Friday, August 9, 2024

THE SILENCE AND SCIENCE BEHIND VOLCANOES IN USA - அமெரிக்க எரிமலைகள் எப்போது வெடிக்கும் ?


I have gone through your article. You have vividly explained the benefits of hot bath taking. Very useful information about hot springs . You have narrated how the hot spring formed and how it is emerged from the earth. I will visit this place next year. Thanks for giving new information about hot spring.

V.Sambasivam IFS(Retd)
Houston Texas.

Dear sir, I am so happy that you are regularly giving me lot more appreciations for the efforts I took in travelling and collecting all the new information, and publishing the same. I wish to thank all the people those who are giving me a moral support.

Gnana Suria Bahavan D

IF YOUR HEART IS A VOLCANO HOW SHALL YOU EXPECT 

FLOWERS FROM TO BLOOM - KHALIL GIBRON

அமெரிக்க எரிமலைகள் 

எப்போது வெடிக்கும் ?

THE SILENCE AND SCIENCE BEHIND

VOLCANOES IN USA

கடிதம் : 28

ERUPTING VOLCANO

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம்.

 நீங்க சவுக்கியமா? உங்க குடும்பத்தினர் அனைவரும் சவுக்கியமா?

நான் இன்று உங்களுக்கு அமெரிக்காவிலுள்ள எரிமலை மாநிலங்கள்(VALCANO STATES) எத்தனை? இந்த எரிமலைகள். எத்தனை வெடிக்க காத்திருக்கின்றன. எரிமலை வெடிக்கும் போது என்ன நடக்கும்? எனது அமெரிக்க பயணத்தில்.நாம் எத்தனை எரிமலைகளைப் பார்த்தேன். என்பது பற்றிய செய்திகளையெல்லாம் இன்ற கடிதத்தில் சொல்லியிருக்கிறேன்.

அமெரிக்காவிலிருக்கும். 50 மாநிலங்களில் கிட்டத்தட்ட 12 மாநிலங்களில். எரிமலைகள் உள்ளன. அதுமட்டுமல்ல இந்த எரிமலைகள் வெடிக்கவும் (VALCANOE ERUPTION)செய்கின்ற வாய்ப்பு உள்ளது.

அந்த மாநிலங்கள் அலாஸ்கா வாஷிங்டன், கலிஃபோர்னியா,  ஓரிகான். ஹவாய்,  அரிசோனா, இடாகோ,  நியூ மெக்ஸிகோ,  கொலராடோ,  நெவாடா மற்றும் ஊட்டா.

MOUNT RAINIER VOLCANO

எனது அமெரிக்கப் பயணத்தின்போது வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரேனியர் எரிமலை (MOUNT RAINIER VOLCANO)மற்றும். ஓரிகன் மாநிலத்திலுள்ள. மவுண்ட் ஹூட் எரிமலை (MOUNT HOOD VOLCANO) ஆகிய இரு மலைகளுக்கு பயபக்தியுடன் சென்று பார்த்துவிட்டு வந்தேன்.

MOUNT HOOD VOLCANO

பயபக்தியுடன்  என்று சொன்னதற்கு காரணம். அது வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை என்பதும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்பதும் வெடித்தால் என்ன நடக்கும் என்றும் முன்கூட்டியே எனக்கு தெரியும்.

அப்படி எரிமலை பற்றி முன்கூட்டியே நான் தெரிந்து கொண்ட செய்திகளை நான் இப்போது உங்களுக்கு சொல்லுகிறேன்.

ஒரு எரிமலை வெடித்தால் அதிலிருந்து பீச்சியடிக்கும் தீக்குழம்பு (LAVA) 1000 - 2000 அடி உயரத்திற்கு தீ கம்பம் போல மேல் எழும்பி வழியும்.

தீபாவளி திருவிழாவின்போது கலசம் கொளுத்துவோம் ஞாபகம் இருக்கிறதா? சில கலசங்களை கொளுத்தும் போது 10 - 12 அடிகள் கூட நீர் ஊற்று மாதிரி வெளிக் கிளம்பும்.

எரிமலை மலை உச்சியில் இருந்து 1000 - 2000 அடி உயரத்திற்கு. தீக்குழம்பினை பீச்சி அடித்து பின்னர் அது வழியும்.

எரிமலை வெடிக்கும் போது வெப்பமான பாறைகளைக் கூட (HOT ROCKS)தூக்கி வீசும். அப்படி வீசும்போது அந்த பாறைகள் 32 கி.மீ.  கூட தாண்டி சுழன்று விழும். அப்போது தீக்குழம்பு ஆறாகப் பெருகும். காற்றுடன் சேர்ந்து. அதன் சாம்பல் (VOLCANO ASH)பறக்கும்.

எரிமலையிலிருந்து வெளியேறும் புகை நச்சுத்தன்மை (NOXIOUS FUMES)கொண்டது இந்த புகை. 160 கிலோ மீட்டர் தூரம் கூட பரவும் தன்மை உடையது.

சில எரிமலைகள் பக்கவாட்டில் வெடித்து சிதறும்(LATERAL ERUPTION) இவைதான். பெரும்பாலும் பாறைகளை மிக வேகமாக தூக்கி வீசும். இந்த பாறைகள் சுடச்சுட தாங்கமுடியாத வெப்பத்துடன் இருக்கும்.

1859 ஆம் ஆண்டு ஹவாய் தீவுகளில்(HAWAII ISLANDS) வெடித்த எரிமலையின் தீக்குழம்பு 51 கிலோ மீட்டர் தூரம் ஓடி கடலை அடைந்தது.

POURING LAVA

எரிமலைகள் வெடிக்கும் போது எவ்வளவு தூரத்தில் இருந்தால் தப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும். ஆனால் இதை உறுதியாக சொல்ல முடியாது. காரணம் சில எரிமலைகளுக்கு 20 மைல் தொலைவில் இருந்தால் கூட பாதிப்பு ஏற்படாது. அருகில் சென்று ‘ஹாய்’ சொல்லிவிட்டு வரலாம்.

சில எரிமலைகள் வெடித்தால் 100 மைல் தொலைவில்  இருந்தால் கூட நம்மை அது போசுக்கிவிடும். அதுதான் எரிமலை,

எரிமலை வெடித்த பிறகு பாயும் தீக்குழம்பு அது முழுமையாக குளிர்ச்சி அடைய பல ஆண்டுகள் கூட ஆகும்.

எரிமலை பற்றிப் பேசும் போது, லாவா(LAVA) என்கிறார்கள், மேக்மா (MAGMA)என்கிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேக்மா என்றால் வெப்பத்தினால் திரவமாக மாறிய பாறைகள் (MIOTEN ROCKS)என்று அர்த்தம். அது பூமிக்குள் இருக்கும் வரை அதன் பெயர் மேக்மா, பூமியைவிட்டு வெளியே வந்தால் அது லாவா. இதுதான் மேக்மா மற்றும் லாவாவுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

எரிமலயிலிருந்து வெளிப்படும் தீக்குழம்பின் வெப்பம். 1100 டிகிரி. செண்டிகிரேடுக்கும். அதிகமாக இருக்கும்.. கற்பனை செய்து பாருங்கள். நம்ம ஊரில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்றாலே பத்திரிக்கையில் தலைப்புச் செய்தியில் வருகிறது. வீட்டைவிட்டு வெளியில் கூட வரமாட்டோம்.

திரவ நிலையில் இருக்கும் தீக்குழம்பு. உள்ளிருந்து. பாறைகளாக. மாறும்வரை. அது நெறுப்புத் திரவமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கும்.

சாதாரணமாக ஒரு எரிமலையிலிருந்து வெளியேறும். தீக்குழம்பு என்னும் லாவா? குளிர்ச்சி அடைய. சுமார் 120 நாட்கள் ஆகும்.

எரிமலையின். தீக்குழம்பில். சிக்கிக்கொண்டால். முதலில் அங்கு நிலவும். வெப்பமான காற்றை நம்மால் சுவாசிக்கக்கூட முடியாது. நமது மூக்கு, மூச்சுக் குழாய், நுரையீரல் அத்தனையும் கருகிப்போகும், நமது மூளை சில விநாடிகளிலேயே கொதிக்க ஆரம்பித்து விடும். அதனால். அதிக நேரம் அதன் தாக்குதல் வலி நமக்கு எதுவும் தெரிய வாய்ப்பு இருக்காது. சீக்கிரமாக நம்மை கொண்டு போய் சேர்த்து விடும். கஷ்டம் நஷ்டம் எதுவும் தெரியாது. நொடியில் கதை முடிந்துவிடும்.

NOXIOUS FUMES 

எரிமலை வெடித்து சிதறும் போது. அங்கு காற்றில் கலந்திருக்கும். எரிமலைச் சாம்பல் (VALCANO ASH) அல்லது? நச்சு கலந்த தீப்பிழம்பு. 100 மைல் வரை கூட பரவ வாய்ப்பு உள்ளது.

ஆனால் பெரும்பாலான எரிமலைக் குழம்புகள். 10 கிலோமீட்டரை தாண்டுவதில்லை. அவையெல்லாம் நல்ல குணம் கொண்ட எரிமலைக் குழம்புகள். ஓட்டம் குறைந்த எரிமலைக் குழம்புகள்.

சர்வதேச அளவில் மிக அதிகமான அளவில் எரிமலைகளால் பாதிக்கப்படும் ஐந்து நாடுகள் இந்தோனேஷியா, கரிபியன் தீவுகள், ஜப்பான் மற்றும் மத்திய அமெரிக்கா.

எரிமலையில் மேக்மா என்பதற்கும் லாவா என்பதற்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. ரசாயன ரீதியாக இரண்டிலும் அதிகம் இருப்பவை. சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் தான்.

சிலிகான் ஆக்சிஜன் அலுமினியம், இரும்பு, கால்சியம், சோடியம், மக்னீசியம். பொட்டாசியம். ஆகியவை இவற்றில் இருக்கும் இதர ரசாயன பொருட்கள்.

அன்பின் இனிய நண்பர்களே. இந்தக் கடிதத்தில்அமெரிக்காவின் எரிமலைகள் பற்றியும் அவை வெடித்தால் என்ன நடக்கும்? எரிமலை வெடித்தால் எவ்வளவு தூரத்தில் இருந்தால் தப்பிக்கலாம், என்பது பற்றியும் பார்த்தோம்.

மீண்டும் அடுத்த கடிதத்தில் இன்னுமொரு புதிய வித்தியாசமான தகவலுடன் நான் உங்களை சந்திக்கிறேன்.

இந்த கடிதம் பற்றிய உங்கள் கருத்துகளை, கமெண்ட்ஸ் பகுதியில் நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் நம்புகிறேன். மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திக்கலாம். நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com

 

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...