Tuesday, September 24, 2024

CTTE COLLEGE LAUNCHES A BOOK ON TAMIL RIVERS - மகளிர் கல்லூரி வெளியிடும் தமிழ் ஆறுகள் நூல்

STORY OF 100 RIVERS
மகளிர் கல்லூரி வெளியிடும் தமிழ் ஆறுகள் நூல்

CTTE COLLEGE LAUNCHES A BOOK ON TAMIL RIVERS

AARUM URUM

எழுதியவர் 
பூமி ஞானசூரியன்

நூலின் 15  சிறப்புகள்

1. தமிழகத்தின் 100 ஆறுகளை பதிவு செய்து வெளிவரும் முதல் நூல் இது. 

2.ஆறுகள் பிறக்குமிடம், சங்கமமாகும் இடம், பயன் தரும் விதம், அவற்றின் துணை ஆறுகள், கிளை ஆறுகள், அதன் பூர்வீகம், சரித்திரம், பூகோளம் அனைத்தையும் தொகுத்து தகவல் சொல்லும் ஆறுகளின் களஞ்சியம்.

3. “ஆறுகள், நகர்ப்புறங்களில் ஓடும் சமயத்தில், அதன் குப்பைகள் மற்றும் சாக்கடையை சேந்தியபடி  எப்படி அதன் நீர் மாசுபடுகிறது. “

4..“அறிவியல் ரீதியாக பிராணிகள் மற்றும் தாவரங்களுக்கு தாகம் தீர்க்காமல் எப்படி அது இறந்து போன ஆறுகளாக மாறுகின்றன ? “

5. “மாசடைவதால், பயன் தராமல் இறந்து போகும் ஆறுகளுக்கு மீண்டும் உயிர் தருவது எப்படி? “

6.“அப்படி இறந்து போன லண்டன் தேம்ஸ் ஆற்றினை எப்படி மீட்டெடுத்தார்கள் “?,

FIRST BOOK ON
100 RIVERS

இந்த  தகவல்களை எல்லாம்  சொல்லும் நூல் இது.

7.“நகரக் கட்டிடங்களில் வடியும் சாக்கடை நீரினை சுத்தம் செய்யாமல் ஆற்றில் விடுவதை எப்படித் தடுக்கலாம் ?”

8. “தடுத்த பின்னர் அதனை ஆற்றில் வடிப்பதன் மூலம் ஆறுகளை மீண்டும் எப்படி உயிர்ப்பிக்க முடியும் ?

8. எப்படி லண்டன் தேம்ஸ்  நதியை. உலகின் மிக சுத்தமான ஆறாக மாற்றினார்கள் ?”

இப்படி தேம்ஸ் நதியின் சரித்திரம் சொல்லும் முதல் நூல் இது.

9.“100 ஆண்டுகள் ஓடாத ஆர்வார் ஆறு உட்பட ஆறு ஆறுகளை  ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜேந்திர சிங் எப்படி. மக்கள் பங்கேற்புடன்  ஓட வைத்துள்ளார் ? “

10. அப்படி நாமும் தமிழக ஆறுகளை ஓட வைக்க முடியும் என்னும் நம்பிக்கை தரும் ஒப்பற்ற நூல் இது.

11. உலகின் மிக நீளமான செயற்கை ஆறு  சைனாவில் கிராண்ட் கெனால் ஆறு, அதன் நீளம் 1776 கி.மீ., இரண்டாவது நீளமான செயற்கை ஆறு ரஷ்யாவின் காரகம் ஆறு, அதன் நீளம் 1375 கி.மீ., மூன்றாவது ஆறு, 814 கி.மீ. ஓடும் ரஷ்யாவின் “சைமா கனால்” என்னும் ஆறு, நான்காவது நீளமான செயற்கை ஆறு நம்ம ஊரின் பக்கிங்காம் கெனால் இதன் நீளம் 765 கி.மீ.

12.உலகின் சுத்தமான 10 ஆறுகளில் முதல் இடத்தை பிடிப்பது லண்டன் தேம்ஸ் ஆறு. அந்த 10 ஆறுகளில் ஒன்றுதான். நமது டாவ்கி உம்மன் காட் ஆறு.

இந்த ஆறு ஓடும் இடம் மேகாலயாவின் ‘டாவ்கி’ என்னுமிடம். இந்த அரிய தகவலைத் தரும்  நூல் இது.

13.ஆசியாவிலேயே முக மிக உயரமான நீர் பாலம் உடைய ஆறு பரலியாறு. இது மேற்கு தொடர்ச்சி மலைச் சரிவில் மகேந்திரகிரி மலைகளில் உற்பத்தியாகும். கன்னியாகுமரி மாவட்ட ஆறு இது. இந்த புதிய தகவலை சொல்லும்  நூல் இது.

14.தண்ணீரில் நடந்து செல்லும் பிராணிகளை உடைய அமேசான் ஆறு உட்பட 15 அழகான சர்வதேச ஆறுகளைப் பற்றிய செய்திகளை தொகுத்து சொல்லும் சொல்லும் நூல் இந்த ஆறும் ஊரும்.

15. இன்னும் நூற்றுக்கணக்கான பல புதிய அரிய செய்திகளின் சிறப்பு தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்த ஆறும் ஊரும் புத்தகம்.

16. 252 பக்கங்கள் உடன் வெளிவந்துள்ள இந்த நூலின் விலை ரூபாய் 300. இந்த நூலைப் பெற விரும்புவோர். அன்புகூர்ந்து கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

பூமி ஞானசூரியன்

 

 

 

 

  

1 comment:

Anonymous said...

ஐயா நூலை பெறுவதற்கான முகவரியோ அல்லது கைபேசி எண்ணோ அளிக்கவும்.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...