Wednesday, September 4, 2024

SILVER FALLS குதிரைவால்

Your article reminded me way back 59 years. While I was in Forest college we have visited coniferous forest on Himalayas. I had good occasion of serving in Kodaikanal and Ooty experienced locality factors of high elevation forestry particularly ever green forest. Your description very well tallied . Worth reading this article. The author has taken lot of pain and explained very vividly .Wish him all the best

V.Sambasivam IFS (Retd)
Cleveland. USA

I am much thankful to you for your valuable comments. I know you have lot more practical experience on the above subjects like Coniferous and Rain Forests. I believe these information  may enlighten any person who is interested in conservation of Nature.

- BHUMII GNANASOORIAN

குதிரைவால்


SILVER FALLS

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம். 

எப்படி இருக்கிறீர்கள் ? நலமா ? 

இந்த கடிதத்தில் உங்களுக்கு ஒரு நீர்வீழ்ச்சி பற்றி சொல்லப் போகிறேன்

இந்த நீர்வீழ்ச்சியின் பெயர் எனக்கு கொடைக்கானல் நீர்வீழ்ச்சியை ஞாபகப் படுத்துகிறது.

காரணம் இந்த நீர்வீழ்ச்சியின் பெயர்சில்வர் ஃபால்ஸ்’ (SILVER FALLS).

கொடைக்கானலில் பெருமாள் மலையில் இருக்கும் நீர்வீழ்ச்சியின் பெயரும் சில்வர் ஃபால்ஸ் தான்.

இந்த சில்வர் பால்ஸ் நீர்வீழ்ச்சி அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ளது 

நாங்கள், போர்ட்லேண்ட் (PORTLAND)என்ற இடத்திலிருந்து அங்கு போனோம்.  அங்கு போகும் வழி எங்கும் விவசாய நிலங்கள் அதிகம் இருந்தன. 

அது அங்குள்ள  மிகப்பெரிய, மாநிலப் பூங்காவின் ஒரு பகுதியாக  உள்ளது இந்த சில்வர் ஃபால்ஸ். 

இதன் அருகாமையில் உள்ள நகரம் சில்வர்டன்(SILVERTON) என்பது. இந்த சில்வர்ட்டன் நகரம் நீர்வீழ்ச்சிகளை குத்தகை எடுத்துள்ள நகரம் என்று சொல்லவேண்டும். 

காரணம் இந்த சில்வர்ஃபால்ஸ் என்பது ஒரேஒரு  நீர்வீழ்ச்சி அல்ல. அந்த சில்வெர்டன் போனால் குறைந்தது 10 நீர்வீழ்ச்சிகளைப் பார்க்கலாம்.

அதன் பெயர்களைச்சொல்லுகிறேன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் பார்த்துவிட்டு வாருங்கள். 

இந்த மாநில பூங்காவின் பரப்பு மட்டும் 9 ஆயிரம் ஏக்கர்.

CAR PARKING

இது ஒரு தேசிய பூங்காவின் பகுதியாக இருப்பதால் நீர்வீழ்ச்சியின் முனையிலேயே சென்று இறங்குமாறு அங்கு கார் நிறுத்தம் இருந்தது. 

அங்கு போய் இறங்கிய பின்னால்தான் எனக்கு தெரியும், அது ஒரு மாநில பூங்காவின் ஒரு அங்கம் என்று.

அழகான இடம் சுற்றிலும் பல வகையான மரங்கள் செடிகள் கொடிகள் இருந்தன. 

அங்கிருந்து ஐந்து நிமிடம் நடந்தால் போதும் அந்த நீர்வீழ்ச்சி கொட்டுகின்ற உச்சி பகுதிக்கு போகலாம். 

அப்படியே நாங்கள் போனோம். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல் போனால் ஆபத்து என்று அங்கு போர்டு வைத்திருந்தார்கள். 

 அந்த இடத்தில் நின்று பார்த்த போதே தெரிந்தது. அந்த மலையின் உச்சியில் இருந்து ஒரு வெள்ளை நிற ரிப்பன் மாதிரி அடிவாரம் வரையில் நேர்கோடு போட்டது போல, அந்த நீர்வீழ்ச்சி இறங்கிக் கொண்டிருந்தது. 

நீர்வீழ்ச்சிகளை பல வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.

மலைமுகட்டிலிருந்து அதன் உச்சியிலிருந்து தாரையாக நீர் இறங்கும்போது அதன் வடிவமைப்பைப் பொறுத்து அதற்குப் பெயர் வைத்திருக்கிறர்கள்.

AWESOME SILVER FALLS

நமக்குத் தெரிந்த நீர்வீழ்ச்சிகளில் உதாரணமாகக் கொண்டு அதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மேலிருந்து கீழ் வரை ஒரு நீர்வீழ்ச்சியின் குறுக்களவு ஒரே அளவாக இருப்பது ஒரு வகை.

சில நீர்வீழ்ச்சிகள் மலையிலிருந்து இறங்கும் இடத்தில் அதன் நகரம் குறைவாக இருக்கும். அதன் அடிப்பகுதியில் அகலம் அதிகமாக இருக்கும். அதனை குதிரைவால் நீர்வீழ்ச்சி என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் சில்வர் ஃபால்ஸ் ஒரு குதிரை வால்  நீர்வீழ்ச்சி(HORSE TAIL FALLS). 

இந்த ஓரிகான் மாநிலப் பூங்கா (OREGON STATE PARK) ஒன்பதாயிரம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டது இது. இந்த மாநிலத்தின் மிகப்பெரிய பூங்கா.

ஒரு சிறிய ஓடையாகச் சென்று மலை முகட்டிலிருந்து இந்த நீர் வீழ்ச்சி வெண்ணிற நூல் ஏணி போல இறங்குகிறது.

TEN FALLS TRAIL

இந்த சில்வர்ஃபால்ஸ் என்னும் இந்த நீர்வீழ்ச்சியின் கீழிருந்து 7.2 மைல் தொலைவிற்கு நடைபாதை ஒன்று உள்ளது 

இந்த நடைபாதை வழியாக நடந்து சென்றால் 10 மிக அழகிய  நீர்வீழ்ச்சிகளைப் பார்க்கலாம். 

சவுத் ஃபால்ஸ்,  லோயர் சவுத் ஃபால்ஸ்,

TRAIL GOES BEHIND
THE FALLS


லோயர் நார்த் ஃபால்ஸ்,  டபுள் பால்ஸ், ட்ராக் ஃபால்ஸ்,  மிடில் நார்த் ஃபால்ஸ், வின்டர் ஃபால்ஸ், டுவின் ஃபால்ஸ், நார்த் ஃபால்ஸ்,  அப்பர் நார்த்  ஃபால்ஸ் – பத்து இருக்கா ? 

இன்னும் கூட அங்கு ஐந்தாரு நீர்வீழ்ச்சிகள் இருப்பதாக தெரிகிறது. இந்த பகுதியில் ஏகப்பட்ட நீர்வீழ்ச்சிகள் இருப்பதால் இதன் தட்ப வெப்ப நிலை மற்ற இடங்களை விட எப்போதும் குளிர்ச்சியாகவும்   ஈரமாகவும் உள்ளது.

இந்த நீர்வீழ்ச்சிகளை சுற்றி உள்ள பகுதிகளில் பழமையான மரங்கள் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இருக்கின்றன. ஃபிர்(DOUGLAS FIR), மேப்பிள்(BIG LEAF MAPLE, VINE MAPLE), ஒக்(OREGON WHITE OAK), லார்ச்(WESTERN LARCH) மற்றும் பைன் மரங்கள்(WOLLEMI PINES) இங்கு அதிகம் உள்ளன.

மரங்களில் ஃபிர் மரங்கள் 300 அடிக்கு மேல் உயரமாக வளரும்.அதனை டவுக்ளஸ் ஃபிர் என்பார்கள்.

பிக் லீஃப் மேப்பிள் மரத்தின் இலை அகலமாக இருக்கும். பார்த்தாலே தெரியும். மரம் கிட்ட தட்ட 120 அடிகள் வளரும். 

CCC BUILDING 1

இன்னொரு மேப்பிள் கொடி மாதிரி வளரும். உயரம் 25 அடி வளரும். பக்கவாட்டில 20 அடி அகன்று வளரும். பழங்குடி மக்கள், அம்பு செய்ய(MAKING BOWS), பனிச்செருப்பு செய்ய(SNOW SHOES), தொட்டில் செய்ய(CRADLE FRAMES), விறகாக, சமையல் பாத்திரங்கள் செய்ய(COOKING BOWLS) என்று பயன்படுத்துவார்கள்.

CCC BUILDING 2

இந்த பூங்காவில் சில்வர் நீர் வீழ்ச்சிக்கு அருகில் உள்ள பூங்காவில் இருக்கும் கட்டிடங்கள் வரலாற்று சிறப்புமிக்கவை.

1929 ல் கிரேட் டிப்ரஷன் என்ற காலகட்டத்தில் அமெரிக்க பொருளாதரம் சரிந்தது. அதனை சரி செய்ய ‘நியூ டீல்’ என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள்.  அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிவிலியன் கன்சர்வேஷன் கார்ப்ஸ் (CIVIL CONSERVATION CORPS) என்ற இளைஞர் படையை  உருவாக்கினார்கள். அந்த இளைஞர்களால்  கட்டப்பட்ட கட்டிடங்கள் தான் இங்கு இருப்பவை.

சிரமம் பாராமல் ஒரு 7.2 மைல் தூரம் நடந்தால் குறைந்த பட்சம் 10 நீர்வீழ்ச்சிகளைப் பார்க்கலாம். நடந்த காலுக்கு சீதேவி. 

சிரமம் பாராமல் ஒரு 7.2 மைல் தூரம் நடந்தால் குறைந்த பட்சம் 10 நீர்வீழ்ச்சிகளைப் பார்க்கலாம்நடந்த காலுக்கு சீதேவி என்பார்கள்.எனது மகன் மறுமகள் மற்றும் பேரன்கள் இருவர் நீர்வீழ்ச்சிக்கு பின்னால் போகும் நடைப் பாதையில் நடந்து சென்று அதன் அழகை ரசித்துவிட்டு வந்தார்கள்

நானும் என் மனைவியும் அந்த சி சி சி இளைஞர்கள் கட்டியிருந்த கட்டிடத்திற்கு முன்னால் இருந்த மரப்பென்ச்சில் உட்கார்ந்து ‘நியூ டீல்’ பற்றியும் நம்ம ஊர் 100 நாள் திட்டம் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். கொடிப்பாதையில் நடந்து போனவர்கள் திரும்பி வந்ததும் நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். 

அடுத்தக் கடிததில் சந்திப்போம், நன்றி வணக்கம் !


 

 

 

 

 


1 comment:

Anonymous said...

Your way of description of silver falls in the National park is remarkable and also indices to visit that area. I will include this in my bucket list and definitely visit this place in my next trip to usa. Your write up reminded me about Silver cascade of Kodaikanal. Just opposite to silver cascade in Kodaikanal the forest look very sparse and my boss suggested to create pine forest and improve aesthetic view of the locality. I planted pinus Paula during 1980 and the trees have grown well and changed the environment.
V.Sambasivam IFS (Retd)
Washington DC, USA

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...