Tuesday, August 6, 2024

HOT SPRINGS OF ARKANSAS USA அழகைக் கூட்டி எடையைக் குறைக்கும் அமெரிக்காவின் வெந்நீர் ஊற்றுக்கள்

உங்களுக்கு பெயர் மீதான காதல் இருப்பதில் தவறே இல்லை அண்ணா ...My hope உங்க பெயரே எங்களுக்கு ஓரு மந்திரசக்கி தானே பூமிஞானசூரிய பகவான் ..எழுதுக வாசிக்க தம்பியர் அண்ணன்மார் உள்ளோம்...சோம்பேறித்தனம் சில சமயம் எழுதறது இல்லை...அண்ணே ஆமாம்..உண்மையைச்சொல்லுங்க, நம்ம ஊர் ருசி இருக்கா அங்கே? -சுப்பிரமணிய பாலா, கோவை (மிக்க நன்றி பாலா, நாக்கு ருசி பார்த்தால் அறிவு ருசி அகப்படாதுதானே)

"YOU CAN'T CROSS THE SEA MERELY BY STANDING AND STARING AT THE WATER - Rabindranath Tagore

அழகைக் கூட்டி எடையைக் குறைக்கும்

அமெரிக்காவின் வெந்நீர் ஊற்றுக்கள் 

மருத்துவ மகிமை

HOT SPRINGS OF

ARKANSAS USA

26 வது கடிதம்

NATIONAL PARK  ESTTD. IN 1921

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !

நீங்க எப்படி இருக்கிங்க ? 

உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புக்கள்.

இன்றைய கடிதத்தில் இந்த வெந்நீர் ஊற்றுக்களின் சரித்திரம் மற்றும் அவற்றின் மருத்துவப் பயன்கள் பற்றி சொல்லுகிறேன்.

நாங்கள் அர்க்கன்சாஸ் ஹாட்ஸ்பிரிங் (ARKANSAS HOTSPRING)  நகரத்திற்கு மாலை 6 மணி வாக்கில் அங்கு போய்ச் சேர்ந்தோம்.

அந்த ஹாட்ஸ்பிரிங் நகரில் மொத்தம் 47 இயற்கையான வெந்நீர் ஊற்றுக்கள் இருக்கின்றன.

இங்கு உள்ள 216 அடி டவரில் (OUACHITHA TOWER) ஏறி முழு ஹாட்ஸ்பிரிங்  நகரையும் பார்ப்பது என்பது ஒரு முக்கியமான அம்சம். அதனால் நாங்கள் முதலில் அங்கு போனோம்.

இந்த டவர், அவ்ஷிதா (OUACHITHA)என்ற மலையின் மீது அமைத்துள்ளார்கள். இந்த வெந்நீர் ஊற்றுக்கள் அனைத்தும் இந்த அவ்ஷிதா மலையிலிருந்துதான் புறப்படுகின்றன.

அந்த டவரின் உச்சியில் போய்ப் பார்த்தோம். முழுமையாக அந்த ஹாட் ஸ்பிரிங் நகரை மேலிருந்து பார்க்க முடிந்தது.

அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வித்தியாசமாக இருந்தது சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தது. நகரத்தின் உட்புறம் பல இடங்களில் சுற்றுலா வரும் பயணிகள் பார்ப்பதற்கு வசதியாக இந்த வெந்நீர் ஊற்றுக்களை பல இடங்களில் அமைத்திருக்கிறார்கள்.

பிரதான சாலையின் அருகில் இருந்த நான்கு இடங்களில் இருந்த வெந்நீர் ஊற்றுக்களை நாங்கள் சென்று பார்த்தோம். நிறையபேர் அந்தத் தண்ணீரை சிறுசிறு பாட்டில்களில் பிடித்துக்கொண்டு போனார்கள்.

முக்கிய சாலையின் ஓரத்தில் ஒரு பெரிய ஊற்று ஒன்றினை அமைத்துள்ளார்கள். அதன் அருகில் சென்றாலே அதன் சூட்டினை உணர முடிகிறது. அதன் அருகில் நின்று பார்த்தோம். தண்ணீரை எச்சரிக்கையாக கையில் தொட்டும், பிடித்தும், குடித்தும் பார்த்தோம். தண்ணீர் கொதித்தது.

தினம்தினம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த ஊற்றில் தண்ணீரை சேகரித்துக்கொண்டு போகிறார்கள். மேனி எழிலைக் கூட்டுகிறது, எடையைக் குறைக்கிறது. அதனால் இளைஞர் பட்டாளம் இருக்க இருக்க ஏறுமுகமாக உள்ளது

ஃபுட் ரிசர்ச் அண்ட் ஆக்க்ஷன் செண்டர் என்ற அமைப்பின் ஆராய்ச்சிப்படி 39.6 சதவிகிதம் பேர் உடல் எடை அதிகம் உள்ளவர்கள். அதில் 7,7 சதவிகிதம் பேர் அநியாயத்திற்கு அதிக எடை உடையவர்களாம். அதனால் இந்தத் தண்ணீருக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.

இந்த ஊற்றுத் தண்ணீரின் வெப்பம் 143 டிகிரி ஃபாரன்ஹீட்.

அறிவியல் ரீதியாக கொதித்து, வெளியில் குதிக்கும் இந்த நீர், சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னதாக மழை நீராக பூமிக்கு அடியில் புகுந்த நீர் என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள்

நிலத்தடியில் இருக்கும் வெப்பமான பாறைகள்தான் இந்தத் தண்ணீரை சூடுபடுத்துகின்றன. அப்படிச் சூடான தண்ணீர்தான் அழுத்ததுடன் வெளியேறுகிறது.

இந்த வெந்நீர் ஊற்றுக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கு இருக்கின்றன.

இந்த ஊற்றுக்களிலிருந்து வரும் தண்ணீருக்கு நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு. இதில் குளித்தால் உடல்நலம் சீராகும் என்ற நம்பிக்கையில் நிறையபேர் இங்கு தொடர்ந்து வருகிறார்கள்.

1921 ம் ஆண்டு வாக்கிலேயே இதனை தேசியப் பூங்காவாக (HOT SPRINGS NATIONAL PARK)அறிவித்தார்கள். அதற்கு முன்னதாகவே 1832 ம் ஆண்டு பழமையான பாதுகாக்கப்பட்ட  பகுதியாக அரசு அறிவித்தது.

HOT SPRING IN THE CITY 1 

HOT SPRING IN THE CITY 2

இதனை ஐரோப்பியர்கள் கண்டறிவதற்கு முன்னதாகவே அமெரிக்க பழங்குடிகள் (NATIVE AMERICANS) இதனைக் கண்டறிந்து பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

ஐரொப்பியர்கள் இதனை 1541 ம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். இதனை முதன் முதலாகக் கண்டு பிடித்த ஐரோப்பியர்,  ஹெர்னாண்டோ சோட்டொ (HERNANDO SOTO) என்பவர்.

19 மற்றும் 20 நூற்றாண்டுகளில் அமெரிக்க ராணுவம், போரில்  உடல்நலம் குன்றிய  வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க இதனைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

அமெரிக்காவின் புராதனச் சின்னமாக, அடையாளமாக, இது கருதப்படுகிறது. இந்த வெந்நீர் ஊற்றுகள் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. காலமாக வளர்ந்து, வேரும் விழுதுமாக வீற்றிருக்கும்  ஆலமரங்கள் இவை என்கிறார்கள்.

இந்த வெந்நீரூற்றுக்களை இங்கு வசித்து வந்த பழங்குடி மக்களே. காலங்காலமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

இந்த வெந்நீர்ஊற்று தண்ணீரில் தொடர்ந்து குளித்து வந்தால் உடலின் சருமஅழகு கூடும். சகட்டுமேனிக்கு ஏறி இருக்கும் உடல் எடை சகஜமாகக் குறையும்.

24 மணி நேரம் இடைவிடாமல் உழைப்பவர்கள் ஒரு முறை குளித்தால் உடல் அசதி முழுமையாகப் போய்விடும், புதிய உத்வேகமளிக்கும்.

தொடர்ந்து குளித்து வந்தால் தொல்லை தரும் நோய்கள் அத்தனையும் தொலை தூரத்தில் நிற்கும்.

இவை எல்லாம் இந்த தண்ணீரை பயன்படுத்திவர்கள் சொல்லும் கருத்து.

வெந்நீரூற்றுக்கள் வருவதற்கு அறிவியல் ரீதியாக என்ன காரணம் என்பதையும் பார்க்கலாம். இதனை ஜியோதெர்மல் ஆக்டிவிட்டி (GEOTHERMAL ACTIVITY)என்று சொல்லுகிறார்கள்.

மழை பெய்யும் போது மழைநீர் நிலத்தடியில் சேகரமாகும். அப்படி சேகரமாகும் நிலப்பகுதிகளின் அடியில் இருக்கும் பாறைகள் மிகையான வெப்பமுடன் இருக்கும்.

அந்தப் பாறைகள் நிறைந்திருக்கும் இடத்தில் இறங்கும் மழைநீர் அதிகப்படியான வெப்பத்தால் சூடு அடைந்து அங்கு ஏற்படும் அழுத்தத்தினால் அது பூமிக்கு வெளியே வெந்நீர் ஊற்றுக்களாக பீறிட்டு எழுகின்றன.

இந்த வெந்நீர் ஊற்றுகளில் இருந்து வெளிவரும் தண்ணீர் 143 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உடையதாக இருக்கும்.

இந்த வெந்நீர் ஊற்றுகளில் இருந்து வரும் தண்ணீரில் மிகுதியான அளவு தாதுஉப்புகள் உள்ளன. அவை கால்சியம், மக்னீஷியம், சிலிக்கான், மற்றும் கார்பனேட் ,சல்பேட் (CALCIUM, MAGNESIUM, SILICON, CARBONATE & SULPHATE)ஆகியவை.

இந்த வெந்நீரூற்றுகள் அவ்ஷிதா மலையில் இருந்து வருபவை தான். இந்த மலையின் அடிப்பகுதியிலுள்ள செடிமெண்டட் ராக் (SEDIMENTED ROCK), சேன்ட்ஸ்டோன்ஸ்(SANDSTONES), ஷேல்(SHALE)மற்றும் நோவாகுலைட் (NOACULITE)ஆகியவை தான் நிலத்தடியில் சேகரமாகும் நீருக்கு வெப்பம் தருகின்றன.

இந்த வெந்நீர் ஊற்றுக்கள் அத்தனையும் இந்த அவ்ஷிதா மலையில் தான் பிறக்கின்றன.

அவ்ஷிதா  மலையின் உயரம் 2753 அடி. இதன் நீளம் 362 கிலோமீட்டர் அர்க்கன்சாஸ் மற்றும் ஒக்கலஹோமா (ARKANSAS, OKALAHOAMA)ஆகிய இரு மாநிலங்களில் பரவியுள்ளது இந்த மலை.

நண்பர்களே, இந்த வெந்நீர் ஊற்றுத் தண்ணீர் மேனி எழிலைக் கூட்டுகிறது, உடல் எடையைக் கூட்டுகிறது, ஆனால் வயதைக்குறைக்க ஏதாச்சும் வெந்நீர் ஊற்று இருக்கா என்று தெரிந்தால் சொல்லுங்கள்.

, இந்த கடிதத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் பற்றிய அறிவியல் செய்திகளையும் வரலாற்றுச் செய்திகளையும் பார்த்தோம். மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திக்கலாம்.

இந்த கடிதம் பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com

 


2 comments:

Anonymous said...

I have gone through your article. You have vividly explained the benefits of hot bath taking. Very useful information about hot springs . You have narrated how the hot spring formed and how it is emerged from the earth. I will visit this place next year. Thanks for giving new information about hot spring.
V.Sambasivam IFS(Retd)
Houston Texas.

சுப்ரமணிய பாலா said...

நல்லப்பதிவுங்க வெந்நீர் ஊற்று இங்கும் இமயமலைப்பகுதியில் பார்த்து உள்ளோம். இந்த ஊற்று நீர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாங்க ? இதில் மினரல்ஸ் உள்ளனவா ஈவைகள் போலவே நாம் உருவாக்கலாமே? அறிவானவங்க நமக்கு முன்னமே இதை செய்திருப்பாங்களே ...நீர் ஆச்சர்யமான ஓன்று முதன் மழை பெய்த போது பூமியில் எந்த உயிரும் கிடையாது என்ற ம.செந்தமிழன் புத்தகம் ஞாபகம் வருகிறது ...நன்றிங்க

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...