PORTANGELES WASHINGTON |
கடித எண் 39
வாஷிங்டன்
நண்டு
திருவிழா
அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்.
நான் இங்கு அமெரிக்கா வந்த பிறகு இங்கு வந்து பார்த்து படித்து தெரிந்து கொண்ட செய்திகளை கடிதங்கள் வாயிலாக இதுவரை 38 கடிதங்களை உங்களுக்கு எழுதி இருக்கிறேன்.
இந்தக் கடிதத்தில் வாஷிங்டன் மாநிலத்தில் முக்கியமாக போர்ட் ஏஞ்சலஸ் (PORTANGELES) என்ற பசிபிக்கடலோர நகரம்(COASTAL CITY OF PACIFIC OCEAN) பற்றிய முக்கிய செய்திகளை சொல்லப்போகிறேன்.
போர்ட்ஏஞ்சலஸ் நகரம் வாஷிங்டன் மாநிலத்தில் 19,960 பேரை மக்கள் தொகை உடையது, ஒரு துறைமுகப்பட்டினம், ஒலிம்பிக் தேசிய பூங்கா (OLYMPIC NATIONAL PARK)இதன் சிறப்பு, பசிபிக் கடல் நண்டு திருவிழா(DUNGENESS CRAB
FESTIVAL), லேவண்டர் பூ திருவிழா(SEQUIM LAVENDER FESTIVAL)
இவை கூடுதல் சிறப்பு, எல்வா ஆற்றின் (ELWHA RIVER)அணைக்கட்டுகள், இங்கு கடல் பகுதியில் அடிக்கடி உலா வரும் திமிங்கலங்கள்(ORCAS & GRAY WHALES), ஆகியவை பற்றி எல்லாம் நான் உங்களுக்கு சொல்ல
இருக்கிறேன்.
இங்கு பார்க்க வேண்டியவற்றில் முக்கியமான இடம் என்பது ஒலிம்பிக் நேஷனல் பார்க். அது பற்றிய தனியாக ஒரு கடிதம் எழுத உள்ளேன்.
அடுத்து இங்கு எல்வா என்ற ஆற்றின் சூழலை மீட்கும் திட்டம் (REJUVENATION
OF THE RIVER ECO SYSTEM)ஒன்று செயல்பட்டு வருகிறது. எல்வா என்பது இங்கு ஓடும் ஒரு ஆறு. சுற்றுச்சூழலை சரி செய்யும் நோக்கத்துடன் இந்த ஆற்றின் மீது ஏற்கனவே
கட்டியிருந்த இரண்டு அணைகளை உடைத்து
எறிந்துவிட்டார்கள்.ELWHA RIVER WITHOUT DAMS
ஓர் அணைக்கட்டை ஒரு ஆற்றில் இருந்து நீக்குவது, உடைத்து எடுப்பது என்பது அமெரிக்காவின் சரித்திரத்தில் முதன்முறையாக 2011 ஆம் ஆண்டு தான் தொடங்கியது. ஆறு மாதத்தில் அந்த வேலை முடிவுக்கு வந்தது எல்வா ஆற்றில் இருந்த அந்த அணை முற்றிலுமாக நீக்கப்பட்டது 2014 ஆம் ஆண்டு. பிறகு அதே ஆற்றில் இருந்து இரண்டாவது அணையும் நீக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் லோயர் எல்வா கலல்லம் என்னும் பழங்குடிகள் (LOWER ELWHA KLALLAM TRIBE).KLALLAM TRIBE IN CANOE BOAT
இந்த ஆற்றில் அணைக்கட்டுகளை எடுத்த பிறகு மீண்டும் இங்கு மீன்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
பசுபிக் சாலமன் (PACIFIC SALMON FISH)என்னும் மீன் வகையில் ஐந்து பிரிவு மீன்கள் உள்ளன அந்த ஐந்து சாலமன் மீன் வகைகளுக்கும் எல்வா ஆறு என்பது தாய் வீடு மாதிரி என்று.
இப்போது அங்கு வசிக்கும் பழங்குடிகள் மீண்டும் சாலமன் மீன்களை சந்தோஷமாக பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள் காரணம் இந்த பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது இந்த சாலமன் மீன்கள் தான்.
இந்த நகரத்தின் துறைமுகம் ஆழமானது. சர்வதேச துறைமுகம். மீன்பிடித் தொழிலின்
அடித்தளமாக விளங்குகிறது. படகு போக்குவரத்தும் இங்கு ஒரு முக்கியமான அம்சம்.PACIFIC SALMON
கிளல்லம் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்த இடம் இது. அந்த பழங்குடி மக்களின் கலாச்சார அடையாளம் இப்பகுதியில் எங்கும் பரவி இருப்பதை பார்க்க முடியும்.
ஆல்பைன் காடுகள், மழைக் காடுகள் ஆகியவற்றிற்கான மாறுபட்ட சூழல் நிலைகளுக்குரிய களனாக விளங்குகிறது இந்த போர்ட் ஏஞ்சலஸ் பகுதி. போர்ட் ஏஞ்சலஸ் பகுதி மென்மையான தட்பவெப்ப நிலைகளைக் கொண்டது. இங்கு நிலவும் வெப்பம் மற்றும் குளிர் பருவம் இரண்டுமே மென்மையாக இருக்கும் முரட்டு தன்மை இருக்காது.
ஒலிம்பிக் மலையின் மழைமறைவுப் பிரதேசமாக விளங்குகிறது இந்த போர்ட்ஏஞ்சலஸ் நகரம். ஒலிம்பிக் தீபகற்பத்தின் இதர பகுதிகளை விட இங்கு குறைவாகவே மழை பெய்கிறது.
போர்ட் ஏஞ்சலஸ் நகரில் இருந்து 17 மைல் தொலைவில் உள்ளது பிரபலமான சுற்றுலா மையம் இது. மலை ஏறுதல், பனித்தரை விளையாட்டுக்கள், போன்றவைகளுக்கு பெயர் போன துறைமுகப்பட்டினம்.
இங்கு விசேஷம் என்னவென்றால் இந்த கடல் பகுதியில் திமிங்கலங்களை அடிக்கடி பார்க்கலாம் முக்கியமாக ஆர்கஸ் மற்றும் கிரேவேல்ஸ் (ORCAS & GRAY WHALES)என்ற திமிங்கல வகைகளை சாதாரணமாக பார்க்க முடியும்.ORCA WHALES
இங்கு வித்தியாசமான இரண்டு விழாக்கள் ஆண்டுதோறும் நடத்துகிறார்கள் ஒன்று கடல் உணவு திருவிழா, இன்னொன்று லேவண்டர் திருவிழா என்பது.
போற்றி ஏஞ்சலஸ் பகுதியில் நடப்பவை முக்கியமான மூன்று தொழில்கள், ஒன்று கப்பல் தொழில், இரண்டு மரவேலைத் தொழில், இதர பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்.
போர்ட்ஏஞ்சல்ஸில் ஒரு நண்டுக்கான திருவிழாவை நடத்துகிறார்கள் இது பசிபிக் கடல் நண்டு இதன் பெயர் டஞ்சனஸ் நண்டு என்று பெயர் வட அமெரிக்காவின் மேற்கு கரைப்பகுதியில் முக்கியமான கடல் உணவு இது. இந்த நண்டின் அறிவியல் பெயர் மெட்டாகார்சினஸ் மேஜிஸ்டர் என்பது. அமெரிக்கா மற்றும் கனடாவின் மிகவும் சுவையான நண்டு இது.
அடுத்து லேவண்டர் என்பது ஒரு பூ பெயர் லேவண்டர் நிறம் நமக்கு தெரியும். அது கத்தரிப்பூ நிறம் போல இருக்கும். இது மின்ட் என்னும் புதினா குடும்பத்தைச் சேர்ந்தது. வாசனைப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கான எண்ணெய்கள் தயாரிக்க பயன்படுதனை பயன்படுத்துகிறார்கள்.
அன்பின் இனிய நண்பர்களே ! இந்த கடிதத்தில் உங்களுக்கு போர்ட் ஏஞ்சலஸ் பற்றிய சுவையான செய்திகளை தந்திருக்கிறேன் இந்த கடிதம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இது பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை மறவாமல் ‘கமெண்ட்ஸ்’ பகுதியில் பதிவிடுங்கள்
மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம் நன்றி வணக்கம்.
பூமி ஞானசூரியன்
gsbahavan@gmail.com
1 comment:
அணைக்கட்டு நீக்கப்பட்டது ஆச்சர்யமாக உள்ளது..நல்ல தகவல்...அந்த கட்டிட கழிவுகள் உள்ளேயே இருக்குமா ? மீன்கள் தொகை அதிகரித்த செய்தி அருமை.
Post a Comment