Monday, August 26, 2024

HOH RAIN FORESTS OF OLYMPIC NATIONAL PARK - வாஷிங்டன் ஒலிம்பிக் மழைக்காடு

அணைக்கட்டு நீக்கப்பட்டது ஆச்சர்யமாக உள்ளது..நல்ல தகவல்...அந்த கட்டிட கழிவுகள் உள்ளேயே இருக்குமா ? மீன்கள் தொகை அதிகரித்த செய்தி அருமை - சுப்பிரமணிய பாலா, கோயம்புத்தூர்
அன்பு பாலா ஒரு அணைக்கட்டு அல்ல இரண்டு அணைக்கட்டுகள் முற்றிலுமாக அகற்றி ஆறு ஓட அற்புதமாக ஓட ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால் இப்படி எல்லா இடங்களிலும் செய்யலாமா ? யோசிக்க வேண்டும் ! இது பற்றி மற்ற நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் ? 
தொடர்ந்து கருத்துக்களை சொல்லும் பாலா அவர்களுக்கு எனது நன்றிகள் !
பூமி ஞானசூரியன்
 "LOOK DEEP INTO NATURE, AND THEN YOU START TO UNDERSTAND EVERYTHING BETTER" - Albert Einstein

OLYMPIC NATIONAL PARK ENTRANCE IN PORTANGELES -WASHINGTON

ஹாஹ் மழைக்காடுகள்

HOH RAIN FORESTS OF OLYMPIC NATIONAL PARK

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் ! எப்படி இருக்கிறீர்கள்? சௌக்கியமா? உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பு விசாரிப்புகள்.

இன்றைய கடிதத்தில் உங்களுக்கு ஹாஹ் மழைக்காடு. எங்கு உள்ளது? எப்படி உள்ளது? என்னென்ன மரங்கள் இருக்கின்றன. அதன் சிறப்பு என்ன? ஒரு மழை காட்டுக்கு உரிய முக்கியமான பண்புகள் (BASIC CHARACTORS OF RAIN FOREST) என்ன? இதுபற்றியெல்லாம் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.

ஹாஹ் மழைக்காடு போர்ட் ஏஞ்செலசின் (PORTANGELES)தேசியப் பூங்காவின் (NATIONAL PARL)ஒரு பகுதியாக உள்ளது. இது அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்தது.

குளிர்ச்சியான மலைப் பகுதிக்கான மழைக்காடு இது (TEMPERATE RAIN FOREST). உலகில் உள்ள குறிப்பிடத்தக்க மழைக் காடுகளில் இதுவும் ஒன்று. இது தான் இதன் சிறப்பு.

PORTANGELES CITY
மிதமான வெப்பநிலை(MODERATE TEMPERATURE), அதிகபட்சமாக பெறும் ஆண்டு சராசரி மழை(HIGH RAINFALL),  கடலோர புகைப்பனி(COASTAL FOG), பாசி படர்ந்த மரங்கள்(MOSS BEARING TREES),பெரணிச் செடிகள்(FERNS), நிலப்போர்வையாக் வளர்ந்திருக்கும் சிறிசிறு செடிகள்(LAND AREA COVERED BY SMALL PLANTS), இவை எல்லாம்தான் ஒரு குளிர்ப்பிரதேச மழைக்காட்டின் பண்புகள்.

PORTANGELES A COASTAL 
CITY IN PACIFIC OCEAN

இந்த மழைக் காட்டிற்கு செல்வதற்கு முதல் நாள் நாங்கள் போர்ட்ஏஞ்சலஸ் நகரில் (PORTANGELES) ஒரு விடுதியில் தங்கி இருந்தோம்.

போர்ட்ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு அருகிலேயே உள்ளது இந்த ஒலிம்பிக் நேஷனல் பார்க்'கின் (OLYMPIC NATIONAL PARK)நுழைவு வாயில். அங்கு கொஞ்சம் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

எங்கள் கார் புறப்பட்டு சிறிது நேரம் தான் ஆனது. அதற்குள் “ நீங்கள் மழைக் காட்டுக்குள் நுழைந்து விட்டீர்கள்” என்று சொல்லாமல் சொன்னது இருபுறமும் இருந்த மலைகள் மற்றும் மரங்கள்.

முன்னால் பின்னால் வரும் கார்கள் எதுவும் உருப்படியாய் தெரியவில்லை. அந்த அளவிற்கு அங்கு கடுமையான மூடுபனி இருக்கும்.

NIKITHAN IN THE MISTY
OLYMPIC MOUNTAINS 

நாங்கள் இப்போது புகை பனி பற்றியும் மூடுபனி (FOG & MIST)பற்றியும் பேச ஆரம்பித்தோம். இரண்டும் ஒன்றா வேறு வேறா? தரைப் பகுதியை தொட்டு விடும் படியாக இருக்கும் மேகம். இதில் நீர்த்துளிகள் நுண்ணியதாக இருக்கும்.

ஒரு கிலோ மீட்டருக்கு குறைவான தூரம் மட்டுமே பாதையை மறை

க்கும். பனியின் பெயர் தான் ஃபாக் (FOG)என்பது. இதனை என் மருமகள் சரியாகச் சொன்னார்.
RAJ & MOSHI WITH
RAIN FOREST CLOUDS

அதுபோல மிஸ்ட் (MIST) என்றால் அதுவும் ஒருவகை மேகம் தான். அதிலும் நுண்ணிய நீர்த்துளிகள் இருக்கும். இது  நமது பார்வையை அதிகபட்சம் ஏழு மைல் வரை மறைக்கும். இதன் அடர்த்தி புகைப் பனியை விட அதிகமாக இருக்கும். இந்த விளக்கத்தை சொன்னான் எனது மகன் ராஜு.

1000 மீட்டருக்குக் குறைவான தூரம் மட்டுமே பார்க்க முடிந்தால் அது ஃபாக். அதற்குமேல் பார்க்க முடிந்தால் அது மிஸ்ட். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் விரல் விட்டு எண்ணக் கூடிய மழைக் காடுகளில் மிகவும் முக்கியமான குளிர்ப் பருவ மழைக் காடு(TEMPERATE RAIN FOREST) இந்த ஹாஹ் காடு.

இந்த ஹாஹ் ஃபாரஸ்ட் (HOH FOREST)என்பது இங்கே கிடைக்கும். ஆண்டு சராசரி மழை 3600 - 4300 மில்லி மீட்டர் மழை.

சாலையின் இரு பக்கமும் உள்ள மரங்களைப் பார்த்தாலே தெரிகிறது. மரங்கள் உயரமாக அடிமரம் பருத்து, கனத்து, அடர்த்தியாக மற்றும் அடி மரத்தின் கிளைகளில் சிம்புகளில் எல்லாம் பசுமையான பஞ்சு போல மாஸ் (MOSS) போர்த்தி இருப்பது தெரிந்தது, காரில் செல்லும் போது இதனை என்னால் பார்க்க முடிந்தது.

RAIN FOREST TREES
WITH DENSE MOSS

இங்க உள்ள மரங்களின் வயது பெரும்பாலும் 500 ஆண்டுகளை தாண்டியவை. அவற்றின் உயரம் 250 - 300 அடி வரை இருக்கின்றன. சில மரங்கள் தான் அவ்வளவு உயரம் வளர்கின்றன.

முக்கியமாக டவுக்ளஸ் ஃபிர் (DOUGLAS FIR), வெஸ்டர்ன் ஹேம்லக்(WESTERN HAMLOCK), மற்றும் சிட்கா புரூசிஸ்(SIDCA SPRUSIS) ஆகிய மரங்கள் தான் அந்த அளவு உயரம் வளரும்.

ஒரு இடத்திற்கு செல்வதற்கு முன்னதாக. அது பற்றிய தகவல்களையும் முதல் நாள் இரவே நான் மேய்ந்து விட்டு செல்வதால், என்னால் இவற்றையெல்லாம் நேரடியாக பார்க்கும் போது அனுமானிக்க முடிகிறது.

இன்னொன்று இந்த மரங்கள் பற்றிய அறிமுகம் எனக்கு ஏற்கனவே உண்டு. "பூமியை யோசி மரங்களை நேசி" மரங்கள் பற்றிய எனது இரண்டாவது நூலில் இந்த மரங்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்து எழுதியுள்ளேன்.

இந்த ஹாஹ் மழைக் காட்டுக்குள் காரில் செல்லும் போது பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இறங்கி, பார்க்க வசதி செய்திருந்தார்கள். கார்கள் நிறுத்த வசதிகள் இருந்தன. அப்படி வசதி இல்லாத இடங்களில் எல்லாம், நாம் இறங்கி பார்க்க முடியாது.

300 அடிக்கு மேல் உயர்ந்து நின்றால் அது சிட்கா ஸ்புரூஸ் (SITKA SPRUCE) மரமாக இருக்கும்.

200 அடிக்கு மேல் உயர்ந்து என்றால் அது வெஸ்ட்டர்ன் ஹேம்லக் (WESTERN HAMLOCK) மரமாக இருக்கும்.

250 அடிக்கு மேல் என்றால் அது டவுக்ளஸ் ஃபிர் (DOUGLAS FIR) மரமாக இருக்கும்.

TREES WITH MOSS

100 அடிக்கு நெருக்கமாக நின்றால் அது பெரிய இலை மேப்பிள் மரம் (BIG LEAF MAPLE).

40 - 80 அடி உயரம் சிக்கனமாக வளர்ந்து வேகமாக வளர்ந்து, இலை உதிர்த்து மேடு பள்ளம் இல்லாத, சாம்பல் நிற பட்டையுடன், வெள்ளை நிற லிச்சன்களுடன்(LICHENS), முட்டை வடிவ இலைகளுடன் நின்றால்,  அது ரெட் ஆல்டர் மரம்(RED ALDER).

LAND AREA WITH FERN

இன்னமும் சிறியதாக 20 - 30 அடிக்கு சிக்கனமாக வளர்ந்து செடி போல. ஊர்ந்து வளர்ந்து கைவிரல் போன்று பிரிந்து  சிவப்பு, ஆரஞ்சு என நிறம் மாறும் இலைகள் கொண்ட, வைன் மேப்பிள் (VINE MAPLE)மரங்கள்.

230 அடிக்கு மேல் உயர்ந்து வளரும், பெரிய மரம், உள்ளீடு இல்லாத செங்காவி  நிறத்தில் நார்களால் ஆன தட்டையான பட்டைகளுடன் செதில் செதிலாக, இலைகள், விசிறி போன்ற அமைப்புடன் தோன்றினால், அவை வெஸ்டன் ரெட் செடார்.

TREES ABOVE TIMBERLINE

வட அமெரிக்காவிற்கு சொந்தமான மரமாக, உயரமும் இல்லாமல் குட்டையாகவும் இல்லாமல். மெல்ல வளராமல், செங்காவி நிறத்தில் தட்டையான பட்டையுடன், கரும்பச்சைநிற, ஊசிஇலைகளுடன் கூடிய. பிளாக்காட்டன்வுட் (BLACK COTTON WOOD) எனும் மரங்கள்.

20 - 30 அடியைத் தாண்டாமல் வளரும் குள்ள மரம், மேடு பள்ளம் இல்லாத சமமான சாம்பல் நிறப் பட்டைகளுடன், ரம்பவடிவப் பற்கள் கொண்ட வட்ட வடிவ இலைகளையுடைய சிட்கா ஆல்டர் மரங்கள்(SITKA ALDER).

TALL TREES BELOW
TIMBERLINE

அன்பின் இனிய நண்பர்களே. இன்றைய பதிவில் குளிர்ச்சியான  மழைக் காட்டுப் பகுதியில் இருக்கும் முக்கியமான மரங்கள் பற்றிய செய்திகளைப் பார்த்தோம்.

இன்னும் கூடுதலாக மழைக் காடுகள் பற்றிய செய்திகளை. அடுத்த கடிதத்தில் பார்க்கலாம்.

இன்றைய கடிதத்தில் சொல்லப்பட்ட செய்திகள். உங்களுக்கு பிடித்திருக்கும். என்று நான் நினைக்கிறேன்.

அது பற்றி உங்களுடைய கருத்துக்களை. கமெண்ட்ஸ் பகுதியில். எழுதுங்கள். மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திக்கலாம். நன்றி. வணக்கம்.

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com


2 comments:

ஞானவேல் said...

சார் வணக்கம் அமெரிக்கா ஊருக்கு போய்ட்டுவரமுடியவில்லைஎன்றாலும் நீங்கள் தரும் வெளிநாட்டு விளக்கம் சூப்பர் ஸ்டார் சார் மலை இத்தனை அளவு இருக்கும்போது அங்கு வெல்லம் வரும்மா அதை கூறவில்லை அடுத்து பணி மூட்டத்துடன் இருக்கும்போது வாகனங்களில் மஞ்சள் பல்பு இருக்கும்மாதிரி மரங்கள்

ஞானவேல் said...

மரங்களில் பழங்கள் இருக்குமா மரங்கள் வீடு கட்ட உபோயகமாகிறதா நம்நாட்டு மரங்கள் அங்கு வளரும்மா நன்றி சார் வாழ்க வளமுடன் சுற்றுலா பயணங்கள்

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...