ஊர் கூடி
தேர் இழுக்கலாம்
வாங்க
(ஆறும் ஊரும்
தமிழ் நாட்டின்
நூறு ஆறுகளின்
கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)
நான் எழுதிய “ஆறும் ஊரும்” ஆறுகள் பற்றிய நூலை சென்னை
“செவாலியே டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி சிறப்பாக வெளியிட ஏற்பாடு செய்துள்ளது.
வெளியிடும் நாள்:26.09.24,
வியாழன் நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை.
இடம்: அண்ணா நூற்றாண்டு
நூலகம், நூல் வெளியீட்டு அரங்கு, கோட்டூர்புரம்,
சென்னை -600025
வெளியிடுபவர்: பேராசிரியர்.
முனைவர் சசிகாந்த தாஸ்
முதல் பிரதி பெறுபவர்: திருமிகு.ஏ.பழமலை, (மேனாள்) ஐ ஏ எஸ், தாளாளர், செவாலியர் டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, பெரம்பூர், சென்னை - 600011
விழா ஏற்பாடு: செவாலியர் டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, பெரம்பூர், சென்னை - 600011
(ஆறும் ஊரும் நூலில் இடம் பெற்ற ஒரு கவிதை)
தண்ணீரே நீ தடம் பதித்தாலும்
தடம் பதிக்க மறந்தாலும்
என்ன நடக்கும் சொல்லுகிறார்
என் அய்யன் திருவள்ளுவர்.
தண்ணீர் தடம் பதித்தால்
மரணம் தராத அமுதம்
வார்க்கும்.
பசி நீக்கும் தாகமும் தீர்க்கும்.
அது தடம் பதிக்க
மறுத்தால்
அல்லது மறந்தால்
திரும்பி வராத உயிர்
போக்கும்
திருப்தி படாத ஊரும்
உலகமும்
ஏர் மறக்கும்.
பசும் புல்லும்
தன்கிரீடம் துறக்கும்,
கடலின் பெரு உடலும்
உரு சிறுக்கும்
குடமுழுக்கும் கும்பாபிஷேகமும்
தடம் தப்பிப் போகும்
தடுமாறிப் போகும்
தானம் தவம் செய்வோர்
கூட
வானத்தை கைகாட்டி
கேளாச் செவியராய்
மீளா துயர் உற்றவராய்
மீள வழித் தெரியாதவராய்
வானம் பார்த்த பூமியாய்
வாளாய் இருப்பர்.
இவை அனைத்தும்
அய்யன் திருவள்ளுவன்
ஐயிரண்டு குரளாய்
வான்சிறப்பில் சொன்ன
நீர் சிறப்பைத்தான்
என் சொந்த வரிகளில்
மலிவுப் பதிப்பில்
உங்களுக்கு
மாந்த தந்திருக்கிறேன்.
காவிரி தென்பெண்ணைப்பாலாறு
தமிழ் கண்டதோர்
வையைப் பொருனைநதி
அமராவதி கொற்றலையாறு
இல்லை தண்ணீர் என
கைவிரிக்கும்
காவிரி, பாலாறு,
முல்லை, பெரியாறு
கை வைத்து கை வைத்து
அள்ளி குடிக்க கூட
தண்ணீர் தராத வைகை
சங்கத் தமிழ் பொருனை
என
அழைத்த தாமிரபரணி
அத்தனையும் இந்த
ஆறும் ஊரும் நூலில்
அழகாய்த் தந்துள்ளேன்.
குரல் நீட்டி பேசுவதும்
விரல் நீட்டி குற்றப்பத்திரிக்கை
வாசிப்பதும்
இந்த கவிதையின்
நோக்கமல்ல
ஊர் கூடி தேர் இழுக்கலாம்
வாங்க
ஓடுநீர் கொள்ளும்
ஆறு முதற்கொண்டு
சிறுநீர் கொள்ளும்
குட்டை வரை
முப்பத்தி,
9000 ஏரிகள் குளங்கள்
100 ஆறுகள் என
வேறுவேறு பெயர்களில்
நீர் மறந்து போன
நீர் ஆதாரங்களை
சீர் செய்து சிறப்புசெய்து
உழும் தொழிலுக்கும்
உறா தொழிலுக்கும்
உதவ
ஊர் கூடி தேர் இழுக்கலாம்
வாங்க
என உரக்க கூவி அழைப்பது
தான்
இந்த ஆறும் ஊரும்
நூலின் அழகான இலக்கு.
பூமி ஞானசூரியன்
நூலாசிரியர்
No comments:
Post a Comment