சந்திக்கலாமா ?
SEA LION CAVE
இந்தக் கடிதத்தில் சிங்கங்களை எப்படி அதன் குகையில் சந்திப்பது என்பது பற்றி சொல்லப் போகிறேன்.
இந்த கடிதத்தை படித்தால் நீங்கள் தனியாகவே சென்று சிங்கங்களை அதன் குகையிலேயே சந்திக்கலாம்.
SEA LION RULES THE SEA |
ஒரு சின்ன திருத்தம் ! சிங்கம் என்பதற்கு முன்னால் கடல் என்று போட்டுக் கொள்ளவேண்டும். அதாவது கடல் சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதுபற்றி சொல்லப்போகிறேன்.
முதலில் கடல் சிங்கங்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
காட்டுச் சிங்கங்கள் ஃபெலிடே (FELIDAE) என்னும் பூனை வகையைச் சேர்ந்தது. சிங்கங்களின் சொந்த ஊர் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா.
அகன்ற மார்பு, வலிமையான உடல்தசை, வட்டமான முகம், தலை மற்றும் முகத்தைச் சுற்றிலும் வளர்ந்து தொங்கும் பிடரி மயிர், காடுகளில் உள்ள அனைத்து விலங்குகளையும் மிரட்டும் பண்புகள் இதுதான் காட்டுச் சிங்கம்.
இதன் அறிவியல் பெயர் பேன்தீரா லியோ (PANTHERA LEO). இதன் உடல் எடை 150 முதல் 250 கிலோ வரை இருக்கும் இதன் சராசரி வயது 10 முதல் 14 ஆண்டுகள்.
SEA LIONS HAVE A STRONG BODY |
கடல் சிங்கங்கள் கடலை ஆளுகின்றன. காட்டுச் சிங்கங்கள் காட்டினை ஆளுகின்றன. அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் சுறாவும் திமிங்கிலங்களும் உள்ள கடலை கடல் சிங்கம் ஆள முடியும்.
கடல் சிங்கங்களும் வலிமையான உறுதியான உடலை உடையவை இரண்டு சிங்கங்களின் தோற்றமும் ஏறத்தாழ ஒரே மாதிரி தான்
அதற்கும் பிடரி மயிர் உண்டு இதற்கும் உண்டு. அதுவும் கர்ஜிக்கும், இதுவும் கர்ஜிக்கும். அதுவும் வேட்டை ஆடும், இதுவும் ஆடும் வேட்டை
ஆனா முதல் அக்கேனா வரை அனைத்து கடல் பிராணிகளையும் ஒன்று விடாமல் சாப்பிட்டு ஏப்பம் விடுவதில் முன்னணியில் இருப்பவை கடல் சிங்கங்கள் தான்..
கடல் சிங்கங்கள் இந்திய கடல்களுக்கு சொந்தமானவை அல்ல. பசுபிக் கடல் தென் அமெரிக்கா கடல் பகுதி மற்றும் நியூசிலாந்து பகுதி கடல்களை ஆட்சி செய்கின்றன.
கடல் சிங்கங்களின் எடை அதிகபட்சமாக 1250 கிலோ வரை இருக்கும். மொத்தம் ஏழு வகையான கடல் சிங்கங்கள் உலகில் உள்ளன.
அவை கலிபோர்னியா சிலயன்
ஸ்டெல்லார் சிலயன்
சவுத் அமெரிக்கன் சிலயன்
ஆஸ்திரேலியன் சிலை
நியூசிலாந்து சி லயன்
காலா பேகா சிலயன்
ஜப்பானிய சீ லைன் ஆகியவை.
இப்போது நாம் ஒரிகான்’ன் ஃபிளாரன்ஸ் நகரில் இருக்கும் சிலயன் கேவ் என்னும் கடல் சிங்கங்களின் குகையினைப் பார்க்கலாம்.
கடல் சிங்கங்கள் பெரும்பாலும் கடற்கரை ஓரங்கள் தீவுகள் ஆகியவற்றில் வசிக்கின்றன இவை நீரிலும் நிலத்திலும் வசிக்கக் கூடியவை. நிலத்திலும் நீரிலும் வசிக்கும் போது அதற்கு ஏற்றது போல தனது உடல் வெப்பத்தை அவற்றால் பராமரித்துக்கொள்ள முடியும்.\
கடல் கொந்தளிப்பு, புயல், சூறாவளி, போன்ற கடுமையான இயற்கை சீற்றங்கள் இருந்தால் தாய் கடல்சிங்கங்கள், தன் குட்டிகளை அருகமைந்த தீவுகள், காடுகள் ஆகிய இடங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாய் வளர்க்கின்றன.
குட்டிகள் வளர்ந்ததும் மீண்டும் அவற்றை கடலுக்கு எடுத்து வருகின்றன
வெரோனிகா பிரான்ஸ் என்னும் பிஎச்டி படிக்கும் மாணவர் எழுதிய “நியூசிலாந்து ஸி லயன்ஸ்” எனும் கட்டுரையிலிருந்து இந்தத் தகவல்களை நான் திரட்டினேன்.
சில பறவைகள் அல்லது சில பிராணிகள் நகர்ப்புறங்களில் பிரச்சனையாக இருக்கின்றன அதுபோல கடல் சிங்கங்களும், கடற்புற நகரங்களுக்கு நகர்ந்து வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று எழுதியுள்ளார்.
LOOKING AT THE SEA LION MOVEMENT |
ஃபிளாரன்ஸ் நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த சீ லைன் கேவ் எனும் கடற் சிங்கங்களின் குகை ஓரிகான் மாநிலத்தில் மொத்தம் 640 கிலோமீட்டர் தொலைவிற்கு கடற்கரை நீளமாக அமைந்துள்ளது.
இதில் ஏறத்தாழ நடுப்பகுதியில் அமைந்துள்ளது இந்த கடல் சிங்கங்களின் குகை. இந்த குகை கடல் மட்டத்திலிருந்து சுமார் 300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு ஒரு கிப்ட் ஷாப் இருக்கிறது அதனை நுழைவு வாயிலாக கொண்டு அந்த குகைக்கு நாம் செல்லலாம்.
இந்த கடற் சிங்கங்களின் குகைக்கு செல்ல மொத்தம் மூன்று நுழைவு வாயில்கள் உள்ளன அந்த குகையிலிருந்து ஆயிரம் அடி நீளத்திற்கு ஒரு நடைபாதை அல்லது குகைப் பாதை கடலில் போய் முடிவடைகிறது.
இந்த ஆயிரம் அடி நுழைவு பாதையில் உயர்ந்த அலை வீசும் தருணங்களில் (DURING HIGH TIDE) இதன் வழியாக நீர் நிரம்பி குகைக்குள் செல்லும். குட்டையான அலை வீசும் சமயங்களில் இந்த பாதை காலியாக இருக்கும்.
ஒரு நுழைவுப் பாதை மேற்கு புறத்திலும் இருக்கிறது இந்த பாதை கடலுடன் இணைந்துள்ளது. அதில் ஹை டை மற்றும் லோடைட் ஆகிய இரு சமயங்களிலும் நீரோட்டம் இருக்கும்.
மூன்றாவது குகை இணைப்புப் பாதை வடதிசையில் அமைந்துள்ளது இது அந்த குகையிலிருந்து 50 அடி உயரத்தில் அமைத்திருக்கிறார்கள் இங்கிருந்தபடியாக இந்த குகையின் அமைப்பு மற்றும் அங்கு நடமாடும் கடல் சிங்கங்கள் மற்றும் இதர கடற் பிராணிகளையும் பார்க்க முடியும்.
அந்த குகைகளின் சுவர் முழுக்க பாசிகள், லிச்சன்கள் மற்றும் தாது உப்புகளும் படிந்து. பச்சை ஊதா நீளம் சிவப்பு ஆகிய நிறங்களில் படிந்து அலங்காரம் செய்தது போல் இருக்கிறது
இங்கு இந்த குகைகளில் ஸ்டெல்லர்வகை (STELLER TYPE) மற்றும் கலிபோர்னியா வகை (CALIFORNIA TYPE) ஆகிய இரண்டு வகையான கடற் சிங்கங்கள் இருக்கின்றன.
SEA LION WEIGHS AROUND 1200 KG |
இங்கு ஸ்டெல்லர் வகை தான் அதிகமாக இருக்கின்றன.
இந்த கடற் சிங்கங்கள் பெரும்பாலும் கடல் கொந்தளிப்பு, புயல், சூறாவளி இது மாதிரியான சமயங்களில் இவை இந்தக் குகைகளை நாடிவரும்.
அமெரிக்காவிலேயே மிக நீளமான கடற்சிங்கக்குகை இருக்கும் மாநிலம்
என்னும் பெருமைக்குரியது ஓரிகான்.
இந்த கடல் சிங்கங்களின் குகையின் நீளம் 1315 அடி. இதுபோன்ற ஒரு நீண்டகுகை சாந்தா குரூஸ் தீவினிலும் இருக்கிறது. ஆனால் அதன் நீளம் 1227 அடி மட்டும் தான்.
இங்கிருந்தபடி கடலில் நீந்தி செல்லும் திமிங்கலங்களையும் பார்க்க முடியும் . ஆர்காஸ் (ORCAS)மற்றும் கிரே வேல் (GRAY WHALE)சாம்பல் நிற திமிங்கலம் ஆகிய இரண்டு வகை திமிங்கலங்களைப் பார்க்கலாம்
இதில் ஆர்காஸ் வகை திமிங்கலங்கள் ஒரு ஆண்டில் ஒருமுறைதான் இந்தக் குகையினைக் கடந்து செல்லும். ஆனால் கிரேவேல் திமிங்கலங்களை அடிக்கடி இங்கு பார்க்க முடியும்.
இயற்கையாக அமைந்திருக்கும் இந்த கடற் சிங்க குகைகளை 1800 ஆம் ஆண்டு கேப்டன் வில்லியம் காக்ஸ் என்பவர் தான் முதன் முதலாக கண்டுபிடித்தார்.
1930 ஆம் ஆண்டு தான் இந்த கடல் சிங்கம் குகை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.
நீங்கள் அமெரிக்கா போனால் மறக்காமல் பிளாரன்ஸ் நகரில் இருக்கும் கடற்சிங்கக் குகையினைச் சென்று பாருங்கள்.
மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம் நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment