|
ALPINE AREA IN OLYMPIC NATIONAL PARK |
ஒலிம்பிக் தேசிய பூங்காவின்
ஆல்பைன் சூழல் செய்திகள்
ALPINE ECOSYTEMS OF
OLYMPIC NATIONAL PARK
அன்பின் இனிய நண்பர்களே. வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? உங்கள்
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்.
இந்த கடிதத்தில் ஒலிம்பிக்
தேசிய பூங்கா பகுதியில் மிகவும் உயரமான பகுதியில் உள்ள ஆல்பைன் சூழல் பகுதிக்கு நேரடியாகச்
சென்று, பார்த்து அதுபற்றி ஆய்வுசெய்து நான் தெரிந்துகொண்ட செய்திகளை
உங்களுக்கு சொல்லுகிறேன்.
ஒலிம்பிக் மலை தேசிய காடுகளின் ஆல்பைன் ஈகோ சிஸ்டம் எனும் உயர்வான
மலைப்பகுதியில் நிலவும் வித்தியாசமான தட்ப வெப்பநிலை மற்றும் சூழல் பற்றி முதலில் பார்க்கலாம்.
சாதாரணமாக சமவெளியின் சூழலுக்கும். மலைப்பகுதியின் சூழல் மற்றும்
தட்பவெப்ப நிலைக்கும் வேறுபாடு இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
|
SNOWY WINDY AREA |
கொடைக்கானல் ஊட்டி மலைப்பகுதிகளில் கூட 4500 அடி உயரத்திற்கு
மேல் போனால் அங்கு வெப்பம் குறைவாக இருக்கும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
அனால் அங்கு தாவரங்கள் வளரும் காலகட்டம் குறைவாக இருக்கும்.
அது பற்றி நமக்குத் தெரியாது. அதனால் அங்கு மரங்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சி குறைவாக
இருக்கும்.
இதைத்தான் சுருக்கமாக நாம் ஆல்பைன் சூழல் என்று சொல்லுகிறோம்.
இங்கு நாங்கள் பார்த்த இடம் 4500 அடிக்கும் உயரமான மலைச்சரிவுகள்தான்.
இங்கு மரங்கள் அதிகம் இல்லை. புல்வெளிகள் மட்டும் பரந்து விரிந்திருந்தது.
அவற்றினூடாக காட்டு பூக்கள் திட்டு திட்டாக பூத்திருந்தது. மலை
முகடுகளை பக்கமாகப் பார்த்தோம். அவற்றை அரையும் குறையுமாக மேகங்கள் மூடியிருந்தது.
|
CHILLNESS BEYOND SWETTER |
உங்கவீட்டு குளிர் எங்கவீட்டு குளிர் என்று சொல்ல முடியாது.
கைகால்கள் மரத்துப்போவது தெரிந்தது. ஈரக்காற்று குளிரை வாரி வீசிக்கொண்டிருந்தது. அது
சொட்டர் ஜெர்க்கினைத் தாண்டி உள்ளே நுழைந்துகொண்டிருந்தது.
இதுதான் ஆல்பைன் பகுதி.
இதனை நாம் உயரமான மலைப்பகுதி என்று சொன்னால் புரியும். இதனை
மரங்கள் இருக்கும் பகுதி அல்லது மரங்கள் வளரும்
பகுதி (TIMBER LINE OR TREE LINE) என்று சொல்லுகிறார்கள்.
இந்த மர வரிசைக்கு மேலே மரங்கள் வளர்வது சிரமம் என்பதை நாம்
புரிந்து கொள்ள வேண்டும். அங்கு மரங்கள் அதிகம்
இருக்காது. மரங்கள் இருந்தாலும் அவற்றின் வளர்ச்சி சரியாக இருக்காது.
மரங்கள் இல்லாத இந்த பகுதியையும் இரண்டாக பிரிக்கிறார்கள். அவை
மரங்கள் வளராத மிதமான உயரமான பகுதி மற்றும் மரங்கள் வளராத மிகையான உயரமான பகுதி.
இப்போதைக்கு ஆல்பைன் என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
இது மரங்கள் வளராத பகுதி. புல்வெளி பரந்திருக்கும் இருக்கும் பகுதி. காட்டுப் பூக்கள்
பூத்திருக்கும் பகுதி.
|
WILD FLOWERS |
ஒலிம்பிக் தேசிய பூங்காவின் சப்ஆல்பைன் பகுதிகளில் (SUB
ALPINE AREA) உள்ள புல்வெளிகளில், பள்ளத்தாக்குகளில் லுப்பினஸ் (LUPINS), பெயிண்ட்
பிரஷ்(PAINT BRUSH), அவலாஞ்சி லில்லி(AVALANCHE LILY) ஆகிய காட்டுப் பூக்கள் அதிக அளவில்
இருக்கின்றன.
இந்த காடுகளின் நிலப்பகுதியில் போர்வை யாக நிலத்தின் மேல் இருக்கும்.
வெப்பநிலையை சூடு தணியாமல் காற்று மற்றும் குளிரிலிருந்து பாதுகாக்கன்றன.
அவற்றை குஷன் பிளாண்ட்ஸ் (CUSHION PLANTS) என்று சொல்லுகிறார்கள்.
இதனை, முட்டிகாலுக்குக் கீழே வளரும் செடிகள் என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் லோ குரோயிங் பிளாண்ட்ஸ் (LOW GROWING PLANTS) என்றும்
சொல்கிறார்கள்.
இவைதான் ஆல்பைன் செடிகள். புற்கள், செட்ஜஸ், ஃபோர்ப்ஸ், மாஸ்,
மற்றும் லிச்சன்கள் (GRASSES, SEDGES, FORBS, MOSS, LICHENS) இவை எல்லாமே ஆல்பைன் வகையறாக்கள்தான்.
ஆல்பைன் காடுகளில் மரங்கள் வளராது. அப்படி வளர்ந்தால் அவை குட்டையாக
வளரும். அதிலும் குறிப்பாக சிலவகை மரங்கள்தான் வளரும். அவை சில்வர் ஃபிர், பைன், ஜூனிப்பெர்,
மற்றும் பிர்ச் (SILVER FIR, PAIN, JUNIPER, BIRCH).
அதாவது தரையை ஒட்டி உயரம் குறைவாக வளர்ந்து நிலப்பரப்பை போர்வை
போல கட்டிப் பிடித்துக் கொண்டிஇருக்கும் தாவரங்கள் (MAT FORMING PLANTS) அல்லது செடிகள்
என்று சொல்லலாம்.
|
CUSHION PLANT MOSS
|
இந்த வகைச் செடிகளில் தாவரங்களில் முக்கியமாக குறிப்பிடப்படுவது
மாஸ் எனும் பாசிகள். இந்த மாஸ் இன்னும் பாசிகள் இந்த மரங்களின் அடிமரம், கிளைமரம்,
சிம்புகள், குச்சிகள், அங்கிருக்கும் பாறைகள், நிலப்பகுதி இப்படி எல்லாவற்றின் மீதும் பச்சை கம்பளியால்
போர்த்தி இருப்பது போல இருக்கின்றன.
இப்படி மரங்கள் மாஸ் அணிந்திருப்பதை இந்த ஹாக் மழைக்காட்டின்
(HOH FOREST)தொடக்கத்தில் இருந்தே என்னால் பார்க்க முடிந்தது. கடல்மட்டத்திலிருந்து
3000 அடிக்கு மேற்பட்ட நிலப்பரப்பிலேயே இதுபோலப் பார்க்க முடியும்.
நான் நிறைய பாசி பிடித்த குளங்களை பார்த்திருக்கிறேன். பாசிபிடித்த
மரங்களை இப்போதுதான் வாஷிங்டன் மாநிலத்தில், மழைக்காடுகளில் பார்க்க முடிகிறது.
ஆல்பைன் பகுதியில் மரங்கள் வளராது. அப்படி வளர்ந்தால் அவை அதன்
வளர்ச்சி சூம்பிப்போனதாக இருக்கும் என்று சொன்னேன். இதனை அறிவியல் ரீதியாக கிரம் ஹோல்ட்
ஃபார்மேஷன் (KRUMKOLTZ FORMATION) என்கிறார்கள். |
TREE WITH KRUMKOLTZ FORMATION |
அப்படி என்றால்.ஒழுங்கற்ற வளர்ச்சி. சூம்பிப்போன வளர்ச்சி. இப்படியெல்லாம்
சொல்லலாம். இதுபற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுகிறேன்.
இந்த மரங்கள் மேலே எழும்பி வளராது. கொடிபோல படர்ந்து வளரும்.
ஆனால் இதன் கிளைகளை யாரோ திருகி வைத்தது போல தென்படும்.
இது காற்று மற்றும் குளிராலும் பாதிக்கப்பட்ட பகுதி என்று பொருள். இங்கு கிளைகளின் வளர்ச்சி மேல்நோக்கி வளராமல்
பக்கவாட்டில் நீண்டு வளரும்.
பனி, ஓடைகள் அல்லது பனி ஆறுகள் என்று சொல்லும் கிளேசியர்கள்,
அவற்றால் ஏற்படும் பள்ளத்தாக்குகள், இந்த மழைக்காடுகளின் வளர்ச்சியில், சூழல் தன்மையினை
நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒலிம்பிக் மலைப்பகுதிகளில் இருக்கும் தாவர வகைகள் பிற இடங்களில்
இருப்பதில்லை. குறிப்பாக ஒலிம்பிக் மவுண்டென் பகுதியில் இருப்பவை.
பக்வீட் எனும் நெளிகோதுமை (BUCK WHEAT)எனும் தாவரம்.
ஒலிம்பிக் சிப்மன்க் எனும் ஒருவகை அணில் (OLYMPIC CHIPMUNKS).
இவை பிற மலைப்பகுதிகளில் இருப்பதில்லை.
பனிஆறுகள் அல்லது ஓடைகள் அவற்றால். உருவாகும் புல்வெளிகள். சிர்க்கியூஸ்
மற்றும் மொரைன்கள் (CIRQUES & MORAINES) தீர்மானிக்கப்படுகின்றன.
கிளேசியர்- பனிஆறு.
சிர்க்யூஸ் – மலை இடுக்குகளின் ஊடாக பனி நீர் நிரம்பிய சிறு
ஏரி.
மொரைன் – பாறைகள், பாறைப்பொடி, மண்சேறு கலந்த வண்டல் அத்துடன்
உருகிய பனி.
மேலும் இந்தப் பகுதியின். சுற்றுச்சூழலை தீர்மானிப்பவை இந்த
பனி ஆறுகள்தான்.
|
VERY HARSH WEATHER |
ஆல்பைன் பகுதியின் முக்கியமான அம்சம், எல்லாக் காலத்திலும் பனியின்
ஆக்கிரமிப்பு இருந்து கொண்டே இருக்கும். இதனைப் பனிப் பிரதேசம் என்று சொல்லலாம்.
கோடையிலும் பனி மூடி இருப்பதால். இப் பகுதியின் ஓடைகள் மற்றும்
ஆறுகளில் எல்லா காலங்களிலும் நீர் வரத்து இருக்கும்.
ஒலிம்பிக் மர்மட். மவுண்ட்ன் கோட்ஸ் மற்றும் கருங்கரடிகள். இவை
எல்லாம். இந்த பகுதிக்கான அதாவது ஆல்பைன்சூழல் விலங்குகள் அல்லது பிராணிகள் என்று சொல்லலாம்.
ஆல்பைன் பகுதியில் இருக்கும் மிகையான மற்றும் கடுமையான தட்ப
வெட்ப நிலையினால் இங்கு இருக்கும் பல உயிரினங்கள்
மற்றும் செடி கொடிகள் அருகி போகின்றன.
ஆல்பைன் சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருப்பவை, காலநிலை மாற்றம்,
நகர்மயமாதல், சுற்றுலா மற்றும் மனிதச்செயல்பாடுகள்.
அன்பின் இனிய நண்பர்களே. இதுவரை. ஒலிம் பிக். தேசிய பூங்காவின்.
ஆல்பைன் பகுதியின் வித்தியாசமான. சுற்றுச்சூழல். பண்புகள் பற்றி பார்த்தோம். மீண்டும்
அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.
உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.
மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்.