கடிதம்:
OLYMPIC NATIONAL PARK |
பூங்காவின்
மழைக் காட்டு
மரங்கள்.
RAIN FORESTS OF
OLYMPIC NATIONAL PARK
அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம்.
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? சௌக்கியமா ? உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது விசாரிப்புகள்.
இன்றைக்கு நான் வாஷிங்டன்
மாநிலத்தில் இருக்கும் ஒலிம்பிக் தேசிய பூங்காவில் மழைக்காட்டிற்கு போனது பற்றி எழுதி
இருந்தேன்.
அந்த மழைக்காட்டில் என்னென்ன மரங்கள் இருக்கின்றன என்று உங்களுக்கு
சொல்லுகிறேன். நமக்கு தெரியாத மரங்கள்தான்.
ஆனாலும் அவைபற்றி உங்களுக்கு சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் போர்ட்டுஏஞ்சலஸ் பகுதியில்
இருப்பது உங்களுக்கு தெரியும். அங்கிருந்துதான் நாங்கள் புறப்பட்டுப் போனோம்.
மழைக்காடு என்றால் நாம் கேள்விப்பட்டிருப்போம். பார்த்திருக்க
மாட்டோம்.
வெப்ப மண்டலத்தில் இருக்கும் மழைக்காடுகளை நாம் பார்ப்பதற்கு
வாய்ப்பு உண்டு. ஆனால். குளிர் பிரதேசத்தில் இருக்க கூடிய மழைக் காடுகளை பார்ப்பதற்கான
வாய்ப்பு மிகவும் குறைவு.
HOG RAIN FOREST 1 |
அப்படிப்பட்ட ஒரு மழைக்காட்டிற்குத்தான் நான் போயிருந்தேன்.
அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
இந்த மழைக்காட்டில் இருக்கும். 10 விதமான மரங்களை நான் தெரிந்துகொண்டேன்.அவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். ஒருவேளை நீங்கள் அமெரிக்கா போனால் அதிலும் குறிப்பாக வாஷிங்டன் மாநிலத்துக்கு செல்ல வேண்டியிருந்தால். மறக்காமல் போர்ட்ஏஞ்சலஸ் நகருக்கு அருகில் இருக்கும் இந்த. ஒலிம்பிக் தேசிய பூங்காவிற்கு மறக்காமல் போய்ப் பாருங்கள்.
HOG RAIN FOREST TREES 2 |
அங்கு போனால் இந்த மழைக்காட்டின் அதிசயமாக இருக்கும் இந்த மரங்களைப்
பாக்கலாம். இது உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக
இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
நாம் இப்போது காட்டுக்குள் செல்லலாம் வாருங்கள்.
முக்கியமாக மழை காட்டில் இருக்கும் 10 மரங்கள் அவற்றின் மீது
படர்ந்து இருக்கும் மாஸ் மற்றும் லிச்சன்கள்கள், பெரணிகள் ஆகியவற்றை பற்றி தான் சொல்ல
போகிறேன்.
HOH RAN FOREST TREES 3 |
ஸ்பூரூஸ், ஹேம்லக்,
ஃபிர், மேப்பிள், ஆல்டர், செடார். பாப்ளார்,
ஈவ் ஆகிய எட்டு மர வகைகளைப் பற்றி நான் உங்களுக்கு சொல்ல இருக்கிறேன்.
சிட்கா ஸ்புரூஸ் (SITKA SPRUCE)என்ற மரம் தான் ஹாக் மழைக்காட்டின்
(HOG RAIN FOREST) மிக உயரமான மரம் என்று சொல்லலாம். இதன் அறிவியல் பெயர் சியா? சிட்டிசன்சிஸ்
(PICEA SITCHENSIS) என்பது. இந்த மரத்தை இந்த மழைக் காட்டின் மகாராணி (QUEEN OF
RAIN FOREST)என்று சொல்லுகிறார்கள்.
குறிப்பாக. கடலோரசூழல் பகுதியில்(COASTAL ECO SYSTEM) வளர இது
ஏற்புடைய மரம் . கப்பல் கட்ட இசைக் கருவிகள் செய்ய. காலம்காலமாக இதனை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதற்கு ஏற்றவாறு இந்த மரங்கள் உறுதியாகவும் எடை குறைவாகவும்
இருக்கின்றன.
வெஸ்ட்டர்ன் ஹேம் லாக் (WESTERN HAMLOCK) மரம். இது வாஷிங்டன்
மாநிலத்தின் மாநில மரம். ஹாக் மழைக்காட்டில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மரங்கள்.
அதிகப்பட்சமாக 200 அடி உயரம் வரை வளரும். ஜீ
இந்த மரங்கள் தான் அதிகமான
அளவில் கட்டுமானப் பணிகள் மற்றும் காகித உற்பத்திக்கும் பயன் ஆகிறது.
இந்த மழைக் காடுகளில் இருக்கும் மூன்றாவது முக்கிய மரம் டவுக்ளஸ்
ஃபிர். இதன் அறிவியல் பெயர் சூடாட் சுகா மென்செஸி.
HOH RAIN FOREST TREES 4 |
பசிபிக் கடலின் வடமேற்கு
பகுதியில் அதிகம் காணப்படும் மரம் இது. அதிகப்பட்சமாக 250 அடி உயரத்திற்கு வளரும்.
உறுதியான மரம், கட்டுமானம், மரச்சாமான்கள், மேசை, நாற்காலி மற்றும் காகிதம் செய்ய ஏற்ற
மரம்.
நான்காவதாக முக்கியமான மரம். பிக் லிஃப் மேப்பிள் மரங்கள் (BIG
LEAF MAPLE) இதன் இலைகள் பிரபலமானவை. பெரியவை. இதன் குறுக்களவு 12 அங்குலம் வரை இருக்கும்.
ஆனால் மரங்கள் அதிக பட்சம் 100 அடி உயரம் தான் வளரும். எபி ஃபைட்ஸ்
என்னும் மாஸ் பேரணி போன்றவை வளர இடம் தரும்.
இந்த மரங்களில் மேஜை, நாற்காலி, இசைக்கருவிகள் மற்றும் மரச்சாமான்களை
அழகுபடுத்தும் வீனீர் (VINEER) தயாரிக்கவும் இது உதவும்.
சிவப்பு ஆல்டர் மரம். இதன் அறிவியல் பெயர். ஆல்னஸ் ரூப்ரா (ALNUS
RUBRA)என்பது. இந்த மரங்கள் 80 அடி உயரம் வரை வளரும். இவை நைட்ரஜன் என்னும் தழைச்சத்தை
நிலைப்படுத்தி மண்வளத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மரச்சாமான்கள், பெட்டிகள் மற்றும் காகிதக்கூழ் தயாரிக்க இதன்
மரங்கள் அதிகமாக பயன்படுகின்றன.
HOG RAIN FOREST TREES 5 |
ஆறாவதாக வைன் மேப்பிள்(VINE MAPLE ) மரங்கள். மிகவும் சிறிய
மரங்களாக இவை வளரும். அதிகபட்சமாக 30 அடி உயரம்தான் வளரும். இதன் கிளைகள் மேலே எழும்பி
வளராமல் கொடிபோல படர்ந்து வளரும்.
மண்ணை அரிப்பை கட்டுப்படுத்த ஓடைக் கரைகளில் நடலாம். வனவிலங்குகளுக்கு
இது உணவு தருகிறது. அத்துடன் இந்த மரங்களை அழகுக்காக வளர்க்கலாம்.
வெஸ்டன் ரெட்செடார் மரங்களும் உயரமாக வளரக்கூடியவை. 230 அடிவரை
வளரும். இதன் அடி, மரங்கள் உள்ளீடு அற்றவைகளாக இருக்கும். பழங்குடி மக்களுக்கு மிகவும்
உபயோகமான மரம் இது.
நாட்பட உழைக்கும் தன்மை உடையது.
வீடு கட்ட.
ஒரு மர படகு செய்ய.
கட்டுமானம்
ஆகியவற்றிற்கு உபயோகமாகும்.
இந்த மரத்தை அறுக்கும் போது நல்ல அருமையான வாசம் வீசும்.
HOH RAIN FOREST TREES 6 |
பிளாக் காட்டன் வுட்(BLACK COTTON WOOD TREE) மரம் தான் அதிகமான
அளவில் அமெரிக்காவில் இருக்கும் பாப்புலர் (POPLAR) மரங்கள்.
இவை 150 அடி உயரம் வரை வளரும்.
வேகமாக வளரும் மரம்.
ஆற்றங்கரைகள் மற்றும் ஓடைக் கரைகளில் நன்கு வளரும்.
வனவிலங்குகளுக்கு உதவியாக இருக்கும்.
காகிதம் தயாரிக்கலாம்.
பிளைவுட் போன்றவை தயாரிக்கலாம்.
அடுத்து பகிஃபிக் ஈவ் என்பது. இது ஒரு சிறிய மரம்.
மெல்ல வளரும்.
சுமார் 50 அடி உயரம்தான் வளரும்.
முக்கியமாக மருத்துவ குணங்கள் கொண்டது.
இதன் பட்டையில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் மருந்துகள்
தயார் செய்கிறார்கள்.
HOG RAIN FOREST TREES 7 |
இந்த மரங்களை கடைசல் வேலைகள் மற்றும் வில் அம்புகள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.
சிட்கோ ஆல்டர் (SITCO
ALDER)மரங்கள்.
குறைவான உயரம் வளரும்.
அதிகபட்சமாக 20 - 30 அடி உயரம் வளரும்.
இந்த மரமும் மண் அரிமானத்தை கட்டுப்படுத்தும்.
மண் வளத்தைக் கூட்டும்.
இந்த கடிதத்தில் இதுவரை ஹாக் மழைக்காடுகளில் பெருமளவில் இருக்கும்
10 வகையான மரங்கள் பற்றிச் சொன்னேன்.
இந்த மரங்களை போர்த்தி இருக்கும் மாசு எனும் பாசிகள் பற்றி ஏற்கனவே
நாம் பார்த்தோம்.
இந்த கடிதம் பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில்
பதிவிடுங்கள்.
ஒலிம்பிக் தேசிய பூங்காவின் முகவரி:
OLYMPIC NATIONAL PARK
VISITOR INFORMATION: (360) 565-3130
600 EAST PARK AVENUE
PORT ANGELES, WA 98362-6798
மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்.
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment