LAKE CRESCENT |
DEAR SURYA
Each place of your visit and the letter you write about
them is more exhaustive, informative and interesting to read. Continue your
writing and keep rocking on. Our best wishes for your healthy and long life
with more energy to write more and more.
With Regards
Dr.K.Chinnadurai
Chennai,
Dear Annachi,
Thank you so much for your extraordinary comments on my
writings. With all your support I wish to give more to this community. Moreover
day by day I am learning. It gives me immense pleasure. I am growing even
today. Read my letters and motivate me.
Bhumii Gnanasoorian
MAKE YOUR HEART LIKE A LAKE WITH A CALM, STILL SURFACE AND GREAT DEPTHS OF KINDNESS - LAO TZU
கிரசெண்ட் ஏரி
LAKE CREASANT
அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !
எப்படி இருக்கிறீர்கள் ? சவுக்கியமா ? உங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்.
நான் உங்களுக்கு லேக் கிரசன்ட் என்னும் ஏரிபற்றிய கதையை சொல்லப்
போகிறேன். கதை என்றால் கற்பனையில் எழுதுவது. இது உண்மைக் கதை.
இந்த கிரசண்ட் ஏரிக்கு தற்செயலாய் போயிருந்தேன். நான் உண்மையாக
ஒரு மழைக்காட்டினைப் பார்க்கத்தான் போயிருந்தேன்.
மழைக்காட்டின் மரங்களைப் பார்த்து அதிசயப்பட்டு ஊடாக நடந்து
சென்றோம். அங்கு லேக் கிரசண்ட் என்ற ஓர் போர்டு வைத்திருந்தார்கள்.
அந்தப் போர்டுக்கு பக்கத்தில் ஒரு கொடிப்பாதை போனது. அதன் வழியாக
நடந்து போனோம். அங்கு பார்த்தால் ஒரு பெரிய கார் போகும்படியான ஒரு பாதை அந்த ஏரிக்கு
அருகில் போனது.
அங்கு நாங்கள் இருக்கும்
காட்டுக்கும் வெகு தொலைவில் இருந்த ஒரு பைன் காட்டுக்கும் ஊடாக பெரிய நீர்ப்பரப்பு.
அதுதான் லேக் கிரசென்ட் ஏரி.
பைன் மரக்காட்டின் உச்சியில் மேகங்கள் அசைந்தபடி சென்றுகொண்டிருந்தது.
அந்த கார் மலையின் முனையிலிருந்து ஒரு நீண்ட மரப்பாலம். சுமார் 100 அடி நீளத்திற்கு இருந்தது.
A WOODEN BRIDGE ON CRESCENT LAKE |
அந்த ஏரிக்கு அருகில் போனோம். மழைக்காட்டு குளிரைவிட அதிகம்
இருந்தது. நீங்க வர்றீங்களா ? என்று கேட்டபடி என் மகன், மறுமகள் குழந்தைகள் எல்லாம்
அந்த மரப்பாலத்தில் ஏறி நடந்தார்கள்.
அந்த மரப் பாலத்தின் இரண்டு பக்கமும் தண்ணீர். தண்ணீரின் அடி ஆழத்தில் கிடந்த பாறைகள், மரங்களின் வேர்கள் எல்லாம் பளிச்சென்று தெரிகிறது.
நாங்களும் அப்போது ரொம்பவும் கவனமாக அந்த மரப்பாலத்தில் இறங்கி நடந்தோம். பார்க்க அது ஏரி போல இல்லை. அது கடல் போல பரந்து விரிந்திருந்தது. அதன் நுனியில் நின்று புகைப்படம் எடுக்கிறார்கள். நாங்களும் எடுத்தோம்.
ரொம்ப தூரத்தில் ஏதோ ஒரு நீளமான படகு போனது. அதுல 4 அல்லது 5 பேர் உட்கார்ந்திருந்தார்கள்.
அதைவிட எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இரண்டு வெள்ளைக்காரர்கள் அந்த தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கு குளித்தது மரப் பாலத்தில் நின்று கொண்டிருந்த எனக்கு குளிர் அடித்தது.
எதிரிலிருந்த மலையில் இருந்த பைன்மரக் காட்டின் ஊடாக, எரிந்து புகைவது மாறி மேகங்கள் அலைந்து
கொண்டிருந்தன.
நம்ம ஊரில் நிறைய தடவை மேகங்களைப் பார்ப்பேன்.
அது ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கும். எப்படி இருந்தாலும் மேகங்களைப் பார்க்க எனக்கு பிடிக்கும்.
SMOKY CLOUDS |
இங்கு மலைகளில் எல்லாம் பார்க்கிறேன். புகை மாதிரி இருக்கும் மேகங்கள் அடர்த்தி குறைவாக இருக்கின்றன.
அருகில் போய்ப் பார்த்தால் ஏரியின் தண்ணீர் நீல நிறமாக உள்ளது. தொலைவில் இருக்கும் தண்ணீரை பார்த்தால் நீலம் கரைத்த மாதிரி பளிச்சென்று நீல நிறத்தில் இருக்கின்றன.
CLOUD CAPPED LAKE 2 |
இதற்கு என்ன காரணம்?
காரணம் ஒருவேளை ஆழம் அதிகம் இருப்பதால் இப்படி இருக்குமோ ? ஆனால் அறிவியல் ரீதியாக இந்த ஏரித் தண்ணீரில்
குறைவான அளவு நைட்ரஜன் இருக்கிறது என்கிறார்கள்.
அதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். அறிவியல் வல்லுநர்கள் என்ன சொன்னாலும் ஒரு ஏரியின் ஆழம் இடத்தைப் பொறுத்து வேறுபடும். ஓரங்களில் ஆழம் குறைவாக இருக்கும். மையப் பகுதியில் அதிகம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம்
இதனைச் சரியாக அளந்து வைத்திருக்கிறார்கள்.
அளந்து வைத்த இந்த ஏய்யின் ஆழம் ஒரு அடி இரண்டடி இல்லை. சொன்னால் மயக்கமே வரும். ஆழம் 624 அடி. நீளம் 19 கிலோமீட்டர்.
ஒரு ஏரி என்றால் நீர் வரத்துக்கு காரணம் பெரும்பாலும் மழையாகத்தான் இருக்கும். ஆனால் இந்த ஏரிக்கு வரத்து பனிக்கட்டிகள். மலை முகடுகளில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகள், என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
SEE THROUGH WATER |
பனிக் கட்டிகள் கரைந்து வந்த தண்ணீர் என்பதால்தான் அது மாசு மறுவற்று இருக்கிறது. முகம் பார்க்கும் படியாக நீர் தெளிவாக இருக்கிறது. தண்ணீர் சில்லென்று பிரிஜ்ஜில் வைத்தமாதிரி இருக்கிறது.
இன்னொன்று இது உப்பில்லாத நல்ல தண்ணீர். இதற்கெல்லாம் காரணம்
தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதன் சரித்திரத்தைப் படிக்க வேண்டும்.
அதனைப் படித்தால் பனி ஆறுகள் என்னும் கிளேசியர்களால் ஏற்பட்ட நிலச் சரிவினால் உருவான ஏரி இது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழற் காடுமுடைய தரண் |
அப்படி உருவான ஏரிக்கு எம். கே. கேரிக்கம் என்பவர் 1890 ல் “லேக்
கிரசன்ட் “என்று பெயர் வைத்தார். 1897 ல் இதனை ஒலிம்பிக் காடுகளுடன் சேர்த்தார்கள்.
1921 ல் இதனை பொழுதுபோக்கு இடமாக அறிவித்தார்கள். 1938 இல் இது ஒலிம்பிக் தேசிய பூங்காவின்
ஒரு அங்கமாக ஆக்கினார்கள்.
இறுதியாக இந்த ஏரி பற்றிய ஒரு மயிர்கூச்செரியும் செய்தி !
1937 ம் ஆண்டு ஹேலி
என்ற பெண் இந்த ஏரிப்பகுதியில் காணாமல் போய்விட்டார்.
ரொம்ப நாள் கழித்து ‘வெள்ளை வெளேர்’ என்று ‘ஐவரிசோப்’ போல ஏரியில்
மிதந்து கொண்டிருந்தது அந்தப் பெண்ணின் சடலம்.
அந்த உடல் கொஞ்சமும் கெடவில்லை. யாரோ ஒரு பெண்மணி உயிரோடு தண்ணீரின் மேல்
பரப்பில் மிதந்துகொண்டிருந்தது மாதிரி இருந்தது என்கிறார்கள்.
இந்த ஏரியின் தண்ணீர் இந்த பெண்ணின் உடலை ‘சேப்பனிகேஷன்’(SAPONIFICATION) என்ற
முறையில் கெடாமல் வைத்திருந்தது என்று சொல்லுகிறார்கள்.
எது எப்படியோ கொஞ்ச நாளில் அந்தப் பெண்மணியின் கணவர் மாண்ட்கோமரி
என்பவர் கைது செய்யப்பட்டார்.
காரணம் அது இயற்கையான மரணம் இல்லை. கொலை.
இந்த கடிதம் பற்றி உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் அல்லது
வாட்ஸ்அப்பில் பதிவு செய்யுங்கள்.
விரைவில் இந்த தொடர் ஐம்பதாவது கடிதத்துடன் நிறைவு பெறுகிறது.
அடுத்து தனிநபர் மேம்பாடு அல்லது வளர்ச்சி (SELF DEVELOPMENT)தொடர்பான 100 கட்டுரைத்
தொடர் இடம்பெற உள்ளது என்பதை. தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவில் அந்த 100 கட்டுரைகளின் தலைப்பினை முன்னதாகவே பதிவிட
உள்ளேன். அடுத்த கடித்தில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்
No comments:
Post a Comment