Friday, August 16, 2024

PARADISE CORRIDOR OF MOUNT RAINIER VOLCANO மவுண்ட் ரெய்னியர் எரிமலையின் குளிர்ச்சியான பாரடைஸ் பகுதி

 

கடித எண்:33

மவுண்ட் ரெய்னியர் எரிமலையின்

குளிர்ச்சியான பாரடைஸ் பகுதி

PARADISE CORRIDOR OF

MOUNT RAINIER VOLCANO

BHUMII GNANASOORIAN
அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம். எப்படி இருக்கிறீர்கள் ? உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நலமா? அவர்களை விசாரித்தாகச் சொல்லுங்கள். எல்லோருக்கும் எனது தாமதமான சுதந்திரதின வாழ்த்துக்கள்.

சென்ற கடிதத்தில் அமெரிக்காவின், வாஷிங்டன் பகுதியில் இருக்கும் மவுண்ட் ரெய்னியர் பூங்காவின் (MOUNT RAINIER NATIONAL PARK) நுழைவு வாயில் நிஷ்குவாலி (NISHQUALLY ENTRANCE) வரை நாங்கள் சென்றது பற்றி எழுதியிருந்தேன்.

இன்றைக்கு அங்கிருந்து பேரடைஸ்கொரிடார் (PARADISE CORRIDOR)என்னும் பகுதிக்கு எப்படி சென்றோம்? அங்கு என்ன பார்த்தோம் என்று இந்த கடிதத்தில் சொல்லுகிறேன்.

பேரடைஸ் (PARADISE CORRIDOR)என்பது? உயரமான பகுதி. மவுண்ட் ரெய்னியர் மலையின் உச்சிப்பகுதி. அழகான மலை உச்சி. அங்கிருந்து பார்த்தால் எரிமலைகளின் உச்சிப் பகுதிகள் தெளிவாகத் தெரியும். அதன் உயரம் 5420 அடி.

அந்த பேரடைஸ் பகுதிக்கு செல்ல நாங்கள் சுமார் 30 கிலோமீட்டர் பயணம் செய்தோம். மவுண்ட் ரெய்னியர் மலையில் பிரபலமான சுற்றுலா மையம் பேரடைஸ் கொரிடார் என்பதுதான். அந்த இடம் வரை காரில் செல்லலாம்.

SWARM OF CARS IN PARADISE CORRIDOR 

அங்கு காரில் சென்று இறங்கும்போது கடுமையான குளிர் இருந்தது. ஏற்கனவே நான் சொட்டர் மட்டுமே அணிந்திருந்தேன். காரை விட்டு இறங்கியதும் உடம்பு வெடவெடத்தது. அதனால் நாங்கள் எல்லோருமே ஜெர்க்கின், தலைக்கு ஒரு கம்பளி தொப்பி, என்று போட்டுக்கொண்டு இறங்கினோம்.

RAJ IN PARADISE CORRIDOR

பாரடைஸ் கொரிடாரில் கார் நிறுத்த நிறைய நிறைய இடம் இருந்தது. ஏகப்பட்ட கார்கள் நின்று கொண்டிருந்தன. கருப்பும் வெள்ளையுமாய் பல நாட்டு மக்கள், குடும்ப சகிதமாய் குளிரில் நடுங்கியபடி செல்போனில் படம் எடுத்தபடி இருந்தார்கள்.

இங்கிருந்து மவுண்ட் ரெய்னியர் தொலைவில் இருந்தாலும், எரிமலை அடுக்கின் கூர்மையான கூம்பு வடிவ முனைகளை எங்களால் பார்க்க முடிந்தது.

அந்த மலைகளின். தலைப்பகுதியும், உடல் பகுதியும் மறைக்கும்படியாக வெள்ளை வெளேரென்று பனியால் மூடி இருந்தது. குளிர் தாங்க முடியாமல் அந்த மலை அடுக்குகளும் பனி சொட்டர் போட்டிருந்தன.

பனி மூடாத இடங்களில் மலைப் பாறைகள் கருப்பு நிறமாக தெரிந்தன. ஆனால் பனி மூடிய பகுதிகள் தான் பெரிய பெரிய வெண்திட்டுக்களாக இருந்தன.

SNOW CAPPED MOUNT RAINIER

பாரடைஸ் உச்சியின் இடக்கைப் புறம் மிகப்பெரிய, கிடுகிடுவென இறங்கும் பள்ளத்தாக்கு. அந்த பனிமலை அடுக்கின் அடி வாரம் தான் இந்த பள்ளத்தாக்கு.

SUBALPINE TREES 

இந்த பள்ளத்தாக்கு முழுவதுமாக. பல்வேறு உயரங்களில், பல வகையான பைன் மரங்கள் மற்றும் இதர மலை மரங்கள். மரங்களின் ஊடாக ஏகப்பட்ட வெற்றிடங்களும் இருந்தன. இதுல ஏகப்பட்ட காட்டுப் பூக்கள். சிவப்பு மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை என பல நிறங்களில் பூத்துக் கிடந்தன.

பனி போர்த்திய மலை முகடுகளை உற்றுப்பார்த்தால் அரிதாக சில இடங்களில் அவை உருகி நீராக ஓடுவது தெரிந்தது.

அந்த பனிமலை சிகரங்களின் உயரம் சுமார் 14 ஆயி ரத்து, 410 அடி. பாரடைஸ் கொரிடாரில்  5420 அடி உயரத்தில் இருந்தபடி பார்த்தோம்.

காட்டுப் பூக்கள் இல்லாத பெரும் பரப்பில் பசும்புல் போர்வையாக மூடி இருந்தது. இந்த பள்ளத்தாக்கில் நடைபாதைகள் நிறையத் தெரிந்தன. நடந்து செல்பவர்கள் மலை ஏறிகள் (MOUNTAIN HIKERS)நடந்து செல்வார்கள் எனத்தெரிந்தது.

அதன் எதிர்ப்புறம் புல்வெளி போல பரந்து விரிந்தது. நாங்கள் நிற்கும் இடத்தை விட உயரமான வெளியாக இருந்தது. இதில் அதிக மரங்கள் இல்லை. ஆனால் திட்டு திட்டாக காட்டுப்பூக்கள் வானவில் மாதிரி பூத்துக் கிடந்தது.

PARADISE INN
PARADISE CORRIDOR

இங்கு பாரடைஸ் இன்(PARADISE INN) என்னும் பழமையான விடுதி ஒன்று உள்ளது. இது 1906 ஆண்டு கட்டப் பட்டது. இதன் வயது 108 ஆண்டுகள். இந்த கட்டிடம் இருக்கும் இடத்தைத் தான் பாரடைஸ் கொரிடார் என்று சொல்லுகிறார்கள்.

இந்த பாரடைஸ் இன்’னில் மொத்தம் 121 தங்கும் அறைகள் உள்ளன. இதுதவிர ஒரு கிப்ட் ஷாப் (GIFT SHOP)ஒரு அஞ்சலகம் (POST OFFICE)ஒரு உணவகம் (RESTAURANT)அத்தனையும் உள்ளது.

இங்க தங்க வேண்டுமென்றால். கவலைப்பட வேண்டாம். கீழ்க்கண்ட எண்ணுக்கு போன் செய்து ஆன்லைனில் புக்கிங் செய்து கொள்ளலாம். அங்கேயே தங்கிக்கொள்ளலாம். ஆனால் முன்னதாக இதனைச் செய்ய வேண்டும். கடைசி நேரத்தில் செய்தால் நிச்சயமாக கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை.

PARADISE INN, MOUNT RAINIER PHONE: 360-569-2275

அன்பு நண்பர்களே, அடுத்து அங்கிருந்து சன்ரைஸ் பகுதிக்கு புறப்பட்டோம் அதுபற்றி அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன். gsbahavan@gmail.com


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...