Sunday, September 29, 2024

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI,
ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN
ARUM URUM BOOK ON TAMIL RIVERS

100 RIVERS OF TAMILNADU
NEW BOOK ARUM URUM

ஆறும் ஊரும் 
(தமிழகத்தின் 100 ஆறுகளின் 
கதை சொல்லும் நூல்)

CTTE COLLEGE STUDENTS IN LARGE NUMBERS
சென்னை செவாலியர் டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி (சி டி டி இ), பூமி அறக்கட்டளை, மற்றும் எவர்கிரீன் பப்ளிகேஷன்ஸ், இணைந்து நடத்திய"ஆறும் ஊரும்" புத்தக வெளியீட்டு விழா 24. 9 .24, வியாழன் அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூல் வெளியீட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சி டி டி இ மகளிர் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.

சி டி டி இ மகளிர் கல்லூரியின் தாளாளரும் மேனாள் ஐஏஎஸ் அதிகாரியுமான எல் பழமலை அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
 PROFESSOR, DR.SASIKANTA DAS, RELEASED 
THE "ARUM URUM "A BOOK ON RIVERS.

முதல்வர், தாகூர் கலை அறிவியல் கல்லூரி, மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர், பேராசிரியர் முனைவர் சசிகாந்த தாஸ் அவர்கள் தலைமை உரையாற்றி பூமி ஞான சூரியன் எழுதிய "ஆறும் ஊரும்" நூலை வெளியிட்டார்.

சென்னை பெரம்பூர் சி டி டி இ மகளிர் கல்லூரியின் தாளாளர், எல் பழமலை மேனாள் ஐஏஎஸ் அதிகாரி, "ஆறும் ஊரும்" நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

 சென்னை பெரம்பூர் செவாலிட்டி தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் உதவி பேராசிரியை முனைவர் அ. கஸ்தூரி அவர்கள் நூல் மதிப்புரையை வழங்கினார்.
DR.A.KASTHURI, ASST. PROFESSOR,CTTEC

சென்னை பெரம்பூர் சி டி டி இ மகளிர் கல்லூரியின் நூலகர் மற்றும் முனைவர் சுமுகி பத்மநாபன் அவர்கள் தமது வரவேற்புரையில், தமிழகத்தில் இருப்பது இத்தனை ஆறுகளா என்று பிரம்மிக்க வைக்கிறது இந்த ஆறும் ஊரும் நூல் என்றார். 
சென்னை வேளச்சேரி ஸ்டேட் பாங்க் இன் மேல் நாள் தலைமை மேலாளர் எம் பாஸ்கரன் அவர்கள்  தமது வாழ்த்துரையில் மாசடைந்து வரும் ஆறுகளைக் காப்பாற்ற நம்மைத் தூண்டுவதாக உள்ளது இந்த ஆறும் ஊரும் நூல் என்று குறிப்பிட்டார்.
SUMUKI PADMANABAN, LIBRARIAN,CTTEC
M,BHASKARAN, FORMER CHIEF MANAGER
STATE BANK OF INDIA




சென்னை தமிழ் எழுத்தாளர் அறிவழகன் அவர்கள் விழாவில் பங்கேற்று  வாழ்த்துரை வழங்கும் போது இந்த சமூகத்திற்கு  கலாச்சார மேம்பாட்டினை வழங்கிய தமிழக ஆறுகள்பற்றிப் பேசும் முதல் தமிழ் நூல் இந்த ஆறும் ஊரும் என்று கூறினார்.

இறுதியாக ஆறும் ஊரும் நூலின் ஆசிரியர் பூமி ஞான சூரியன்,  நூலை வெளியிட்டோருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் வழங்கியோருக்கும், குறிப்பாக சென்னை பெரம்பூர் செவாலியர் தாமஸ் எலிசபத் கல்லூரி, மற்றும் விழாவில் திரளாக கலந்து கொண்ட  கல்லூரி மாணவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

 அத்துடன் கல்லூரி மாணவிகள் கேட்ட  கேள்விகளுக்கு ஆறும் ஊரும் நூலின் ஆசிரியர் பூமிஞான சூரியன்  பதில் அளித்தார்.
Q & A SESSION WITH STUDENTS

இறுதியாக பிற்பகல் ஒரு மணி அளவில் "ஆறும் ஊரும்" நூல் வெளியீட்டு விழா இனிது நிறைவு பெற்றது

=============================================================================



 .

2 comments:

Anonymous said...

கட்டுரை படித்தேன். உள்ளம் மகிழ்ந்தேன். பணி நிமித்தமாக நிகழ்வுகள் கலந்து கொள்ள இயலவில்லை. மன்னிக்கவும். ஈசன் திருவருளால் எல்லாம் நல்லபடியாக நிகழ்ந்தேறியது. மகிழ்ச்சி.

Anonymous said...

ம. ஹரிஹரன். சென்னை.

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...