Thursday, August 29, 2024

WE TRAVELLED ON THE GRAVEYARD OF PACIFIC OCEAN மகாசமுத்திரத்தின் மயானபூமியில் பயணம் செய்தோம்

COLUMBIA RIVER NEAR ARISTORIA CITY
THE GRAVEYARD OF PACIFIC OCEAN

நண்பர்களிடம் கேட்டபோது, வளைகளில் இருக்கும் நண்டுகளை பிடித்து தின்ன விரும்பும் நரி தன் வாலை வளைக்குள் விடும். நண்டுகள் நரியின் வாலை கெட்டியாக பிடித்துக் கொள்ள, உடனே அது வாலை வளையிலிருந்து  எடுத்து அருகில் உள்ள கல்லின் மீது அடித்துக் கொன்று அதன் சதைப் பகுதியை மட்டும் சாப்பிட்டுவிட்டு செல்லுமாம்.

நான் தென்னைமரம் நண்டு பற்றி கல்லூரி நாட்களில் படித்திருக்கிறேன்.

எஸ்.குணசேகரன், சென்னை

 நானும் சின்ன வயசில் இந்தக் கதையை கேள்விப்பட்டிருக்கிறேன். நண்டு ரசம் ஜலதோஷத்தை உடனே சரி செய்யும் என்பார்கள். நண்டு ரசம் காரசாரமாக இருக்கும்.

பூமி ஞானசூரியன்

ARISTORIA IS SORT OF GRAVEYARD FOR SHIPS - UNKNOWN



மகாசமுத்திரத்தின் மயானபூமியில்

பயணம் செய்தோம்

WE TRAVELLED ON THE

GRAVEYARD OF PACIFIC OCEAN

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் ! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்.

இன்றைய கடிதத்தில் பசிபிக் கடலின் மயான பூமி எது என்று உங்களுக்கு நான் சொல்லப்போகிறேன்.

பசிபிக் மகா சமுத்திரத்தில் கொலம்பியா ஆறு சங்கமம் ஆகும் இடம்தான் பசிபிக் கடலின் மயான பூமி.

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளில் ஓடும் ஆறு கொலம்பியா ஆறு.

ஓடும் தூரம் 2000 கிலோமீட்டர்

பிறக்கும் இடம் கனடா

சங்கமம் ஆகும் இடம் அஸ்டோரியா நகரம்.

 அஸ்டோரியா நகரம் இருக்கும் இடம் ஓரிகன் மாநிலம்.

வட அமெரிக்காவில் ஓடும் மிக நீளமான ஆறுகளில் ஒன்று இது.

இதன் ஆற்றுப் படுகைப் பரப்பு 6,70,000 சதுர கிலோமீட்டர்.

அமெரிக்காவில் ஏழு மாநிலங்களில் இந்த கொலம்பியா ஆறு ஓடுகின்றது.

அவை வாஷிங்டன்

ஓரிகன்

இடாகோ,

மோன்டானா.

நெவாடா

வியோமிங் மற்றும்

ஊட்டா.

COLUMBIA RUNS IN 7 STATES OF USA

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த நீர் மின்சாரத்தில் 40 சதவிகித மின்சாரத்தை கொலம்பியா ஆறு தனது  14 அணைக்கட்டுகளில் உற்பத்தி செய்கிறது.

தானியங்கள், மரக்கட்டைகள் மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்ல நீர்வழி போக்குவரத்தாக உதவுகிறது இந்த கொலம்பியா ஆறு.

ஜிம் கொலம்பியா ஆறு பல்வேறு தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கும், உயிரினங்களுக்கும் உதவிகரமாக உள்ளது.

அவை ஆல்பைன் காடுகள்

வறண்ட பாலைவனங்கள்

பலவகை வனவிலங்குகள்

பிராணிகள்

பிற  உயிரினங்கள்

சில முக்கியமான உதாரணங்கள்.

கொலம்பியா ஆற்றின் சீனூக் சாலமன் மீன்(CHINOOK SALMON FISH) மற்றும் கிரே உல்ஃப் (GRAY WOLF)என்னும் சாம்பல் நிற ஓநாய்.

COLUMBIA RIVER BETWEEN
OREGON & WASHINGTON

மீன்பிடித்தொழில் படகு சவாரி நீர்ச்சறுக்கு போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பேருதவியாக உள்ளது கொலம்பியா ஆறு.

நாங்கள் ஒருமுறை போர்ட்லாண்டில் இருந்து வான்கூவர் நகரத்துக்கு சென்றபோது குறுக்காக இருந்த கொலம்பியா ஆற்றை தாண்டித்தான் சென்றோம்.

போர்ட்லேண்ட் ஆர்கன் மாநிலத்திலும் வாங்கூவர் வாஷிங்டன் மாநிலத்திலும் உள்ளது

ஆனால் அது இரவு நேரம் ஆனதால் ஆர்வமாக இருந்தும் வான்கூவர் செல்லும்போது கொலம்பியா ஆற்றினை சரிவர பார்க்க முடியவில்லை.

கொலம்பியா ஆற்றினை எங்கு பார்க்க போகிறோம்? எப்படி பார்க்கப் போகிறோம் என்று யோசனையாக இருந்தது எனக்கு.

ஒருநாள் கேனன்பீச் (CANNON BEACH) போவதற்காக நாங்கள் காரில் போய்க் கொண்டிருந்தோம்.

அப்போது அதிர்ஷ்டவசமாக இன்றைக்கு நேரமாக என்ன ஆறு என்று தெரியாமல் கொலம்பியா ஆற்றின் கரையில் போய்க் கொண்டிருந்தோம்.

கார்நிறுத்த வசதியான ஒரு இடம் கிடைத்தது. அங்கு ஒரு ரெஸ்டாரன்ட் இருந்தது.வாஷ்ரூம் இருந்தது. அந்த இடத்தில் அஞ்சிப்பத்து அழகு மரங்கள் இருந்தன.

அது என்ன ஆறு என்று கண்டுபிடிப்பதற்கு அது வசதியாக இருந்தது.

அதிர்ஷ்டவசமாய் நாங்கள் இறங்கிய இடம் அஸ்டோரியா (ASORIA) எல்லைப்பகுதி.

கொலம்பியா ஆறு பசிபிக் கடலுடன் சங்கமம் (ESTUARY OF COLUMBIA RIVER) ஆகும் இடம் தான் இந்த அஸ்டோரியா நகரம் என்று தெரிந்தது.

இதைத் தெரிந்து கொண்டு நாங்கள் எங்கள் கார்ப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அஸ்டோரியா பகுதியில் கொலம்பியா ஆற்றின் குறுக்காக இருக்கும் அஸ்டோரியா மெக்லர் பிரிட்ஜ் (ASTORIA – MEGLER BRIDGE) பெரிய ஸ்டீல் பாலம் இருக்கிறது. தொலைவில் இருக்கும் இரண்டு மலை உச்சிகளை சேர்த்த மாதிரியான பெரிய பாலம் என்பதை விட பிரம்மாண்டமான பாலம் என்று சொல்ல வேண்டும்.

எங்கள் கார் கம்பீரமான் அந்த பாலத்தின் உள்ளே நுழைந்தது.

கீழே ஆறு,

அதன்மீது சாலை,

வலது இடது மற்றும் மேல் பக்கங்களில்  இரும்பு சட்டங்களால் இணைக்கப்பட்ட பாதுகாப்பான கூடு.

அதுதான் அந்த அஸ்டோரியா மெக்லர் மேம்பாலம்.

அதன் நீளம் 21474 அடி

அகலம் 28 அடி

நீரில் நிறுத்தப்பட்டிருக்கும் தூண்கள் 171

கட்டி முடித்தது 1966

காரை எப்படி ஓட்டினாலும் பாலத்தை மீறி கொலம்பியா தண்ணீரில் கார் குதிக்க முடியாது.

பாதுகாப்பான பாலம்.

ASTORIA-MEGLER BRIDGE ACROSS COLUMBIA RIVER

அந்த பாலத்தைத் தாண்டி சென்றால் அடுத்து இருக்கும் நகரம் என்ன என்று பார்த்தேன். அஸ்டோரியா என்று தெரிந்தது.

அஸ்டோரியா என்ற இடம்தான் கொலம்பியா ஆறு பசிபிக் கடலுடன் சேரும் இடம். அதுதான்  கொலம்பியா ஆறு சங்கமம் (ESTUARY) ஆகும் இடம்.

கொலம்பியா ஆற்றின் முரட்டு அலைகள் பசுபிக் மகா சமுத்திரத்தின் பிரம்மாண்டமான ராட்சச அலைகளும் கைக்கோர்க்கும் இடம் என்று எனக்கு அப்போது தெரியாது.

பாதுகாப்புக்காக கப்பல்கள் கரை சேருவதற்கு முன்னதாக அவற்றை தரை தட்டச் செய்து தவிடு பொடியாக்கும் ரிவர்பார்கள் (RIVER BARS) நிறைந்தப் பகுதி என்று தெரியாது.

ரிவர்பார் என்றால் மண் மேடு என்று அர்த்தம்.

ஆறும் கடலும் சேரும் இடத்தில் மணல் மேடுகள் ஆபத்தான வகையில் சேர்ந்து நிற்கும் இடம்.

ஆபத்தான முரட்டு குணமும் அழிச்சாட்டிய குணமும் கொண்ட. கொடூரமான அலைகள் ஆர்ப்பரிக்கும் இடம்.

இந்த அலைகளின் முரட்டுக் கரங்கள் அடிக்கடி இந்த ஆபத்தான மணல் மேடுகளை  இடமாற்றம் செய்யும்.

இந்த கடலும் அந்த ஆறும் சேரும் முகத்துவாரம் கப்பல்களுக்கு ஆபத்தான.பகுதியாக மாற்றி உள்ளது இந்த மணல் மேடுகள்.

தண்ணீரின் அடி ஆழத்திற்குள் நடக்கும் இந்த ஆபத்தான விளையாட்டை யாராலும் அறிய முடியாது.

மிகப்பெரியதுமாக ஆழமானதுமாக அங்கு அடிக்கும் அலைகளுக்கு பார் பிரேக்கர்ஸ் (BAR BREAKERS)என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

ஆற்றல் மிகுந்து அடங்காமல் ஆர்ப்பரிக்கும் இந்த அலைகள் கப்பல்களை கண்ணாமூச்சி விளையாட விட்டுவிடும்.

இங்கு பயணப்படும் கப்பல்கள் தடம்மாறிப் போகும் என்பதை விட தடுமாறிப் போகும்.

இந்த காரணங்களால் கப்பல்கள் செல்லும் தண்ணீர்த் தடம் குறுகலாக மாறிவிடும். ஆழம் குறைந்த இடமாக மாறிப் போகும்.

இந்த இடத்தில் தடுமாறும் கப்பல்கள் தவிடுபொடியாக உடைந்து உருக்குலைந்து போய் விடும்.

இந்த வகையில் இந்த கொலம்பியா ஆற்றின் முகத்துவாரத்தில் இதுவரை உடைந்து போன கப்பல்கள் மட்டும் 2000 என்கிறது ஒரு அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரம்.

அதனால்தான் கொலம்பியாவின் முகத்துவாரம் கப்பல்களை புதைக்கும் இடுகாடு(ARISTORIA GRAVEYARD OF PACIFIC OCEAN) என்று சொல்லுகிறார்கள். சுடுகாடு என்கிறார்கள். மயானபூமி எங்கிறார்கள்.

இது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் நாங்கள் கேனன்பீச் (CANNON BEACH) என்ற இடத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தோம்.

எங்களுக்கு பின்னால் இருந்து சிரித்தது அரிஸ்டோரா நகரம்.

இந்த கடிதம் பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கமெண்ஸ் பகுதியில் பதிவிடுங்கள்.

மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.

நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com

 

 


1 comment:

Anonymous said...

The author has explained in detail and the gist is given below. The Colombia river is one of the major river of America. It passes through several states before emptying in to the Pacific Ocean. It contributes around 40% of the electricity needs of the America. The mouth of the Columbia river where it meets the Pacific occurs many shipwrecks earned the area the nick name graveyard of the pacific.
Wish him all the best
V.Sambasivam IFS (Retd), Houston, Texas

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...