Friday, August 9, 2024

BIG IMPACT IN LITTLE ROCK - OLD MILL LAKE - ஒரு ஏரி சுற்றுலா தலமான கதை

Your experience through these beautiful landscapes has truly been an exploration of natures bounty. Your description for the rivers, ranches and green meadows are marvelous. Wish you all the best.

V.Sambasivam IFS (Retd)
Houston, Texas.

(Thank you sir. your valuable comments. It gives me more enthusiasm to give more useful and unique information continuously)



ACCESS TO INFORMATION AND THE ABILITY TO GIVE VOICE PEOPLE WHO WOULD NEVER HAVE BEEN HEARD - BILL GATES























ஒரு ஏரி சுற்றுலா தலமான கதை

BIG IMPACT ON OLD MILL LAKE

IN LITTLE ROCK


அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !

 நீங்க எப்படி இருக்கிங்க ? உங்க குடும்பத்தின் மூத்த  உறுப்பினர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், மூத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகளைச் சொல்லுங்கள்.

 நாங்கள் அர்க்கன்சாஸ்’ ன் ஹாட்ஸ்பிரிங்ஸ் வெந்நீர் ஊற்றுக்களை பார்த்துவிட்டு திரும்பி வரும்போது  நார்த் லிட்டில் ராக் (NORTH LITTLE ROCKS)பகுதியில் உள்ள ஓல்ட் மில் என்ற ஏரியில் (OLD MILL LAKE)உள்ள பொழுதுபோக்கு பூங்காவினை(ENTERTAINMENT PARK) பார்த்தோம். நார்த் லிட்டில்ராக்’தான் அர்க்கன்சாஸ் (ARKANSAS)மாநிலத்தின் தலைநகரம்(CAPITAL CITY).

ஒரு இயற்கையான ஒரு

ஏரியை இயற்கையோடு இயைந்த படி அழகு படுத்த முடியுமோ அப்படியெல்லம்  அழகுப்படுத்தப்பட்டு  ஹாலிவுட் சினிமாப் படங்கள் (HOLLYWOOD FILMS)எடுக்கவும், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குழந்தை குட்டிகளோடு குடும்ப சகிதமாக வந்து போகும் இடமாகவும், (TOURIST SPOT)மாற்றப்பட்டுள்ளது இந்த ஓல்ட் மில் ஏரி.

இந்த ஏரியை அழகுபடுத்த, அலங்காரம் செய்ய, ஒரு கருத்தை (THEME BASED DECORATION) எடுத்துக் கொண்டு, அதன்படி அலங்கரித்திருக்கிறார்கள், என்றுதான் சொல்ல வேண்டும்.


என்ன கருத்து என்று சொல்லுகி
றேன்.

ஒரு பக்கம் நீர்வீழ்ச்சி. தண்ணீர் கொட்டுகிறது. ஒரு சிறிய ஓடை. அந்த நீர் ஓடுகிறது. ஒரு சிறிய குளம். அங்கு தேங்கி நிற்கிறது. குளம் நிறைய தண்ணீர். அதன் நடுவில் பூமாதிரி  நீரை சிதற விடும் ஒரு ஸ்பிரிங்க்லர் தெளிப்பான், மீண்டும் ஓடையாக கீழே இறங்கும் நீர். அந்த நீரின் வேகத்தால்

சூழலும் பெரிய மர சக்கரம். அந்த மரச்சக்கரத்தின் உதவியால் கரையின் மேல் ஓடும் அரவை இயந்திரம். குறைவான வேகத்தில்  ஓடும் ஓடை. அதன் குறுக்காக அழகான உலர்ந்த மரக்கிளைகளைப் பாலங்கள். ஓசையில்லாமல் விழுந்து அவசரமில்லாமல் குதித்து ஓடி அகன்ற ஏரியாக பறந்து வழிந்தோடும் ஏரித் தண்ணீர். அதன் பரப்பில் பயமின்றி நீதி செல்லும் அமெரிக்க ஆமைகள். அசைந்து அசைந்து நீந்திச் செல்லும் கீஸ்கள் எனும்  பறக்கும் கருப்பு நிற வாத்துகள். கரைகளில் மெலிதான செடிகள்.  உயர்ந்த பருத்து வளர்ந்த மரக்கிளைக் கொப்புகள், அவற்றின் சிம்புகளில் கனமான வண்ணங்களில் அரிதான பூக்கள். இவை எல்லாம் சேர்ந்து எங்களோடு அல்லது எங்களை மட்டுமாவது ஒரு புகைப் படம் எடுங்களேன் என்று சொல்லும் ஓல்டு மில் ஏரி

இந்த  ஓல்டுமில் என்ற பகுதியின்  ஒரு சின்னஞ்சிறிய ஏரி எப்படி மாபெரும் சுற்றுலாத் தலமாக, மாற்றி இருக்கிறார்கள், மாறி இருக்கிறது என்றுப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

இந்த ஓல்ட் மில் என்னுமிடம் லிட்டில் ராக் என்ற பகுதியில் உள்ளது. இதனை புக்ஸ்மில் ()என்றும் சொல்லுகிறார்கள்.

கான் வித் தி விண்ட் (GONE WITH THE WIND)எனும் ஆங்கில படத்தின் முதல் காட்சி இங்கு தான் எடுக்கப்பட்டது.

ஓல்டு மில் என்றால் என்ன ?அதில் என்ன செய்தார்கள் ? என்று பார்க்கலாம்.

1880 ல் நீரின் சக்தியினால் ஓடும் எந்திரங்களை தானியங்களை அரைத்து மாட்டுத் தீவனமாக  பயன்படுத்தி வந்தார்கள் இந்த மில்களை நீர் சக்தி கிரிஸ்ட் மில்  (WATER POWERED GRIST MILL)என்று சொன்னார்கள்.

இந்த ஓல்ட் மில்லை, பழைய இயந்திரத்தை ஒரு ஏரியின் குறுக்காக அமைத்திருந்தார்கள். ஒரு சரிவான இடத்தில் நீர் வீழ்ச்சி போல நீர் விழுந்து உருண்டு போகிறது அந்த தண்ணீர் ஓடும் வேகத்தில் ஒரு பெரிய மரச் சக்கரம் சுழலுமாறு வைத்திருக்கிறார்கள்.

சுழலும் அந்த சக்கரத்துடன் ஒரு எந்திரத்தை இணைத்து இருக்கிறார்கள் அந்த எந்திரத்தின் மூலமாக மக்காச்சோளம் சோளம் போன்ற தானியங்களை அரைப்பார்கள். அதனை மாட்டுத் தீவனமாக அந்த காலத்தில் பயன்படுத்துவார்கள் அந்த மாதிரியைத் தான் இந்த ஓல்ட் மில் பகுதி ஏரியில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். வித்தியாசமான ஆனால் வெற்றிகரமான முயற்சி. ஒரு பழமையான ஓல்டு மில் எனும் கலாச்சார வேரினை (ROOTS OF CULTURE)இங்கு வெற்றிகரமாக நடவு செய்துள்ளார்கள். வேர்களை மறக்காத விவேகம்.

இல்லையென்றால், கான் வித் தி விண்ட்(GONE WITH THE WIND) முதல் காட்சியை இங்கு எடுத்திருப்பார்களா ? அந்த படம் வந்த ஐம்பதாவது ஆண்டு விழாவை இங்கு வந்து கொண்டாடி இருப்பார்களா ? இந்த ஓல்டு மில்’லை கவுரப்படுத்தி இருப்பார்களா ?

இந்த ஓல்ட் மில் பகுதியில் உள்ள ஏரியில் அமைத்திருப்பது 1880 ம் ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்த ஒரு மில்’லின் மாதிரிதான்.

அந்த ஏரியைச் சுற்றி நிறைய வசிப்பிடங்கள் இருக்கின்றன. இங்கு வசிப்பவர்களும்  பொழுதுபோக்க இதனை நன்கு பயன்படுத்துகிறார்கள் இந்த ஏரியில் நிறைய மீன்கள் இருக்கின்றன.

இந்த ஏரியில் மீன் பிடிக்கவும் அனுமதிக்கிறார்கள். இந்த ஏரிகளில் ஏகப்பட்ட கூஸ் (GOOSE)என்னும் பறக்கும் வாத்துக்களைப் பார்த்தோம். இந்த வாத்துகளின் அருகில் போனால் கூட அவை நம்மை பார்த்து பயப்படுவதில்லை. நாம் ஏதாவது சாப்பிடக் கொடுப்போமா என்று எதிர்பார்க்கின்றன.

அன்பின் இனிய நண்பர்களே இந்தக் கடிதத்தில், ஒரு ஏரியை எப்படி ஒரு சுற்றுலத் தலமாக மாற்றியிருக்கிறார்கள் என்று எனக்கு அமெரிக்காவின் ஓல்டுமில் ஏரிக்குப்போய் பார்த்து அங்குக்  கிடைத்த அனுபவத்தை உங்களுக்கு சொன்னேன். உங்களுக்கு பிடித்ததா ? உங்கள் கருத்தினை கமெண்ட்ஸ் பகுதியில் எழுதுங்கள்.

நன்றி வணக்கம் !

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com

 

 



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...