Saturday, August 17, 2024

GHOST FOREST OF MOUNT RAINIER'S VOLCANO பேய்க்காட்டு மரங்களும் மவுண்ட் ரெயினியர் எரிமலையும்


Monsters are real, and ghosts are real too. They live inside us, and sometimes, they win - Stephen King.

கடிதம்:35

பேய்க்காட்டு
மரங்களும்
மவுண்ட் ரெயினியர்
எரிமலையும்

GHOST TREE OF MOUNT RAINIER
GHOST FOREST OF
MOUNT RAINIER'S 
VOLCANO
 
அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !
  
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பு விசாரிப்புகள் !அவர்களை நான் கேட்டதாக சொல்லுங்கள்.
 
உங்களுக்கு ஞாபகம் இருக்கும். நாங்கள் இப்போது ரிஃப்ளக்க்ஷன் ஏரியை (REFLECTION LAKE)பார்த்துவிட்டு சன்ரைஸ்(SUNRISE CORRIDOR) போய்க் கொண்டிருந்தோம்.
 
சன்ரைஸ் போய் சேர எப்படியும் 1 1/2 மணி நேரம் ஆகும்.
 
அதற்குள் இங்கு இருக்கும் கோஸ்ட் பாரஸ்ட் (GHOST FOREST) பேய்க்காடு  பற்றி உங்களுக்கு சொல்லலாம் என்று நினைக்கிறேன். இது மவுண்ட் ரெய்னியரில் பேரடைஸ் கொரிடாரின் (PERADISE CORRIDOR)ஒரு பகுதி.
 
அங்கிருந்து பேரடைஸ் கொரிடாரிலிருந்து 3 1/2 கிலோ மீட்டர் நடந்து போனால் இந்த கோஸ்ட் பாரஸ்ட் என்னும் பேய் காட்டிற்கு போய் சேரலாம். இந்தப் பேய்க்காடு ஐந்தாயிரத்து நானூறு அடி உயரத்தில் உள்ளது.
 
இந்த பேய் காடு பற்றிய தகவல் தாமதமாக கிடைத்ததனால் அங்கு போக முடியாமல் போனது. ஆனாலும் இதுபற்றி உங்களுக்கு சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.  
 
இந்த பேய்மரக்காடு எப்படி உருவானது ? உண்மையில் பேய் மரங்கள் இருக்கிறதா ? பேய்கள், மரங்களாக இருக்கிறதா ?  அல்லது இந்த மரங்கள் பேய்கள் நட்ட மரங்களா ? அல்லது பேய்கள் நடமாட்டம் உள்ள காடுகளா ? இப்படி பல கேள்விகள் உங்கள் மனதில் தோன்றும். என் மனதிலும் இதுபொன்ற  கேள்விகள் எழுந்தன.
 
இந்த பேய் மரங்களில் செய்த மேஜை நாற்காலிகள் பேரடைஸ் இன்’ல் இருக்கின்றன என்று சொல்லுகிறார்கள். அப்போது தெரியாமல் போனது. இல்லையென்றால் அதையாவது பார்த்திருப்பேன்.
 
பேய்மரக்காடு தோன்றியது ஒரு சுவாரஸ்யமான கதை. அது எப்படி நடந்தது ? எங்கு நடந்தது ? என்று நான் சொல்லுகிறேன் இது கிட்டத்தட்ட  40 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.
 
அந்த காலகட்டத்தில் பேரடைஸ் மலையின் பள்ளத்தாக்குகளில் ப்ளூபெர்ரி மற்றும் ஹக்கிள் பெரி பழச் செடிகள் (BLUE BERRY & HUCKLEBERRY)காட்டுச் செடிகளாக புதராக வளர்ந்து கிடந்தது.
 
அந்த சமயம் இப்பகுதியில் குடியேறிய வெள்ளைக்காரர்கள் குதிரைகளில் சென்று அந்த பழங்களை சேகரிக்கப் போனார்கள்.
 
அந்தப் புதர்களில் இருந்த பழங்களை எல்லாம் சேகரித்தார்கள். ஒரு குதிரையில் ஏற்றும் அளவிற்கு ஏகப்பட்ட பழங்களை ஒரு கோணியில் சேகரித்தார்கள்.
 
அந்தப் பழங்களை ஏற்றியபடி  குதிரையின் மீது வந்த போது ஒரு அதிசயம் நடந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்ததும் ஆயிரக்கணக்கான குளவிகள் இவர்களை தாக்க ஆரம்பித்தது.
THE TRUE FACE OF YELLOW JOCKET
 
இவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை சாக்குகளில் சேகரித்து வைத்திருந்த பழங்கள் கீழே விழுந்தது. சாக்குகளில் இருந்த பழங்கள் எல்லாம் அந்த சரிவான மலைப்பகுதியில் உருண்டோடி புதர்களில் மறைந்தன.
 
அதனை அவர்கள் பார்க்க முடியாத அளவிற்கு அந்தக் குளவிகள் அவர்களை மூஞ்சி முகம் கைகால்கள் என்று மாறிமாறி கொட்டின.
 
தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று இவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடினார்கள். குதிரைகளில் ஏறிப்போகலாம் என்று பார்த்தால் அவை இவர்களுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தன.
 
சேகரித்த பழங்கள் எல்லாம் சரிவான அந்த பகுதியில் மறுபடியும் புதர் செடிகளுக்கு ஊடாக உருண்டு சென்று காணாமல் போய்விட்டன.
 
இதனால் கோபமடைந்த அந்த வெள்ளைக்காரர்கள் அந்த குளவி கூடுகளை அழிக்க நினைத்தார்கள். இந்தக் எல்லோஜாக்கெட் என்னும் குளவிகள்(YELLOW JOCKET WASP) பற்றி அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தங்குமிடம் போய்ச்சேர்ந்தவுடன் ஐஸ்கட்டி வத்து ஒத்தடம் கொடுத்து அந்த வலியிலிருந்து தப்பித்தார்கள். இரண்டு நாட்கள் ஆனது.
 
எல்லோஜாக்கெட் குளவிகள் பார்க்க அசப்பில் தேனீக்கள் மாதிரி மஞ்சள் மற்றும்  கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த குளவிகள் கொட்டினால் அந்த வலி இரண்டு  நாட்களுக்கு நீடிக்கும்.
 
முதல் வேலையாக அந்தக் குளவிக்கூடுகள் இருந்தப் புதர் செடிகள் அத்தனையும் அழியுமாறு அதற்கு தீ வைத்தார்கள்.
THE CREATOR OF GHOST FOREST
IN MOUNT RAINIER
 
அந்தக் குளவி கூடுகளுக்கு வைத்த தீ அந்த கூடுகளை மட்டும் அழிக்கவில்லை அங்கிருந்த எல்லோசெடார் என்னும் மரங்களிலும் பரவியது.
 
அந்த தீ மரங்களின் பட்டைகளை முழுவதுமாக எரித்தது.
அப்போது அங்க தீயில் எறிந்த அலாஸ்கா எல்லோ செடார் மரங்கள் எதுவும் பட்டுப் போகவில்லை.
 
பட்டைகள் இல்லாத மரங்கள்  வெள்ளை வெளேர் என எலும்புகள் மாதிரி தெரிகின்றன. இரவு நேரத்தில், இருட்டில் அவை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
 
அதற்குப் பின்னால் 40 ஆண்டுகளில் இங்கு நிலவிய தட்பவெட்ப நிலை, வீசிய புயல், அடித்த வெயில், பெய்த மழை, பனி எல்லாம் சேர்ந்து வெள்ளி மரங்களாக, பிகாசோவின் ஓவியங்களாக மாற்றிவிட்டன.
 
ஆனால் கூட இரவில் பார்த்தால் பேய்கள் போல இருக்கின்றன. கூட்டமாக மரங்களைப் பார்த்தால் பேய்க்காடு போல இருப்பதால் அதிகமானோர் அங்கு போவதில்லை என்கிறார்கள்.
 
இந்த எல்லோ செடார் மரங்கள் (YELLOW CEDAR)அலாஸ்கா மாநிலத்தில் கடலோரத்தில் வளர்கின்றன ஆனால் அவை இவ்வளவு கடினமாக இல்லை ஆனால் மவுண்ட்ரெயினியர் மரங்கள் இரும்பு போல  கனக்கின்றன என்கிறார்கள்.
 
இந்த அலாஸ்கா எல்லோசெடார் மரங்களின் அறிவியல் பெயர் சாமாஷிபாரிஸ் நூற்காடென்சீஸ் (CHAMAEPARIS NOOTKATENSIS) என்பது இந்த மரங்களின் வயது 200 ஆண்டுகள்.
 
இன்னொரு செய்தியை உங்களுக்கு சொல்ல வேண்டும் அறிவியல் ரீதியாக சொல்வது என்றால் இறந்து போன அல்லது உலர்ந்து போன மரங்களை கோஸ்ட் பாரஸ்ட் ட்ரீஸ் (GHOST FOREST TREES) என்று சொல்லுகிறார்கள் அதாவது பேய் மரங்கள் என்று சொல்லுகிறார்கள்.
 
உடனே உங்களுக்கு தோன்றும் இந்தியாவில் இதுபோன்ற கோஸ்ட் மரங்கள் (GHOST TREES)இருக்கிறதா ? பேய் மரங்கள் இருக்கிறதா ? என்று கேட்கத் தோன்றும். இதில் எனக்குத் தெரிந்தவரை இரண்டு மரங்களை அப்படி சொல்லலாம்.
 
தமிழில் அந்த மரங்களின் பெயர் ஒரு மரத்தின் பெயர் காவளம் என்பது இன்னொரு மரத்தின் பெயர் ஏழிலைப்பாலை என்பது.
 
இப்போது நாங்கள் ஏறத்தாழ மவுண்ட் ரெயினியர்’ன் இரண்டாவது கவர்ச்சிகரமான இடம் சன்ரைஸ் கொரிடார்(SUNRISE CORRIDAR) என்று பார்த்தோம்.
 
இப்போது நாங்கள் அந்த இடத்திற்கு வந்துவிட்டோம். இந்த கடிதம் இத்துடன் நிறைவடைகிறது.
 
மீண்டும் அடுத்த கடிதத்தில் பார்க்கலாம் மறக்காமல் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.
 
பூமி ஞானசூரியன்
gsbahavan@gmail.com
 
 


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...