மேகங்கள் தண்ணீரில் முகம் பார்க்கின்றன...நீங்க வெள்ளை கால் சட்டை வெள்ளை சட்டை அணிந்து ஓரு நாள் படம் எடுங்க..White and white ..பிரயாணம் தொடரட்டும் - சுப்பிரமணிய பாலா, கோயம்புத்தூர்
அன்பு பாலா, நான் நாளை (22.08.24) இங்கிருந்து புறப்பட்டு வருகிறேன் இந்தியா, வெள்ளை சட்டை கைவசம் உள்ளது, வெள்ளை கால்சட்டை புதிதாய் எடுக்க வேண்டும். நம் பிரயாணம் தொடரும்.
DUNGENNES CRAB PACIFIC OCEAN |
நண்டு கொழுத்தால்..
DUNGENNES
CRABS
அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம் !
எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்.
நண்டுஓட நரிஓடுது..என்று சிறு வயதில் விளையாடும் விளையாட்டு ஞாபகம் இருக்கிறதா ? இன்றைய கடிதத்தின் முக்கியமான கருத்து, இதுபற்றியதுதான்.
அதுபோல நண்டுஞ்சிண்டுமான குடும்பம் என்றால் குழந்தைகள் அதிகமாக உள்ள குடும்பம், என்றால் குழந்தைகள் அதிகமாக உள்ள குடும்பம் என்று அர்த்தம்.
கையில் கொஞ்சம் காசு பணம் வந்து விட்டால் சும்மா இருக்க மாட்டார்கள். கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் நோண்டி நுங்கு எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதைத் தான் நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள்.
சமீபத்தில் எனது அமெரிக்க பயணத்தில் வாஷிங்டன் மாநிலத்தில் போர்ட்ஏஞ்சலஸ்(PORTANGELES) என்ற நண்டுகள் பெருத்த நகருக்கு போயிருந்தேன். ஒரு நாள் இரவும் அங்கு தங்கியிருந்தேன்.
PORTANGELES PACIFIC COASTAL CITY |
இது பசுபிக் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்(PACIFIC COASTAL CITY) இங்கு வசிக்கும் மக்களின் பிரதான உணவு கடல் உணவு. இவர்களின் வாழ்வாதாரமாக இருப்பது கடல். இங்கு நண்டுகளுக்காக ஒரு திருவிழாவை(CRABFEST) ஆண்டுதோறும் நடத்துகிறார்கள். அதுபற்றி முன் கடிதத்தில் எழுதினேன்.
அதனால் இந்த கடிதத்தில் திருவிழா நடத்தும் அளவுக்கு பெருமை உடைய டஞ்சனஸ் கிராப் (DUNGENESS CRAB) என்னும் நண்டுகள் பற்றியும் பிரபலமான இதர வகை நண்டுகள் பற்றியும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
வாஷிங்டன் மாநிலத்தில் டஞ்சனஸ் என்பது ஒரு நகரம் அந்த நகரின் விசேஷம் நண்டுகள் தான். இந்த நண்டுகள் சுவைக்கு பெயர் போனது. அதனால்தான் இந்த நண்டுகளுக்கு விழா எடுக்கிறார்கள். மெட்டா கார்சினஸ் மெஜிஸ்டர் (METACARCINUS MAGISTER)என்பது இதன் அறிவியல் பெயர்.
METACARCINUS MAGISTER |
இந்த நண்டுகளுக்கான திருவிழாவில் சமையல் போட்டிகள் நடத்துகிறார்கள். விதவிதமான நண்டுகளை சமைக்கும் போட்டியும் நடத்துகிறார்கள்.
அது மட்டுமல்ல நண்டுகளுக்கான ஓட்டப்பந்தயம்(CRAB RUNNING RACE) கூட இங்கு நடக்கிறது. ஒன்று அது மட்டுமல்ல மீன்பிடி தொழில் படகுகள் கட்டுமானம், நண்டுகள் பிடிக்கும் தொழில்நுட்பம்(CRAB HARVEST TECHNOLOGY), போன்றவை குறித்த கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளை (EXHIBITIONS & SEMINARS)நடத்துகிறார்கள்.
இவர்களை எதையும் கண்டுபிடிப்பதை விட நண்டுபிடிப்பதையே முக்கியமாகக் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த திருவிழாவின் நோக்கம், சமையல் விருந்து மகிழ்ச்சி கொண்டாட்டம் மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் கனடாவின் பிரபலமான நண்டு வகையான இதன் மதிப்பைக் கூட்டுவது, விற்பனையைக் கூட்டுவது என்பதுதான்.
இந்த டஞ்சனஸ்கிராப் நண்டுகள் அளவில் பெரியவை. எடை கூடியவை. உடல் அகலமானது. இதன் முதுகுஓடு மிகவும் உறுதியானது. இதன் விலையும் அதிகம்.
இன்னொரு முக்கியமான சமாச்சாரம், இதில் இருக்கும் தசை அதிகம் சமைத்த பின் இதன் வாசம் கலக்கலாக இருக்கும். மற்ற நண்டு வகைகளை சுவையில் சுலபமாக ஓரங்கட்டி விடும் இந்த டஞ்சலஸ் கிராப் நண்டுகள். ஒரு நண்டின் எடையில் அதன் தசை (CRAB FLESH)மட்டும் 25 சதம் இருக்கும். இது மற்ற நண்டு வகைகளை விட அதிகம்.
நண்டுஅறுவடை (CRAB HARVEST)என்பது போர்ட்ஏஞ்சலசின் முக்கியமான தொழில்.
DUNGENNES CRAB HARVEST |
இந்த டஞ்சனஸ்கிராப் தசையில் கொழுப்பு குறைவு. புரதம் அதிகம். கலோரி குறைவு. வைட்டமின்கள் தாது உப்புக்கள் அதிகம். மேலும் இவை ஒமேகா த்ரீ கொழுப்பு (OMEGA 3 FATTY ACIDS/ HEALTHY FATTY ACIDS)அமிலங்களை உடைய நண்டுகள்.
அதனால் இதய பலவீனம் உள்ளவர்கள் எல்லாம் இதை சாப்பிட பயப்பட வேண்டாம் என்று சொல்லுகிறார்கள்.
இந்த கடிதத்தில் பிரபலமான இன்னும் இரண்டு வகையான நண்டுகளைப் பற்றி உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன் அவற்றில் ஒன்று அலாஸ்காவின் ரெட் கிங் கிராப் (RED KING CRAB OF ALASKA) இன்னொன்று உலகின் மிகப்பெரிய நண்டு, ஜப்பான் சிலந்தி நண்டு (SPIDER CRAB OF JAPAN) என்பது.
RED KING CRAB OF ALASKA |
அலாஸ்கா நண்டு என்பது பெரிய சைஸ் நண்டு இதன் பிரதான கால்கள் மட்டுமே ஆறு அடி நீளமும் ஒன்பது கிலோ எடையும் இருக்கும்.
இதன் தசை மிருதுவாகவும் அதே சமயம் கொஞ்சம் இருக்கமாகவும் இருக்கும்.வெண்ணையைத் தடவி சமைத்தது போலவும் இருக்கும். இதனைச் சாப்பிட இரண்டு நாக்கு வேண்டும். இதன் கால்தசைக்கு வாசம் அதிகம், வாங்கக் காசும் அதிகம். பேராலிதோடஸ் காம்டஸ்சட்டிகஸ் (PORALITHODES CAMSTSATICUS) என்பது இதன் அறிவியல் பெயர்.
அலாஸ்கா நண்டில் கொழுப்பு குறைவு. உயர்வான தரமான புரதத்தின் அளவு அதிகம். ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் அதிகம். பி 12 வைட்டமின் உட்பட இதர வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம் தாமிரம் போன்ற தாது உப்புகளும் அதிகம் கொண்ட நண்டு இது.
JAPANESE SPIDER CRAB |
இன்னும் சில நண்டுகள் பற்றிய சுவையான செய்திகளை சொல்கிறேன்.
உலகின் மிகப்பெரிய நண்டு ஜப்பானிய சிலந்தி நண்டு (JAPANESE
SPIDER CRAB) என்றுப் பார்த்தோம். இதன் கால்களின் நீளம் 13 அடி, அதன் உடல் எடை 20 கிலோ இருக்கும். வயது 100 ஆண்டுகள். இதன் அறிவியல் பெயர் மேக்ரோசீரா கேம்ப்ஃபெறு (MACROCHEIRA KAEMFERU ).
அடுத்து தேங்காய் நண்டுகள் (COCONUT CRAB). இது பெரும்பாலும் நிலத்தில் வாழும் நண்டு. அவற்றின் வயது 60 ஆண்டுகள். தென்னை மரங்களில் கூட இவை சுலபமாக ஏறும் இறங்கும். இன்னொன்று தனது உறுதியான ஒற்றைக்காலால் தேங்காயை இரண்டாக உடைத்து விடுமாம்.
COCONUT CRAB |
இந்திய பசிபிக் கடல் பகுதிகளில் இந்த தேங்காய் நண்டுகள் அதிகம் காணப்படுகின்றன முக்கியமாக மடகாஸ்கர்(MADAGASKAR) மற்றும் சீச்செல்லெஸ் மற்றும் எஸ்டெர் தீவுகளில் (SEYCHELLES & ESTER ISLANDS) இவை அதிகம். இது பற்றி சொல்ல நிறைய செய்திகள் இருப்பதால் இது பற்றி தனியாக ஒரு கடிதத்தில் எழுதுகிறேன்.
இன்னும் ஆற்றுநண்டு, குளத்து நண்டு, சேற்றுநண்டு, கல்நண்டு, ஓராங்குட்டான் நண்டு. மேங்ரோவ் நண்டு, கொரில்லா நண்டு, இப்படி பல வகையான நண்டுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் அடுத்துத் தனியாக ஒரு கடிதத்தில் எழுதுகிறேன். நண்பர்களே இன்று நாம் வித்தியாசமான பல செய்திகளை பார்த்தோம்.
ஆமாம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு நண்டினை. அதனிடமிருந்து கடிபடாமல் அதனைப் பிடிக்க உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.
உங்களுக்கு பிடித்தமான நண்டு எது என்றும் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.
அடுத்த கடிதத்தில் ஒரு வித்தியாசமான தகவலுடன் நான் உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.
அன்புடன்
பூமி ஞான சூரியன்
gsbahavan@gmail.com
5 comments:
நண்டு கொழுத்தா வலையில் தங்காது என வீட்டில் சொல்லும் பழமொழி. கல்லாறு ஆற்று அருகில் பெரிய நண்டுகள் சிலதைப்பார்த்தேன் ...ஓரு குச்சியாகுச்சியை வைத்தால் அவைகள் பிடிக்கும் தூக்கலாம் என முயற்சி செய்தேன்..நான் சைவ உணவாளன் ..சும்பா தூக்கிப்பார்க்க நினைத்தேன்...இந்தியாவில் சில வகை நண்டுகளே உள்ளன என அப்ப வாசித்தேன்..உறவினர் ஓருவர் தன் மகனுக்கு எப்படி நண்டு சாப்பிடனும் என செயல்முறை பயிற்சி தந்ததை ஓரு உணவகத்தில் பார்த்தேன். நண்டு என்ற ஓரு சினிமாவும் உண்டென நினைக்கிறேன். நண்டு என்ற சொல் எப்படி வந்தது என தமிழறிஞர் யாராவது கிட்ட கேட்கனும்...நானும் நானறிந்த நண்டுகள் விசியத்தை சொல்லிட்டன்..நண்டு மனுசனுக்கு முன்பருந்து இருக்கும் உயிரினம்..ஆனந்தம்
வணக்கம். நண்டுகளைப் பற்றிய கட்டுரை எண் போன்ற வாசகர்களைக் கவர்ந்துள்ளது. பள்ளிப்பிராயத்தில் நண்பர்களுடன் மதுரை சோழவந்தான் பகுதியில் வயல் நண்டப் பிடித்து விளையாடி இருக்கிறேன்.சென்னையில் சாந்தோம் / மெரீனா கடற்கரைக்கு செல்லும்போதெல்லாம் நான் நண்டுகளைப்பிடிக்க பெருமுயற்சி எடுத்து பிடிக்க முடியாமல் தோற்றது இன்றைக்கும் எனக்குள் சிரிப்பை வரவழைக்கும்.
நண்பர்கள் நண்டைப்பற்றி சொன்ன கதை இது - நண்டு பிடிக்கும் நரியின் கதை. கிராமப் புறங்களில் பல இடங்களில் நண்டுகளின் எலும்புக் கூடுகளை கட்டுரைகள் பார்த்திருக்கின்றேன்.
நண்பர்களிடம் கேட்டபோது, வளைகளில் இருக்கும் நண்டுகளை பிடித்து தின்ன விரும்பும் நரி தன் வாலை வளைக்குள் விட எதிரியை கெட்டியாக பிடித்துக் கொள்ள, உடனே வாலை வெளியே விருவிய நரியானது அருகில் உள்ள கல்லின் மீது அடித்துக் கொன்று அதன் சதைப் பகுதியை மட்டும் சாப்பிட்டுவிட்டு செல்லுமாம்.
நான் தென்னைமரம் நண்டு பற்றி கல்லூரி நாட்களில் படித்திருக்கிறேன்.
கடல் நண்டுக்கும் வயல் நண்டுக்கும் நிற வேறுபாடு பலரும் அறிந்திருக்கக் கூடும்.
வட சென்னை மின் உற்பத்தியாகும் இடத்தின் அருகில் முன்பு உப்பளம் இருந்த இடத்தில் ஒரு தான்தோன்றி அம்மன் கோயில் உள்ளது. அதன் அருகில் நான் ஒரு அதிசயக்காட்சியை பலமுறை கண்டிருக்கிறேன். அங்குள்ள நண்டுகளுக்கு கொடுக்கு ஒன்று மட்டுமே உள்ளது. அவற்றின் உடல் சிகப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்சு நிறங்களில் கண்டிருக்கிறேன்,
Post a Comment