CHECKDAMS - 90-100 % EFFICIENT FOR RECHARGE OF WATER |
HOW TO SELECT THE LOCATIONS
TO CONSTRUCT CHECKDAMS
தடுப்பணைகளை எந்த
இடத்தில் கட்டலாம் ?
தடுப்பணைகள் கட்டுவதற்கு முன்னதாக. அதற்கான இடத்தை அதாவது சரியான
இடத்தை தெரிந்தெக்க வேண்டும். அப்படி தெரிந்தெடுக்கவில்லை என்றால். அந்த தடுப்பணை மூலம்
நமக்குனல்ல பயன் கிடைக்காது. அல்லது குறைவான
பயன் மட்டுமே கிடைக்கும்.
இங்கே நான் 12 வழிமுறைகளை உங்களுக்கு சொல்லுகிறேன், எப்படி அந்த
இடத்தை தேர்வு செய்வது என்பதுபற்றி. அதன்படி தேர்வு செய்தால் இந்த தடுப்பணைகள் நல்ல
முறையில் அதிகமான மழை நீரை அறுவடை செய்ய, அதிகமான மழை நீரை நிலத்தடியில் சேமிக்க அது
உதவும்.
1. 1. நீங்கள் தேர்வு
செய்யும் ஓடை, மழைக்காலத்தில் நீர் திரண்டு ஓடி வரும்படியான ஓடையாக இருக்க வேண்டும்.
அதில் நீரோட்டம் வேண்டும்.
2. 2. அந்த ஓடைக்கு நீர்
திரளுவதற்கான வாய்ப்பு தரும் வகையில் நீர்வடிப்பகுதியின் பரப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
அதில் ஓடு நீர் அதிகம் வரவேண்டும்.
3. 3. ஓடையின் சரிவு நடுத்தரமாக
உள்ள இடமாக இருக்க வேண்டும். சரிவு அதிகம்
இருந்தால் நீரோட்டத்தின் வேகம் அதிகம் இருக்கும். சரிவு மிகவும் குறைவாக இருந்தால்
வண்டல் மண் படிவு அதிகம் இருக்கும்.
4. 4. அதனால் நடுத்தரமான
சரிவு உள்ள இடமாக. தேர்வு செய்து அந்த இடத்தில் தடுப்பணைகளை அமைக்க வேண்டும்.
5. 5. தேர்வு செய்யும்
இடம் மணற்பரப்பு, ஜல்லிகள் நிறைந்த பகுதியாக மணல் பாறைகள் நிறைந்த பகுதியாக, உடைந்த
பாறைகளை உடைய பகுதியாக இருப்பது அவசியம்.
6. 6. நீங்கள் தேர்வு
செய்யும் ஓடைப் பகுதி குறுகலான இடமாக இருக்க வேண்டும். அன்ற ஓடை பகுதியை தேர்வு செய்ய
கூடாது. உயர்ந்த உறுதியான உறுதியாக கரைகளை உடைய இடமாகவும் இருக்க வேண்டும். இது கட்டுமான
செலவைக் கட்டுப்படுத்தும்.
7. 7. அதிகமான ஆழத்தில், நிலத்தடி நீர் இருக்கும் பகுதியாக தேர்வு
செய்ய வேண்டும். அது அதிகமான நிலத்தடி நீரைச் செலவு செய்யும் இடமாக அது இருக்க வேண்டும்.
8. 8. ஏற்கனவே இதுபோன்ற
நீர் அறுவடை செய்யும் கட்டமைப்புகள் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்யக்கூடாது.
9. 9. அடுத்து நீங்கள்
தேர்வு செய்யும் இடம் தனியாருக்கு சொந்தமான இடமாக இருக்கக்கூடாது. அரசுக்கு சொந்தமான
இடமாக இருக்க வேண்டும். பிரச்சனையான இடங்களைத் தெரிவு செய்யக்கூடாது.
1 10. கட்டுமானம் மற்றும்
பராமரிப்பு பணிகள் செய்ய இடையூறு இல்லாத இடமாக அது இருக்க வேண்டும்.
11. உள்ளூரில் ஏற்கனவே இருக்கும் சுமூகமான சூழல் அமைப்பினை அது பாதிப்பதாக இருத்தல் கூடாது. நமது செயல்பாடுகள் நீர் வாழ்வனவற்றிற்கு இடையூறாக இருத்தல் கூடாது
1 12. தடுப்பணைகள் எழுப்பும் இடத்தில் மக்களின் பூரண சம்மதம் இருக்க வேண்டும். அந்த பணிகளில் அங்கு உள்ள பொதுமக்கள் பங்கேற்பு அளிப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் நாம். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
13. இதை எல்லாம் தெரிந்துகொண்டால்தான்
நமது கிராமங்களுக்கு வரும் தடுப்பணைகள் நமக்கு உபயோகமாக இருக்கும்.
14. தடுப்பணைகள் நீர் அறுவடை செய்யும் கட்டுமானங்களில் முதன்மையானவை, இவை 90 முதல் 100 சதவிகிதம் பயன்தருபவை என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள்.
பூபூமி ஞானசூரியன்/ 29.09.24
ப்
No comments:
Post a Comment