Friday, August 30, 2024

WORLD’S LARGEST CAR MUSEUM WASHINGTON வாஷிங்டன் கார் பொருட்காட்சி

The author has explained in detail and the gist is given below. The Colombia river is one of the major river of America. It passes through several states before emptying in to the Pacific Ocean. It contributes around 40% of the electricity needs of the America. The mouth of the Columbia river where it meets the Pacific occurs many shipwrecks earned the area the nick name graveyard of the pacific.

Wish him all the best
V.Sambasivam IFS (Retd), Houston, Texas
Thank you so much for  your precious time,  and appreciating comments.
Bhumii Gnanasoorian
கடல் நண்டுக்கும் வயல் நண்டுக்கும் நிற வேறுபாடு பலரும் அறிந்திருக்கக் கூடும்.

வட சென்னை மின் உற்பத்தியாகும் இடத்தின் அருகில் நான் ஒரு அதிசயக்காட்சியை பலமுறை கண்டிருக்கிறேன். 

அங்குள்ள நண்டுகளுக்கு கொடுக்கு ஒன்று மட்டுமே உள்ளது. அவற்றின் உடல் சிகப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்சு நிறங்களில் கண்டிருக்கிறேன்,
எஸ்.குணசேகரன், சென்னை
வயல் நண்டுகள்  சிறுசாக இருக்கும். கடல் நண்டுகள் பெருசாக இருக்கும்.  நீங்கள் சொன்னதுபோல பல நிறங்களிலும் நண்டுகள் இருக்கின்றன.
பூமி ஞானசூரியன்
WORLD'S LARGEST CAR MUSEUM, WASHINGTON












TAKE CARE OF YOUR CAR IN THE GARAGE, AND THE CAR WILL TAKE OF YOU ON THE ROAD - AMIT KALANTRI

கடிதம். 42

வாஷிங்டன் கார் பொருட்காட்சி

WORLD’S LARGEST CAR MUSEUM WASHINGTON

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம்.

எப்படி இருக்கிறீர்கள் ? சௌக்கியமா? உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்.

சமீபத்தில் நான் வாஷிங்டன்(WASHINGTON) மாநிலத்தில் டகோமா (TACOMA)நகரில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.

சியாட்டல்(SEATTLE) பெருநகரில் இருந்து 54.3 கி.மீ. தொலைவில் உள்ள நகரம் டகோமா.

PANORAMIC VIEW OF CAR MUSEUM

சியாட்டல்  வாஷிங்டன் மாநிலத்தின் தலைநகரம்(CAPITAL). நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்தது இந்த கார் கண்காட்சி.

உலகின் மிகப்பெரிய கார் மியூசியம்(LARGEST CAR MUSEUM). அங்கிருந்து வலக்கை பக்கமாக திரும்பிப் பார்த்தால் அங்கு டகோமாடோம் (TACOMA DOME) என்னும் இண்டோர் ஸ்டேடியம் பார்க்கலாம்.

இந்த இண்டோர் ஸ்டேடியம் முழுக்க முழுக்க மரங்களில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய உள்விளையாட்டு அரங்கம்(WORLD’S LARGEST INDOOR STADIUM).

ANTICS AMONG  ANCIENT CARS

அது பத்தி இன்னொரு கடிதத்தில் பார்க்கலாம்.

இந்த கடிதத்தில் நாம் பார்க்கப் போவது உலகின் மிகப்பெரிய கார் பொருட்காட்சி.

லீமே அமெரிக்கா’ஸ் கார் மியூசியம்(LE-MAY AMERICA’S CAR MUSEUM) என்பது அந்த கார் பொருட்காட்சியின் பெயர்.

இப்போது நான் என் மனைவி, மகன், மருமகள், பேரன்கள் எல்லோருமே பசிஃபிக்கா (PACIFICA) என்ற காரில் போனோம் கார் மியூசியம் பார்க்க.

UNIQUE FEATURES OF ANTICS

இந்த பசிஃபிக்கா என்பது கிரைசாலிஸ் (CHRYSALIS)என்ற கம்பெனியின் கார் நல்ல விஸ்தாரமான கார்.

ஆனால் பார்க்க டொயோட்டா கம்பனியின் சீயன்னா (TOYOTO SEIENNA) மாதிரியே இருந்தது என் மகன் வைத்திருக்கும் கார் சீயன்னாதான்.

THANKS TO PACIFICA 

பசிபிக்கா காரைவிட வசதியான காராக இருந்தது. காரணம் வாஷிங்டன் மற்றும் ஓரிகான் மாநிலங்களில் 10 நாட்கள் நாங்கள் சுற்றிய கார் பசிஃபிக்கா தான்.

நான் ஊரில் இந்தியாவில் வைத்திருப்பது மகேந்திரா ஜீப் டியூவி 300. அதற்கு முன்னாள் வைத்திருந்ததும் ஜீப் மாடல் தான். அது டாட்டா சபாரி. டாட்டா சபாரிக்கும் முன்னாள் இரண்டு அம்பாசடர் கார்கள் வைத்திருந்தேன்.

அந்த இரண்டில் ஒன்று அன்பளிப்பாக வந்த கார். அதுதான் என்னுடைய முதல் சொந்த கார்.

ஒரு செய்திப்படம் தயாரித்துக் கொடுத்ததற்காக எனக்கு அன்பளிப்பாக வந்த கார் அது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் மனுஜோதி ஆசிரமத்தின் தலைவராக இருந்த சகோதரர் அமரர் தேவாசீர் லாரி அவர்கள் தந்த கார் அது.

சுமார் 6000 புகைப்படங்களை வைத்து அவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், 3 மணி நேரத்திற்கு ஒரு செய்தி படம் எடுத்துக் கொடுத்தேன்.

அந்த படம் அவர்களுக்கு பிடித்துப் போனதால் எனக்கு பரிசாக கொடுத்தது. அந்த அம்பாசிடர் கார். இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்டாலம்ம இவ்வுலகம்.

அந்த பழைய அம்பாசிடர் கார்தான் எனக்கு கிடைத்த முதல் சொந்த கார். அந்த கார் வந்த ஆண்டு 2005.

அப்போது நான் ஒரு விபத்தில் அடிபட்டு கால்உடைந்து நடக்க முடியாமல் இருந்தேன்.

அது 2005 ஆம் ஆண்டு முதல் நான் கார் காரனாக இருக்கிறேன்.

வாங்க, இப்ப நம்ம கார் மியூசியம் போகலாம். ஏற்கனவே நான் சொன்னதுபோல உலகின் மிகப்பெரிய கார் பொருட்காட்சி இது.

உலகின் முக்கியமான கார்களையெல்லாம் இங்கு பார்க்கலாம். இங்கு காட்சிக்கு வைத்திருப்பவை மொத்தம் 350 கார்கள்.

நவீனமான கார்(MODERN AUTOMOBILES) என்பதை கண்டுபிடித்தவர்கள் கார்ல் பென்ஸ் (CARL BENZ)மற்றும். கொட்டிலப் டெய்ம்லர் (GOTTELIEB DAIMLER).

இந்த இரண்டு கண்டுபிடிப்பாளர்களும் ஜெர்மன் நாட்டுக்காரர்கள்.

இதனை கண்டுபிடித்த அன்றே அதன் பேட்டண்டை (PATENT)அவர்கள் பதிவு செய்தார்கள். அது 1786 ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள்.

அவர்கள் இருவரும்தான் கேசோலைன் - எஞ்சின் ஆட்டோமொபைல் என்பதைக் கண்டுபிடித்தவர்கள்.

பென்ஸ், தனது முதல் காரை 1775 ஆம் ஆண்டு வெள்ளோட்டம் விட்டார். 1866 ல் டெய்ம்லர் தனது காரினை அறிமுகம் செய்தார்.

கார்ல் பென்ஸ் என்பவரின்  மோட்டார் வேகன்(MOTOR WAGON) என்பது தான் உலகின் முதல் கார்.

கார்ல் பென்ஸ். அந்தக் காரின் அனைத்து பாகங்களுக்கும் பேட்டண்ட்  வாங்கினார்.

எதற்கெல்லாம் வாங்கினார் தெரியுமா?

திராட்டில் சிஸ்டம் (THROTTLE SYSTEM)

ஸ்பார்க் பிளக் (SPARK PLUG)

கீயர் ஷிப்டர் (GEAR SHIPTOR)

வாட்டர் ரேடியேட்டர் (WATER RADIATOR)

கார்பரேட்டர் (COBORETTER)

மற்றும் காரின் இதர பாகங்கள் (OTHER PARTS)

ஏறத்தாழ இதே காலகட்டத்திலும். இந்தியாவிலும் கார்கள் தயாரிக்கப்பட்டன.

அந்த வகையில் 1797 இல் கல்கத்தாக்காரர் ஒருவர்  ஒரு காரை இந்தியாவிற்குக் கொண்டு வந்தார்.

அடுத்த ஆண்டில் பம்பாயில் நான்கு கார்கள் ஓடின. அனேகமாக அதை அப்படியே நகலெடுத்திருக்கலாம். அந்த நான்கு கார்களில் ஒரு கார் ஜாம்ஷெட்ஜி டாட்டாவுக்கு சொந்தமானது.

மெக்கானிகல் என்ஜினீயரான கார்ல் பென்ஸ் தான் முதல் முதலாக காரை ஓட்டியவர். அவர் ஓட்டிய கார் அதிகபட்ச வேகமாக மணிக்கு 16 கிலோ மீட்டர் ஓடியது.

கோட்லீயப் டையம்லர் என்பவர் தான் முதல் முதலாக பெட்ரோலில் ஓடும் காரை 1866 ம் ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

வாஷிங்டன் மாநிலத்தில் டகோமா நகரில் அமைந்துள்ள இந்த கார் மியூசியத்தில் 300 க்கும் அதிகமான கார்கள் இருக்கின்றன.

பழைய கார்கள்.

புதிய கார்கள்.

வித்தியாசமான வடிவம் கொண்ட கார்கள்,

விலை உயர்ந்த கார்கள்.

நவீன கார்கள்.

இப்படி எல்லாவற்றையும் அங்கு காட்சிப் பொருட்களாக வைத்திருந்தார்கள். அந்த காலத்தில் பழங்குடி மக்கள் பயன்படுத்திய பல வகை மோட்டார் சைக்கிள்களை கூட அங்கு காட்சிப்பொருட்களாக வைத்திருந்தார்கள்.

இந்த கார் மியூசியம் அமைந்துள்ள கட்டிடம் பார்க்க பிரமாண்டமாக உள்ளது. இந்த கட்டிடத்தின் பரப்பு. 1,65,000 சதுரஅடி.

நவீன வசதிகள் கொண்டது.

இங்கிருக்கும் கார்களை மோட்டார் சைக்கிள்களை வெறுமனே காட்சிப்படுத்தாமல் அவற்றின் அருகில் அவை தொடர்பான தகவல் பலகைகளையும் வைத்திருந்தார்கள்.

பழைய கார்கள்

புதிய கார்கள்

மற்றும் நவீன கார்கள் போன்றவை.

இவை குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது இந்த கண்காட்சி சாலையில் நடத்துகிறார்கள்.

வித்தியாசமான இந்த கார் மியூசியத்தை ஹரோல்ட் லீமே (HAROLD LE-MAY) என்பவர்தான் நிறுவினார். இந்த கார்களை எல்லாம் அவர்தான் சேகரித்தார்.

இந்த காட்சி சாலையில் பெருமளவு இருப்பவை மிகவும் அரிதான அமெரிக்கா மாடல் கார்கள், ஐரோப்பிய மாடல் கார்கள்.

இந்த காட்சி சாலையில் இருக்கும் 10 வித்தியாசமான கார்களை உங்களுக்கு சொல்லுகிறேன்.

1.     1948 டக்கர் 48. (1948 TUCKER 48), இந்த மாடலில் ஐம்பத்தோரு கார்கள் மட்டுமே அப்போது செய்யப்பட்டது.

2.     1963 செவ்ரோலெட் கார்வெட்டி ஸ்டிங் ரே(1963 CHEVROLET CARNETTE STING RAY). இது 495 குதிரைத்திறன் கொண்ட பந்தய கார்.

3.     1930 டியூசன் பார்க் மாடல் ஜே (1930 DUESONBERG MODEL) 245 குதிரை திறன் கொண்டது. ஓரு மணி நேரத்தில்  116 மைல் ஓடும் சொகுசு கார்.

4.     1983 டிலோரியன் டிஎம்சி 12 (1983DELOREON DMC 12) இறக்கை மாதிரி கார் கதவுகளை கொண்ட புதுமையான பந்தய கார்.

5.     1965 ஷெல்பி ஜிடி 350 (1965 SHELBY GD 350) ஃபோர்ட் கம்பெனியின் பந்தயக்கார்.

6.     1927. லாசால்லி. கெடிலாக். (1927-LA SALLE), இது கெடிலா கம்பெனியால் தயாரிக்கப்பட்ட கார்.

7.     1957 கிறைஸ்லர் 300 சி.(1957 CHRYSLER 300) இது க்ரைஸ்லர் கம்பெனியால் உருவாக்கப்பட்ட லக்சரி கார். அமெரிக்காவின் சக்திமிக்க கார் என்று விளம்பரம் செய்யப்பட்ட கார் அது.

8.     1970 பிளைமத் ஹெமி கியூடா (1970 PLYMOUTH HEMI CUDA) 425  குதிரைத் திறன் உடைய கார் இது. இது ஒரு மஸில் கார்.

9.     1917 கிரேன் சிம்ப்ளக்ஸ் மாடல் 5. (1917 CRANE – SIMPLEX MODEL 5)இது ஒரு லக்ஸரி கார். ஆறு சிலிண்டர் உடைய கார்.

RARE FEATURES OF THIS ANTICS

10.  1969 டாட்ஜ் சார்ஜர் (DODGE CHARGER) இதனை லக்சரி கார் என்று சொல்ல முடியாது. அமெரிக்கன் பிராண்ட் கார் இது.

இந்த கார்களை எல்லாம் நீங்கள் நினைவில் வைத்துகொள்ள சிரமப்பட வேண்டாம். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றை எல்லாம் பதிவு செய்துள்ளேன்.

அன்பின் இனிய நண்பர்களே,  இந்த கடிதத்தில் சொல்லப்பட்ட செய்திகள் உங்களுக்குப் பிடித்ததா என்று உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திக்கலாம். நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்.

gsbahavan@gmail.com

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...