைக்கப்பட்டவரும் அரிஸ்டாட்டில்தான்.
அலெக்சாண்டருக்கு தன் வாழ் நாள் முழுக்க திரும்பத்திரும்ப படித்த ஒரே நூல் ஹோமர் எழுதிய “இலியட்” என்ற போர்க்காவியம்தான். அது ஒரு கவிதைக் களஞ்சியம், ஆக அலக்சாண்டர் ஒரு கவிதைக் காதலனும் கூட.
HOMER AUTHOR OF ILLIAD GREAT EPIC |
அந்த
“இலியட்” என்பது டிராய் மற்றும்
கிரேக்கர்களுக்கிடையே நடந்த ஒரு போரை வர்ணிக்கும்
போர்ப்பரணி, அந்த நூலில் வரும்
காவிய நாயகன் அக்கிலஸ்
என்பவன். கலிங்கத்துப்பரணி மாதிரி இது கிரேக்கப்பரணி.
அலெக்சாண்டரைக்
கவர்ந்த மாவீரன் தான் அக்கிலஸ்.
அலெக்சாண்டர்
ஹோமரின் இலியட் நூலை திரும்பத் திரும்ப
படித்ததனால்,இலியட் நூலின் நாயகன் மாவீரன் அக்கிலசாகவே
தன்னை மாற்றிக் கொண்டான்.
அலெக்சாண்டருக்கு
"இலியட்" நூலை அறிமுகம் செய்த
நாளிலிருந்து அலெக்சாண்டர் ஒருநாளும் அந்த நூலை விட்டு
பிரியவில்லை. சிலர் எப்போதும் ஒரு பெரிய புத்தகத்தை
வருஷக்கணக்கில் கையில் வைத்துக்கொண்டே அலைந்து கொண்டிருப்பார்கள். அலெக்சாண்டர் அப்படியில்லை.
ஒரு
மாபெரும் தலைவனாக உருவாவது எப்படி என்பதை அந்த நூல் அவனுக்கு
சொல்லித் தந்தது, மலைபோன்ற ஆபத்து வரினும் அதனை மதிநுட்பத்தால் பனிபோல
எதிர்கொள்வது எப்படி என்னும் சுலபமான சூத்திரத்தைச்
சொல்லித் தந்தது. பிறர் மனதைப் புரிந்து கொண்டு அவர்கள் மனங்கோணாமல்
பழகும் தன்மையை அது சொல்லித்தந்தது.
அலெக்சாண்டர்
தன்னை அக்கிலேஷ் என்ற மாவீரனின் மறு
வடிவமாக தன்னை செதுக்கிக் கொண்டான். போர்க்களத்தில் எதிரிகளை சிதறி ஓடச்செய்யும் சூட்சுமம்மிக்க
போர்க்கலையை அக்கிலசிடம் சுவீகரித்துக் கொண்டான்.
தனது
மாபெரும் சாம்ராஜ்ய கனவை நனவாக்க அலெக்ஸாண்டருக்கு
உதவியாக இருந்தது இலியட் என்னும் அந்த காவிய நூல்.
இலியட் நூலை அலெக்ஸாண்டர் படித்த போது, இதர நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டியது. அதனால் அவன் சரித்திரம் தத்துவம் மற்றும் இலக்கியம் குறித்த நூல்களையும் தேடித்தேடி படித்தான்.
XENOPHON AUTHOR OF ANABASIS |
கிரேக்கர்கள்
மற்றும் பெர்சியன் போர்கள், பெரும் யுத்தங்கள், குறித்த
புத்தகங்கள், மகோன்னதமான மனிதர்களின்
மனநலன்கள் மற்றும் குணநலன்கள் குறித்த
புத்தகங்கள், பெர்சிய அரசின் அரசாட்சி முறைகள், ராணுவ தலைமை மற்றும் பாரசீகப் போர்குறித்து சீனோபோன் எழுதிய அன்பேசிஸ் ஆகிய புத்தகங்களை எல்லாம்
அலெக்ஸாண்டர் படித்து தன்னை வளர்த்துக் கொண்டான். போர் என்ற பெயரில் எந்தப் புத்தகம் கிடைத்தாலும்
அதனை கரைத்துக் குடித்தான்.
கிரேக்க
சரித்திரத்தின் காவிய வீரர்கள் ஹிராகிள்ஸ் மற்றும் பெர்சியஸ் ஆகியோரின் சரித்திர நூல்களை திரும்பத் திரும்பப் படிப்பதில் ஆர்வம் காட்டினான் அலெக்சாண்டர்.
அலெக்சாண்டர்
பொழுதுபோக்கிற்காக புத்தகங்களை வாசிக்கவில்லை சுய முன்னேற்றத்திற்காக புத்தகங்களை வாசித்தார்.
அதற்கான தத்துவார்த்த பலம் வேண்டும் என
கருதி அதற்காக படித்தார்.அதற்கான சரித்திரபூர்வமான விழிப்புணர்வு வேண்டி புத்தகங்களை படித்தார். உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை எப்படி உருவாக்குவது என்பதை தெரிந்து கொள்ளவும் அலெக்சாண்டர் புத்தகங்களை படித்தார். புத்தகங்கள் அலெக்சாண்டருக்கு தோல்விகளை
தோற்கடிக்கும் வழிகளை சொல்லித்தந்தது.
கண்தெரியாத,
கண்பார்வை இல்லாத கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய இலியட் என்னும் நூல்தான் அலெக்சாண்டரின்
வெற்றிக்கண்களை திறந்து வைத்தது.
இந்த
கடிதம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் சாம்ராஜ்ய கனவுகளை நனவாக்க புத்தகங்களை படியுங்கள்.
பூமி
ஞானசூரியன்
No comments:
Post a Comment