Your way of description of silver falls in the National park is remarkable and also induces to visit that area. I will include this in my bucket list and definitely visit this place in my next trip to USA. Your write up reminded me about Silver Cascade of Kodaikanal. Just opposite to silver cascade in Kodaikanal the forest look very sparse and my boss suggested to create pine forest and improve aesthetic view of the locality. I planted pinus Paula trees during 1980 and the trees have grown well and changed the environment.
V.Sambasivam IFS (Retd)Washington DC, USA
கடிதம்:
HECETA LIGHT HOUSE
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் ? நீங்கள் நலமா ?
“கப்பல்களே கப்பல்களே அந்த பக்கம் மணல்மேடுகள் இருக்கு போகாதீங்க.. அந்த பக்கம் கடல்ல ஆழம் குறைவு போகாதீங்க.. அந்த பக்கம் பாறைகள் இருக்கு ஜாக்கிரதை.. இந்த பக்கமாக போனால் பாதுகாப்பாக போகலாம் வாங்க.. அப்படின்னு கப்பல் காரர்களுக்கு எச்சரிக்கைகள் செய்வது இந்த லைட் ஹவுஸ்கள்தான்.
நான் இன்று உங்களுக்கு ஹெசீத்தா லைட் ஹவுஸ் பற்றி சொல்லப் போகிறேன்.
கப்பல்களுக்கு மட்டுமல்ல இங்கு போகும் படகுகளுக்கும் இது வழிகாட்டியாக விளங்குகிறது இது ஆட்டோமேட்டிக் டிராபிக் போலீஸ் மாதிரி. கடற் புறத்தில் செயலாற்றுகின்றது. ஆக லைட் ஹவுஸ் என்றால் கடலோரத்து டிராஃபிக் போலீஸ்.
இந்த ஹெசீத்தா லைட்ஹவுஸ்தான் ஓரிகான் மாநிலத்தின் பசுபிக் கடலோரத்தில் இருக்கும் அதிகபட்சமான உயரம் உள்ளது. இதன் உயரம் 56 அடி. இதனை 205 அடி உயரமான குன்றின் மீது அமைத்துள்ளார்கள்..இதன் வெளிச்சம் 33.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு தெரியும்.
PACIFIC SEA VIEW FROM HACETA |
127 ஆண்டுகள் பழமையான லைட் ஹவுஸ் இது. 1897 ஆம் ஆண்டு இதை நிர்மாணித்தார்கள். அமெரிக்காவில் சரித்திர முக்கிய எல்லாம் தேசிய அளவில் பட்டியல் போட்டு வைத்திருக்கிறார்கள்.
இங்கு உள்ள ஐம்பது மாநிலங்களில் மொத்தம் 779 லைட் ஹவுஸ்கள் இருக்கின்றன இவற்றில் மிகவும் முக்கியமானவை என்று போட்டிருக்கும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது இந்த ஹெசீத்தா லைட் ஹவுஸ்.
HACETA LIGHTHOUSE |
130 கலங்கரை விளக்கங்களை கொண்டுள்ள மிச்சிகன் மாநிலம் தான் அமெரிக்காவில் அதிகமான லைட் ஹவுஸ்களை உடைய இடம்.
ஓரிகான் மாநிலத்தில் மட்டும் மொத்தம் 11 லைட் ஹவுஸ்கள் இருக்கின்றன இவற்றில் மிக முக்கியமான லைட் ஹவுஸ் இதுதான்.
பசுபிக் கடலோரத்தில் இருக்கும் ஒரிகான் மானிலத்தின் லைட் ஹவுஸ்களிலேயே அதிக வெளிச்சமான விளக்கினை கொண்டது இந்த ஜெசித்தா லைட் ஹவுஸ் தான்.
இந்த லைட் ஹவுஸ் விலை கடல் டிராபிக் சிக்னல் என்று சொல்லலாம்.
லைட் ஹவுஸ் வேலை பயன்படுத்துவது என்பது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு (BEFORE CHRIST)முன்னால் இருந்தே வழக்கத்தில் இருந்து வந்துள்ளது என்று சொல்லுகிறார்கள் இது பற்றி ஹோமர் எழுதிய இலியட் (ILLIAD)காவியத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
AWESOME VIEW |
தொடக்க காலத்தில் கடலோரத்தில் மரக்கட்டைகளை எரித்து நெருப்பு ஜுவாலை மூலம் மரக்கலங்களுக்கு வெளிச்ச சைகை செய்தார்கள். பின்னர் இரும்பு கூடைகளில் மரக்கட்டைகள் அல்லது கறிகளை போட்டு எரித்து அதனை உயர்ந்த கொம்புகளில் தொங்க விட்டார்கள் பின்னர் இரும்பு கூடைகளில் எண்ணெய் ஊற்றி எரித்து ஜவாலையை எழுப்பினார்கள்.
கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்கு கடற்கரையில் ஒளி வீடுகளை அமைத்தார்கள். அதனை வெளிச்ச வீடு என்று அழைத்தார்கள்.
சமீபகாலமாக மின் விளக்குகளை அதில் பயன்படுத்துகிறார்கள். மிகவும் பெரிய கப்பல்கள் சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்றால் தரைதட்டி நின்று போகும். அப்படிப்பட்ட கப்பல்களை சீரமைத்து மீண்டும் கடலுக்குள் செலுத்துவது என்பது இயலாத காரியம்.
அதனால் இந்த லைட் ஹவுஸ் என்னும் கலங்கரைவிளக்கங்கள் என்பது மிகவும் பயனுடையவை மிகவும் முக்கியமானவை. கலங்கரைவிளக்கம் என்பது அழகான தமிழ் பெயர். வெளிச்சவீடு கூட நல்ல பெயர்.
ஒரு காலத்தில் புதிய நாடுகளை கண்டுபிடிப்பது, அங்கு என்ன செல்வ வளம் இருக்கிறது ? அவற்றை எப்படி சுரண்டலாம் ? என்று கண்டுபிடிக்க ஸ்பானிஷ் நாட்டில் இருந்து நிறைய பேர் கிளம்பினார்கள்.
அவர்களை புதிய நாடு கண்டுபிடிப்பவர்கள் (EXPLORERS)என்று மரியாதையாக சொன்னார்கள். அப்படிப்பட்ட ஒருவரின் பெயர் தான் புருனோ டி ஹெஸிதா (BRUNO D HACETA)என்பது.
இவர் ஒரு முக்கியமான காரியத்தை செய்தார் அது என்னவென்றால் ஓரிகான் பகுதி கடலோரத்தை அளவீடு செய்ததுதான். அதனால் அவருடைய பெயரால், ஹெசீத்தா லைட் ஹவுஸ் என்று பெயர் வைத்து விட்டார்கள். HACETA ABOVE OUR HEAD
இந்த லைட் ஹவுஸ் கடலோரப் பகுதியில், மணற்பரப்பில் கார் சவாரி(DUNE BUGGING), மணல்சறுக்கு (SAND BOARDING) மற்றும் குதிரை சவாரி(HORSE RIDING) என்பது இங்கு நடைபெறும் பிரபலமான பொழுதுபோக்கு அம்சங்கள்.
பனி மலைகளில் சறுக்குவது போல மணலில் ஒரு மரப்பலகையில் நின்றபடி சறுக்குவதற்கு மணல் சறுக்கு என்ற பெயர்.
மணலில் குதிரைச் சவாரி செய்வது பற்றி நான் விளக்கம் ஏதும் சொல்ல வேண்டாம். பழகிய குதிரைகள் தான் இருக்கும். அதனால் பயப்பட வேண்டாம். நான் ஒருமுறை கல்லூரி மாணவனாய் இருந்தபோது ஊட்டியில் குதிரைச் சவாரி செய்ய ஆசைப்பட்டு ஏறிவிட்டேன். அதிலிருந்து இறங்குவதற்கு அந்த குதிரை என்னை பாடாய்படுத்தி விட்டது. நான் பாதுகாப்பு கருதி அதன் முதுகின் மீது படுத்து கொண்டேன்.
இப்படி இந்த லைட் ஹவுஸ் பக்கம் இருக்கும் மணற்பரப்பு பார்க்க அழகாய் இருக்கிறது. மணல் மெரினா பீச் மாதிரி இருக்கு. ஆனால் ஓரிகான் மாநிலம் முழுக்க முழுக்க மலைப்பகுதி தான்.
ஹெசீத்தாவுக்கு பக்கமாக இருக்கும் நகரம் ஃபிளாரன்ஸ் (FLORENCE)என்பது. இந்த நகரம் 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்குதான் நாங்கள் முதல் நாள் இரவு தங்கியிருந்தோம்.
பசுபிக் கடலோரத்தில் இருக்கும் உயரம் குறைவான குன்றின் மீது வெள்ளையும் சிவப்பும் ஆக இருக்கும் லைட் ஹவுஸை தூரத்திலிருந்து பார்க்க பொம்மை மாதிரி அழகாய்த் தெரிகிறது.
ஃபிளாரன்ஸ் என்பது பசுபிக் கடலோரத்தில் இருக்கும் சிறு நகரம்.
சீயூஸ்லா (SIUSLA)என்னும் ஆறு பசுபிக்கடலில் சங்கமம் ஆகும் இடத்தில் உள்ள நகரம் இது. 2020 ஆம் ஆண்டின் கணக்குப்படி இங்கு வசிப்பவர்கள் 9,376 பேர் மட்டுமே.
அமெரிக்காவில் மிகவும் பெரிய கடல் சிங்கங்களின் குகை (SEA LION CAVE) இங்கு தான் இருக்கிறது. இந்த குகையின் அளவும் ஒரு கால்பந்து மைதானத்தின் அளவும் சமம்.
இந்த குகையின் வயது 25 மில்லியன் ஆண்டுகாலம். இந்தக் கடல் சிங்கங்களின் குகை, ஆபீஸ் மாதிரி காலை 9:30 மணிக்கு திறந்து மாலை 5:30 மணிக்கு மூடுகிறார்கள். இங்கு 23 பேர் பயணம் செய்வதற்கு உரிய எஸ்கலேட்டர் ஒன்று உள்ளது. அதன் மூலம் கடல் சிங்கங்கள் ஓரி விளையாடும் இடத்துக்கே சென்று நாம் பார்க்கலாம்.
கடல் சிங்கக் குகைக்குள் போக நுழைவு கட்டணம் உண்டு பெரியவர்களுக்கு 18 டாலர், முதியோர்களுக்கு 17 டாலர், 5 முதல் 12 வயது உடைய குழந்தைகளுக்கு 12 டாலர், நான்கு வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு இலவசம். கட்டணம் ஏதுமில்லை. கடற் சிங்கங்கள் பற்றி தனியாக இன்னொரு கடிதத்தில் பார்க்கலாம் மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திக்கலாம் நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்
1 comment:
ஊட்டி அனுபவம் அறிவான அணுகுமுறை தான் அண்ணா..லைட் ஹவுஸ் என்ற தியேட்டர் கோயமுத்தூரில் இருந்தது..லைட் ஹவுஸ் என்ற பெயரில் சினிமா நாவலும் உண்டு ...இரவு எல்லாம் இதில் ஓருவர் அமர்ந்து இயங்கிய காலமும் உண்டு...உங்களது பயணங்களில் கண்டு ஓளி இல்லங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி.எங்கெங்கோ பயணிக்கிற கப்பல்கள் பயணமே செய்யாத ஓளி காட்டியின் வழி காட்டலிலேயே ரை சேர்கிறது ...ஆனந்தம் ..
Post a Comment