Saturday, August 17, 2024

VOLCANIC ALPINE LAKES OF MOUNT RAINIER VOLCANO மவுண்ட் ரெயினியர் எரிமலையின் ஆல்பைன் ஏரிகள்


மவுண்ட் ரெய்னியர்மலைக்கு நாங்களும் உங்களுடன் வந்து சேர்ந்தோம். இனி நீங்கள் பார்த்துச் சொல்வதைப் படித்துத் தெரிந்துகொள்கிறோம். 
அன்புடன்
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ

அன்பு பிச்சினிக்காடு, நீங்கள் என்னுடன் வருவது என்றால் எனக்கு எரிமலையும் சிறுமலை தான், நன்றி, அன்புடன் - பூமி ஞானசூரியன்


WATER IS THE DRIVING FORCE IN NATURE - LEONARDO DA VINCI


  
கடிதம்: 34

மவுண்ட் ரெயினியர் 
எரிமலையின்
ஆல்பைன் ஏரிகள்

THE VOLCANIC ALPINE REFLECTION LAKE

VOLCANIC ALPINE LAKES

OF MOUNT RAINIER 

VOLCANO 


அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் ! எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நலமா?

நான் இங்கு தற்போது டல்லஸ் ஆலன் பகுதியில் இருக்கிறேன். இந்த மாதம் 22 ஆம் தேதி புறப்பட்டு. 23 ஆம் தேதி அங்கு வந்து சேருவேன்.

சென்ற கடிதத்தில் மவுண்ட்ரெயினீர் எரிமலைப் பகுதியில்,  பேரடைஸ் கோரிடார் பகுதியில். புறப்பட்டு சன் ரைஸ் பகுதிக்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்று சொன்னேன்.

அங்கு செல்வதற்கு முன்னால் நாங்கள். ரிப்லெக்க்ஷன் ஏரி என்ற ஒரு ஏரியைப் பார்த்தோம். அந்த ரிப்லெக்ஷன்ஏரி (REFLECTION LAKE)பற்றித்தான் இந்த கடிதத்தில் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.

நாங்கள் சன்ரைஸ் பகுதிக்கு (SUNRISE CORRIDOR)காரில் சென்று கொண்டிருக்கும்போது. “சன் ரைஸ். பகுதிக்கு போகலாமா அம்மா ?” என்று கேட்டார என் மருமகள். சன் ரைஸ் போக எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டாள் என் மனைவி. “எப்படியும் 2 மணி நேரம் ஆகும்” என்று சொன்னான் என் மகன். “நேராக வீட்டிற்குப் போகலாமே”ஏன்றாள் என் மனைவி.

நான் மட்டும் இதுபற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அப்படி இப்படிப் பேசி போகலாம் என்று முடிவு செய்தார்கள்.

கார் போய்க்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சாலையில் ஒரு பெயர் பலகையை பார்த்தோம். அந்த பெயர் பலகையில் “ஸ்டீபன்ஸ் கெனியான் சாலை”(STEPHEN CANYON ROAD) என்று போட்டிருந்தது.

அடுத்த சிறிது நேரத்தில் இன்னொரு பெயர் பலகையும் இருந்தது. அதில் ரிஃப்லெக்க்ஷன் ஏரி (REFLECTION LAKE)என்று போட்டிருந்தது. “அது என்ன ரிஃப்லெக்க்ஷன் ஏறி”  என்று நாங்கள். பேசிக் கொண்டிருக்கும் போதே சிறிது தூரத்தில் நிறைய கார்கள் நின்றிருந்தன. அனேகமாக அந்த இடத்தில் தான் அந்த ரிஃப்லெக்க்ஷன் ஏரியும் இருக்க வேண்டும். நாங்களும் காரை நிறுத்திவிட்டு இறங்கினோம்.

NIKITHAN REFLECTS
HIS JOY
சாலையை விட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில். அந்த ரிஃப்லெக்க்ஷன் ஏரியை அடைந்து விட்டோம்.

ஒரு பெரிய அதிசயம் எங்களுக்காக காத்திருந்தது ரிஃப்க்லெக்ஷன் ஏரி என்ற பெயரில். இதனைத் தமிழில் பிரதிபலிப்பு ஏரி அல்லது பிரதிபலிக்கும் ஏரி என்று சொல்லலாம்.

நீலமும் பச்சையும் கலந்த மாதிரி தண்ணீர் (BLUISH GREEN WATER )என்று கதைகளில் நாம் படித்திருப்போம். அது மாதிரியான ஒரு தண்ணீர்தான் இந்த ஏரியில் இருந்தது. தண்ணீர் தெளிவாக இருந்தது. முகம் பார்க்கலாம்.

தண்ணீர் எவ்விதமான சலனமும் இல்லாமல் மௌனமாக இருந்தது.

நமது வலதுகை இடதுகை, இருபுறமும் சலனமில்லாமல் நிற்கும் தண்ணீருக்கருகில் சென்று எட்டிப் பார்க்கிறேன். என் முகம் தெரிகிறது. கரையில் நின்று பார்ப்பவர்கள் எல்லோரும் தெரிகிறார்கள். தூரத்தில் அழகாய் வரிசையாக கும்பல் நிற்கும் அத்தனை மரங்களும் தெரிகின்றன. நீல நிறத்தில் வானம் தெரிகிறது. வானத்தில் திட்டுத்திட்டாய் குவியலாய். கலைந்து கிடக்கும் மேகங்கள் தெரிகின்றன. ஏரிக்கும் மரங்களுக்கும் இடையே இருக்கும் புல்வெளிகள் தெரிகின்றன. மரங்களின் உச்சியைத் தாண்டி பனிப்போர்வை போர்த்தியபடி, மவுண்ட் ரெயினர்’ன் எரிமலை முகடுகள் ஏரி நீரில், எட்டிப்பார்க்கின்றன. எல்லாவற்றையும் பார்த்தபடி சிறிது நேரம் மூச்சு பேச்சு இல்லாமல் நின்றபடி இயன்றவரை புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
MIRACLE OF GLAZIERS MELTING  WATER 
RAJ IDENTIFIED THESE WONDERS FOR ME 

“போகலாம் போகலாம்” என்று அவசரப்படுத்தினான் என் மகன். நாங்கள் மீண்டும் வந்து காரில் ஏறி அமர்ந்தோம். எங்கள் கார்  “சன்ரைஸ் கொரிடார்” நோக்கி புறப்பட்டது.

இப்போது நான் அந்த ரிஃப்லெக்க்ஷன் ஏரிப் பற்றி சொல்கிறேன்.

இந்த ஏரி இருக்கும் இடத்தை சப் ஆல்பைன் பகுதி (SUBALPINE)என்று சொல்லுகிறார்கள். இந்த ஏரிக்கு மேல் பகுதியில் இருக்கும். மரங்கள். இதனைச் சுற்றி இருக்கும் காடுகளுக்கு ஆல்பைன் காடுகள் (SUBALPINE FORESTS) என்று பெயர்.

இந்த ஏரிக்கு தண்ணீர் கிளேசியர்கள் (GLAZIERS) என்னும் பனிஆறுகளில் (ICY RIVERS) இருந்து வருகின்றது. கிளேசியர் என்பது. எரிமலை உச்சியில் (VOLCANO HILL TOPS) இருக்கும் பனிப்பாறைகள் உருகி வரும் ஓடைகளை தான் நான் கிளேசியர் கள் என்று சொல்லுகிறோம். குளிர்காலத்தில் இந்த ஏரியைச் சுற்றிலும் பனி கட்டிகள் உறைந்திருக்கும். சில சமயம் ஏறி முழுவதிலும் கூட பனியாக உறைந்திருக்கும்.

இந்த ஏரிக்கு செல்லும் பாதைகள் ஒரு ஆண்டில் நான்கு மாதங்கள் தான் திறந்திருக்கும். அப்போது தான் இங்கு கார்கள் வர முடியும். அவை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள்.

SUBALPINE BEAUTY
இந்த மாதங்களில்தான் இங்கு வெயிலைப் பார்க்கலாம். மற்ற மாதங்களில் பனிக்குளிர் எலும்பு மஜ்ஜை வரை உள்ளே செல்லுமாம்.

இந்த ஆல்பைன் ஏரிகள் எப்படி உருவாகின்றன ? பனிப்பாறைகள் உருகி சரிசரியும். இது மிகப்பெரிய நிலச்சரிவையும்  பள்ளங்களையும் ஏற்படுத்தும். பூமியில் இந்த சமயம் சரியும் பாறைகளும் நிலத்தின் மண் கண்டமும் சேர்ந்து கரைகளை உருவாக்கும். உருகும் பனிப்பாறைகள் நீராக மாறி இந்த பெரும் பள்ளங்களில் நீராக தங்கும். இவைதான் ஆல்பைன் ஏரிகள். இவை பெரும்பாலும் உயரமான மலைப்பகுதிகளில் தான். அமையும் அல்லது உருவாகும். இந்த அல்பைன் ஏரிகளின் நீர் எல்லாம்  நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும்.

ஆல்பைன் என்பது லத்தீனிய மொழி. ஆல்பைன் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள். இந்த வெள்ளை நிறம் பனியைக் குறிக்கும். ஆக இந்த ஏரிகளை வெண்ணிற ஏரிகள் (WHITE LAKES)என்றும் சொல்லலாம் அல்லது பனிஏரிகள் என்றும் சொல்லலாம். 
THANK U RAJ
இதுபோல மவுண்ட் ரெய்னியர் மலையில் 13 வெண்ணிற ஏரிகள் உள்ளதாம்.

அன்பின் இனிய நண்பர்களே இதுவரை. மவுண்ட் ரெய்னியர் மலையில் இருக்கும் ரிஃப்லெக்க்ஷன் ஏரி என்ற வெண்ணிற ஏரிகள் பற்றி பார்த்தோம்.
 
இனி அடுத்த கடிதத்தில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தியுடன் உங்களை நான் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்
gsbahavan@gmail.com




 
 

1 comment:

சுப்ரமணிய பாலா said...

மேகங்கள் தண்ணீரில் முகம் பார்க்கின்றன...நீங்க வெள்ளை கால் சட்டை வெள்ளை சட்டை அணிந்து ஓரு நாள் படம் எடுங்க..White and white ..பிரயாணம்்தொடரட்டும்

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...