Saturday, August 10, 2024

TRAIL OF TEARS - பழங்குடிகளின் கண்ணீர்த் தடம்

 
நல்லப்பதிவுங்க வெந்நீர் ஊற்று இங்கும் இமயமலைப்பகுதியில் பார்த்து உள்ளோம். இந்த ஊற்று நீர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாங்க ? இதில் மினரல்ஸ் உள்ளனவா இவை போலவே நாம் உருவாக்கலாமே? அறிவானவங்க நமக்கு முன்னமே இதை செய்திருப்பாங்களே ...நீர் ஆச்சர்யமான ஓன்று. முதன் மழை பெய்த போது பூமியில் எந்த உயிரும் கிடையாது என்ற ம.செந்தமிழன் புத்தகம் ஞாபகம் வருகிறது ...நன்றிங்க- சுப்பிரமணி பாலா, கோவை

(அன்பு பாலா, மருத்துவப் பரிசோதனை செய்த நீர்தான் அது, தொடரும் உங்கள் கருத்துரைக்கு நன்றி)

கண்ணீர்த் தடம்

TRAIL OF TEARS

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம்.

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம். நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பெற்றோர், குழந்தைகள், எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்கள்.

இது எனது 30 வது கடிதம்.

இந்த 30 கடிதங்களிலும் அமெரிக்காவின், பெரும் கால்நடை பண்ணைகள்,  கவ்பாய் கலாச்சாரம், அதற்கு முன்னதாக வசித்த அமெரிக்க ஆதிகுடிகள்,  அவர்கள் ஃபிரெஞ்சு காரர்களுடன் தொடங்கிய ரோம வியாபாரம், ஆறுகள், ஏரிகள் ஆகிய நீர் ஆதாரங்கள், அத்துடன் தொடர்புடைய அமெரிக்காவின் சரித்திரம்,  மற்றும்  ஆதிகுடிகள் பற்றியும் எழுதி வருகிறேன்.

அமெரிக்காவின் ஆதிகுடிகள், பழங்குடிகள் பற்றி நாம் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அது தளம் போடாமல் கட்டிய கட்டிடத்திற்கு  சமம். அமெரிக்காவின் அடித்தூராக, வேராக, இன்று விழுதாகவும் இருப்பவர்கள் இந்த பழங்குடிகள்தான்.

ஆனால் இன்றைய கடிதத்தில் முக்கியமான முன்னேறிய, நாகரீகமடைந்த, ஐந்து பழங்குடிகள் பற்றியும், டிரெயில் ஆஃப் டீயர்ஸ் என்று பிரபலமாக சொல்லப்படும் கண்ணீர்த் தடம் என்றால் என்ன என்றும் உங்களுக்கு சொல்லவிருக்கிறேன்.

செரோக்கி, சிக்கசா. சோக்டாவ், மஸ்கோஜி. மற்றும் செமிநோல். (CHEROKEE, CHOKTAW, MUCOGEE, & SEMINOLE) இந்த  ஐந்து பழங்குடிகள்தான் அமெரிக்காவின் 574 பழங்குடிகளில்தான் தங்கள் கண்ணீர்த் தடங்களை தாண்டி  முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்

CHEROKEE TRIBE


செரோக்கி பழங்குடிகள். வாழ்வாதாரம் விவசாயம். விவசாய வேலைகள் அனைத்தையும் செரோக்கி இனப் பெண்கள் தான் செய்வார்கள். மக்காச்சோளம் அவரை. ஸ்குவாட், சூரியகாந்தி ஆகியவற்றைப் பயிரிடுவார்கள். ஆண்கள் வேட்டைக்குப் போவார்கள், மீன் பிடிப்பார்கள், மான் கரடி, காட்டு வான்கோழிகள் ஆகியவற்றை வேட்டையாடுவார்கள்

இந்த ஐந்து பழங்குடிகளில் முக்கியமானவர்கள் இந்த செரோக்கிகள். இதற்கு முக்கியமான காரணம், ஆங்கிலோ அமெரிக்க மக்களுடன் இவர்கள் ஒத்துப்போனது மற்றும் அவர்களை ஏற்றுக் கொண்டது ஆகியவைதான்.

அடுத்து சிக்கசா பழங்குடிகள். இவர்கள் வட அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியின் காடுகளில் வசித்தவர்கள். குறிப்பாக மிசிசிப்பி, தென் மேற்கு மற்றும் வடக்கு அலபாமா, மேற்கு டென்னிஸி மற்றும் தென்மேற்கு கென்டக்கி ஆகிய பகுதிகளில் வசித்தவர்கள்.

CHICKASAW TRIBE

நாடோடிகளாகவும். சில சமயம் காடுகளில் வீடுகள் கட்டியும் வசித்தும் வந்தார்கள் இவர்கள்.

இவர்களுக்கென்ற தனிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள். பிற பழங்குடி மக்களிடம் பொருட்களை வாங்கியும் விற்றும் வியாபாரம் செய்து வந்தார்கள்.

ஆரம்ப காலங்களில் இவர்கள் பிரெஞ்ச் மற்றும் ஆங்கில துரைமார்களுடன் வியாபாரம் செய்து வந்தார்கள். சிக்கசா இனத்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள்.

இவர்கள் பிற்காலத்தில் வெற்றிகரமான விவசாயிகளாகவும், கால்நடை பண்ணைக்காரர்களாகவும் (RANCH OWNERS)ஆனார்கள்.

இன்னொன்று அவர்களை பற்றி சொல்ல வேண்டும். போர் என்றால் அடுத்த வினாடியே தயாராகும் மனப்பக்குவம் கொண்ட. வீரம் மிக்கவர்கள் இவர்கள். இதில் அவர்கள் எள். என்றால் எண்ணை ஆகிவிடுவார்கள்.

CHOCTAW TRIBE

சோக்டா பழங்குடிகள் அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் வனங்களில் வசித்து வந்தார்கள். இன்றைய அலபாமா மற்றும் மிஸிஸிப்பி (ALABAMA, MISSISIPPI) மாநிலங்கள் தான் அவை. அமெரிக்கவின் அன்றைய தென்கிழக்கு பகுதிகள்.

இவர்களுக்கு என்று தனியான ஒரு மொழி இருந்தது. அந்த மொழியை சோக்டா  என்றும் மஸ்கோஜி (CHOCTAW / MUSCOGEE) என்றும் சொல்லுகிறார்கள்.

இந்த பழங்குடி மக்கள் மிகச் சிறந்த போர்வீரர்களாக, விவசாயிகளாக மற்றும் தேர்ந்த வியாபாரிகளாகவும் இருந்தார்கள். மிஸிஸிப்பி ஆற்றங்கரையில் இவர்கள் குடியேறுவதற்கு முன்னால், இவர்கள் தென் அமெரிக்காவில் (SOUTH AMERICA)இருந்து இங்கு வந்தவர்கள் என்கிறார்கள்.

மட்பாண்டங்கள், மணிகள். பொம்மைகள் செய்தல் ஆகியவற்றில் இவர்கள். கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் தற்போது வசிக்கும் மாநிலங்கள் முக்கியமாக. ஒக்லஹோமா மற்றும் மிஸிஸிப்பி(OKLAHOMA & MISSISIPPI). 

அடுத்து மஸ்கோஜி கிரீக்(MUSCOGEE/ CREEK) அல்லது கிரீக் பழங்குடிகள் (CREEK NATIVE AMERICANS)என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் வசித்த பழங்குடி இனங்களில் ஒன்று.

MUSKOGEE TRIBE

அலபாமா ஜார்ஜியா மற்றும் புளோரிடா ஆகிய இடங்களில் பூர்வகுடிகள் (ALABAMA, GEORGIYA & FLORIDA)என்று இவர்களைச் சொல்லலாம். தற்போது இவர்கள் அதிகமாக வசிக்கும் மாநிலங்கள் அலபாமா மற்றும் ஒக்லாஹோமா.

மஸ்கோஜி கிரீக் பழங்குடிகள் பெரும்பாலும் விவசாயிகளாக இருந்தார்கள். மக்காச்சோளம் அவரை மற்றும் ஸ்குவாஷ் சாகுபடி செய்தார்கள். விவசாயத்தைப் பெரும்பாலும் பெண்கள்தான் செய்து வந்தார்கள். ஆண்கள் வேட்டை, மீன்பிடி மற்றும் பொதுவான காரியங்களில் கவனம் செலுத்தினார்கள்.

இவர்கள் வசிக்கும் பகுதியை ஒயிட் டவுன் மற்றும் ரெட் டவுன் என்று பிரித்து வைத்திருந்தார்கள். வெண்ணிறப் பகுதி கிராமம் சமாதானம், மற்றும் அமைதியான வேலைகளில் ஈடுபடும்.  சிவப்புப் பகுதி கிராமம், சண்டை சச்சரவு, அடிதடி, தகராறு போன்றவற்றில் ஈடுபடும்.

இன்னொரு பகுதி மஸ்கோஜி கிரிக் இன  மக்கள்  புளோரிடா போனார்கள். ஃப்ளோரிடாவில் இருந்த மற்ற பழங்குடி மக்களுடன் சேர்ந்து வாழ. ஒரு புதிய பழங்குடியினம் உருவானது. அதன் பெயர் தான் செமினோல் (SEMINOLE)என்பது.

SEMINOLE TRIBE

1767 எழுபத்தி - 1821 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் தான் இந்த. செமினோல் என்னும் பழங்குடி இனம் உருவானது.

செமினோல் பழங்குடிகள்.. குறிப்பாக இவர்கள் சேறும் சகதியுமான இடங்களில் வாழ்ந்து வந்தார்கள். காடுகளில் கிடைக்கும் காய்கள், கனிகள், கிழங்குகள் போன்றவற்றை சேகரித்துக்கொண்டு வருவார்கள்.

விவசாயம் செய்வார்கள். மக்காச்சோளம், பூசணி, உருளைக் கிழங்கு ஆகியவற்றை சாகுபடி செய்வார்கள். பெண்கள் விவசாயம் பார்ப்பார்கள். ஆண்கள் மான், முயல், வான்கோழி ஆகியவற்றை வேட்டையாடுவார்கள்.

TRAIL OF TEARS
 இப்போது கண்ணீர் வழித்தடம் (TRAIL OF TEARS)என்றால் என்ன என்று சொல்லுகிறேன்.

அமெரிக்காவின் பழங்குடிகள் பற்றி பேசும் போது கண்ணீரின் வழித்தடம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 1880ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் வசித்த பழங்குடிகள். வலுக்கட்டாயமாக மிசிசிப்பி ஆற்றின் மேற்குப்பகுதிக்கு அனுப்பப்பட்டார்கள்.

முக்கியமாக செரோக்கி. கிரீக் சிக்கசா. சாக்டாவ். மற்றும் செமிநூல் ஆகியோர் இப்படி வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட. பழங்குடிகள்.

சோட்டா பழங்குடியினரின் குடிமாற்றம். 1837 இல் நடைபெற்றறது. கிரீக் பழங்குடிகள். 1836 ஆம் ஆண்டில் கட்டாயமாக குடி மாற்றம் செய்யப்பட்டார்கள். செமிநோல் பழங்குடிகள் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து. போர் செய்த பின்னால். 1843 எழுபத்தி ஆம் ஆண்டு குடிமாற்றம் செய்யப்பட்டார்கள்.



அந்த சமயத்தில் பழங்குடிகள் இந்தியன்டெரிடரி (INDIAN TERRITORY)என்ற பகுதிக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சிலர் முடியாது என்றார்கள். சிலர் கடுமையாக எதிர்த்தார்கள். சிலர் சண்டை போட்டார்கள். ஆனால் இந்த நிகழ்வுகளில் மொத்தம். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடிகள் கொல்லப்பட்டார்கள்.

அப்படி குடிமாற்றம் செய்யப்பட்ட பகுதிதான். ஒக்லாஹோமா. அது தொடங்கிய காலம்தொட்டு அமெரிக்காவுக்கு தலைவலி தான்.

இந்த பழங்குடிகள் குடி மாற்றம் செய்தபோது அவர்கள் ஒருநாளில் 10 மைல் என்று சராசரியாக நடக்க வேண்டியிருந்தது. அப்படி அவர்கள் நடந்த மொத்த தூரம் 800 மைல். இதற்கு நான்கு மாதங்களுக்கு மேல் ஆனது. இதுதான் அமெரிக்க பழங்குடிகளின் கண்ணீர் வழித்தடம்.

பழங்குடிகளில் கொமான்ச்சிகள் (COMANCHES)தான் மிகவும் ஆபத்தானவர்கள்என்று வர்ணிக்கப்பட்டார்கள். இவர்களை சமவெளிகளின் முதலாளிமார்கள் (LORDS OF THE PLAINS) என்று அழைக்கப்பட்டார்கள்.

ட்ரெய்ல் ஆஃப் டீயர்ஸ் (TRAIL OF TEARS) என்பது 1837 முதல். 1839 எழுபத்தி முப்பத்தி ஒன்பது வரையான காலகட்டத்தில் நடந்தது. அந்த சமயம் ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவர் அமெரிக்காவின் அதிபராக இருந்தார்.

அவர்தான் இதற்கான சட்டத்தை கொண்டு வந்தார். அந்த சட்டப்படிதான். பழங்குடிகளுக்கு சொந்தமான நிலங்களில் வெள்ளைக்கார சமூகம்  குடியமர்த்தப்பட்டது.

இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட முக்கியமான பழங்குடிகள் ஐவர். அவர் எண்டு. செரோக்கி, சாக்டா, மஸ்கோஜி கிரீக், சிக்கசா, மற்றும்  செமினோல். ஆகிய பழங்குடி மக்கள்.

அன்பின் இனிய.  நண்பர்களே, இன்றைய கடிதத்தில் நாகரிகமடைந்த ஐந்து அமெரிக்கப் பழங்குடி மக்களை உங்களுக்கு நான் அறிமுகம் செய்தேன்.

அத்துடன் பழங்குடி மக்களை அவர்களுடைய சொந்த மண்ணிலிருந்து எப்படி புலம் பெயரச் செய்தார்கள் என்றும் சொன்னேன். இதில் “டிரெயில் ஆஃப் டீயர்ஸ்” என்பது பற்றி இன்னொரு நாள்கூட  விரிவாகப் பார்க்கலாம்.

இந்த கடிதம் பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் எழுதுங்கள். மீண்டும் அடுத்த கடிதத்தில் இன்னும் ஒரு நல்ல சுவாரஸ்யமான புதிய தகவல்களோடு  உங்களை சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com

 

 


1 comment:

சுப்ரமணிய பாலா said...

அருமை ஆதிவாசிகள் நம் முன்னோர்களின் பிம்மமே எந்த கண்டத்தில் இருந்தாலும் நம்மவர்களே...நன்று

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...