Sunday, August 18, 2024

SILENT KILLERS THE VOLCANOE LAHARS அமைதியாக அழிவு தரும் லஹார் எனும் எரிமலைச் சேறு

கடிதம்:36

LAHAR STIMULATION
அமைதியாக அழிவு தரும்
லஹார் எனும் 
எரிமலைச் சேறு

SILENT KILLERS  
THE VOLCANOE 
LAHARS
 

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !
 
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்க உங்கள் குடும்பத்தினர் அனைவரும் எப்படி இருக்கிறார்கள் அனைவரையும் நான் விசாரித்ததாக சொல்லுங்கள்.
RUNNING OF LAHAR IN MOUNT RAINIER

 
இந்த கடிதத்தில் உங்களுக்கு லஹார் என்றால் என்ன? எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்புக் குழம்பு பற்றி நமக்கு தெரியும். அதனை லாவா (LAVA)என்று சொல்லுவார்கள். அதுபோல மலையில் இருக்கும் பாறைகளும் திரவமாக உருகி வெளிவரும். இதனை மேக்மா (MAGMA) என்று சொல்லுவார்கள். இந்த இரண்டு பற்றியும் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம்.
 
இன்றைக்கு நான் இந்த கடிதத்தில் எரிமலை சேற்றுக் குழம்பு என்னும் லஹார் (LAHAR)என்பது பற்றி உங்களுக்கு சொல்லப் போகிறேன்.
 
1.மவுண்ட் ரெயினியர் போன்ற எரிமலைகளுக்கு(MOUNT RAIYINIER VOLCANO) போகும்போது நாம் கண்டிப்பாக லெஹார் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது அவசியம்.
 
2. லஹார் என்பது சேறு பாறைகளின் துகள் இரண்டும் சேர்ந்தால் ஏற்படுவது இது. கான்கிரீட்டுக்கு சமம். எரிமலை வாயிலிருந்து இந்த கான்கிரீட் குழம்பு பெரும் அளவில் வெளியேறி ஆறாக பெருகி ஓடும் இதைத்தான் லஹார் என்று சொல்லுகிறார்கள்.
 
3. எரிமலை வெடிக்கும் போது கூட இந்த கான்கிரீட் சேறு சேர்ந்து குழம்பாக் வழிந்தோடும். அப்போது பனிப்பாறைகள் உருகி பனி ஆறுகளாக ஓடத் துவங்கும்.
 
4. அப்படி ஓடினால் மவுண்ட் ரெய்னியரின் அடிப்பகுதியில் உள்ள புகட் (PUGET VALLEY)என்னும் பள்ளத்தாக்கினை 30 நிமிடத்தில் நிறைத்து முகம் தெரியாமல்  அழித்துவிடும் அபாயம் உண்டு. 
 
5. அந்த சமயம் அப்பகுதியில் வாழும் அத்தனை பேரும் உயிரிழப்பதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்கள்.
 
6. கடந்த 10,000 ஆண்டுகளில் 60 முறை இது போன்ற  எரிமலைச் சேறு (LAHAR)ஆறு போல மவுண்ட் ரேனியர் எரிமலையில் இருந்து ஓடி இருக்கிறது.

7. அதன் மூலம் 60 மைல் தொலைவில் இருந்த அனைத்து நிலைப்பகுதிகளும் முற்றிலும்  மூழ்கி விட்டதாக சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள்.
 
8.லஹார் என்பது எரிமலையில் இருந்து வெளியேறும் சேற்றுக் குழம்பு என்று சொல்லலாம். அதில் நீர், எரிமலைச் சாம்பல், பாறைத் துகள்கள், உருகியும் உருகாததுமான பனிக்கட்டிகள் எல்லாம் கலவையாக சேர்ந்திருக்கும். அதுதான் லஹார் என்பது.
 
9. லஹார்கள் மிகவும் ஆபத்தானவை. இந்த எரிமலைச் சேற்றுஆறு இருபது முதல் 40 மைல் வேகத்தில் அதிகபட்சமாக 50 மைல் தூரமும், 1040 மீட்டர் ஆழமும் கூட ஓடக்கூடியவை.
 
10. இந்த லஹார் குழம்பு ஓடும் இடங்களில் யார் அல்லது என்ன இருந்தாலும் அதனை முழுமையாக அழித்துவிட்டு தான் மறு வேலை பார்க்கும்.
 
11. லஹார் எரிமலையின் வாயிலிருந்து ஊற்றெடுத்து எவ்வித அறிகுறிகள் இல்லாமலும் கூட ஓட வாய்ப்பு உண்டு. லகார் கண்டுபிடிக்கும் அமைப்பும், அதனைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் அமைப்பும் வாஷிங்டன் மாநிலத்தில் இயங்கி வருகிறது.
 
12. இது போன்ற லகார்கள் எனும் எரிமலைச் சேறு வழிந்து ஓடுவதால் அதிகமான மனித உயிர்களையும் உடைமைகளையும் அழித்துவிடும்.
 
13. ஒருவேளை மவுண்ட் ரெய்னியர் வெடித்தால் எந்தெந்த நகரங்கள் இதனால் பாதிக்கப்படும் என்றும் தெளிவாக சொல்லுகிறார்கள். அவை நாங்கள் தங்கியிருந்த டக்கோமா, நிஷ்குவாலி, பொய்யலூப் (TACOMA, NISHQUALLI, POYYALUP)ஆகிய நகரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முற்றிலுமாக அழிந்து போகுமாம்.
 
14. ஏற்கனவே இதுபோன்ற எரிமலைச் சேற்றில் மூழ்கிய இடத்தில் எழுந்துள்ள நகரம் தான் டகோமா (TACOMA)என்கிறார்கள். அங்குதான் நாங்கள் இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம்.
LAHAR DAMAGE IN MOUNT RAINIER

 

அன்பின் இனிய நண்பர்களே ! இந்த கடிதத்தில் இதில் சொல்லப்பட்ட செய்திகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். பிடித்திருந்தால் இது பற்றிய உங்கள் கருத்துக்களைகமெண்ட்’ பகுதியில் பதிவிடுங்கள். மீண்டும் அடுத்த பதிவில் அடுத்த கடிதத்தில் சந்திப்போம். நன்றி. வணக்கம்.
 
பூமி ஞானசூரியன்
gsbahavan@gmail.com
 


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...