Monday, August 19, 2024

TIPS FOR VISITING MOUNT RAINIER'S MOUNTAIN TOPS வாஷிங்க்டன்னில் மவுண்ட் ரெய்னியர் எரிமலைக்கு எப்படி சுற்றுலா போகலாம் ?

PINE FOREST TREES

கடிதம்: 37

வாஷிங்டன்னில்

மவுண்ட் ரெய்னியர் எரிமலைக்கு

எப்படி சுற்றுலா போகலாம் ?

 

TIPS FOR VISITING

MOUNT RAINIER'S

MOUNTAIN TOPS 

 கடிதம் 37

முதலில் எங்கு தங்கலாம் என தெரிந்து கொள்ள வேண்டும்.

மவுண்ட் ரெயினியருக்கு அருகில் இருக்கும் நகரங்களிலும் தங்கிக்கொள்ளலாம்.

வாஷிங்க்டன் மானிலத்தில், சியாட்டல்(SEATTLE), டகோமா(TACOMA), யாக்குமா(YAKUMA) மற்றும் ஓரிகான்(OREGAN) மாநிலத்தின் போர்ட்லாண்ட் (PORTLAND)ஆகிய நகரங்கள் மவுண்ட் ரெயினியருக்கு அருகில் உள்ள நகரங்கள்.

MOUNT  RAINIER WITH ACTIVE VOLCANOES

முன்னதாக தங்குமிடத்தினை  முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.   மவுண்ட் ரெயினியரில் (MOUNT RAINIER)பேரடைஸ் விடுதியில்(PARADISE INN) தங்கலா. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான நேரம் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை. இந்த (360 569 22 75) எண்ணுக்கு போன் செய்து பேரடைஸ் இன்னில் ஆன்லைன் புக்கிங் செய்யலாம்.

மவுண்ட் ரெய்னியர், தேசியப்பூங்காவில்  என்னென்ன இடங்களைப் பார்க்கலாம் என உங்களுக்கு சொல்லுகிறேன். கீழே இந்தப் பட்டியலைப் பாருங்கள்.

பேரடைஸ் கொரிடார்(PARADISE CORRIDOR) 2. மவுண்ட் ரெய்னியரின் பனி மூடிய எரிமலை முகடுகள் (SNOW CAPPED VOLCANO MOUNTS)3. கோஸ்ட் ஃபாரெஸ்ட் (GHOST FOREST)4. பேரடைஸ் இன்(PARADISE INN) 5. சன்ரைஸ் கொரிடார்(SUNRISE CORRIDOR) 4. ரிஃப்ளெக்க்ஷன் ஆல்பைன் ஏரி (REFLECTION ALPINE LAKE)5. நிஷ்குவாலி ஆறு (NISHQUALI RIVER)6. சாலை ஓரப் பைன் மரக்காடுகள்(ROADSIDE PINE FORESTS) 7. மேல்மட்டத்தில் இருக்கும் ஆல்பைன் காடுகள்(UPLAND ALPINE FORESTS) 8.பரவலாகப் பூத்திருக்கும் காட்டுப்பூக்கள்(WILD FLOWERS) 9.பரந்து விரிந்திருக்கும் புல்வெளிகள்(LAWNS).

ஒரே நாளில் இவை அத்தனையும் பார்க்க முடியும்.

பயணம் செய்யும் சாலைகள் நெடுக பார்க்க அழகாக இடங்களில் இறங்கிப்பார்க்க தகவல் பலகைகல் வைத்திருக்கிறார்கள். அந்த இடங்களில் எல்லாம் குப்பைத் தொட்டிகள், கழிப்பறைகள் (GARBAGE BINS & TOILETS) எல்லாம் இருக்கும். அதனால்  நீங்கள்  அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்னொரு முக்கியமான செய்தி நீங்கள்

WILD FLOWERS
விரும்பும் இடங்களில் எல்லாம் கார்களை நிறுத்த முடியாது. நிறுத்தவும் கூடாது.

சாலையில் நெருக்கடியைத் தவிர்க்க விடுமுறை நாட்களில் அங்கு போகாமல் இருப்பது புத்திசாலித்தனம்.

மவுண்ட் ரெயினியர் போவதற்கு முன்னால் அங்கு செல்லும் பாதைகள் திறந்து உள்ளனவா? போகலாமா ? பிரச்சனைகள் ஏதும் இருக்கிறதா ? என்று பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கார்களில் செல்லும்போது அளவான வேகத்தோடு செல்ல வேண்டும்.

மவுண்ட் ரெய்னியர் செல்லும் சாலைகள் குறுகலானவை (RISKY NARROW ROADS) அதிகமான வளைவுகளோடு இருப்பதால் பாதுகாப்பான வேகத்தோடு செல்ல வேண்டும். பாதுகாப்பான வேகம் என்றால் 35 முதல் 40   மைல் என்று அர்த்தம்.

குளிர்காலத்தில் அங்கு போகாமல் இருப்பது நல்லது. 

REFLECTION LAKE

மவுண்ட் ரெயினியர் மலைக்கு பிரச்சனை இல்லாமல் போய் வரவேண்டும் என்றால் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் போவது நல்லது. அப்போது பெரும்பாலான சாலைகள் மூடி இருக்கும். அந்த சாலைகளில் பனிக்கட்டிகள் மூடி இருக்கும். மேலும் பாதைகள் தெளிவாகத் தெரியாது. மூடுபனி அதிகம் இருக்கும்.

போகும் இடத்தின் ஒரு வரை படத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

மலையில் செல்லும்போது முழுக்க முழுக்க ஜிபிஎஸ்’ஐ (GPS)நம்பி போகாமல் இருப்பது நல்லது. மலைக்கு மேலே அது வேலை செய்யாமல் போகலாம். காரணம் ஜிபிஎஸ் இல்லாமல் பார்க்கும் படியான மேப் (MAP)ஒன்றை வைத்துக் கொள்வது நல்லது. அதில் நீங்கள் செல்லவேண்டிய இடங்களைக் குறித்துக் கொள்ளுங்கள்.

CAR PARKING IN PARADISE CORRIDOR

மவுண்ட் ரெயினியர் மலைக்கு செல்வதற்கு முன்னால் எந்தெந்த இடங்களைப் பார்க்கலாம். இதனை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது(PRIOR PLANNING) நல்லது.

இந்த இரண்டு இடங்களை மட்டும்கூட பார்த்தால் போதுமானது.

மவுண்ட் ரெயினியரில் பார்க்க வேண்டிய முக்கியமான இரண்டு இடங்களில் ஒன்று பாரடைஸ் கூறினார் என்பது இன்னொன்று சன்ரைஸ் கூறினார் என்பது இந்த இரண்டு இடங்களைப் பார்த்தாலே போதுமானது ஒரு நாள் இதற்கு போதுமானதாக இருக்கும்.

உங்கள் கருத்துங்களைப் பதிவிடுங்கள்.

PARADISE CORRIDOR

பேரடைஸ் கொரிடர் என்ற இடத்தில் மொத்தம் 121 தங்கும் அறைகள் உள்ளன. இங்கு கிஃப்ட் ஷாப் (GIFT SHOP)ஒன்றும் அஞ்சலகம் (POST OFFICE)ஒன்றும் உணவகம் (RESTAURANT)ஆகியவையும் உள்ளன. இந்த விடுதிக்கு பேரடைஸ் இன்(GIFT INN) என்று பெயர்.

நான் இந்த கடிதத்தில் சொன்ன செய்திகள் எல்லாம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன் உங்களுக்கு பிடித்திருந்தால் இது பற்றிய உங்களுடைய கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவிடுங்கள் மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம். நன்றி வணக்கம்.

மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம் நன்றி, வணக்கம்.

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com

 

 

 

 

 


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...