Sunday, September 1, 2024

HOH RIVER’S ROLE IN ECOSYSTEM AND LIVELIHOODS வாழ்வாதாரம் மற்றும் சூழல் காக்கும் ஹாக் ஆறு

பயணக்கட்டுரை என்ற இலக்கியத்தில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்திருக்கிறார் நண்பர் ஞானசூரியன். இவர் இதனை ஒரு கவிதையாக ஓவியமாக, ஒரு திரைக்கதையாக படைத்திருக்கிறார்.

ஆ.கிருட்டிணன், மேனாள் உதவிப் பொது மேலாளர், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர்.

கிருஷ்ண்ன் எனது கல்லூரித் தோழர், புத்தகங்கள்  படிக்க சொல்லித் தந்தவர். எனது ஆசான்களில் ஒருவர் என்று நான் கருதுபவர். அவர்  நல்ல கவிஞரும் கூட. அன்பு கிருஷ்ணன் தங்கள் பாராட்டிற்கு நன்றி. இந்தப் பாராட்டில் ஒரு பங்கு எனக்கு, இன்னொரு பங்கு அவரைச் சேரும்.

பூமி ஞானசூரியன்

A RIVER CUTS THROUGH ROCK, NOT BECAUSE OF ITS POWER, BUT BECAUSE OF ITS PERSISTANCE - JIM WHATKINS


கடிதம்

வாழ்வாதாரம் மற்றும் 
சூழல் காக்கும் ஹாக் ஆறு

HOH RIVER’S ROLE IN 

ECOSYSTEM AND LIVELIHOODS (பயணக்கடிதம் - TRAVELOGUE)

HOH RIVER RUNS FOR 90 KM

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் ! நலமா ? உங்கள் உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள். இன்று உடற்பயிற்சி செய்தீர்களா ? மூச்சுப் பயிற்சி செய்தீர்களா ? இன்றைய வேலைகளைத் திட்டமிட்டீர்களா ? இன்று ஏதாச்சு படித்தீர்களா ? இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் ?

அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் ஒலிம்பிக் தீபகற்பத்தில்(OLYMPIC PENINSULA) ஒலிம்பிக் தேசிய பூங்காவின் எல்லையில் ஓடுகிறது இந்த ஹாஹ் ஆறு.

நாங்கள் ஒலிம்பிக் மழைக்காட்டிற்கு கார்ப்பயணம் செய்த போது எங்களுக்கு இணையாகவே ஒடிவந்தது இந்த ஹாஹ் ஆறு. அப்போதே இதுபற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது எனக்கு.

GLAZIERS FORM THE HOG RIVER
மவுண்ட் ஒலிம்பிக்ஸ் மலைப்பகுதியில்(OLYMPIC MOUNTAINS) உயரமான சிகரத்தில் ஒலிம்பிக் தேசிய பூங்காவின் உச்சிப்பகுதியில் பனிஆறாக (HOH GLAZIERS) தனது ஓட்டத்தைத் தொடங்குகிறது.

மலைஉச்சியில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகள் உருகித்தான் உருவாகிறது இந்த ஆறு.

பனியில் உருவான நதி ஆனதனால் இதன் தண்ணீர்  வெண்ணிற கலவையான நீல நிறமாக இருக்கிறது.

HOG RIVER ORIGINATES IN
OLYMPIC MOUNTAINS

உலகின் மிகவும் பிரபலமான மழைக் காடுகளாகவும் (RAIN FOREST), மலைக் காடுகளாகவும் (MOUNTAIN FOREST) உள்ள ஹாஹ் மழைக் காட்டின் வழியாக பாய்கிறது இந்த ஆறு.

பசுமைமிக்க மரங்கள் மற்றும் இதரத் தாவர வகைகளுக்கு ஆதாரமாக உள்ளது. இங்கு ஆண்டு சராசரியாக கிடைக்கும் மழை (ANNUAL AVERAGE RAINFALL)140 அங்குலம்.

மான், மீன், கரடி ஆகிய பிரதான உயிரினங்களுக்கும் இந்த ஆறு உறுதுணையாக உள்ளது.

எல்க்மான், சாலமன்மீன், மற்றும் பிளாக்பியர்ஸ் மற்றும் கருங்கரடிகள்தான் (ELK DEER, SALMON FISH, BLACK BEARS)இந்த ஆற்றுப்படுகையில்  அதிகமாக உள்ள உயிரினங்கள்.

எண்ணற்ற ஓடைகளின் சேர்க்கையாக உருவாகி ஓடும் இந்த ஆறு அடிக்கடி தன் திசையை மாற்றுகின்றது. ஏராளமான வண்டலை சேர்க்கும் வகையில். புதிய சூழல்களை, புதிய இடங்களை இங்கு  உருவாக்கி வருகிறது.

மலையேறுதல், மீன்பிடித்தல், படகுசவாரி, இரவுதங்கல் (HIKING, FISHING, BOATING & CAMPING) ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருப்பதால் ஹாக் ஆறு சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் என்று கொண்டாடுகிறார்கள்.

WILD FLOWERS

மலை ஏறுபவர்களுக்கு உதவும் வகையில் இங்கு ஏகப்பட்ட நடைபாதைகள் (TRAILS) உள்ளன. இதன் மூலம் கிளைசியர்களின் பள்ளத்தாக்குகள் (GLAZIER MEDOWS) மற்றும் காட்டுப்பூக்கள் (WILD FLOWERS) மலர்ந்திருக்கும் தலங்களையும் பார்த்து ரசிக்க முடியும்.

இந்த ஆறு ஓடும் தூரம் 90 கி.மீ.

சங்கமம் ஆவது பசிஃபிக்  கடல்.

சங்கமம் ஆகும் இடம் ஆயில் சிட்டி(OIL CITY).

ஆயில் டவுன்’ன் இன்னொரு பெயர் கோஸ்ட் டவுன் (GHOST TOWN).

இந்த இடத்தில் எண்ணெய் இருப்பதாக நினைத்து ஏகப்பட்டோர் இங்கு குடியேறினார்கள். அதற்கு ஆயில் டவுன் என்று பெயரும் வைத்தார்கள். அங்கு எண்ணை இல்லை என்று தெரிந்ததும் அந்த ஊரை காலி செய்துவிட்டார்கள்.

ஆதனால் இதனை பேய்கள் உலாவரும் கோஸ்ட் டவுன் ஆகிவிட்டது.

TREES ADORNED
WITH MOSS

இந்த தேசியப் பூங்காவின் பல்லுயிர்களுக்கும் (BIODIVERSITY) உதவியாக உறுதுணையாக உள்ளது. இந்த ஆறு இங்கு உள்ள சிட்கா ஸ்புரூஸ், வெஸ்டர்ன் ஹாம்லக் மரங்களும், பல 100 வகைகளான பெரணி, மாஸ் எனும் பாசிகள். லிச்சென்கள் ஆகியவற்றிற்கும் ஆதரவாக உள்ளது இந்த ஆறு.

பல 1000 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வந்த அமெரிக்க ஆதிவாசி மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்துள்ளது. அதனால் தான் அந்த பழங்குடி மக்களின் பெயரை இந்த ஆற்றுக்கு ஹாஹ் ஆறு என பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

இந்தப் பழங்குடி மக்கள்

சாலிஷ் என்னும் பெருங்குடி மக்களின் ஒரு சிறு குழுதான் இந்த ஹாஹ் பழங்குடி மக்கள்.



ஹாஹ் ஆற்றின் அடிவாரத்தில் (LOWER HOH RIVER) மற்றும் இதன் முகத்துவாரத்தில் (ESTUARY) இவர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் வசித்தவர்கள்.

இவர்களுடைய தொழில்

மீன்பிடிப்பது

வேட்டையாடுவது

கிழங்குகள், காய்கள்,  பழங்கள் சேகரிப்பது.

இவர்களின் முக்கிய வாழ்வாதாரம்

ஹாஹ் ஆறு

பசிஃபிக் கடல்

HOH RIVER END IN PACIFIC SEA

இவர்களுடைய போக்குவரத்திற்கு உதவியாக இருந்தது கெனோ என்னும் ஒரு மரப்படகு.

அந்த பழங்குடி மக்கள் கலாச்சாரத்தின் ஆணி வேராக விளங்கியது இந்த ஆறு. இந்த ஆறு ஒலிம்பிக் தேசிய பூங்காவின் ஒரு அங்கமாக இருப்பதால் சட்டரீதியாக இதன் சூழல் பாதுகாக்கப் படுகிறது.

இந்த தேசிய பூங்காவின் சூழலை பாதுகாப்பில் ஹாஹ்ஆறு அரணாக விளங்குகிறது. இந்த ஆறு பருவக்கால அல்லது காலநிலை மாற்றத்தை கணிக்க (CLIMATE CHANGE ASSESSMENT) இது உதவியாக உள்ளது.

காலநிலை மாற்ற அறிவியல் அறிஞர்கள்(EXPERTS OF CLIMATE CHANGE) இதன் மூலமாக பருவ கால மாற்றத்தின் அளவை கணக்கிடுகிறார்கள். அவர்களுக்கு இது ஒரு அளவீட்டு கருவியாக (ASSESSMENT SCALE)உதவுகிறது.

சுற்றுச்சூழல், கல்வி, காலநிலை மாற்ற விளைவுகள் பற்றிய கல்வி ஆராய்ச்சி ஆகியவை குறித்த ஆய்வு மாணவர்கள் ஆராய்ச்சி வல்லுநர்கள், அரசு மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு பயிற்சி களமாக (TRAINING GROUND) விளங்குகிறது.

HOH RIVER A CULTURAL SYMBOL

மொத்தத்தில் இந்த ஆறு, இப்பகுதி மக்களின் கலாச்சாரம், வாழ்வாதாரம் மற்றும் சூழல் பாதுகாப்பின் கவசமாக விளங்குகிறது.

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம். இதுவரை இன்றைய கடிதத்தில் ஆறு பற்றிய. செய்திகளையெல்லாம் பார்த்தோம். இந்த கடிதம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை மறவாமல் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.

நன்றி வணக்கம் பூமி ஞானசூரியன்.

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...