ஒலிம்பிக் விளையாட்டை தொலைக்காட்சியில் பார்க்கிறோம். அரங்கில் நுழையும் வாய்ப்பில்லை. நீங்கள் ஒலிம்பிக் காட்டுக்குள்ளேயே சென்றுவிட்டீர்.படர் பாசிச்செடிகளின் பயனையும் அதன் தன்மையையும்அறிந்துகொண்டோம். ஒரு காட்டின் பசுமைக்கு பாசிகளும் காரணம்அது தன் சேமிப்பிலிருந்து ஈரம் வழங்குவது ஈரமானச்செய்தி
SUNOQUALMIE WATER FALLS OF WASHINGTON |
கடிதம் 44.
வாஷிங்டன் குற்றாலம்
சுனோக்குவால்மி
WASHINGTON’S POPULAR
WATERFALLS SUNOQUALMIE
அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? சவுக்கியமா? உங்கள் உங்கள் குடும்ப
உறுப்பினர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்.
இன்று நான் உங்களுக்கு வாஷிங்டன் மாநிலத்தின் பிரபலமான நீர்வீழ்ச்சி
பற்றி சொல்ல போகிறேன். அதன் பெயர் சுனோக்வால்மி. கொஞ்சம் கடினமான பெயர்.
நான் சொல்லப்போவது.
சுனோக்வால்மி நீர்வீழ்ச்சி.
சுனோக்வால்மி மலை.
சுனோக்வால்மி ஆறு.
சுனோக்வால் பள்ளத்தாக்கு.
சுநோக்வால் பழங்குடி மக்கள்.
சுனோக்வால்மி நீர்வீழ்ச்சி நயாகாரா நீர்வீழ்ச்சியை விட 100 அடி
உயரம் அதிகமானது. இதன் உயரம் 268 அடி.
அமெரிக்காவின் ஆறுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும்
அதன் பெயர் ஒரு பழங்குடியின் பெயராக இருக்கும்.
இந்த நீர்வீழ்ச்சியின் பெயரும் அப்படித்தான். சுனோக்குவால்மி
என்பதும் இங்கு வசித்த பழங்குடி மக்களின் பெயர்தான்.
ஒரு 10 தடவை சொன்னால் சுனோக்வால்மி நினைவில் நின்றுவிடும்.
ஒரு நாள் இந்த நீர்வீழ்ச்சியை நாங்கள் பார்க்கப் போயிருந்தோம்.
சுனோக்வால்மி நகரின் பிரதான சாலை ஓரத்திலேயே இருந்தது அந்த நீர்வீழ்ச்சி.
அங்கு காரிலிருந்து இறங்கும்போது மழை பூ உதிர்வது மாதிரி உதிர்ந்து
கொண்டிருந்தது.
குளிரும் மழையும் தாங்கும்படியாக சொட்டர், ஜெர்கின் எல்லாம்
மாட்டிக்கொண்டு காரில் இருந்து இறங்கினோம்.
கார் நிறுத்தக் கட்டணம் செலுத்தி அங்கு காரை நிறுத்தினோம்.
WATERFALLS ENTRANCE |
நீர்வீழ்ச்சி பார்க்க அனுமதி கட்டணம் செலுத்திவிட்டு மரங்கள்
அடர்ந்த சோலையாக இருந்த நுழைவு வாயிலில் நடந்தோம்.
அந்த நீர்வீழ்ச்சி அலுவலகம் ஒரு பூங்கா மாதிரி அழகழகான மரங்களின்
ஊடாக அமைந்திருந்தது.
எளிதாக நடந்து செல்லும் ஒரு சிறிய நடைபாதை. மழையில் நனைந்திருந்த அந்தப் பாதையில் எங்களை ஜாக்கிரதையாக அழைத்துச் சென்றார்கள்.
அங்கிருந்த ஒரு சிறிய மலைக்குன்று ஒன்றில் ஏறி நின்றோம். அந்த அருவி அழகாய்த் தெரிந்தது.
268 FEET HEIGHT FALLS |
மூன்று அல்லது நான்கு தென்னை மரம் உயரத்தில் அந்த அருவி எதிர்த்
திசையில் ஒரு பெரும் பால்தொட்டியைக் கவிழ்த்தது போல கொட்டிக் கொண்டிருந்தது.
அந்த மலைக்குன்றில் நின்றபடி சுற்றுலா வந்தவர்கள் நீர்வீழ்ச்சியைப்
பின்னணியாக வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அங்கு எடுத்துக்
கொண்டோம்.
ஆயிரம் கண் போதாது! வண்ணக்கிளியே ! குற்றால அருவியை காண ! என்ற
சினிமா பாட்டு எனக்கு ஞாபகத்தில் வந்தது.
சாரலுக்குப் பெயர்போன
குற்றாலம்.
ஒகேனக்கல் அருவியின் வட்டப்படகு.
சாலை ஓரத்தில் சலசலக்கும் பெருமாள் மலை வெள்ளி அருவி.
மஞ்சள் ஆறு வெள்ளை னிறத்தில்
இறங்கும் எலிவால் அருவி.
கம்பம் மலையிலிருந்து
இரு தவணையாய் இறங்கும் சுருளி அருவி
நயாக்ராவின் ஹரிக்கேன் டெக்’கில் நனைந்தது.
அனைத்தும் நினைவில்
வந்து போனது.
நான் பார்த்து அந்த நீர்வீழ்ச்சிகள் அனைத்தும் நினைவில் குளிரடிக்க
ஸ்னோக்வால்மி விழுதாக இறங்கிக் கொண்டிருந்தது.
DISCHARGE 12000 CFT. WATER PER SECOND |
நீர்வீழ்ச்சியின் வலக்கைப் பக்கம் நிற்கவைத்த பச்சை நிற கோன்
ஐஸ் மாதிரி பைன் மரங்கள் நின்று கொண்டிருந்தன.
ஒரு விநாடியில் கோடை பருவத்தில் 1700 கன அடி நீரும் குளிர் பருவத்தில்.
12,000 கனஅடி நீரும் இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் கொட்டுகிறதாம்.
இது கொட்டும் இடத்தில் 65 அடி ஆழத்திற்கு குளமாகத் தேங்கி, பின்
வழிந்து ஆறாக ஒடத் தொடங்குகிறது.
இந்த ஆறு சுனோக்வால்மி பள்ளத்தாக்கில் (SNOQUALMIE VALLEY) ஒடி
அங்கு விவசாயம் மற்றும் மரசாகுபடிக்கு (AGRICULTURE & TIMBER FARMING)உதவுகிறது.
HYDRO POWER GENERATION FROM 1898 |
அதிகபட்சமான உயரத்திலிருந்து கொட்டும் இந்த நீரின் விசையை பயன்படுத்தி
இங்கு நீர் மின்சாரம் (HYDRO ELECTRICITY) தயாரிக்கிறார்கள்.
ஒரு ஆச்சரியமான செய்தி ! 1898 ஆம் ஆண்டிலேயே இந்த நீர்வீழ்ச்சியில்
இருந்து மின்சாரம் தயாரிக்கத் தொடங்கினார்கள்.
நாங்கள் நின்றிருந்த உச்சி பாறைக்கு கீழே இறங்கும் நடைபாதையில்
நடந்து சென்றால் ஒரு பூங்காவினை சென்றடையலாம்.
அந்த பூங்காவில் இருந்து பல கோணங்களில் அந்த நீர்வீழ்ச்சியை, அது ஆறாக இறங்கி ஓடும் அழகையும்
கண்டு ரசிக்கலாம்.
குழந்தைகளக் கூட்டிச்சென்றால் குளிரை சட்டை செய்யாமல் அந்தப்
பூங்காவில் ஓடிப்பிடித்து விளையாடலாம்.
இந்த நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் அழகாக உயர்ந்திருக்கும்
இரட்டை மலை முனைகளை “டுவின் பீக்ஸ்” (TWIN
PEAKS)என்று சொல்லுகிறார்கள்.
TURBINES PRODUCE HYDRO POWER |
ஒரு காலத்தில் இதனை 37 மில்லியன் வயதுடைய மலையின் தொடர்ச்சி
என்று சொன்னார்கள்,
இப்போது இதனை இளவயது கொண்ட எரிமலையின் தொடர் என்கிறார்கள்.
வாஷிங்டன் மாநிலத்தில் வடக்கு கேஸ்கேட் மலைத்தொடரின் (CASCADE
MOUNTAINS) ஒரு பகுதிதான் இந்த சுனோக்குவால்மி மலைப்பகுதி.
SUNOQUALMIE RIVER SIDE TREE WITH MOSS |
மவுண்ட் ரெய்னியர் மற்றும் மவுண்ட் ஹூட் எரிமலைகளும் (MOUNT
RAINIER & MOUNT HOOD VOCANOES) இந்த கேஸ்கேட் மலைத்தொடரின் ஒரு பகுதிதான்.
சாதுவாகத் தெரிந்தாலும் இந்த சுனோக்குவால்மி’யும் ஒரு எரிமலைதான்.
என்னைக் கேட்டால் வாஷிங்டன் மாநிலத்தை எரிமலை மாநிலம் (VOLACANO
STATE)என்று சொல்லலாம். கேஸ்கேட் மலைத்தொடரை எரிமலை மலைத்தொடர் (VOLCANO MOUNTAINS) என்றும் சொல்லலாம்.
எனது இந்தப் பயணத்தைக்கூட எரிமலைப் பயணம் (VOLCANO TRAVELS)
என்று சொல்லலாம்.
FALLSPOND WITH 65 FT. DEPTH |
சுற்றுலா செல்ல மட்டுமல்ல, இந்த நீர்வீழ்ச்சி தொலைக்காட்சி தொடர்
எடுப்பவர்களுக்கு ஏற்ற இடம். ஏகப்பட்ட தொ. கா. தொடர்கள் ஏற்கனவே இங்கு எடுத்து முடித்துவிட்டார்களாம்.
சுனோக்வால்மி என்ற பெயரில் ஒரு ஊரே இருக்கிறது. அங்கு சுமார்
14,000 பேர் வசிக்கிறார்கள்.
இங்கு சுனோக்வால்மி பழங்குடி (SUNOQUALMIE
TRIBE) மக்கள் தற்போது 500 பேர்தான் வசிக்கிறார்கள்.
ஆனால் அக்கம்பக்கம் உள்ள நகரங்களிலும் இவர்கள் வசிக்கிறார்கள்.
நார்த் பெண்ட்(NORTH BEND)
ஃபால் சிட்டி (FALL CITY)
கார்னேஷன் (CARNATION)
ஈசாக்குவா (ISSAQUAH)
மெர்சர் ஐலேண்ட் (MERCER ISLAND)
மன்றோ (MONROE)
வாஷிங்டன் மாநிலத்தின் தலைநகரம் சியாட்டலில் (SEATTLE) இருந்து
45 கிலோ மீட்டர் பயணம் செய்தால் ஸ்னோக்வால்மி நகரை வந்தடையலாம்.
சுனோக்வால்மி நகரம் ஸ்னோக்வால்மி ஆற்றங்கரையில் இருக்கும் மில்டவன்
என்று சொல்லுகிறார்கள்.
சுனோக்வால்மி பழங்குடிகள் இந்த பகுதியில் பதின்மூன்றாயிரம் ஆண்டுகளாக
வசித்து வருகிறார்கள்.
இந்த சுனோக்வால்மி ஆற்றிற்கு மூன்று துணை ஆறுகள் இருக்கின்றன.
SUNOQUAL RIVER SUPPORTS AGRI. CROPS & TIMBER FARMING |
அவை வடக்கு ஆறு (NORTH FORK)
மத்திய ஆறு (MIDDLE
FORK)
தெற்கு ஆறு (SOUTH FORK)
இந்த நீர்வீழ்ச்சிக்கு கொஞ்சம் முன்னதாக இந்த மூன்று துணை ஆறுகளும்
ஸ்னோக்வால்மி ஆற்றுடன் சேருகின்றன.
இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து ஆறாக ஓடும் சுனோக்வால்மி, ஸ்கைகோமிஷ்
(SKYKOMISH) என்ற ஆற்றுடன் சேர்ந்து. சுனோஹோமிஷ் (SUNOHOMISH RIVER) என்ற ஆறாக உருவெடுக்கிறது.
WILD FLOWERS & PINE FOREST WITH FALLS |
அந்த சுனோஹோமிஷ் ஆறு புகட்சவுண்ட்(PUGET SOUND) என்ற பசிஃபிக்
சமுத்திரத்தின் முகத்துவாரத்தில் (ESTUARY IN PACIFIC OCEAN) சங்கமமாகிறது.
அன்பு நண்பர்களே வாஷிங்டன் மாநிலத்தின் தலைநகரம் சியாட்டலுக்கு
அருகில் உள்ள பிரபலமான சுனோக்வால்மி நீர்வீழ்ச்சிக்கு சென்ற அனுபவம் மற்றும் அதன் பின்னணி
செய்திகளையும் உங்களுக்கு சொன்னேன்.
சுனோக்வால்மி உங்களுக்கு பிடித்திருந்ததா? சுனோக்வால்மி பிடித்திருந்தால்
உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள். மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment